1943

1943 (MCMXLIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

நிகழ்வுகள்

நோபல் பரிசுகள்

இவற்றையும் பார்க்கவும்

1943 நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31

மேற்கோள்கள்

  1. "சென்னைப் புகையிரத விபத்து". ஈழகேசரி. 21-11-1943. pp. 1.
ஆகத்து 17

ஆகத்து 17 (August 17) கிரிகோரியன் ஆண்டின் 229 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 230 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.

ஆகத்து 29

ஆகத்து 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

ஆர்தர் பி. மெக்டொனால்டு

ஆர்தர் புரூசு மெக்டொனால்டு (Arthur 'Art' Bruce McDonald, பிறப்பு: ஆகத்து 29, 1943) கனடிய இயற்பியலாளரும், சத்பரி நுண்நொதுமி (நியூத்திரினோ0 வானாய்வகக் கழகத்தின் பணிப்பாளரும் ஆவார். நுண்நொதுமிகள் அல்லது நியூத்திரினோக்கள் நிறை ( திணிவு) ஏதும் கொண்டிருக்கின்றதா என்றிருந்த அடிப்படைக்கேள்விக்கு விடையாக அது ஒரு நிறையை (திணிவை)க் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், சப்பானைச் சேர்ந்த தக்காக்கி கஜித்தாவுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.

டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இளையராஜா

இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கியது.

இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

சங்கர் கணேஷ்

சங்கர் கணேஷ் என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.அவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர் விசுவநாதன்- இராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். அவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டில் மகராசி மற்றும் திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு..

சனவரி 15

சனவரி 15 (January 15) கிரிகோரியன் ஆண்டின் 15 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.

சனவரி 23

சனவரி 23 (January 23) கிரிகோரியன் ஆண்டின் 23 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 342 (நெட்டாண்டுகளில் 343) நாட்கள் உள்ளன.

சூலை 5

சூலை 5 (July 5) கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.

செப்டம்பர் 8

செப்டம்பர் 8 (September 8) கிரிகோரியன் ஆண்டின் 251 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 252 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 114 நாட்கள் உள்ளன.

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1943

1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

அக்ஷயம்

அருந்ததி

அசட்டுப்பிள்ளை

உத்தமி

காரைக்கால் அம்மையார்

குபேர குசேலா

சிவகவி

ஜோதிமலர்

திவான் பகதூர்

தேவகன்யா

மங்கம்மா சபதம்

நவம்பர் 22

நவம்பர் 22 (November 22) கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.

நெமந்தம் ஊராட்சி

நெமந்தம் ஊராட்சி (Nemandam Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1943 ஆகும். இவர்களில் பெண்கள் 961 பேரும் ஆண்கள் 982 பேரும் உள்ளனர்.

பத்மா சுப்ரமணியம்

பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்; இவருடைய சிறப்பைக் குறிக்கும் வகையிலும், மரியாதையின் பொருட்டும் ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன.

பீட்டர் சீமன்

பீட்டர் சீமன் (Pieter Zeeman, 25 மே 1865 - 9 அக்டோபர் 1943) ஒரு டச்சு இயற்பியலாளர். ஜீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும் கண்டுபிடித்ததற்காகவும் என்ட்ரிக் லொரன்சுனுடன் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.

பெப்ரவரி 14

பெப்ரவரி 14 (February 14) கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.

பெப்ரவரி 27

பெப்ரவரி 27 (February 27) கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன.

பெப்ரவரி 4

பெப்ரவரி 4 (February 4) கிரிகோரியன் ஆண்டின் 35 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன.

விஜயகுமார்

விஜயகுமார் (பிறப்பு: ஆகத்து 29, 1943) தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.

சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னால் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.