1926

1926 (MCMXXVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

நிகழ்வுகள்

நாள் அறியப்படாதவை

  • ஒலியுடன் கூடிய முதலாவது திரைப்படம் Don Juan வெளியிடப்பட்டது.

பிறப்புகள்

இறப்புகள்

நோபல் பரிசுகள்

1926 நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
அக்டோபர் 4

அக்டோபர் 4 (October 4) கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன.

ஆகத்து 5

ஆகத்து 5 (August 5) கிரிகோரியன் ஆண்டின் 217 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 218 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.

ஏப்ரல் 21

ஏப்ரல் 21 (April 21) கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன.

ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. 67 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்: சார்லசு, ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.

அரசியின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும் அயர்லாந்து குடியரசுக்கான அரசுப் பயணமும reciprocal visits to and from the திருத்தந்தையுடனான சந்திப்புக்களும் முதன்மையானவை. தனது ஆளுமைக்குட்பட்ட நாடுகளில் பல அரசியல்சட்ட மாற்றங்களை கண்டுள்ளார்; ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு மற்றும் கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப் பெறல் போன்றவை. தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்ச்சிகளாகும்.

அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.

கலேந்திரா ஊராட்சி

கலேந்திரா ஊராட்சி (Kalendra Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அலங்காயம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1926 ஆகும். இவர்களில் பெண்கள் 944 பேரும் ஆண்கள் 982 பேரும் உள்ளனர்.

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (பிறப்பு: 1926) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும்,சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் Right Livelihood Award விருதைப்பெற்றார்.

சனவரி 26

சனவரி 26 (January 26) கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன.

சனவரி 29

சனவரி 29 (January 29) கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.

சனவரி 8

சனவரி 8 (January 8) கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.

சூன் 25

சூன் 25 (June 25) கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

திக் நியாட் ஹன்

உலகில் தற்போது மிகவும் அறியப்பட்ட சில ஜென் ஆசான்களுள் நியாட் ஹன் குறிப்பிடத்தக்கவர். இவர் மாணவர்களால் ஆசான் என்ற பொருளில் அமையும் தே (Thay) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர் மற்றும் கவிஞர்.

நவம்பர் 25

நவம்பர் 25 (November 25) கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.

நவம்பர் 26

நவம்பர் 26 (November 26) கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.

பூபேன் அசாரிகா

பூபேன் அசாரிகா (Bhupen Hazarika, அசாமிய மொழி: ভূপেন হাজৰিকা, பூபேன் ஹசோரிகா) ( செப்டம்பர் 8, 1926 – நவம்பர் 5, 2011) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

முனைவர் பூபேன் அசாரிகா இந்தி மற்றும் அசாமிய திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசையில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளார். அவரது மாநிலமான அசாமிலும் அண்டை மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் பெருமதிப்புமிக்கவராக புகழ் பெற்றுள்ளார். அசாமின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக அமைந்துள்ளார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக பொறுப்பாற்றி உள்ளார்.

மகாசுவேதா தேவி

மகாசுவேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016) வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்.

ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர்.

இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.

மரியோ மிராண்டா

மரியோ மிராண்டா (Mario Miranda, 1926-2011) இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஓர் ஓவியரும் கேலிச் சித்திரக்காரருமாவார். கோவா மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 85 ஆவது வயதில் டிசம்பர் 11 2011 இல் காலமானார்.

மே 22

மே 22 (May 22) கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

வி. கே. ராமசாமி

விருதுநகா். கந்தன். ராமசாமி (1926 - திசம்பர் 24, 2002) ஓர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1950 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடிப்புலகில் இவர் உச்சத்தில் இருந்தார்1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.யார், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன்,கமலஹாசன், இரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

அவர் நடித்த கடைசிப் படம் டும் டும் டும் ஆகும். பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) ( 1853 செப்டம்பர் 21- 1926 பிப்ரவரி 21) நெதர்லாந்துஇயற்பியலறிஞர். தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழி அமைத்ததற்காகவும் நோபல் பரிசு பெற்றவர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.