17-ஆம் நூற்றாண்டு

17ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல் ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும்.

17ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக கலிலியோ கலிலி, ரெனே டேக்கார்ட், பாஸ்கல், ஐசாக் நியூட்டன் போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1600கள் 1610கள் 1620கள் 1630கள் 1640கள்
1650கள் 1660கள் 1670கள் 1680கள் 1690கள்

முக்கிய நிகழ்வுகள்

இறப்புகள்

1580கள்

1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.

16-ஆம் நூற்றாண்டு

கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.

1610கள்

1610கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1610ஆம் ஆண்டு துவங்கி 1619-இல் முடிவடைந்தது.

1710கள்

1710கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1710ஆம் ஆண்டு துவங்கி 1719-இல் முடிவடைந்தது.

1760கள்

1760கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1760ஆம் ஆண்டு துவங்கி 1769-இல் முடிவடைந்தது.

1770கள்

1770கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1770ஆம் ஆண்டு துவங்கி 1779-இல் முடிவடைந்தது.

18-ஆம் நூற்றாண்டு

18ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1701 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1800 இல் முடிவடைந்தது.

2-ஆம் ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

ஆண்டுகளின் பட்டியல்

இப்பக்கம் ஆண்டுகளைப் பட்டியல் இடுகிறது..

இந்து மெய்யியல்

இந்து மெய்யியல் பாரம்பரியமாக ஆறு ஆஸ்தீக சிந்தனைப் போதனைகளினால் (சமக்கிருதம்: आस्तिक "வைதீகம்") அல்லது தரிசனங்களினால் ("நோக்கு") பிரிக்கப்பட்டுள்ளன. ஏனைய நான்கு நாஸ்தீகப் போதனைகளும் ("வைதீகமற்றது") வேதத்தின் மீது சார்ந்திப்பதில்லை. ஆஸ்தீகப் போதனைகள் ஆறும் பின்வருமாறு:

சாங்கியம், கடவுள் நம்பிக்கையற்ற, இயற்கையிலும் சுய உணர்வு வேதாந்த விளக்கத்திலும் பலமான இருபொருள் வாதம்.

யோகம், தியானம், சமாதிநிலை, தனிமை என்பவற்றின் போதனை

நியாயம் அல்லது ஏரணம், அறிவின் மூலத்தைத் தேடல். நியாய சூத்திரங்கள்

வைசேடிகம், அணுவியலின் புலனறிவாதப் போதனை

மீமாம்சம், சீரான நடைமுறையின் துறவு எதிர்ப்பு மற்றும் இரகசிய எதிர்ப்புப் போதனை

வேதாந்தம், வேதத்தினுடைய அறிவின் கடைசிப் பகுதி. இது தற்கால இந்து சமயத்தை ஆட்கொள்ள மத்திய காலத்திற்குப் பின்னான காலத்தில் வந்தது.நான்கு நாஸ்தீகப் போதனைகள்:

சர்வாகம்

ஆசீவகம்

சமணம்

பௌத்தம்ஆயினும், வித்யாரன்யா போன்ற மத்திய கால மெய்யியலாளர்கள் இந்திய மெய்யியலை சைவ, பாணினி, இரசேஸ்வரம் ஆகிய சிந்தனைகள் உட்பட்டவற்றுடனும் மூன்று தேவப் போதனைகளான அத்வைதம், விசிட்டாத்துவைதம், துவைதம் என்பவற்றுடனும் வெவ்வேறாக பதினாறு போதனைகளாகப் பிரிக்கின்றனர்.இந்து மத வரலாற்றில், ஆறு வைதீக போதனைகளின் வேறுபாட்டுகள் இந்து மதத்தின் "பொற்காலம்" எனப்பட்ட குப்தப் பேரரசு காலத்தில் இருந்தது. வைசேடிகம் மற்றும் மீமாம்சம் என்பனவற்றின் மறைவுடன், வேதாந்தத்தின் பலதரப்பட்ட உப போதனைகள் சமயமத்துக்குரிய மெய்யியலில் பிரதான பிரிவுகளாக ஆதிக்கத்துடன் எழுச்சியுற, மத்திய காலத்தின் பிற்பகுதியில் இது உபயோகமற்றதாக மாறியது. நியாய தத்துவம் 17 ஆம் நூற்றாண்டு வரை புதிய நியாய தத்துவமாக நிலவியபோது, சாங்கியம் தனியான போதனையாக இருக்கும் நிலையை படிப்படியாக இழந்தது, அதேவேளை இதன் கொள்கை யோகா, வேதாந்தம் என்பவற்றுள் உள்வாங்கப்பட்டது. சீக்கியமும்கூட இந்து சமயத்திலிருந்து வளர்ந்தது. ஏனென்றால் இவை இரண்டும் இந்திய துணைக்கண்டத்தில் உருவாக்கப்பட்டதுடன், சீக்கிய உருவாக்குனர்கள் இந்து சமயக் குடும்பங்களிலும், இந்தியாவில் பஞ்சாப் பகுதியின் இந்து சாதிகளிலும் பிறந்தனர். இவ்வாறு சீக்கியம் இந்து கலாச்சார, அரசியல் மூலத்தில் தோன்றியவாறு, சமணமும் பெளத்தமும் இதற்கு முன் உருவாகின.

கோட்பிரீட் லைப்னிட்ஸ்

கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.

சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.

கோலெழுத்து

கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது. இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.வட்டெழுத்திலிருந்து கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.வட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் கண்ணெழுத்தும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது. இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.

கோழிக்கோடு நாடு

சாமூத்திரி அல்லது சமோரின் (Samoothiri - Zamorin) (மலையாளம்: സാമൂതിരി),

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தென்னிந்தியாவின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது.நறுமணப் பொருட்களைத் தேடி 1498-இல் இந்தியாவின் கோழிக்கோட்டிற்கு வந்த முதல் ஐரோப்பியர், போர்ச்சுக்கல் நாட்டின் வணிகரும், மாலுமியுமான வாஸ்கோ ட காமா ஆவார்.

தந்தையாம் கடவுள்

தந்தையாம் கடவுள் (God the Father) என்னும் பட்டம், ஒரு கடவுட் கொள்கையை உடைய யூத, கிறித்தவ மதப்பிரிவுகளால் தரப்படும் பட்டங்களுள் ஒன்றாகும். யூத மதத்தினருக்கு கடவுள் படைத்து, காத்து வழிநடத்துபவராயிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவற்றோடு கிறித்தவத்தில் திரித்துவக் கோட்பாட்டினை எடுத்தியம்பும் விதமாகவும் கடவுளுக்கு இப் பெயர் அமைந்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இதை தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது.

புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 10 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன. தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

புருசியா

பிரசியா அல்லது புருசியா (Prussia, German: Preußen, போலிய: Prusy, இலித்துவானியம்: Prūsija) வடக்கு ஐரோப்பாவில் இருந்த ஓர் நிலப்பகுதியாகும். இது ஜெர்மனியின் அங்கமாக சில காலமும் போலந்தின் அங்கமாக சிலகாலமும் இருந்துள்ளது. "புருசியா" என்ற சொல் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் பல்வேறு வெவ்வேறான பொருள்களை வழங்குகின்றது:

பால்டிக் புருசிய மக்களின் நிலப்பகுதி (இன்றைய தெற்கு லித்துவேனியா, கலினின்கிராத், வடகிழக்கு போலந்து நாடுகளின் அங்கங்கள்);

டியூட்டானிக்க மறவர்களின் (12ஆம் நூற்றாண்டின் சமய மறவர்களின் குழு) நிலப்பகுதி;

போலிய முடியாட்சியின் அங்கமாயிருந்த நிலப்பகுதிகள், அரச புருசியா;

போலிய முடியாட்சிக்குக் கப்பம் கட்டிய சிற்றரசு, புருசிய சிற்றரசர், பின்னாளில் பிரண்டென்பேர்க் ஓயென்சோலர்ன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்;

அனைத்து ஓயென்சோலர்ன் நிலங்கள், ஜெர்மனியின் உள்ளும் புறமும்;

தன்னாட்சி பெற்ற நாடு, 17-ஆம் நூற்றாண்டு முதல் 1871 வரை;

செருமானியப் பேரரசு, வீமர் குடியரசு, மற்றும் நாட்சி ஜெர்மனியின் மிகப்பெரிய பகுதி (1871 முதல் 1945 வரை).1934இல் நாட்சிகள் இந்நிலப்பகுதிகளுக்கு புருசியா என்ற பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். 1947இல் நேசநாடுகள் புருசியாவின் நாடு நிலையை இரத்து செய்து அதன் நிலப்பகுதிகளை தங்களுக்குள்ளும் புதியதாக உருவான இடாய்ச்சுலாந்தின் மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுத்தன. இன்று இப்பெயர் வரலாறு, புவியியல், பண்பாட்டுப் பயன்பாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

புருசியா என்ற பெயர் பால்டிக் பகுதியில் வாழ்ந்த போருசி அல்லது பிரசி மக்களுடையதாகத் தோன்றியது. இவர்கள் பழைய புருசிய மொழி பேசிவந்தனர். இவர்களது சிற்றரரசு போலந்து அரசருக்கு 1660 வரை கப்பம் கட்டி வந்தது. பின்னர் 1772 வரை அரச புருசியா போலந்தின் அங்கமாயிற்று. பிந்தைய 18ஆம் நூற்றாண்டிலும் துவக்க 19ஆம் நூற்றாண்டிலும் இடாய்ச்சு மொழி பேசும் புருசியர்கள் தங்களை செருமனியின் அங்கமாக கருதத் தொடங்கினர். மேலும் அவர்கள் புருசியர்களின் வாழ்க்கைமுறை மிகவும் குறிப்பிடத்தக்கதாக்க் கருதினர்:

துல்லியமான அமைப்பு

தியாகம் (நமக்குத் தேவையானதையும் பிறருக்கு கொடையளிப்பது)

சட்டத்தை மதிப்பது18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வடக்கு செருமனியில் இந்தப் புதிய பிரசியாவிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அரசியலிலும் பொருளியலிலும் வலிமையுடன் இருந்தனர். 1871இல் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் உருவாக்கிய செருமானியப் பேரரசில் புருசியா மையமாக இருந்தது.

மு. அருணாசலம்

மு. அருணாசலம் (அக்டோபர் 29, 1909 -நவம்பர் 23, 1992) ), தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

ரெனே டேக்கார்ட்

ரெனே டேக்கார்ட் (அ) இரெனே தேக்கார்ட்டு (René Descartes பிரெஞ்சு மொழி: (மார்ச் 31, 1596 – பெப்ரவரி 11, 1650) , ஒரு பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும்க கூட இருந்தார். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர் .இவரது பல தத்துவங்கள் இன்றைய காலகட்டத்திற்கும பொருந்துமாறு உள்ளது. பிரான்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் 20 வருடங்கள் (1629-49) தனது வாழ்க்கையை டச்சுக் குடியரசில் கழித்தார். அங்குள்ள ராணுவத்தில் சேந்து பணியாற்றினார். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டசு கார்ட்டேசியசு (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்.

ஹல்தும்முல்லைக் கோட்டை

ஹல்தும்முல்லைக் கோட்டை (Haldummulla Fort) என்பது போர்த்துக்கேயரால் பதுளையிலுள்ள ஹல்தும்முல்லைக் எனுமிடத்தில் கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட கோட்டை அத்திவாரங்களைத் தவிர முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. அத்திவாரங்களை தற்போதும் காடுகள் நிறைந்த குன்றில் காணலாம். இது முன் அரங்காகவும் கொழும்புக்கான தந்திரோபாய பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது. இது அதன் சுற்றுப்புறங்களுக்கான நல்ல பார்வை (அவதானிப்பு) அமைப்பைக் கொடுத்தது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.