16-ஆம் நூற்றாண்டு

கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1500கள் 1510கள் 1520கள் 1530கள் 1540கள்
1550கள் 1560கள் 1570கள் 1580கள் 1590கள்
மோனா லிசா
இத்தாலியம்: La Gioconda, பிரெஞ்சு: La Joconde
Mona Lisa, by Leonardo da Vinci, from C2RMF retouched
ஓவியர்லியொனார்டோ டா வின்சி
ஆண்டு1503–1506
வகைஎண்ணெய்ச் சாய ஓவியம்
இடம்லூவர் அருங்காட்சியகம், பாரிசு

முக்கிய நிகழ்வுகள்

  • 1500:போர்த்துகேய கடலோடி பெடரோ ஆல்வாரெசு கபரால் (Pedro Álvares Cabral) இன்றையபிரேசில் நாட்டைக் கண்டுபிடித்தார்.
  • 1503: நோசுட்ரோடாமசு டிசம்பர் 14 அன்றோ டிசம்பர் 21 அன்றோ பிறந்தார்.
  • 1503: லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பின்னர் புகழ் பெற்ற மோனா லிசா ஓவியதைத் தீட்டத் தொடங்கினார். அடுத்த 3 ,4 ஆண்டுகளில் முடிக்கின்றார்.
  • போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலாவதாக வருகை தந்தனர். 1505 ஆம் ஆண்டு புயல் காரணமாக லொறோன்சோ டி அல்மேதா தலமையிலான கப்பலொன்று கொழும்பில் கரையொதுங்கியது. 1518 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் வியாபார அனுமதியை பெற்றனர்.
1490கள்

1490கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1490ஆம் ஆண்டு துவங்கி 1499-இல் முடிவடைந்தது.

15-ஆம் நூற்றாண்டு

கிபி 15ம் நூற்றாண்டு 1401 இல் ஆரம்பித்து 1500 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு ஆகும்.

1520கள்

1520கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1520ஆம் ஆண்டு துவங்கி 1529-இல் முடிவடைந்தது.

1530கள்

1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.

1560கள்

1560கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1560ஆம் ஆண்டு துவங்கி 1569-இல் முடிவடைந்தது.

1580கள்

1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.

1610கள்

1610கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1610ஆம் ஆண்டு துவங்கி 1619-இல் முடிவடைந்தது.

1650கள்

1650கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1650ஆம் ஆண்டு துவங்கி 1659-இல் முடிவடைந்தது.

1660கள்

1660கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1660ஆம் ஆண்டு துவங்கி 1669-இல் முடிவடைந்தது.

17-ஆம் நூற்றாண்டு

17ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல் ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும்.

17ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக கலிலியோ கலிலி, ரெனே டேக்கார்ட், பாஸ்கல், ஐசாக் நியூட்டன் போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது.

2-ஆம் ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

ஆண்டுகளின் பட்டியல்

இப்பக்கம் ஆண்டுகளைப் பட்டியல் இடுகிறது..

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடற் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

நடுக் காலம் (ஐரோப்பா)

ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் என்பது, அதன் வரலாற்றுக் காலத்தின் மூன்று பிரிவுகளுள் நடுப் பிரிவைக் குறிக்கும். ஐரோப்பாவின் வரலாற்றுக் காலப் பகுதி, தொன்மை நாகரிகம், மத்திய காலம், தற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்யப்படுகின்றது. இவ்வாறு மூன்று காலப் பகுதிகளாகப் பிரிக்கும் முறை இத்தாலிய மறுமலர்ச்சி வரலாற்றாளரான பிளேவியோ பியோண்டோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய காலம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. பொதுவாக 5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் தொடங்கித் தற்காலத் தொடக்கமான 16 ஆம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது. சீர்திருத்தம் மூலம் மேற்கத்திய கிறிஸ்தவம் பிரிவுற்றது, இத்தாலிய மறுமலர்ச்சி மூலம் மனிதநேயத்தின் வளர்ச்சி, ஐரோப்பிய நாடுகளின் கடல்கடந்த விரிவாக்கத் தொடக்கம் என்பன மத்திய காலத்தின் நிகழ்வுகளாகும். இக் காலப்பகுதிகளின் எல்லைகள் தொடர்பில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை முக்கியமாக தனிப்பட்ட அறிஞர்களின் நோக்கையும், சிறப்புத் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். பொதுவாகக் காணும் காலப்பகுப்பின் எல்லைகள், கிபி 400-476 காலப்பகுதியில், ரோம் விஸ்கோத்களால் தோற்கடிக்கப்பட்டு அகஸ்டஸ் ரோமுலஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து தொடங்கி; கிபி 1453-1517 காலப்பகுதியில் கொன்ஸ்டண்டினோப்பிளின் வீழ்ச்சி, கிறிஸ்தவச் சீர்திருத்தம் என்பவற்றோடு முடிவடைகிறது.

மத்திய காலத்திலேயே வடக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் நகராக்கம் தொடங்கி நிலைபெறலாயிற்று. பல தற்கால ஐரோப்பிய நாடுகளின் தோற்றங்கள், மத்திய காலப்பகுதியின் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. தற்கால ஐரோப்பிய நாடுகளின் அரசியல் எல்லைகளும் மத்திய காலத்தில் நிகழ்ந்த படைத்துறை மற்றும் வம்சங்களின் சாதனைப் பெறுபேறுகளின் விளைவுகளாகும்.

நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுஸ் (Pope Anastasius IV, 1073 – 3 டிசம்பர் 1154), கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 1153 ஆம் ஆண்டு சூலை 9 முதல் 1154 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.

உரோமை குடிமகனான இவரின் தந்தை பெனடிக்டுஸ் தே சுபுரா ஆவார். இவர் திருத்தந்தை இரண்டாம் பாஸ்காலால் 1114க்கு முன்னர் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருக்கக்கூடும். In 1127 or 1128 திருத்தந்தை இரண்டாம் ஹோனோரியுஸ் இவரை உரோமை புறநகர ஆலயங்களுல் ஒன்றான சபினாவின் கர்தினாலாக நியமித்தார். 1130 மற்றும் 1153 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற திருப்பீடத் தேர்தல்களில் இவர் பங்கேற்றார். எதிர்-திருத்தந்தை இரண்டாம் அனகிலேத்துஸை எதிர்த்தவற்கலுள் இவரும் ஒருவர். திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் பிரான்சுக்கு தப்பி ஓடியபோது, இவரே இத்தாலியின் முதன்மை குருவாக இருந்தவர்.

திருத்தந்தை மூன்றாம் யூஜின் இறந்தபிறகு, இவர் திருத்தந்தையாக ஜூலை 1153இல் தேர்வானார். இவர் தேர்தெடுக்கப்பட்டபோது, நோயுற்றவராகவும் 80 வயதான முதியவராகவும் இருந்தார். அத்தேர்தலின் போது இவரே அனைவரிலும் மூத்த கர்தினாலும், கர்தினால் குழுவின் முதல்வராகவும் இருந்தார். இவர் திருத்தந்தை ஹேட்ரியனின் சகோதரனுடைய மகன் என்னும் கருத்து 16-ஆம் நூற்றாண்டு முதல் சிலரால் ஏற்கப்பட்டாலும், இது இப்போது ஆதாரமற்றதாய் கருதப்படுகின்றது.

பிரடெரிக் பார்பரோசா என்பவர் மற்றொரு சார்லமேன் என்று சொல்லிகொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆல்பஸ் மலையைக் கடந்து இத்தாலிக்குள் பெரிய போர்ப்படையுடன் செல்ல தயாரானார். இவர் இத்தாலிக்குள் வரும் வேளையில் திருத்தந்தை மரணமடைந்தார். 1154 டிசம்பர் 3-ல் இவருடைய ஆட்சி ஒன்றரை ஆண்டுக் காலம் மட்டுமே நீடித்தது.

பெர்லின்

பெர்லின் ஜெர்மனி நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு ஜெர்மனியில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.இது ஸ்ப்ரீ நதிக் கரையில் அமைந்துள்ளது.இந்த நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாலும் பூங்காவினாலும் தோட்டங்களாகவும் ஆறுகள் மற்றும் ஏரிகளாகாவும் அமைந்துள்ளது.

பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவத் தொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவ நிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என ருடொள்வ் விர்ச்சொவ் அழைக்கப்பட்டார். அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார்.

முப்பொருள் (சைவம்)

முப்பொருள் என்பது சைவ சித்தாந்தத்தில் பதி பசு பாசம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது தளைகளையும் குறிக்கிறது.

மேற்கத்திய கிறித்தவம்

மேற்கத்திய கிறித்தவம் அல்லது மேற்கு கிறித்தவம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம், மெதடிசம் மற்றும் பிற சீர்திருத்தத் திருச்சபை மரபுகளையும் குறிக்கும். இப்பதம் கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கத்திய கிறித்துவம் மேற்கு, வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சிலப்பகுதிகள், பண்டைய வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக இருந்து வந்தது. 16 ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்று கண்ணோட்டத்தில் காணும் போது, 'மேற்கத்திய கிறித்துவம்' என்பது கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபையின் கூட்டாகவே பார்கப்படுகின்றது. இது ஒரு தனி கிறித்தவ உட்பிரிவு அல்ல. மாறாக இவை இரண்டுக்கும் இடையே உள்ள சடங்குகள், கோட்பாட்டு, வரலாற்று மற்றும் அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடாகவே இப்பதம் பயன்படுகின்றது.

இன்று, மேற்கு மற்றும் கிழக்கு கிறித்துவத்துகிடையேயான புவியியல் எல்லைகள், குறிப்பாக மறைபணியாளர்களின் பரவலுக்குப்பின், கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.

ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம்

ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம் என்னும் உரைநடை நூல் பிள்ளை லோகஞ்சீயரால் எழும்பபட்டது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு. டெம்மி தாள்-அளவில் 600 பக்கங்களைக் கொண்ட மிக விரிவான நூல். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. 200 சொற்கள் கொண்ட இதன் ஒரு பக்கத்தில் 28 சொற்கள் மட்டுமே தமிழ்ச்சொற்களாக உள்ளன. இந்நூல் 14% தமிழ்ச்சொற்களும் 86% வடமொழிச் சொற்களும் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய பதிப்பு இது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.