1580கள்

1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1550கள் 1560கள் 1570கள் - 1580கள் - 1590கள் 1600கள் 1610கள்
ஆண்டுகள்: 1580 1581 1582 1583 1584
1585 1586 1587 1588 1589

நிகழ்வுகள்

  • போர்த்துக்கீசர் 1588இல் கண்டியைக் கைப்பற்றினர். கண்ணப்பு பண்டாரம் என்பவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு டொன் பிலிப் என்பவன் மன்னனாக முடி சூடினான்.
  • இங்கிலாந்தில் இலக்கியத்தின் "பொற்காலம்" ஆரம்பமானது.
  • பிரான்சில் எட்டாவதும் கடைசியுமான சமயப் போர் முடிவடைந்தது.
  • இங்கிலாந்தின் முதலாவது குடியேற்ற நாடாக நியூபவுண்லாந்து சேர் ஹம்பிரி கில்பேர்ட்டினால் 1583 இல் அறிவிக்கப்பட்டது.
  • பிரான்சிஸ் டிரேக் உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பல பெறுமதியான சொத்துக்களுடன் நாடு திரும்பினார்.
  • Jesuits சீனாவை அடைந்தனர்.
1560கள்

1560கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1560ஆம் ஆண்டு துவங்கி 1569-இல் முடிவடைந்தது.

1564

ஆண்டு 1564 (MDLXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.

1565

1565 (MDLXV) ஆண்டு பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

1566

1566 (MDLXVI) ஆண்டு பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

1567

ஆண்டு 1567 (MDLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

1573

ஆண்டு 1573 (MDLXXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

1580

ஆண்டு 1580 (MDLXXX) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.

1582

ஆண்டு 1582 (MDLXXXII) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் திருத்தந்தையின் ஆணை ஓலை மூலம் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்காட்டியை எசுப்பானியா, போர்த்துகல், போலந்து-லித்துவேனியா, மற்றும் இன்றைய இத்தாலியின் பெரும் பகுதிகளும் நடைமுறைப்படுத்தின. இந்நாடுகளில் அக்டோபர் 4 வியாழக்கிழமை வரை பழைய யூலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாற்றப்பட்டு கிரெகொரியின் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 9 இற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை டிசம்பர் 20 ஆக மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் யூலியன் நாட்காட்டியையே பின்பற்றி சில ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற்றிக் கொண்டன. உலகம் முழுவதுமான முழுமையான மாற்றம் 1929 இலேயே இடம்பெற்றது.

1590கள்

1590கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1590ஆம் ஆண்டு துவங்கி 1599-இல் முடிவடைந்தது.

16-ஆம் நூற்றாண்டு

கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.

1600

1600 (MDC) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும். இது 2000 ஆண்டுக்கு முன்னர் வரும் கடைசி நூற்றாண்டு நெட்டாண்டு ஆகும்.

1600கள்

1600கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1600ஆம் ஆண்டு துவங்கி 1609-இல் முடிவடைந்தது.

1610கள்

1610கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1610ஆம் ஆண்டு துவங்கி 1619-இல் முடிவடைந்தது.

2-ஆம் ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

ஜம்மு காஷ்மீர் வரலாறு

காஷ்மீர் வரலாற்றில் பரந்த இந்தியத் துணைக்கண்ட வரலாறும் இதைச்சுற்றிய பகுதிகளான, நடு ஆசியா, தெற்கு ஆசியா , கிழக்காசியா போன்ற பகுதிகளின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளன. இன்று, இது இந்தியாவால் நிர்வகிக்கப்படும் சம்மு காசுமீர் மாநிலத்தை உள்ளடக்கிய பெரிய பகுதி (ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, மற்றும் லடாக் ஆகியவை சேர்த்து), பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் பகுதியான ஆசாத் காஷ்மீர், கில்ஜித்-பால்திஸ்தான், சீனாவால் நிர்வகிக்கப்படும் பகுதியான அக்சாய் சின், டிரான்ஸ் காரகோரம் பகுதி ஆகியவற்றைக் குறிக்கிறது.

முதல் புத்தாயிரத்தின் முதல் பாதியில், காஷ்மீர் பிராந்தியம் இந்து சமயத்தின் ஒரு முதன்மையான மையமாக விளங்கியது. பின்னர் பௌத்த மையமாகவும் பின்வந்த ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் எழுச்சியுற்றது. காஷ்மீர் 13 ஆம் நூற்றாடிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இசுலாமிய மயமானது. இதனால் இறுதியில் காசுமீர சைவம் வீழ்ச்சியுற்றது. இருப்பினும், பிராந்தியம் தன் நாகரிகத்தின் சாதனைகளை இழக்காமல் இருந்தது, ஆனால் புதிய இசுலாம் ஆட்சி அமைப்பும் கலாச்சாரத்தாலும் உறிஞ்சப்பட்டு காஷ்மீர் சூஃபி மிஸ்டிசிம் பெரியளவுக்கு எழுச்சியடைந்தது.

1339 இல், ஷா மிர், காஷ்மீரின் முதல் முஸ்லீம் அரசராக ஆனார், இவரால் ஷா மிர் வம்சம் துவக்கப்பட்டது. அடுத்து வந்த ஐந்து நூற்றாண்டுகளும், முகலாயர் உள்ளிட்ட முஸ்லீம் முடியாட்சிகள் காஷ்மீரை ஆண்டனர், இவர்கள் 1586 முதல் 1751வரையும் , 1747 முதல் 1819 வரை ஆப்கான் துரானி சாம்ராஜ்யத்தாலும் ஆளப்பட்டது. அந்த ஆண்டு, ரஞ்சித் சிங் தலைமையிலான சீக்கியர்களால் காஷ்மீர் கைப்பற்றப்பட்டது. 1846 இல் நடந்த முதல் ஆங்கில-சீக்கியப் போரில் சீக்கியரின் தோல்விக்குப்பின், ஏற்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டிஷாரிடமிருந்து இப் பிராந்தியத்தை ஜம்மு அரசர், குலாப் சிங்கால், வாங்கப்பட்டு குலாப் சிங் காஷ்மீரின் புதிய ஆட்சியாளர் ஆனார்.

அவரது சந்ததிகளின் முடியாட்சியானது பிரித்தானியரின் மேலதிகாரத்தின் கீழ், 1947 வரை நீடித்தது, முன்னாள் சுதேச இராச்சியமான இது சர்ச்சைக்குரிய பிரதேசமாக ஆனபின்னர், இப்போது இந்தியா, பாக்கித்தான், சீன மக்கள் குடியரசு என மூன்று அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது.

தாமசு ரோ

சர் தாமசு ரோ (Sir Thomas Roe, c. 1581 – 6 நவம்பர் 1644) முதலாம் ஜேம்சு, எலிசபெத் காலத்து ஆங்கில நல்லுறவு பேராளர் ஆவார். 1614க்கும் 1644க்கும் இடையே பல முறை இங்கிலாந்தின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். சிறந்த கல்வியாளராகவும் அறிஞராகவும் விளங்கினார்.

பத்தாண்டுகளின் பட்டியல்

பத்தாண்டு (decade) என்பது 10 எண்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். பொதுவாக 10 ஆண்டுகாளைக் குறிக்கும் காலப்பகுதியை இது குறிக்கும். டெகேட் என்னும் சொல் "decas" என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்தும், "dekas" என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

20ம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டுக் காலம் (1900கள்) ஜனவரி 1, 1901 இலிருந்து டிசம்பர் 31, 1910 வரையான காலப்பகுதியைக் குறிக்கும்.

யூரியெல் த காசுட்டா

யூரியெல் த காசுட்டா (Uriel da Costa) அல்லது யூரியல் ஆக்காசுட்டா (Uriel Acosta, அண். 1585 – ஏப்ரல் 1640) ஒரு போர்த்துகீசிய மெய்யியலாரும், ஐயுறவுவாதியும் ஆவார்].

யோசபாத்து

புனித யோசபாத்து குன்ட்சேவிச் (பெலருசிய: Язафат Кунцэвіч, Jazafat Kuncevič, போலிய: Jozafat Kuncewicz, உக்ரைனியன்: Йосафат Кунцевич, Josafat Kuntsevych) என்பவர் புனித பசிலியார் சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர்துறந்தவரும் ஆவார். இவர் பிறந்த ஆண்டு 1580 அல்லது 1584 ஆகும். அவர் கிறித்தவ மறைநம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டது 1623, நவம்பர் 12ஆம் நாள்.

இவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.