15-ஆம் நூற்றாண்டு

கிபி 15ம் நூற்றாண்டு 1401 இல் ஆரம்பித்து 1500 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு ஆகும்.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1400கள் 1410கள் 1420கள் 1430கள் 1440கள்
1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள்

முக்கிய நிகழ்வுகள்

கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்

தமிழறிஞர்கள்

யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்

14-ஆம் நூற்றாண்டு

கிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும்.

1490கள்

1490கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1490ஆம் ஆண்டு துவங்கி 1499-இல் முடிவடைந்தது.

1500கள்

1500கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1500ஆம் ஆண்டு துவங்கி 1509-இல் முடிவடைந்தது.

1520கள்

1520கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1520ஆம் ஆண்டு துவங்கி 1529-இல் முடிவடைந்தது.

1530கள்

1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.

1560கள்

1560கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1560ஆம் ஆண்டு துவங்கி 1569-இல் முடிவடைந்தது.

1564

ஆண்டு 1564 (MDLXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.

1580கள்

1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.

1590கள்

1590கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1590ஆம் ஆண்டு துவங்கி 1599-இல் முடிவடைந்தது.

16-ஆம் நூற்றாண்டு

கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.

2-ஆம் ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

அறந்தாங்கிக் கோட்டை

அறந்தாங்கிக் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரில் அமைந்துள்ளது. இக்கோட்டை 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.

ஆண்டுகளின் பட்டியல்

இப்பக்கம் ஆண்டுகளைப் பட்டியல் இடுகிறது..

இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்

இராசபாளையம் (Rajapalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள் இராஜபாளையம் வட்டம் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும். மற்றும் மாவட்டத்தில் முதல் மிகப்பெரிய நகரம் ஆகும்.இது மதுரையின் தென்மேற்கே 85கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இங்குள்ள அய்யனார் அருவியும் அருகாமையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரும் சுற்றுலா இடங்களாகும்.இங்குள்ள பொருளாதாரம் துணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய இனமாகும்.

சமர்கந்து

சமர்கந்து (உசுபேகியம்: Samarqand; தாஜிக்: Самарқанд; பாரசீகம்: سمرقند; சொகிடிய மொழியில்: "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்") உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இருப்பதால் இவ்வூர் புகழ் மிக்கதாயிருக்கின்றது. 14 ஆம் நூற்றாண்டில் சமர்கந்து நகரம் தைமூர்ப் பேரரசின் தலைநகரமாயிருந்தது. தைமூரின் அடக்கத்தலமும் இவ்வூரிலேயே இருக்கிறது. இங்குள்ள புகழ் மிக்க கட்டிடங்களில் பீபி-கானிம் பள்ளிவாசல் குறிப்பிடத் தக்கது. 'ரசிசுத்தான்' என்பது இவ்வூரின் பண்டைய நகர மையமாகும்.

2001 ஆம் ஆண்டு, சமர்கந்து - பண்பாடுகளின் கூடல் என்ற தலைப்பில் இவ்வூர் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

ஜர்லிக்

ஜர்லிக் (மொங்கோலியம்: зарлиг; Russian: ярлык, இயர்லிக், யர்லிக், ) என்பது கானின் முறையான ஆணைகளுக்கான உருசிய வரலாற்றுப் பெயராகும். முக்கியமாக கோல்டன் ஹோர்டேயின் கான்களால் பயன்படுத்தப்பட்டது.

ஒகோடி கான் 1230களில் பைசா மற்றும் ஜர்லிக்குகளைத் தடை செய்தார். 13 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை, வடகிழக்கு ருஸின் அனைத்து பிரபுக்களும் தங்கள் ஆட்சியை அங்கீகரிப்பதற்கான ஜர்லிக்குகளைப் பெற்றனர்.

ஆரம்பத்தில், இந்த ஜர்லிக் கரகோரத்தில் உள்ள ககானிடம் இருந்து வந்தது. ஆனால் படு கான் அவரது கானேட்டை நிறுவியபின், ஜர்லிக்குகள் சாராயிலிருந்து வந்தன. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மாஸ்க்கோவின் பசில் II மற்ற உருசியப் பிரபுக்களை மங்கோலிய கான்களிடமிருந்து ஜர்லிக் பெறுவதைத் தடுக்கத் தொடங்கினார். இதனால் உள்ளூர் இளவரசர்களின் ஆட்சியை அங்கீகரிப்பதில் மாஸ்கோவின் உரிமை நிறுவப்பட்டது.

திரிபுராவின் வரலாறு

திரிபுரா மாநிலமானது நீண்ட வரலாற்றைக் கொண்டது. திரிபுரா இராச்சியம் அதன் உச்சத்தில் இருந்த காலகட்டமான கி.பி. 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கிழக்கு வங்காளத்தின் முழு பகுதியைக் கொண்டும், வடக்கிலும் மேற்கிலும் பிரம்மபுத்திரா நதிவரையிலும், தெற்கே வங்காள விரிகுடா மற்றும் கிழக்கில் பர்மாவையும் எல்லைகளாக கொண்டு இருந்தது.

திரிபுராவின் சுதேச மன்னர் அரசின் இறுதி மன்னர் கிரித் விக்ரம் கிஷோர் மாணிக்ய தேவ வர்மன் 1947 முதல் 1949 வரை ஆட்சி செய்தார் பின்னர் 1949, செப்டம்பர் 9 அன்று தன் இராச்சியத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைந்தார்.

திருமுழுக்கு

திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் (Baptism)என்பது கிறித்தவத்தில் நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் சமயம் சார்ந்த கழுவுதல் சடங்காகும். மிகப் பெரும்பான்மையான கிறித்தவ திருச்சபைகள் திருமுழுக்குச் சடங்கைக் கடைப்பிடிக்கின்றன.

இது ஒருவரின் பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு ஒருவரை இணைத்து, அவரைக் கடவுளின் பிள்ளையாகவும் திருச்சபையின் உறுப்பினராகவும் ஆக்குகின்ற அருள்சாதனமாகக் கருதப்படுகின்றது.

பெரிய திருமுடியடைவு

பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. வைணவ குருபரம்பரை வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் தொகுத்தது. பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. அரிசமய தீபம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் 'பெரிய திருவடி அடைவு' நூலைப் பற்றிக் கீழ்க்காணும் செய்திகள் உள்ளன.

கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூல் திவ்வியசூரி சரிதம். இதில் இராமானுசர் காலத்தில் அவரது காலம் வரையிலான குருபரம்பரை தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. 'பிரபன்னாமிர்தம்' என்னும் நூல் பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பராப் பிரபாவம் என்னும் நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார். பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் அது தோன்றிய 15 ஆம் நூற்றாண்டு வரையிலான வைணவ குருமார்களின் பரம்பரையைத் தொகுத்துக் கூறும் தமிழ்நூல்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.