வைட்டுத் தீவு

வைட்டுத் தீவு (Isle of Wight, /iconˈl ɵv wt/) இங்கிலாந்தின் ஒரு கௌன்டியும் ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள மிகப்பெரும் தீவும் ஆகும்.பெரிய பிரித்தானியா|பிரித்தானியா தீவிலிருந்து சோலென்ட் என்ற நீரிணையால் பிரிந்து ஆம்சையர் கடற்கரையிலிருந்து 3–5 மைல்கள்(5-7 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. கடல்மட்டம் உயர்ந்தநிலையில் இருக்கும்போது இது இங்கிலாந்தின் மிகச்சிறிய கௌன்டியாக உள்ளது; கடல் மட்டம் தாழும் நேரங்களில் ரட்லாந்து கௌன்டி இதைவிடச் சிறியதாக உள்ளது. 25 மைல்கள் (40 கிமீ) நீளமும் 13 மைல்கள் (20 கிமீ) அகலமும் கொண்டதாக உள்ளது. ஒரு இலட்சத்து இருபதாயிரம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இங்கு பல விடுமுறை மகிழ்விடுதிகள் அமைந்துள்ளன. விக்டோரியா காலத்திலிருந்தே இது விடுமுறை சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.விக்டோரியா அரசியாரின் வேனில் அரண்மனையும் இறுதி இல்லமும் இங்குள்ளன. கவிஞர்கள் சுவின்பர்ன், டென்னிசன் ஆகியோரின் பிறப்பிடமும் இதுவே.

இங்கு படகு கட்டுதல், பாய்மரம் பின்னுதல்,பறக்கும் படகுகளைத் தயாரித்தல் ஆகியன முதன்மைத் தொழில்களாக உள்ளன. உலகின் முதல் ஹோவர்கிராஃப்ட்டும் பிரித்தானியாவின் விண்வெளி உந்துப்பொறிகளும் இங்குதான் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. வைட்டுத் தீவு ஜாசு இசைவிழா போன்ற இசைவிழாக்கள் இங்கு நடக்கின்றன.[2] நன்கு பராமரிக்கப்படும் வனவிலங்கு உய்வகம் இங்குள்ளது. இங்குள்ள உயரிய சிகரங்களிலும் முகடுகளிலும் தொன்மா தொல்லுயிர் எச்சங்கள் காணப்படுகின்றன.

Wight
செயற்கைக்கோள் ஒன்றால் எடுக்கப்பட்ட வைட்டுத் தீவின் ஒளிப்படம்
வைட்டுத் தீவு
Isle of Wight
Flag of the Isle of Wight

வைட்டுத் தீவின் கொடி
Isle of Wight Council Flag

வைட்டுத் தீவின் கௌன்சில் கொடி
Motto of County Council: இவ்வழகனைத்தும் கடவுளால்
இங்கிலாந்தில் வைட்டுத் தீவு
புவியியல்
நிலை பெருநகரமல்லா, ஒற்றை நிர்வாகமுள்ள கௌன்டி
பிரதேசம் தென்கிழக்கு இங்கிலாந்து
பரப்பளவு
- மொத்தம்
- Admin. area
பரப்பளவுப்படியான தரவரிசை
384 km2 (148 sq mi)
384 km2 (148 sq mi)
நிர்வாக தலைமையகம்நியூபோர்ட்
ISO 3166-2GB-IOW
ONS code 00MW
NUTS 3 UKJ34
Demography
மக்கட்தொகை
- மொத்தம் ()
- அடர்த்தி


369/km2 (960/sq mi)
Ethnicity
அரசியல்

வைட்டுத் தீவு மன்றம்
www.iwight.com
Executiveவார்ப்புரு:English county control
நாடாளுமன்ற உறுப்பினர்
மாவட்டங்கள்

மேற்சான்றுகள்

  1. Neighbourhood Statistics. "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Neighbourhood.statistics.gov.uk. பார்த்த நாள் 25 September 2010.
  2. "Isle of Wight Festival history". Redfunnel.co.uk. பார்த்த நாள் 25 September 2010.

வெளி இணைப்புகள்

ஊடகம்

ஒளிப்படங்கள்

இங்கிலாந்து

இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும். மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலைத் தென் மேற்கிலும் வடகடலைக் கிழக்கிலும் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது. பெரிய பிரித்தானியாவின் தென், நடுவண் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் சில்லி தீவுகள் போன்ற நூற்றுக்கும் மேலான சிறுசிறு தீவுகளையும் அடக்கி உள்ளது. ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும். இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது.

தற்போது இங்கிலாந்தாக அறியப்படும் பகுதியில் பிந்தைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இருப்பினும் ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இங்கு குடிபுகுந்த செருமானிய பழங்குடிகளில் ஒன்றான ஆங்கில்களைக் கொண்டே இது ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என அறியப்படலாயிற்று. இங்கிலாந்து முற்றிலுமாக கிபி 927இல் ஒன்றிணைக்கப்பட்டது; 15வது நூற்றாண்டிலிருந்து உலகெங்கும் சட்ட, பண்பாட்டு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கில மொழி, ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் ஆங்கிலச் சட்டம்—பல நாடுகளில் நடப்பில் இருக்கும் பொதுச் சட்டத்திற்கான சட்ட அடிப்படை—இங்குதான் உருவானது. இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறைமை உலகின் பலநாடுகளின் அரசியலமைப்புக்களில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியால் உலகின் முதல் தொழில்மயமான நாடாக விளங்கியது.இங்கிலாந்தின் புவிப்பரப்பு பெரும்பாலும் சிறு குன்றுகளும் சமவெளிகளாகவும் உள்ளது. இருப்பினும் வடக்கிலும் தென்மேற்கிலும் சில உயரமான மலைப்பகுதிகளைக் காணலாம். இங்கிலாந்தின் முன்னாள் தலைநகரமாக வின்செஸ்டர் இருந்தது; 1066இல் தலைநகர் இலண்டனுக்கு மாற்றப்பட்டது. இன்றைய நாள் இலண்டன் ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கிலாந்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 53 மில்லியனாகும்; இது ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்தொகையில் 84% ஆகும்.

வேல்சு அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக இசுகாட்லாந்துடன் இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது. 1801இல், பெரிய பிரித்தானியா அயர்லாந்து இராச்சியத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது. 1922இல், அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம் நிலைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா

விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, Alexandrina Victoria, மே 24, 1819 – சனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் நாள் முதலும், பிரித்தானிய இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

கீரைகளின் பட்டியல்

கீரைகளின் பட்டியல்.

வில்லியம் கீலிங்

கப்டன் வில்லியம் கீலிங் (William Keeling, 1578–1620) பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த பிரித்தானியக் கடற்படைத் தலைவர். இவர் 1604 ஆம் ஆண்டில் சுசானா என்ற கிழக்கிந்தியக் கம்பனியின் இரண்டாவது கப்பற் பயணத்தையும், பின்னர் 1607 ஆம் ஆண்டில் ரெட் டிராகன் என்ற மூன்றாவது கப்பல் பயணத்தையும் வழிநடத்தினார். இவரது பயனத்தின் போது ஜாவாவில் இருந்து இங்கிலாந்து திரும்பும் வழியில் 1609 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் கொக்கோசு (கீலிங்) தீவுகளைக் கண்டுபிடித்தார். இவரது நினைவாக இத்தீவுகளுக்கு இவரது பெயர் இடப்பட்டது. 1618 இல் இவர் கோவ்ஸ் காசில் கப்பலுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இங்கிலாந்தின் வைட் தீவில் 1620 இல் இறந்தார்.

கீலிங் எழுதிய நாட்குறிப்புகளின் ஒரு பகுதி பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்குறிப்பில் 1607, 1608 ஆம் ஆண்டுகளில் அவரது கப்பலில் அரங்கேறிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் மற்றும் இரண்டாம் ரிச்சார்ட் நாடகங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.