வெள்ளை ரோசா

வெள்ளை ரோசா (The White Rose, ஜெர்மன்: die Weiße Rose) என்பது நாசி ஜெர்மனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழுவாகும். இக்குழுவில் மியூனிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் அவர்களின் மெய்யியல் பேராசிரியரும் அங்கம் வகித்தனர். இவர்கள் ஜூன் 1942 முதல் பெப்ரவரி 1943 ஆம் ஆண்டு வரையில் ஜெர்மனியின் தலைவர் அடால்ப் இட்லருக்கு எதிராக அநாமதேயத் துண்டுப்பத்திரிகைகளை வெளியிட்டு வந்ததன் மூலம் புகழ் பெற்றனர்.

இக்குழுவின் ஆறு முக்கிய உறுப்பினர்கள் நாசி ஜெர்மனியின் இரகசியக் காவல்துறை அமைப்பான கெஸ்டாப்போக்களினால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பெப்ரவரி 22, 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இவர்களின் ஆறாவது துண்டுப் பத்திரிகையின் வாசகங்கள் ஜெர்மனியில் இருந்து ஸ்காண்டினேவியாவினூடாகக் கடத்தப்பட்டு பிரதி பண்ணப்பட்டு மியூனிக் மாணவர்களின் அறிக்கை என்று பெயரிடப்பட்டு ஜூலை 1943 இல் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளினால் விமானங்கள் மூலம் ஜெர்மனி மீது வீசப்பட்டன[1].

இன்று, வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் ஜெர்மனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

Scholl-Denkmal, München
"Weiße Rose" நினைவுச் சின்னம்

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. "G.39, Ein deutsches Flugblatt", Aerial Propaganda Leaflet Database, twentyith World War, Psywar.org.

வெளி இணைப்புகள்

  • [1]: Center for White Rose Studies — Making the White Rose relevant to the 21st century
1943

1943 (MCMXLIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.

சோபி சோல்

சோபி சோல் (ஆங்கிலம்: Sophia Magdalena Scholl - பிறப்பு 9 மே 1921 - 22 பெப்ரவரி 1943) ஒரு யேர்மனிய மாணவர், புரட்சிவாதி, வன்முறையற்ற வெள்ளை ரோசா இயக்கத்தின ஒரு செயற்பாட்டாளர். நாசி யேர்மனிக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் போர் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகித்தற்காக தேசத் துரோகக் குற்றம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1970 களின் பின்பு இவர் ஒரு யேர்மனிய மாவீராகக் கொண்டாப்படுகிறார்.

பெப்ரவரி 18

பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.

பெப்ரவரி 22

பெப்ரவரி 22 (February 22) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.