லியொனார்டோ டா வின்சி

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், புதுமைப் புனைவாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரி EAHCDWQNய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் [1] உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.[2]

இலியனார்தோ தா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.[3]

இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.[4]

இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.[5]

லியொனார்டோ டா வின்சி
Francesco Melzi - Portrait of Leonardo
பிறப்பு15 ஏப்ரல் 1452
Anchiano
இறப்பு2 மே 1519 (அகவை 67)
பணிபொறியாளர், வானியல் வல்லுநர், மெய்யியலாளர், உடற்கூறுநர், கட்டடக் கலைஞர், புத்தாக்குனர், இசையமைப்பாளர், botanist, வேதியியலாளர், விலங்கியலார், caricaturist
பாணிportrait
கையெழுத்து
Da Vinci Signature
Leonardo da Vinci.jpeg
லியொனார்டோ டா வின்சி

வாழ்க்கை

இளமை

Leonardo self
தானே வரைந்த அவரது உருவப்படம், ca. 1513

இவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார்.

இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "இலியனார்தோ" என்றோ அல்லது "நான் இலியனார்தோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "தா வின்சிகள்" என்றில்லாமல், "இலியொனார்தோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Study of a Tuscan Landscape
இலியொனார்தோவினதாக அறியப்பட்ட மிகப் பழைய ஓவியம், ஆர்னோ பள்ளத்தாக்கு, (1473) - உஃபிசி

லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் விற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.

வெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476

Andrea del Verrocchio, Leonardo da Vinci - Baptism of Christ - Uffizi
கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (1472–1475)—உஃபிசி, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் வரைந்தது.

1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

வெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது.

1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.

தொழில் புரிந்த காலம்

Leonardo da Vinci - Adorazione dei Magi - Google Art Project
The Adoration of the Magi, (1481)—உஃபிசி, புளோரன்ஸ், இத்தாலி. லியொனார்டோ மிலானுக்குச் சென்றிருந்தபோது இந்த முக்கியமான வேலை தடைப்பட்டது.

நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.

1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.

புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார்.

பிற்காலம்

1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.

1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புகளும் செல்வாக்குகளும்

புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி

லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.

லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை.

கலை

The Last Supper pre EUR
லியோனார்டோ டா வின்சி: கடைசி இராப்போசன விருந்து (1498)

லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.

லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.

மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.

Mona Lisa, by Leonardo da Vinci, from C2RMF retouched
லியோனார்டோ டா வின்சி:
மோனா லிசா (1503-6)

புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை.

அறிவியலும், பொறியியலும்

இவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.

அறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்.

Da Vinci Vitruve Luc Viatour
விட்ருவியன் மனிதன்: இலியொனார்தோ தா வின்சி
மாந்த உடலை வரைதல்

உடற்கூற்றியலும் உடலியக்கவியலும்

Studies of the Arm showing the Movements made by the Biceps
கையின் உடற்கூற்றியல் ஆய்வு(1510)

இவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார்.[6] ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார்.

ஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார்.[7] இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது.[8] இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து.[8][9] மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன.[8]

Leonardo Da Vinci's Brain Physiology
மாந்த மூளை, மண்டையோட்டின் தா வின்சியின் உடலியக்கவியல் உருவரை (1510)

பொறியியலும் புதுமைப் புனைவுகளும்

Design for a Flying Machine
பறக்கும் எந்திர வடிவமைப்பு (1488), இன்சுத்தியூத் தெ பிரான்சு, பாரீசு

புகழும் பெற்றியும்

இவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார்.

82222253-SLD-001-0067
அம்பாயிசேவில் உள்ள இலியனார்தோ தா வின்சியின் கல்லறை இருப்பிடம்

இவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.[9]

[[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய கலைஞர்களின் வாழ்க்கைகள், 1568 எனும் நூலில்,[10] இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்:

இயல்பாகவே பல ஆண்களும் பெண்களும் உயர்ந்த திறமைகளோடு பிரக்கின்றனர்; சிலவேளைகளில் மட்டுமே, இயற்கையைக் கடந்த நிலையில், தனியொருவர் வானகம் தந்த அழகு, அறிவு, அருள், திறமை செறிய மற்ர வர்களை எங்கோ பின்தள்ளிவிட்டு அரிதாகப் பிறக்கின்றார். இவருக்கு எல்லா வல்லமைகளும் மாந்தத் திறத்தால் ஆற்ற்ப்படுவன அல்ல, மாறாக கடவுளிடம் இருந்தே வருகின்றன. இது இலியனார்தோ தா வின்சியைப் பொறுத்தவரையில் உண்மையென அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். அவரது பேரழகும் பேரருளும் அவர் செய்யும் அனைத்திலும் மிளிர்கின்றன. இவர் தான் எடுத்த சிக்கல்களுக்கெல்லாம் மிக எளிமையாக தீர்வுகளும் காணும் வகையில் தன் அறிவு த் திறனை அருமையாக வளர்த்துகொண்டார்.

—ஜியார்ஜியோ வாசரி
Francois I recoit les derniers soupirs de Leonard de Vinci by Ingres
பிரான்சின் பிராங்காயிசு I இலியனார்தோ தா வின்சியின் கடைசி மூச்சின்போது, இங்கிரசு வரைந்த ஓவியம், 1818

பல்வகைத் தகவல்கள்

தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.[11]

கலைச் சந்தை

Leonardo da Vinci, Salvator Mundi, c.1500, oil on walnut, 45.4 × 65.6 cm
இலியனார்தோ தா வின்சி, அண்.1500, சaல்வதார் முண்டி, வாதுமையில் நெய்வன ஓவியம், 45.4 செமீ × 65.6 செமீ

சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது.[12] முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger) எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் இடைமாற்றம் எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும்.[13]

Leonardo-72-vacuum
இலியனார்தோ தா வின்சி வரைந்த பல்கோணகம்.

மேற்கோள்கள்

  1. Gardner, Helen (1970). Art through the Ages. pp. 450–456.
  2. See the quotations from the following authors, in section Fame and reputation: Vasari, Boltraffio, Castiglione, "Anonimo" Gaddiano, Berensen, Taine, Fuseli, Rio, Bortolon.
  3. John Lichfield, The Moving of the Mona Lisa, The Independent, 2005-04-02 (accessed 2012-03-09)
  4. Modern scientific approaches to metallurgy and engineering were only in their infancy during the Renaissance.
  5. Capra, pp.5–6
  6. Davinci, Leonardo (2011). The Notebooks of Leonardo Da Vinci. Lulu. பக். 736. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-105-31016-4. https://books.google.com/books?id=YGmAAwAAQBAJ&pg=736#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 16 September 2016.
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Sooke என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. 8.0 8.1 8.2 Keele Kenneth D (1964). "Leonardo da Vinci's Influence on Renaissance Anatomy" (PDF). Med Hist 8: 360–70. doi:10.1017/s0025727300029835. பப்மெட்:14230140. பப்மெட் சென்ட்ரல்:1033412. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1033412/pdf/medhist00157-0072.pdf.
  9. 9.0 9.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. Vasari, p. 255
  11. "Davinciite, Na12K3Ca6Fe 3 2+ Zr3(Si26O73OH)Cl2, a New K,Na-Ordered mineral of the eudialyte group from the Khibiny Alkaline Pluton, Kola Peninsula, Russia". Geology of Ore Deposits 55: 532–540. doi:10.1134/S1075701513070076. Bibcode: 2013GeoOD..55..532K. https://link.springer.com/article/10.1134%2FS1075701513070076.
  12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Salvator Mundi என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  13. Leonardo da Vinci painting 'Salvator Mundi' sold for record $450.3 million, Fox News, 16 November, 2017

நூல்தொகை

வெளி இணைப்புகள்

1452

ஆண்டு 1452 (MCDLII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.

1485

1485 (MCDLXXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.

1490

1490 (MCDXC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

1499

1499 (MCDXCIX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

16-ஆம் நூற்றாண்டு

கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.

இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)

இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும். இறுதி இராவுணவை சில கிறித்தவர்கள் இராப்பந்தி அல்லது இராபோஜனம் என்றும் கூறுவதுண்டு.

லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (Beatrice d'Este) என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.

யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சிபற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது.

உடலியங்கியல்

உடலியங்கியல் (இலங்கை வழக்கு: உடற்றொழிலியல்) (Physiology, ) என்பது உயிரினங்களின் செயல்பாட்டைக் குறித்த அறிவியல் ஆகும். அறிவியலின் இப்பிரிவு உயிரிகளிலுள்ள உயிர் மூலக்கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புக்கள், உடல் உறுப்புத் தொகுதிகள், எவ்வாறு வேதியியல் அல்லது இயற்பியல் செயல்பாடுகளைச் செய்கின்றன என்பதைக் குறித்ததாகும். ஓர் உயிரியில் எவ்வாறு உறுப்புக்கள் இயங்கி அதனால் தனது செயல்களை மேற்கொள்ள முடிகிறது என உடலியங்கியலாளர்கள் அறிகின்றனர். எடுத்துக்காட்டாக மனிதர்களில் உணவு செரிக்க இரைப்பை, கல்லீரல், மற்றும் கணையம் போன்றவை சுரக்கும் வேதிப்பொருட்கள் குறித்தும், அவை உடல் எவ்வாறு உணவை உறிய வைக்கின்றன என்பது குறித்ததுமாக கற்பது. இதேபோல் தசைகளில் நரம்புகள் எடுத்துச்செல்லும் வேதிச் செய்திகளுக்கேற்ப சுருங்கி விரிதல் ஏற்படுவதும் உடலியங்கியல் ஆகும். இயல்பாக உடல் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிவதன் மூலம், மருத்துவர்கள் உடலுறுப்புகள் இயல்பாகச் செயல்படாதிருக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக் காட்டாக, தைராய்டு சுரப்பி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிந்ததால் முன்கழுத்துக் கழலை என்னும் நோய்க்குச் சிகிச்சை அளிக்க முடிந்தது.

இத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக வேந்திய சுவீடனின் அறிவியல் அகாதமி 1901 முதல் அளித்துவரும் உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு உள்ளது.

உலங்கு வானூர்தி

உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர், Helicopter) வானூர்தி வகைகளில் ஒன்று. விமானத்திற்கும் உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் விமானம் மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.

ஓர் விமானம் காற்றில் மிதக்க முன்னோக்கிய நகர்வு தேவை, ஆனால் உலங்கு வானூர்திக்கு தேவையில்லை. இதனால் ஒரே இடத்தில் நின்று மிதக்க முடியும். அவை தங்கள் ரோடர்களை சற்றை சாய்த்து, தனக்கு கீழே உள்ள காற்றை வேண்டும் திசையில் தள்ளி நகர்கின்றன.

இவ்வானூர்திகளை 1490ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் லியொனார்டோ டா வின்சி முதலில் கற்பனை செய்தார், ஆனால் பல நூற்றாண்டுகள் கழித்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஒருவரும் வடிவமைக்கவில்லை. பிரெஞ்ச் நாட்டு எதியன் ஓமிசேன் (Etienne Oehmichen) முதலில் பறந்தவராவார்.அவரால் ஏழு நிமிடங்கள் நாற்பது வினாடிகள் நேரமே பறக்க முடிந்தது.

உலங்கு வானூர்திகள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவு நேரங்களில் மிகவும் பயனளிக்கின்றன. சாலைகள் மூலம் அடையமுடியாதபோது சிறைபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மருந்து மற்றும் உடைகள் மேலிருந்து வீச உதவுகிறது. தவிர நோயாளிகளையும் காயமடைந்த மக்களையும் இடம்பெயர்க்கவும் துணைபுரிகிறது. இராணுவ நடமாட்டத்திற்கும் போர்செயல்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த உயரத்தில் பறப்பதால் இயற்கைசேதங்களை பார்வையிடவும் அரசியல் பணிகளுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகின்றனர்.

ஏப்ரல் 15

ஏப்ரல் 15 (April 15) கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன.

கண்ணாடி பிம்ப எழுத்துமுறை

கண்ணாடி பிம்ப எழுத்துமுறை (mirror writing) என்பது ஒரு மொழியின் இயல்பான எழுதும் முறையை அப்படியே நேர் எதிராக எழுதும் முறை ஆகும். எனவே இந்த எழுத்துக்களை பிரதிபலிக்கும் கண்ணாடி உதவியின் மூலம் எளிதாகப் படிக்க முடியும். இது மிக முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரகசியக் குறியீட்டு முறைகளில் ஒன்று.

தற்காலத்தில் அவசர உதவி வாகனங்களில் AMBULANCE என்ற ஆங்கிலச் சொல் கண்ணாடி பிம்ப எழுத்து முறையில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னே அபாய ஒலி கேட்கும் போது முன்னே செல்லும் வண்டியின் ஓட்டுநர் பின்புறப் பார்வைக் கண்ணாடியில் (rear view mirror) பார்க்கும் போது ஆம்புலன்ஸ் எனும் சொல் நேராகத் தெரிந்து அவர் வழிவிடுவதற்கு ஏதுவாக இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

கண்ணாடி பிம்ப முறையில் எழுதும் திறமையானது மூளையின் மொழிக்கான பகுதியில் இயல்புக்கு மாறான மாற்றங்கள் உண்டாவதால் கிடைக்கப் பெறுகிறது.. இத்திறமை உடைய பலர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்.

குழந்தை இயேசு

குழந்தை இயேசு என்பது இயேசுவின் பிறப்பு முதல் அகவை 12 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இயேசுவின் காலத்தில் யூத வழக்கத்தின்படியும், கிறிஸ்தவ கலாச்சாரத்தின் சில அண்மித்த நூற்றாண்டுகள் வரையும் 13 அகவையின் பின் ஒருவர் வளர்ந்தவராக கருதப்பட்டார்.

இயேசுவின் குழந்தை பருவ நற்செய்திகள் (Infancy Gospels) என்னும் பெயரில் பல நூல்கள் இப்பருவத்தில் இயேசுவின் வாழ்வை சித்தரிப்பதாக கூறுகின்றன.

3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டிலிருந்து இயேசுவின் குழந்தை பருவம் கலையில் சித்தரிக்கப்படலாயிற்று. இதில் குறிப்பாக அவரின் பிறப்பு சித்தரிப்பு அடங்கும். இயேசுவின் தாய் மரியாவை சித்தரிக்கும் போது இயேசுவை குழந்தையாக அவை கையில் ஏந்தியவாறு சித்தரிப்பது வழக்கம். இச்சித்தரிப்புகளில் இயேசுவின் விருத்த சேதனம், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல், ஞானிகள் வருகை, எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் ஆகியனவும் பொதுவாக சித்தரிக்கப்படுவது வழக்கம். நற்செய்திகள்.

லியொனார்டோ டா வின்சி போன்ற வல்லுனர்களின் படைப்புகளின் திருக்குடும்பம் மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் குழந்தை யேசுவை சித்தரிப்பது வழக்கமானதொன்றாக இருந்தது.திருமுறை நற்செய்திகளில் இப்பருவத்தினைப்பற்றி மிகக் குறைவாகவே உள்ளது. இயேசுவின் பிறப்பிலிருந்து 12ஆம் அகவையில் கோவிலில் சிறுவன் இயேசு அறிஞரோடு விவாதிப்பது வரை எத்தகவலும் இல்லை.

சனவரி 3

சனவரி 3 (January 3) கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.

டக்கோலா

மாரியானோ டி ஜகோபோ டெட்டோ இல் டக்கோலா (Mariano di Jacopo detto il Taccola, 1382 – ஏறத்தாழ. 1453), சுருக்கமாக டக்கோலா ('காகம்'), இத்தாலியில் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்த ஓர் அரசு நிர்வாகி, கலைஞர் மற்றும் பொறியியலாளர். பல்வேறு புதுமையான பொறிகளையும் கருவிகளையும் விளக்கங்களுடன் வரைபடங்களாக தொகுத்த டெ இஞ்சினிஸ் , டெ மசினிஸ் என்ற அவரது தொழில்நுட்பக் கட்டுரைத்தொகுப்புகளுக்காக அறியப்படுகிறார். பிரான்செஸ்கோ டி ஜியார்ஜியோ, லியொனார்டோ டா வின்சி போன்ற பிற்கால மறுமலர்ச்சி பொறியாளர்களும் கலைஞர்களும் இவரது படைப்புக்களை பரவலாக படித்து வந்ததுடன் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தியுமுள்ளனர்.

திரைப்பட வரலாறு

மிக நீண்ட காலமாகச் சமூகத்தில் நிலைபெற்றிருந்து மக்களையும் மகிழ்வித்து வந்த இலக்கியம், கதை சொல்லல், ஓவியம், பழங்கதைகள், பொம்மலாட்டம், குகை ஓவியங்கள், நாடகம், கூத்து, நடனம், இசை, கிராமியப் பாடல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தற்காலத் திரைப்படத் தின் வரலாறு அமைந்துள்ளதெனலாம். திரைப்படத் துறைக்கான தொழில் நுட்பங்களும் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஏற்பட்ட வளர்ச்சிகளின் தொடர்ச்சியாக உருவானவையே.

நெய்யோவியம்

நெய்யோவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதைநெய், கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெய்கள் ஆகும். பயன்படுத்தப்படும் நெய்யைப் பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.

முதன்முதலில் நெய்யோவியங்கள் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். . ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை நெய்யோவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.

முற்றுகை

முற்றுகை (ஆங்கிலம்: Siege)என்பது, ஒரு நகரத்தையோ கோட்டையையோ கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கை மூலம் அதைச் சுற்றி வளைத்துத் தடைகளை ஏற்படுத்துவதைக் குறிக்கும். முற்றுகைப் போர் தீவிரம் குறைவான ஒரு போர் உத்தி அல்லது வடிவம் ஆகும். இதில் ஒரு தரப்பு வலுவானதும், நிலையானதுமான ஒரு பாதுகாப்பு நிலையைக் கொண்டிருக்கும். இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுவது உண்டு. இரு தரப்பும் அருகருகே இருப்பதும், வெற்றிக்கான வாய்ப்புக்கள் மாறிக்கொண்டு இருப்பதும் இராசதந்திர நடவடிக்கைகளை ஊக்குவிப்பது உண்டு.

தாக்குதல் நடத்தும் தரப்பு ஒரு கோட்டையையோ நகரத்தையோ எதிர்கொள்ளும்போது, அதை ஊடறுத்து உட்செல்ல முடியாத நிலையில், எதிர்த்தரப்பு சரணடைவதற்கும் மறுக்கும்போது முற்றுகை ஏற்படுகிறது. குறித்த இலக்கைச் சுற்றி வளைத்து, மேலதிக படை உதவிகளைப் பெறுவதையும், உள்ளிருக்கும் படைகள் தப்பிச் செல்வதையும், உணவு முதலிய தேவைகள் கிடைப்பதையும் தடைசெய்வதே முற்றுகையின் நோக்கம் ஆகும். இவற்றுடன் சேர்த்து முற்றுகைப் பொறிகள், கனரக ஆயுதங்கள், சுரங்கம் தோண்டுதல் போன்றவற்றைப் பயன்படுத்தி மதில்களை உடைக்க முயற்சி செய்வர். பாதுகாப்பை ஊடறுத்துச் செல்வதற்கு ஏமாற்று, துரோகம் போன்ற செயற்பாடுகளையும் பயன்படுத்துவதுண்டு. படை நடவடிக்கைகள் பயன் தராதவிடத்து, பட்டினி, தாகம், நோய்கள் போன்றவற்றினால் முற்றுகை இடும் தரப்போ, அதற்கு உள்ளாகும் தரப்போ பாதிக்கப்படுவது முற்றுகையின் முடிவைத் தீர்மானிக்கக் கூடும்.

நகரங்கள் பெரும் மக்கள்தொகையோடு கூடிய மையங்களாக வளர்ச்சியடைவதற்கு முன்பே முற்றுகைகள் இருந்திருக்கக்கூடும். மையக் கிழக்கின் பண்டைக்கால நகரங்களில் அரண் செய்யப்பட்ட நகர மதில்கள் இருந்ததற்கான தொல்லியற் சான்றுகள் உள்ளன. பண்டைய சீனாவின் போரிடும் நாடுகள் காலத்தில் நீண்ட முற்றுகைகளும், நகர மதில்களைப் பாதுகாப்பவர்களுக்கு எதிரான முற்றுகைப் பொறிகளின் பயன்பாடும் இருந்ததற்கான எழுத்துமூலச் சான்றுகளும், தொல்லியற் சான்றுகளும் உள்ளன. கிரேக்க-உரோம காலத்திலும் முற்றுகைப் பொறிகளின் பயன்பாடு ஒரு மரபாக இருந்தது. மறுமலர்ச்சிக் காலத்திலும், தொடக்க நவீன காலத்திலும் ஐரோப்பாவில் இடம்பெற்ற போர்களில் முற்றுகைப் போர் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. ஒரு ஓவியராகப் புகழ் பெற்றிருந்தது போலவே லியொனார்டோ டா வின்சி தனது அரண்களின் வடிவமைப்புக்காகவும் புகழ் அடைந்திருந்தார்.

மத்தியகாலப் போர்கள் பொதுவாக தொடர் முற்றுகைகளைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருந்தன. நெப்போலியக் காலத்தில் தொடந்து அதிகரித்து வந்த ஆற்றல் வாய்ந்த பீரங்கிகளின் பயன்பாட்டால், அரண்களின் பெறுமதி குறையலாயிற்று. 20 ஆம் நூற்றாண்டில், பழைய முற்றுகைகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. நகர்வுப் போர்முறைகளின் அறிமுகத்தோடு நிலையான ஒற்றை அரண் முன்னைப்போல் முடிவைத் தீர்மானிக்கும் ஒன்றாக இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், மரபுவழியான முற்றுகைகள் இப்போதும் இருக்கவே செய்கின்றன. ஆனால், போர்களின் போக்கு மாறிவிட்டதால், முக்கியமாக பெருமளவிலான அழிப்பு ஆற்றலை மிக இலகுவாக ஒரு நிலையான இலக்கு மீது செலுத்த் முடியும் என்பதால், முற்றுகை முன்னைப்போல் வழமையான ஒன்றாக இல்லை.

மே 2

மே 2 (May 2) கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

மோனா லிசா

மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படமாக கிபி. 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.

ராபியேல் சான்சியோ

பெரும்பாலும் ராபியேல் என அழைக்கப்படும் ராபியேல் சான்சியோ ( 28 மார்ச் அல்லது 6, ஏப்ரல் 1483 – ஏப்ரல் 6, 1520), என்பவர் ஒரு இத்தாலிய ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். மேல் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த இவர், கச்சிதமானதும், அழகு நிறைந்ததுமான ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி ஆகியோருடன், இவரும் சேர்ந்து ஓவியத்துறையின் மும்மூர்த்திகள் எனப்பட்டார். ராபியேல் பெருமளவான உற்பத்தித் திறன் கொண்டவர். வழமைக்கு மாறான பெரிய வேலைத்தலம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இவர் மிக இளம் வயதான 37 வயதிலேயே இறந்துவிட்டாலும், இவரது ஓவியங்கள் பெருமளவில் உள்ளன. வாட்டிகனின் உள்ள ராபியேல் கூடங்களிலுள்ள சுவரோவியங்களே இவரது மிகப்பெரிய ஓவியங்களாகும். எனினும் இவ்வோவியங்கள் நிறைவடையும் முன்பே ராபேல் இறந்துவிட்டார்.

ரோமில் இவர் இருந்த சில காலங்களுக்குப் பின் இவருக்குக் கிடைத்த பல வேலைகளை இவரது வரைபடங்களை வைத்து வேலைத்தலத்தில் இருந்த பிறரே நிறைவு செய்தனர் இதனால் இவ்வாறான ஓவியங்களின் தரத்தில் குறைவு காணப்பட்டது. இவரது வாழ்நாளில் இவர் பெரும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். எனினும் ரோமுக்கு வெளியே இவர் பெரும்பாலும், மற்றவர்களுடன் சேர்ந்து செய்த அச்சுருவாக்கப் பணிகள் மூலமே அறியப்பட்டிருந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோவின் புகழ் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் கூடுதலாகப் பரவியிருந்தது. இதன் பின்னர், ராபியேலின் ஓவியங்களின் தனித்துவமான இயல்புகளால் அவை மிக உயர்ந்த மாதிரிகளாகப் போற்றப்பட்டன.

இவரது தொழில் வாழ்வை மூன்று கட்டங்களாகவும் மூன்று பாணிகளாகவும் பிரிப்பது உண்டு. முதற் கட்டம் இவர் உம்பிரியாவில் இருந்த காலம். அடுத்தது 1504 முதல் 1508 வரையான காலம். ராபியேல் புளோரன்சின் கலை மரபை உள்வாங்கிக் கொண்ட காலம். இறுதியாக இவர் பாப்பரசர்களுக்கும், அவர்களுடன் நெருங்கியோருக்குமான வேலைகளைச் செய்துகொண்டு, ரோமில் மிகவும் வெற்றிகரமாக விளங்கிய 12 ஆண்டுக் காலம்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.