யோசுவா (நூல்)

யோசுவா (Joshua) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஆறாவது நூலாக இடம்பெறுவதாகும்.

நூலின் பெயர்

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sefer Y'hoshua" அதாவது "யோசுவாவின் நூல்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. முன்னைய இறைவாக்கினர் நூல்கள் என்னும் பிரிவில் முதலாவதாக இதை யூத மக்கள் கணிப்பர்.

நூலில் காணப்படும் கருத்துகள்

இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இசுரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.

இந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

முன்பு மோசேயின் மூலம் இசுரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. கானான் நாட்டைக் கைப்பற்றல்

அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல்
ஆ) இசுரயேலரின் வெற்றிகள்
இ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள்

1:1 - 12:24

1:1-18
2:1 - 11:23
12:1-23

326 - 344

326 - 327
327 - 343
343 - 344

2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல்

அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி
ஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி
இ) அடைக்கல நகர்கள்
ஈ) லேவியர்க்குரிய நகர்கள்

13:1 - 21:45

13:1-33
14:1 - 19:51
20:1-9
21:1-45

344 - 356

344 - 345
346 - 354
354
354 - 356

3. கிழக்கே குடியேறிய குலத்தார் 22:1-34 356 - 358
4. யோசுவாவின் இறுதி மொழிகள் 23:1-16 359 - 360
5. செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1-33 360 - 362

மேலும் காண்க

விக்கிமூலத்தில் யோசுவா நூல்

அஸ்தோது

அஸ்தோது அல்லது அஸ்டோட் (Ashdod; எபிரேயம்: אַשְׁדּוֹד (audio); அரபு மொழி: اشدود, إسدود Isdud) என்பது இசுரேலில் ஆறாவது பெரிய நகரமும், அந்நாட்டின் தென் மாவட்டத்திலும், இசுரேலின் நடுநிலக் கடலில் கடற்கரைப்பகுதியில் டெல் அவீவ்வின் வடக்கிற்கும் (32 கிலோமீட்டர்கள் (20 மைல்கள்) தூரத்தில்) அஸ்கெலோனின் தெற்கிற்கும் (20 km (12 mi) தூரத்தில்) இடையே அமைந்துள்ள ஓரு நகராகும். கிழக்கில் எருசலேம் கிழக்கில் 53 km (33 mi) தொலைவில் உள்ளது.

அஸ்தோது இசுரேலின் மிகப் பெரிய துறைமுகமாகும். அந்நாட்டின் 60% இறக்குமதி இதனூடாகவே இடம்பெறுகின்றன. இந் நகரம் ஒரு முக்கிய பிராந்திய தொழில்துறை மையமாகவும் உள்ளது.

தற்போதைய அஸ்தோத்தில் பண்டைய இரு இரட்டை நகரங்களை, ஒன்றை நிலத்தின் உட்பகுதியிலும் மற்றயதை கடற்கரையிலுமாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் வரலாற்றில் இரண்டு தனித்தனி கூறுகளைக் கொண்டு இருந்தன.

அஸ்தோதின் முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட நகர்ப்புற குடியிருப்பு கி.மு. 17 ஆம் நூற்றாண்டின் கானான் கலாச்சாரத்திற்குச் செல்வதால், இதனை உலகின் மிகவும் பழைய நகரங்களில் ஒன்றாக்கிறது.

அஸ்தோது விவிலியத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய 1956 இற்கு முந்திய வரலாற்றுக் காலத்தில், இந்நகரில் பெலிஸ்தர், இசுரயேலர் குடியேறியதோடு, அலெக்சாண்டரின் வெற்றியை அடுத்து காலனியத்தினர், உரோமர், பைசாந்தியர், அராபியர், சிலுவைப் போர் வீரர்கள், உதுமானிய துருக்கியர் ஆகியோரும் அங்கு இருந்தனர்.புதிய அஸ்தோது பண்டைய நகரின் அருகேயுள்ள மணற்குன்றுகள் மீது 1956 இல் நிறுவப்பட்டு, 1968 இல் ஒரு நகரமாக இணைத்துக்கொள்ளப்பட்ட இது கிட்டத்தட்ட 60 சதுர கிலோமீட்டர்கள் (23 sq mi) நிலப் பகுதியைக் கொண்டது. இது ஒரு திட்டமிட்ட நகரமாக இருப்பதால், ஒரு பிரதான அபிவிருத்தித் திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சியின் மத்தியிலும் குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து, வளி மாசடைதல் தடுப்பு ஆகிய வசதிகளைச் செய்கிறது.

இசுரேலிய மத்திய புள்ளிவிபரப் பணியகத்தின்படி, அஸ்தோது 2014 இல் 217,959 மக்கள் தொகை 47,242 டூனம்கள் (47.242 கிமி2; 18.240 ச. மைல்) பரப்பளவில் கொண்டிருந்தது.

ஆயி

ஆயி (Ai/Hai) என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும். எபிரேயத்தில் העי‎ என்னும் சொல்லுக்கு "அழிபாடு" என்பது பொருள் ஆகும்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.