யோசுவா


யோசுவா (எபிரேயம்: יְהוֹשֻׁעַ; கிரேக்க மொழி: Ἰησοῦς, அரபு மொழி: يوشع بن نون), என்பவர் தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நபரும், இசுரேலுக்கான உளவாளிகளில் ஒருவரும் (எண் 13-14), மோசேக்கு உதவியாக விடுதலைப் பயணத்தில் இருந்தவரும் ஆவார்.[3] இவர் எபிரேய விவிலியத்தின் யோசுவா நூலின் மத்திய பாத்திரமும் ஆவார். விடுதலைப் பயண நூலின்படியும் எண்ணிக்கை நூலின்படியும் யோசுவா நூலின்படியும், இவர் இசுரேலிய கோத்திரங்களின் தலைவராக மோசேயின் மரணத்தின் பின் திகழ்ந்தார். ஓசேயா என முன்பு பெயர் கொண்டிருந்த இவருடைய தந்தை எபிராயிம் கோத்திரத்தைச் சேர்ந்த நூன் ஆவார். ஓசேயா என்ற இவரை மேசே யோசுவா என அழைத்தார்.(Numbers 13:16) தனது பற்றுறுதி காரணமாக மிகச்சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார்.

யோசுவா
Lanfranco Moses and the Messengers from Canaan
மேசேயும் கானானிலிருந்து செய்தியாளர்களும், கியோவானியின் எண்ணெய் வர்ணம் 85-3/4 x 97 அங்குலம்
விவிலிய நீதித்தலைவர்
பிறப்பு1550-1440 கி.மு
இறப்பு1550-1440 கி.மு
கானான்
ஏற்கும் சபை/சமயம்யூதம், கிறித்தவம், இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்யோசுவா கல்லறை
திருவிழா
சித்தரிக்கப்படும் வகைகானானிலிருந்து திராட்சையினை சுமந்து வருதலுக்கான காலேபுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புக்கள்

  1. Great Synaxaristes: (கிரேக்கம்) Ὁ Ἅγιος Ἰησοῦς ὁ Δίκαιος. 1 Σεπτεμβρίου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
  2. Righteous Joshua the son of Nun (Navi. OCA - Feasts and Saints.
  3. Michael D. Coogan, "A Brief Introduction to the Old Testament" page 166-167, Oxford University Press, 2009
அனத்தோத்து

அனத்தோத்து (Anathoth) என்னும் நகர் பழைய ஏற்பாட்டில் வருகின்ற ஒரு நகரம் ஆகும். இப்பெயர் முதன்முறையாக யோசுவா நூலில் காணப்படுகிறது. ஆரோனின் மக்களுக்கு பென்யமின் குலத்திலிருந்து அளிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக அனத்தோத்தும் குறிக்கப்படுகிறது (காண்க: யோசுவா 21:13,18. இதே செய்தி 1 குறிப்பேடு 6:54,60இலும் உள்ளது.

ஆகாய் (நூல்)

ஆகாய் (Haggai) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

ஆயி

ஆயி (Ai/Hai) என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும். எபிரேயத்தில் העי‎ என்னும் சொல்லுக்கு "அழிபாடு" என்பது பொருள் ஆகும்.

எண்ணிக்கை (நூல்)

எண்ணிக்கை (எண்ணாகமம்) (Numbers) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) நான்காவது நூலாக இடம்பெறுவதாகும்.

எரேமியா (நூல்)

எரேமியா (Jeremaiah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

எஸ்ரா (நூல்)

எஸ்ரா (Ezra) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

ஏப்ரல் 24

ஏப்ரல் 24 (April 24) கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.

சூன் 27

சூன் 27 (June 27) கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.

சூலை 18

சூலை 18 (July 18) கிரிகோரியன் ஆண்டின் 199 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 200 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.

ஜோப்ஸ்

ஜோப்ஸ் (ஆங்கிலம்:Jobs) இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இந்த திரைப்படத்தை யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன் இயக்க, ஆஷ்டன் குட்சர், டெர்மொட் மல்ரோனி, ஜோஷ் கட், லுகாஸ் ஹாஸ், ஜே. கே. சிம்மன்ஸ், லெஸ்லி ஆன் வாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பழைய ஏற்பாடு

பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும்.

ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் பழைய உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து மனிதரோடு கடவுள் செய்த புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கிறிஸ்துவுக்கு முன்பு கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்து வழியாகவும் அவருக்குப் பின்பும் கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் புதிய ஏற்பாடு என்றும் பிரித்துக் காண்பது கிறித்தவரின் தொன்மையான வழக்கம் ஆகும்.

யூத சமயத்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மெசியா என்றோ உலக மீட்பர் என்றோ ஏற்பதில்லை. எனவே கிறித்தவர்கள் பழைய ஏற்பாடு என்று கருதுவதை யூதர்கள் விவிலியம் என்றே அழைக்கிறார்கள். பழைய ஏற்பாட்டை எபிரேய விவிலியம் (Hebrew Bible) எனவும் அவர்கள் கூறுவர்.

மார்ச் 1

மார்ச் 1 (March 1) கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.

யோசுவா (நூல்)

யோசுவா (Joshua) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஆறாவது நூலாக இடம்பெறுவதாகும்.

யோசுவா ஃபிஷ்மன்

யோசுவா அரோன் ஃபிஷ்மன் (Joshua Aaron Fishman; Shikl Fishman சூலை 18, 1926 - மார்ச் 1, 2015) ஒரு யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர், மொழித் திட்டமிடலாளர். இவர் மொழிகளின் நிலைமை பற்றி அளக்க அறிமுகப்படுத்திய Graded Intergenerational Disruption Scale பலரால் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும்.

இவர் மொழித் திட்டமிடல், மொழிப் புத்துயிர்ப்பு, பன்மொழியியம், இருமொழிக் கல்வி போன்ற தலைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி உள்ளார்.

யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன்

யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன் (ஆங்கிலம்:Joshua Michael Stern) இவர் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஜோப்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

லேவியர்

லேவியர் (லேவியராகமம்) (Leviticus) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) மூன்றாவது நூலாக இடம்பெறுவதாகும்.

விவிலிய நூல்கள்

விவிலிய புத்தகங்கள் (நூல்கள்) யூத சமயத்தவராலும் கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரேய விவிலியம் என்று கூறுவதும் உண்டு.

கிறித்தவர்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கும் விவிலிய நூல் தொகுதி இயேசு கிறிஸ்துவின் போதனையை உள்ளடக்கிய பகுதியாகிய நற்செய்தி நூல்களையும், அப்போதனையின் அடிப்படையில் அமைந்த வேறு நூல்களையும் கொண்டுள்ளது.

புதிய ஏற்பாட்டு நூல்கள் எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டைப் பொறுத்தமட்டில், கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபுவழி திருச்சபையும் புரடஸ்தாந்து சபைகளைவிட அதிகமான சில நூல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்நூல்கள் எபிரேய மொழியிலன்றி, கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை ஆகும்.

யூதமார்க்கம் மற்றும் கிறிஸ்தவத்தில் புனிதமாக கருதப்படுகின்ற திருமுறை(Cannon) செய்யப்பட்ட புத்தகங்களின் தொகுப்பே வேதாகம்ம் ஆகும். ஆங்கிலத்தில் பைபில் என்று இதை கூறுவர் (கோயின் கிரேக்க மொழியில் τὰ βιβλία, tà biblía என்றால் “புத்தகங்கள்” என்று பொருள்). பல்வேறு மார்க்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் புனித நூல்களை திருமுறை செய்வார்கள். பல்வேறு வரிசைகளின்படியும், புத்தகங்களை பிரித்தும், சில சமயங்களில் புதிய புத்தகங்களை சேர்த்தும் முறைபடுத்தி திருமுறை செய்வார்கள். சீர்திருத்த கிறிஸ்தவ வேதாகமங்களில் அறுபத்து ஆறு புத்தகங்களும், எத்தியோப்பிய வைராக்கிய திருச்சபை வேதாகமங்களில் எண்பத்து ஒன்று புத்தகங்களும் இடம்பெற்று இருக்கின்றன. எபிரேய வேதாகம்ம் அல்லது டான்காவில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட இருபத்து நான்கு புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதல் ஐந்து புத்தகங்கள், தோரா (போதனை அல்லது சட்டம்), அடுத்தது நெவி’இம் (தீர்க்கதரிசிகள், இறைவாக்கினர்கள்), இறுதியாக கெத்துவிம் (எழுத்துக்கள்). கிறிஸ்தவ வேதாகமத்தின் முதல் பகுதி பழைய ஏற்பாடு. இதில் முப்பத்து ஒன்பதாக பிரிக்கப்பட்ட இருபத்து நான்கு புத்தகங்கள் இடம்பெற்று இருக்கின்றன. எபிரேய வேதாகமத்தில் இருந்து வித்தியாசமாக முறைபடுத்தப்பட்டு இருக்கின்றன. கத்தோலிக்க மற்றும் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் இணைக்கப்பட்ட திருமறை நூல்களையும் தங்கள் பழைய ஏற்பாட்டுடன் இணைத்து இருக்கிறார்கள். கிறிஸ்தவ வேதாகமத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாடு. இதில் இருபத்து ஏழு நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அவற்றுல் திருமுறைபடுத்தப்பட்ட நான்கு நற்செய்தி நூல்களும், திருத்தூதர் பணிகளும் (அப்போஸ்தலருடைய நடபடிகள்), இருபத்து ஓரு திருமுகங்கள் (கடிதங்கள்) மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் ஆகியவை அடங்கி இருக்கின்றன. பொது ஊழிக்கு முன் (கிறிஸ்துவுக்கு முன்) 2ஆம் நூற்றாண்டில் யூத குழுவினர் வேதாகமத்தை “புனித புத்தகங்கள்” (பரிசுத்த நூல்கள்) என்று அழைத்தனர். இப்போது பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் அடங்கிய கிறிஸ்தவ வேதாகமத்தை பரிசுத்த வேதாகமம் (புனித திருவிவிலியம்) என்று பொதுவாக அழைக்கின்றனர். முழு வேதாகமும் தெய்வீக வெளிப்பாடுகள் உடையவை என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். நீண்ட காலமாக அழியாமல் இருக்கும் பழங்கால கிரேக்க தோல்படிமான வேதாகமங்கள் பொது ஊழி (கிறிஸ்துவுக்கு பின்) 4ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. எபிரேயத்திலும், அரமேயத்திலும் கிடைத்த பழமை வாய்ந்த தானாக் தோல்படிமான புத்தகங்கள் பொது ஊழி 10ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. ஆனால், ஆரம்ப நூற்றாண்டு மொழிபெயர்ப்பான செப்த்துவாஜிந்தம் (Septuagint) கோடக்ஸ் வேடிகனஸில் பொது ஊழி 4ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்ப்ட்டன. 13ஆம் நூற்றாண்டில் ஸ்டீஃபன் லேங்டன் என்பவரால் வேதாகமம் அதிகாரங்களாக பிரிக்கப்பட்ட்து. ஃப்ரெஞ்சு பதிப்பாளர் ராபர்ட் எஸ்டியன் அவர்களால் 16ஆம் நூற்றாண்டில் வசன்ங்களாக பிரிக்கப்பட்டன. இதன் மூலமாக இப்போது வேதாகம வசனங்கள் புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தின் மூலமாக மேற்கோள்காட்டப்படுகின்றது. ஆண்டிற்கு 2 கோடியே 50 லட்சம் பிரதி வேதாகமங்கள் விற்பனை ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றிலும், இலக்கியத்திலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக இது முதலாவதாக அதிகமாக பதிப்பு செய்யப்பட்ட கிழக்கத்திய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

விவிலியம்

விவிலியம் (திருவிவிலியம், Bible), என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.

கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்றும் யூதர்களால் தனக் என்றும் அழைக்கப்படுகிறது. கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.

இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.

உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தகர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும், இணைத் திருமுறை நூல்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.

ஹிக்கின்பாதம்ஸ்

இக்கின்பாதம்ஸ், சென்னையிலுள்ள ஒரு புத்தக நிலையம்; இந்தியாவிலேயே மிகப்பழமையான புத்தக நிலையம் இது. இதன் கிளைக் கடைகள் தமிழகம்,ஆந்திரப்பிரதேசம்,கர்நாடகா மற்றும் கேரளாவில் 22 இடங்களில் உள்ளன.

எபிரேய விவிலிய இறைவாக்கினர்கள்
முன் குலமுதல்வர்கள் (விவிலியம்)
குலமுதல்வர்களும் குலமுதல்விகளும்
தோராவில் இசுரேலிய இறைவாக்கினர்கள்
நவீம் குறிப்பிடும் இறைவாக்கினர்கள்
பெரிய இறைவாக்கினர்கள்
சிறிய இறைவாக்கினர்கள்
நோவாவியல் இறைவாக்கினர்கள்
ஏனைய இறைவாக்கினர்கள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.