மொழியியல்

மொழியியல் (Linguistics) என்பது ஒரு மொழியை [1] அறிவியல் முறைப்படி [2] ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது [3]. முன்னதாக 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணி மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார் [4][5]. இந்நூலில் இவர் சமசுகிருத மொழியைப் பற்றி ஆய்வு செய்து முறையான விளக்கத்தை எழுதியுள்ளார் [6].

மொழியியலாளர்கள் ஒலி மற்றும் அர்த்தத்திற்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர் [7]. ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி தொடர்பான மற்றும் ஒலிகளை தெளிவாக உச்சரிப்பதற்குரிய உச்சரிப்பொலியியல் பண்புகளுக்குள்ளும் நுழைகிறது. மறுபுறம், மொழியின் அர்த்தத்தை ஆய்வு செய்து உலகின் பிற கூறுகள், பண்புகள் மற்றும் உலகின் பிற அம்சங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது, செயல்படுத்துவது மற்றும் பொருளை வழங்குவது, அத்துடன் எவ்வாறு நிர்வகிப்பது, தோன்றும் கருத்து மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் மொழியியல் பேசுகிறது [8]. அதேவேளையில் சொற்பொருள்களைப்பற்றிய ஆய்வு, சூழல் எவ்வாறு மொழிக்கான பொருளை உருவாக்குகிறது என்ற உண்மை நிலையையும் ஆராய்வதை மொழியியல் நடைமுறையாகக் கொண்டுள்ளது [9].

இலக்கணம் என்பது ஒரு மொழியில் சொற்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகள் தொடர்பான நடைமுறையாகும். இவ்விதிமுறைகள் ஒலிகளுக்கும்[10] அவை தரும் பொருளுக்கும் பொருந்தும். மேலும், ஒலிக்கும் ஒலியமைப்புகளின் அமைப்பு சார்ந்த குரலியல், சொற்களின் அமைப்பு மற்றும் உருவாக்கம் சார்ந்த உருபனியல், சொற்றொடர்கள் உருவாக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த தொடரியல் உள்ளிட்டவற்றின் உட்கூறுகள் சார்ந்த துணைவிதிகளையும் இலக்கணம் வரையறை செய்கிறது[11]. இலக்கணத்தின் கொள்கைகளில் நவீன இலக்கணக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் நோம் சோம்சுகியின் சித்தாந்தக் கல்வியின் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. [

மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது. பழங்கால இலக்காண பதிப்பான தொல்காப்பியம், தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் உலக மொழிகளில் ஒரு மொழியியல் அய்வு என்பதில் முதான்மயும், தொன்மையும் பெற்றது.

 • விளக்கமுறையும் வரலாற்றுமுறையும் (Synchronic and diachronic) -- விளக்கமுறை, என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மொழியின் நிலையைக் கருத்திலெடுத்து ஆய்வு செய்வதைக் குறிக்கும். வரலாற்றுமுறை என்பது ஒரு மொழியின் அல்லது ஒரு மொழிக் குழுவின் வரலாற்றையும், அவற்றில் எவ்வாறான அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வதாகும்.
 • கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு முறை -- கோட்பாட்டு மொழியியல், தனிப்பட்ட மொழிகளை விவரிப்பதற்கான சட்டகங்களை (frameworks) உருவாக்குவதுடன், அனைத்து மொழிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் கவனத்திற் கொண்டுள்ளது.
 • சூழ்நிலைசார் மற்றும் சுதந்திரமான -- இப்பகுப்பு தொடர்பில் சொற்கள் சரியாக நிலைநிறுத்தப்படாததால், வசதி கருதி இப் பெயர்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பெரு மொழியியல் (macrolinguistics), நுண் மொழியியல் (microlinguistics), என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறது. சூழல்சார் மொழியியல், ஒரு மொழி எவ்வாறு இந்த உலகத்துடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை, அதன் சமூகச் செயற்பாடு, எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பவற்றைக் கருத்திலெடுத்து ஆராய்கின்றது.சுதந்திர மொழியியல், மொழிகளின் புறநிலை அம்சங்களைக் கருத்தில்கொள்ளாது, அம் மொழிகளைத் தனியாக ஆராய முற்படுகிறது.

இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே "மொழியியலாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் "கோட்பாட்டு மொழியியல்" என்று அழைக்கப்படுகிறது.

மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்
Tamil-linguistic chart
தமிழ் மொழியியல்

கோட்பாட்டு மொழியியற் பகுதிகள்

கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:

 • ஒலிப்பியல் (phonetics), ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
 • ஒலியியல் (phonology), ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
 • உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
 • சொற்றொடரியல் (syntax), எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
 • சொற்பொருளியல் (semantics), சொற்களின் நேரடியான (literal) பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள் (lexical semantics)), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
 • மொழிநடை (stylistics), மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
 • சூழ்பொருளியல் (pragmatics), தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு utterances பயன்படுத்தப்படுகின்றன (literally, figuratively, அல்லது வேறுவிதமாக) என்பது பற்றிய ஆய்வு;
 • தொடரியல் (syntax) ஒலி, உருபன்,

இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன.

வரலாற்று மொழியியல் (Diachronic linguistics)

கோட்பாட்டு மொழியியலின் மையக்கருவானது, மொழியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (அநேகமாக நிகழ்காலம்) ஆராய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை, வரலாற்று மொழியியல், எப்படி மொழி காலப்போக்கில், சிலவேளைகளில் நூற்றாண்டுகளில், மாற்றமடைகின்றது என்பதை ஆராய்கின்றது. வரலாற்று மொழியியல் வளமான வரலாற்றையும் (மொழியியல் துறை வரலாற்று மொழியியலிலிருந்தே உருவானது), மொழி மாற்றங்களை ஆராய்வதற்கான பலமான கோட்பாட்டு அடிப்படையையும் கொண்டுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், வரலாறல்லாத நோக்கின் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரலாறல்லாத நோக்கு சார்ந்த திருப்பம், பேர்டினண்ட் சோசருடன் தொடங்கி நோம் சொம்ஸ்கி காலத்தில் முன்னணிக்கு வந்தது.

வெளிப்படையாக வரலாற்று நோக்கு வரலாறுசார்-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சொற்பிறப்பியல் (etymology) என்பவற்றை உட்படுத்தியுள்ளது.

பயன்பாட்டு மொழியியல்

கோட்பாட்டு மொழியியல், ஒவ்வொரு மொழிக்கு உள்ளேயும், ஒரு குழுவாக எல்லா மொழிகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான தன்மைகளைக் கண்டுபிடித்து விளக்கமுயலுகின்ற அதேவேளை, பயன்பாட்டு மொழியியல், இந்தக் கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகளை ஏனைய துறைகளில் பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பயன்பாட்டு மொழியியல், மொழியியல் ஆய்வை, மொழி கற்பித்தல், மற்றும் ஏனைய துறைகளில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. பேச்சுத் தொகுப்பு (Speech synthesis) மற்றும் பேச்சு அடையாளம்காணல்(Speech recognition), என்பன, கணனிகளில் குரல் இடைமாற்றிகளை ஏற்படுத்துவதற்கு மொழியியல் அறிவைப் பயன்படுத்தும் உதாரணங்களாகும்.

சூழ்நிலை மொழியியல்

சூழ்நிலை மொழியியலே, மொழியியல் ஏனைய கல்வித்துறைகளுடன் தொடர்பு கொள்ளும் பகுதியாகும். சமூக மொழியியல், மானிடவியல்சார் மொழியியல் (anthropological linguistics), and மொழியியல்சார் மானிடவியல் (linguistic anthropology) என்பன சமூகத்தை முழுமையாகக் கருத்திலெடுக்கின்ற சமூக அறிவியலும், மொழியியலும் தொடர்பு கொள்ளுகின்ற இடமாகும்.

திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு (critical discourse analysis) இலே தான்பேச்சுக்கலை (rhetoric) உம் தத்துவமும் மொழியியலோடு தொடர்புகொள்ளுகின்றன. உளமொழியியலும் (psycholinguistics) நரம்புமொழியியலும் (neurolinguistics), மருத்துவ அறிவியல்கள் மொழியியலைச் சந்திக்கும் இடமாகும். ஏனைய, மொழியியலின் வேறு துறைத்தொடர்புகளுள்ள பகுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். மொழி கற்றல் (language acquisition), படிமலர்ச்சி மொழியியல், stratificational linguistics, மற்றும் அறிதிற அறிவியல் (cognitive science).

தனிப்பட்ட, மொழிபேசுபவர்கள், மொழிச் சமுதாயங்கள், மற்றும் மொழியியற் பொதுமைகள் (linguistic universals)

எந்த அளவு பரந்த மொழி பயன் படுத்தும் குழுவினரை ஆராயவேண்டும் என்பதிலும் மொழியியலாளர்கள் வேறுபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட ஒருவருடைய மொழியை அல்லது மொழி அபிவிருத்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். சிலர் ஒரு முழு பேச்சுச் சமுதாயத்தினதுக்குத் தொடர்பான மொழிபற்றி ஆய்வு செய்வர். வேறு சிலர் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மனித மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய விடயங்கள் பற்றி ஆராய முயல்வர். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட திட்டத்துக்காக நோம் சொம்ஸ்கி பிரபலமாக வாதிட்டார், அத்துடன் இது, உளவியல்சார் மொழியியல் (psycholinguistics) மற்றும் அறிதிற அறிவியல் துறைகளைச் சேர்ந்த பலரைக் கவர்ந்தது. மனித மொழியிற் காணப்படும் பொதுமைகள் மனித மனத்தின் பொதுமைகள் பற்றிய முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் எனக் கருதப்பட்டது.

விளக்கமுறையும் (Description) விதிப்புமுறையும் (prescription0

"மொழியியல்" என்ற பெயரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான வேலைகள், சுத்தமாக விபரிப்பு சார்ந்தவையாகும். மொழியியலாளர்கள், கருத்துக்களெதையும் கூறாமல் அல்லது மொழியின் எதிர்காலப் போக்குத் திசைகளைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மொழியின் இயல்பை விளக்கவே முனைகிறார்கள். எனினும் பல தொழில்சார் மற்றும் அமெச்சூர் மொழியியலாளர்கள், எல்லோரும் பின்பற்றவேண்டிய நியமங்களை வைத்து, மொழிக்கான விதிகளையும் குறித்துக் காட்டுகிறார்கள்.

விதிப்புமுறை சார்பாளர்கள் (Prescriptivists), "பிழையான பயன்பாடு" என்று கருதி முத்திரை குத்தும் ஒரு விடயத்தில், விளக்கமுறையாளர்கள் (descriptivists) அப் பயன்பாட்டின் மூலம் எதுவென்று ஆராய முயல்வர்; அல்லது அதை "வினோதப் போக்கு" (idiosyncratic), என விளக்குவர், அல்லது, மிக நவீனமானது அல்லது அங்கீகரிக்க முடியாத வட்டார மொழிகளிலிருந்து பெறப்பட்டது போன்ற காரணங்களுக்காக விதிப்புமுறை சார்பாளர்களால் விரும்பப்படாத சில ஒழுங்குமுறைகளை வெளிப்படுத்துவார்கள்.

பேச்சு எதிர் எழுத்து

பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் வேலை செய்கிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

 • பேச்சு மனித இனம் முழுவதற்கும் பொதுவானதாகத் தெரிகின்ற அதேவேளை, பல பண்பாடுகளில், எழுத்துத் தொடர்பு முறை காணப்படவில்லை;
 • மக்கள், எழுதுவதிலும், பேசுவதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பேச்சு மொழி எளிதாகப் பழகி விடுகிறார்கள்;
 • பல அறிதிற அறிவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ளார்ந்த "மொழிப் பிரிவு" ஒன்று உள்ளதாகவும், அதற்கான அறிவு எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன் மூலமாகவே கிடைக்கிறது என்றும் தெரிகிறது.

எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். மொழித் தொகுப்பு மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும்.

மேலும், எழுத்து முறைமை பற்றிய ஆய்வும் மொழியியலின் பாற்பட்டதேயாகும்.

மொழியியல் தொடர்பான ஆராய்ச்சிப் பகுதிகள்

துறைகளிடை மொழியியல் ஆராய்ச்சி

மேற்கோள்கள்

 1. Michael Halliday; Jonathan Webster (2006). On Language and Linguistics. Continuum International Publishing Group. பக். vii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8264-8824-2.
 2. David Crystal (1990). Linguistics. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780140135312.
 3. André Martinet (1960). Elements of General Linguistics. Tr. Elisabeth Palmer Rubbert (Studies in General Linguistics, vol. i.). London: Faber. பக். 15.
 4. Rens Bod (2014). A New History of the Humanities: The Search for Principles and Patterns from Antiquity to the Present. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0199665214. https://books.google.com/?id=KaOcAQAAQBAJ&pg=PA14&lpg=PA14.
 5. Sanskrit Literature The Imperial Gazetteer of India, v. 2 (1909), p. 263.
 6. S.C. Vasu (Tr.) (1996). The Ashtadhyayi of Panini (2 Vols.). Vedic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120804098. http://www.vedicbooks.net/ashtadhyayi-panini-vols-p-2313.html.
 7. Jakobson, Roman (1937). Six Lectures on Sound and Meaning. MIT Press, Cambridge, Massachusetts. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0262600102. http://www.marxists.org/reference/subject/philosophy/works/ru/jakobson.htm.
 8. Sharada Narayanan (2010). Vakyapadiya: Sphota, Jati, and Dravya. http://www.thehindu.com/books/power-of-the-word/article3779772.ece.
 9. Chierchia, Gennaro & Sally McConnell-Ginet (2000). Meaning and Grammar: An Introduction to Semantics. MIT Press, Cambridge, Massachusetts. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780262531641.
 10. All references in this article to the study of sound should be taken to include the manual and non-manual signs used in sign languages.
 11. Adrian Akmajian; Richard A. Demers; Ann K. Farmer; Robert M. Harnish (2010). Linguistics (6th ). The MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-262-51370-6. https://mitpress.mit.edu/catalog/item/examrequest.asp?ttype=2&tid=12240. பார்த்த நாள்: 25 July 2012.

உசாத்துணைகள்

 • Rymer, p. 48, quoted in Fauconnier and Turner, p. 353)
 • Gilles Fauconnier and Mark Turner (2002). The Way We Think: Conceptual Blending and the Mind's Hidden Complexities. அடிப்படை நூல்கள்.
 • Rymer, Russ (1992). "Annals of Science: A Silent Childhood-I". New Yorker, April 13.
 • Steven Pinker, The Language Instinct

வெளி இணைப்புகள்

ஆங்கில மொழியியல் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட ஆங்கில மொழியியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம் (மொழியியல்)

இலக்கணம் ( ஒலிப்பு) என்பது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது.

எழுத்தறிவு

எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு ஆகியவற்றின்தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.

வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.

எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று வாசித்தல் ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்:

பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளல்

எழுதப்பட்டவற்றை குறி நீக்கி புரிந்து கொள்ளல்

உரைகளைப் படித்து உள்ளார்ந்து புரிந்துகொண்டு உச்ச அளவு பயன்பாடு பெறுதல்

வாசித்தலில் உள்ள வளர்ச்சிகள் பின்வரும் பலக்கிய மொழியியல் கூறுகளை உள்ளடக்கியதாகும்:

பேச்சில் உள்ள ஒலிக்குறிகள் குறித்த விழிப்புணர்வு (ஒலியனியல்)

எழுத்துக்கோர்வை வடிவவிதம் (orthography)

வார்த்தைகளுக்கான பொருளறிதல் (சொற்பொருளியல்)

இலக்கணம் (சொற்றொடரியல்)

வார்த்தை உருவாதலில் வடிவவிதம் (உருபனியல்)

இவை அனைத்தும் தடையற்ற ஆற்றொழுக்கு வாசித்தலுக்கும் புரிதலுக்கும் தேவையான அடிப்படை கூறுகளாகும்.இத்திறன்களைப் பெற்றவர், அச்சிடப்பட்ட கருத்துகளைப் புரிந்து, நுண்ணாய்வு செய்து பயன் பெறுதல், தொகுத்தல், உய்த்துணர்தல், கோர்வையாகவும், துல்லியமாகவும் எழுதுதல், அச்சிடப்பட்ட கருத்துகளிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி உட்காட்சி அமைத்தல், முடிவெடுத்தல், படைப்புத்திற ஆதார சிந்தனைகள் மேற்கொள்ளல் போன்ற பன்முகத் திறன்களையும் பெற்றவராவர். இவர்களே முழு எழுத்தறிவு பெற்றவராவர்.இவற்றைப் பெற இயலாதோர் எழுத்தறிவற்றோர் அல்லது எழுத்து அறியாதோர் எனப்படுவர்.ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவை பின்வருமாறு வரையறுத்துள்ளது: எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கரூவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு, அண்மைச்சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும்

எழுத்து

எழுத்து அல்லது எழுதுதல் (writing) என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல்).

எழுத்து முறை

எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது கருத்தெழுத்துக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருபனெழுத்து முறை (logographic), அசையெழுத்து முறை (syllabic) மற்றும் ஒலியனெழுத்து முறைமை (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை எழுத்துக்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

எழுமதம்

எழுமதம் என்பது ஒரு நூலுக்கு இருக்கவேண்டிய ஏழு கொள்கைகள் என்று நன்னூல் குறிப்பிடுகிறது.

பிறர் கொள்கையை உடன்பட்டு ஏற்றல்

அக்கொள்கையில் தவறு கண்டறிந்து மறுத்தல்

முதலில் உடன்பட்டு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்தல்

தான் ஒரு கொள்கையைக் கூறி இறுதிவரை அதை நிலைநாட்டுதல்

இருவர் மாறுபடக்கூறிய கொள்கைகளில் ஏதேனுமொன்றை துணிந்து ஏற்றல்

பிறருடைய நூலிலுள்ள குற்றம் காட்டுதல்

பிறருடைய கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே கொள்ளுதல்இவ்வேழினையும் ஏழுமதங்களாக நன்னூல் சுட்டுகிறது

ஏனைய மொழியியல் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் மொழி, சிங்கள மொழி, ஆங்கில மொழி தவிர்ந்த ஏனைய மொழியியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பா

சிவப்பு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் கிழக்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியல் துறையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:

பெலாருஸ்

பல்கேரியா

செக் குடியரசு

ஹங்கேரி

மல்டோவா

போலந்து

ரொமேனியா

ரஷ்யா

சுலோவாக்கியா

உக்ரைன்

சார்புநூல்

நூலின் வகைகளை வரலாற்றுக் கோணத்தில் பார்க்கும்போது முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட நூல் முதல்நூல் என்றும், அதன் வழியைப் பின்பற்றி அதனை விரித்தோ, தொகுத்தோ இயற்றப்பட்ட நூல்கள் வழிநூல் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. நன்னூல் அவற்றுடன் சார்புநூல் என்னும் மற்றொரு வகையினையும் காட்டுகிறது.

முதல்நூல், வழிநூல் ஆகிய இரண்டனுள் ஒன்றையோ, இரண்டனையுமோ ஒருபுடை ஏற்றுக்கொண்டு, ஏற்காத பகுதியை விளக்கமாகச் சொல்லி உருவாக்கப்படும் இலக்கண நூல் சார்புநூல் ஆகும். இதனைப் புடைநூல் என்றும் நன்னூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சிங்கள மொழியியல் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சிங்களம் மொழியியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியியல் பற்றிய இலங்கை நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் மொழியியல் தமிழ் இலக்கணம், தமிழ்ப் பாடநூல்கள் ஆகிய பகுப்புகளிலுள்ள நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.

நூற்பயன்

நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.

பாணினி

பாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார். இவர் வாழ்ந்த காலம் பற்றியோ இவரது வாழ்க்கை பற்றியோ எவ்வித சான்றுகளும் கிடையாது. இவரது காலம் கிமு நான்காம் நூற்றாண்டாக அல்லது ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவது வெறும் உய்த்துணர்வின் அடிப்படையிலேயாம். இவர் சிந்து நதிக் கரையில், இன்றைய பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் சலத்துலா என்னும் இடத்தில் பிறந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.சமசுக்கிருத இலக்கணத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம் மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.

மெய்யெழுத்து

பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,

அடைப்பொலி,

மூக்கொலி,

உரசொலி,

மருங்கொலி,

ஆடொலி,

வருடொலி,

தொடரொலிஎனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் (consonant) எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

தற்காலத்தில், க்ஷ், ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த மெய்யெழுத்துகளும் தமிழ் உரைநடையில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

மொழி

மொழி (language) என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக ரூசோ போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.

மனித மொழி உற்பத்தித்திறன், இடப்பெயர்ச்சி ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது.மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.

மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். ஆடலாலோ பாடலாலோ உணர்த்தப்படும் மொழி பேச்சொலி (Phonology) வகைக்குள் அடங்குகின்றது.

வட இந்தியா

வட இந்தியா என்பது வரையறையற்ற வார்த்தைகளில் சொன்னால் இந்தியாவின் வடபகுதி. வட இந்தியா என்பதற்குப் பல வரையறைகள் சொல்லப்படுகின்றன.

வடக்கு ஐரோப்பா

வடக்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் வடக்கிலுள்ள் நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் பால்டிக் கடலோரமாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் வட ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:

டென்மார்க்

எசுத்தோனியா

பின்லாந்து

ஐசுலாந்து

அயர்லாந்து குடியரசு

லாத்வியா

லித்துவேனியா

நோர்வே

சுவீடன்

ஐக்கிய இராச்சியம்ஸ்கான்டினாவியா வட ஐரோப்பியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் புவியியல் உட்பிரிவு.

வடமொழி

வடமொழி என்பது பிராகிருதம் (Prakrits), சமசுகிருதம் (Sanskrit) போன்ற மொழிகளுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் இவற்றை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வடசொல்லுக்கு உரை எழுதுகையில் பாகத மொழிகளை வடசொல்லுக்குரிய மொழிகள் என வலியுறுத்துகிறார். இன்னும் சில ஆய்வாளர்கள் தொல்காப்பியம் கூறும் வடசொல் என்பது பாகத மொழிகளையே குறிக்கும் எனவும் கூறியுள்ளனர்.தொல்காப்பிய உரையாசிரியர்களில் மற்றொருவரான இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான வடசொல்லுக்கு இலக்கணம் கூறும்போது ஆரிய மொழி என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக வடமொழி என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர்.

ஆரியர் பேசிய மொழி ஆரியம். அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு வடமொழி. ஆரியம் பேசும் மக்களுக்கு அவர்கள் குறியீட்டின்படி சமஸ்கிருதம். ஆரியம் என்றாலோ, வடமொழி என்றாலோ அது பாணினி இலக்கணம் எழுதிய சமற்கிருதத்தைக் குறிக்காது. அவருக்கு முன்பு ஆரியர்களால் பேசப்பட்டதும், 'ஐந்திரம்' முதலான இலக்கண நூல்களைக் கொண்டிருந்ததுமான வேத கால மொழியை உணர்த்தும்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.