மேற்கு ஐரோப்பா

மேற்கு நாடுகள் என்பது பொதுவாக ஐரோப்பாவின் மேற்கு அரைப் பகுதியில் உள்ள நாடுகளைக் குறிக்கும். எனினும், இந்த வரைவிலக்கணம் சூழ்நிலையைப் பொறுத்தே அமைவதுடன், இதற்குப் பண்பாடு மற்றும் அரசியல் உட்பொருள்களும் உள்ளன. இன்னொரு வரைவிலக்கணம், மேற்கு ஐரோப்பாவை, நடு ஐரோப்பாவுக்கு மேற்கே உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி என்கிறது. பனிப்போர்க் காலத்தில், இத்தொடர், பொதுவுடமை சாராத நாடுகளை மட்டுமே குறிக்கவே பயன்பட்டது. இதனால், புவியியல் அடிப்படையில் நடுப்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்கு உட்படாத நாடுகளும் மேற்குநாடுகளுள் உள்ளடக்கப்பட்டன. அதேவேளை மேற்கு ஐரோப்பாவுள் அடங்கிய சோவியத்தின் நட்புநாடுகள் இதற்குள் அடக்கப்படவில்லை.

இவற்றோடு, இத்தொடருக்கு, புவியியல், பொருளியல், பண்பாட்டு அம்சங்களும் உண்டு. இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் இருந்து, இத்தொடர், உயர் வருமானம் கொண்ட ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளைக் குறிக்கவே பயன்படுகிறது.

 1. பிரித்தானியா
 2. அயர்லாந்து
 3. பிரான்சு
 4. மேற்கு ஜெர்மனி
 5. எசுப்பானியா
 6. இத்தாலி
 7. போர்ச்சுக்கல்
 8. பின்லாந்து
 9. ஆஸ்திரியா
 10. சுவிட்சர்லாந்து
 11. சுவீடன்
 12. நார்வே
 13. லீக்டன்ஸ்டைன்
 14. மொனாக்கோ
 15. ஐஸ்லாந்து
 16. டென்மார்க்
 17. கிரேக்கம்
 18. நெதர்லாந்து
 19. பெல்ஜியம்
Western Europe map
மேற்கு ஐரோப்பா
ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை

ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை (Operation Fortitude) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை (deception operation). நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அவர்களது கவனத்தை வேறு இடங்களின் மீது திசை திருப்பவும் நேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. இது பாடிகார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

அசிரிய மக்கள்

அசிரியர்கள் (Assyrians) எனப்படுவோர் தற்போதைய ஈராக், ஈரான், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாய்நாடாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும். கடந்த 20ம் நூற்றாண்டில் இவர்களில் பலர் காக்கேசியா, வட அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.

பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள் ஈராக்கிய அகதிகளாக ஐரோப்பா, முன்னாள் சோவியத் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப் போர் காலத்திலும், ஒட்டோமான் பேரரசு உடைந்த காலத்திலும் இவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் தப்பி ஓடினர். இதனை விட ஈரானில் இஸ்லாமியப் புரட்சி, ஈராக்கில் ஆகஸ்ட் 7, 1933 இல் இடம்பெற்ற படுகொலைகள், ஈராக்கில் 1914-1920 காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற நிகழ்வுகளும் அசிரியர்களின் இடப்பெயர்வுக்குக் காரணங்களாக அமைந்தன.

மிக அண்மையில் 2003 இல் ஆரம்பித்த ஈராக்கியப் போரை அடுத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில் 40 விழுக்காட்டினர் அசிரியர்கள் ஆவர்.

ஆறு

ஆறு (ஒலிப்பு ) (வடமொழியில் நதி) என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.

ஆறு நீர்ச் சுழற்சியின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.

டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

உலக நாடுகளில் இந்து சமயம்

ஒவ்வொரு நாட்டின் இந்து மத மக்களின் சதவீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது. சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.

இந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் எல்லா நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத் தட்ட 100 கோடி இந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள்.

இந்து சமயம் இந்திய துணைக்கண்டமான இந்தியா,பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், பங்களாதேசம், நேப்பாள் மற்றும் இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய துணைகண்டத்தில் தோன்றியது.உலகின் அதிகமான இந்துக்கள் வாழும் இடமாக இந்திய துணைக் கண்டம் விளங்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமயம் தென்கிழக்கு ஆசிய வழியாக வியட்னாம் மற்றும் இந்தோனேசிய தீவுகளுக்கு பரவி விரிந்து காணப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்துக்களை வேலையாட்களாக ஐரோப்பிய காலனித்துவ நாடான திரினிடாட், குயானா, சுரினாம் , ரியுனியன், மொரிஜியஸ் மற்றும் தென் ஆப்பிக்காவுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் இந்நவீன காலத்தில் இந்துக்கள் உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இறை நம்பிக்கையுடைய அவர்கள் குடியேறிய பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிப்பட்டனர்.

ஐரோப்பா

ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.

கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்

கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள் அல்லது கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் என்பன தன்னாட்சி அதிகாரமுடையவையும் திருத்தந்தையோடு முழு உறவு ஒன்றிப்பில் இருக்கும் தனித்திருச்சபைகளாகும். இலத்தீன் வழிபாட்டு முறைசபைகளோடு இவையும் ஒன்றாக முழு கத்தோலிக்க திருச்சபையாக கருதப்படுகின்றன. இவற்றின் வழிபாட்டு முறை பிற கீழைத்திருச்சபைகளோடு ஒத்திருக்கின்றன.

மனித குடி பெயர்தலின் காரணமாக கிழக்கிலிருந்து இவ்வகைத்திருச்சபைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, மேற்கு ஐரோப்பா, அமெரிக்காக்கள் மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களிலும் ஆட்சிப்பீடங்களைக் (Eparchy) கொண்டுள்ளன.

கிழக்கு ஐரோப்பா

சிவப்பு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் கிழக்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியல் துறையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:

பெலாருஸ்

பல்கேரியா

செக் குடியரசு

ஹங்கேரி

மல்டோவா

போலந்து

ரொமேனியா

ரஷ்யா

சுலோவாக்கியா

உக்ரைன்

சூபித்துவம்

சூபித்துவம் (sufism, சூஃபிசம்) அல்லது தஸவ்வுப் (அரபு மொழி: : الصوفية‎),இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது., இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றப்பாடு என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய இஸ்லாமிய இறைநிலை நடைமுறையாகும்.. இது இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பமானது. இது அடிப்படை வெளிப்பாடு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய இறைநிலையின் மத்திய உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' (; صُوفِيّ ; ṣūfī) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.வரலாற்று ரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும். இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்." ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர். மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

பெரும்பாலும் அனைத்து சூபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(றழி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும், நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து முதலாவது குலாபாஉர் ராஷிதீன் கலீபாவான அபூபக்கர்(றழி) ஊடாக ஆரம்பமாகின்றது. இவ் வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை( சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன், சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன.

சூபித்துவம் (தஸவ்வுப்) மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது சுன்னி இஸ்லாத்தின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது. இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூபிகள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது. சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா, ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியுமதுல்லாயி, காதிரய்யா புத்சிசிய்ய, உவைஸி, ஷாதுலிய்யா, கலந்தரிய்யா, ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன.சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது:" அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப்படியில்லை எனில், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்". சூபி அறிஞர்கள் சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர். "இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர்".தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர் (இறைவனின் பெயர்களை பலமுறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி,பொதுவாக தொழுகையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது), துறவறம் உடன் தொடர்புகொண்டிருந்ததை வைத்து பண்பிட்டிட முடியும். சூபிசமானது பல முஸ்லிம்களிடையே ஆதரவைப் பெற்றது,முக்கியமாக ஆரம்பகால உமையாக்களின் உலகப்பற்றுக்கு எதிராக ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது (கி.பி.661-750). ஓராயிரம் வருடங்களுக்கு மேலாக சூபிகள் பல கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது. ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கைகள் பாரசீகம், துருக்கி, இந்தியமொழி மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர் அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது.

ஜெட்பர்க் நடவடிக்கை

செட்பர்க் நடவடிக்கை (Operation Jedburgh, ஜெட்பர்க் நடவடிக்கை) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ரகசிய நாசவேலை நடவடிக்கை. இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் இயங்கி வந்த உள்நாட்டு எதிர்ப்புப் படைகளுக்குத் துணையாகச் செயல்பட நேச நாட்டு சிறப்புப் படை அதிகாரிகள் வான்குடை மூலம் அந்நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1940ல் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் நாசி ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நாடுகளில் நாசி ஆட்சிக்கு எதிராக உருவான உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து தேவையான தளவாடங்களை வழங்க பிரிட்டன் மற்றும் இந்நாடுகளில் நாடு கடந்த அரசுகள் திட்டமிட்டன. பிரிட்டனின் சிறப்பு நடவடிக்கைகள் செயற்குழு, அமெரிக்காவில் மேல்நிலை உத்திச் சேவைகளுக்கான அலுவலகம், சுதந்திர பிரெஞ்சு அரசின் உளவு மற்றும் நடவடிக்கைகளுக்கான நடுவண் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஜெட்பர்க் நடவடிக்கையைத் தொடங்கின. இதில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நாசி ஆக்கிரமிப்பு நாடுகளில் வான்குடை வழியாக தரையிறக்கப்பட்டனர். “ஜெட்பர்குகள்” என்று அழைக்கப்பட்ட இக்குழுவினர் உள்நாட்டு எதிர்ப்புப் படையினருக்கு ஆயுதப் பயிற்சி, நாச வேலைப் பயிற்சி, கொரில்லாப் போர்முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தனர். எதிர்ப்புப் படையினருக்கும் நேச நாட்டுப் போர்த் தலைமையகத்துக்கும் இடைமுகமாகச் செயல் பட்டனர். 1944ல் மேற்கு ஐரோப்பா மீது நேச நாட்டுப் படைகள் கடல்வழியாகப் படையெடுத்த போது, அவற்றுக்குத் துணையாக ஜெர்மானிய படைநிலைகளுக்குப் பின்னால் நாச மற்றும் சீர்குலைப்பு வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டன.

தெற்கு ஐரோப்பா

தெற்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் தெற்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். தெற்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் மத்தியதரைக் கடலோரமாக இருக்கின்றன.

பண்டைய ரோம்

பண்டைய உரோமை (Ancient Rome) என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலி தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் மத்தியதரைக் கடலோரமாகவும் உரோமை நகரை மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சியுற்றது.உரோமைக் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. அக்கால கட்டத்தில் உரோமைக் கலாச்சாரம் முடியாட்சி, மேல்மட்டத்தோர் ஆட்சி, குடியாட்சி, என்று பல நிலைகளைத் தாண்டிச் சென்று, பேரரசு ஆட்சியாக மாறியது. உரோமையின் ஆட்சி அதிகாரம் தெற்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, பால்கன் பகுதிகள், சிறு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் படையெடுப்பு வழியாகவும் கலாச்சார ஊடுருவல் வழியாகவும் பரவியது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதையும் உரோமை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்ந்தது. பண்டைய செவ்வுலகின் ஈடு இணையற்ற பேரரசாகவும் வல்லரசாகவும் உரோமையே விளங்கியது.

பண்டைக் காலத்தின் ஒரே வல்லரசு உரோமைதான். உரோமையர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுள் ஜூலியஸ் சீசர், சிசரோ, ஹோரஸ் போன்றோர் அடங்குவர். உரோமைக் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மாக்கியவெல்லி, ரூசோ, நீச்சே போன்ற அறிஞர்களும் மெய்யியலாரும் பெரிதும் போற்றியுள்ளனர்.

உரோமை இராணுவக் கலையிலும் அரசியல் கலையிலும் சிறந்து விளங்கியது. அதன் இராணுவம் தனிப்பயிற்சி பெற்ற போர்வீரர்களை உருவாக்கி, அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருந்தது. உரோமையின் அரசியல் அறிவு மக்களின் பொது நலனை வளர்க்கவே அரசு அமைக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு போன்ற நாடுகளில் நிலவுகின்ற நவீன காலத்து மக்களாட்சி முறைகளுக்கு உரோமை வழிவகுத்தது.உரோமையில் மக்களாட்சி நிலவிய காலம் முடிவுக்கு வந்த கட்டத்தில் உரோமை மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த பகுதிகளையும் அதற்கு மேலும் பல நாடுகளையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு, அட்லாண்டிக் கடலிலிருந்து பாலஸ்தீனாவில் யூதேயா வரை, ரைன் நதியின் முகத்துவாரத்திலிருந்து வட ஆப்பிரிக்காவரை விரிந்து பரந்தது.

உரோமை பேரரசாக உருவெடுத்தபோது அதன் பொற்காலம் அகஸ்டஸ் சீசர் ஆட்சியின் கீழ் தொடங்கியது. பேரரசன் ட்ரேஜன் (Trajan) ஆட்சியில் உரோமைப் பேரரசு நிலப்பரப்பில் மிக உச்சக் கட்டத்தை எட்டியது. பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்களாட்சி விழுமியங்கள் மங்கத் தொடங்கின. புதிய பேரரசன் ஆட்சியை நிலைநாட்டுமுன் உள்நாட்டுப் போர்கள் நிகழ்வது வழக்கமாயிற்று.கிபி 5ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியாக இருந்த மேற்குப் பேரரசு சிறுசிறு தனி நாடுகளாகப் பிளவுபடத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் உள்நாட்டுக் கலகங்கள், வெளியிலிருந்த வந்த இடம்பெயர் மக்களின் தாக்குதல்கள் போன்றவை ஆகும். வரலாற்றாசிரியர்கள் பொதுவரலாற்றின் பண்டைய காலம் முடிவடைந்து ஐரோப்பிய நடுக்காலம் தொடங்கியதை இக்காலத்தோடு இணைத்துப் பேசுகின்றனர்.

உரோமை மேற்குப் பேரரசு சிறுசிறு நாடுகளாகப் பிளவுபட்ட காலத்தில் கிழக்கு உரோமைப் பேரரசு பிளவின்றி முழுமையாக இருந்து தப்பிக்கொண்டது. மேற்கு-கிழக்கு என்று உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டதிலிருந்து காண்ஸ்டாண்டிநோபுள் மாநகரம் கிழக்குப் பேரரசின் தலைநகராயிற்று. கிழக்கு உரோமைப் பேரரசில் கிரேக்க நாடு, பால்கன் நாடுகள், சிறு ஆசியாவின் பகுதிகள், சிரியா, எகிப்து ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

பின்னர், இசுலாமியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியதோடு கிழக்கு உரோமைப் பேரரசின் சிரியா மற்றும் எகிப்துப் பகுதிகள் கலீபா ஆட்சியின் கீழ் வந்தன. இருப்பினும், மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு கிழக்கு உரோமைப் பேரரசு நீடித்தது. துருக்கி ஓட்டோமான் பேரரசு கிழக்கு உரோமைப் பேரரசின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி, காண்ஸ்டாண்டிநோபுளைச் சூறையாடியதோடு அந்நகரும் வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தது. கிழக்கு உரோமைப் பேரரசு கிறித்தவக் கலாச்சாரம் நிலவிய நடுக்கால, கிழக்கு உரோமைப் பேரரசை வரலாற்றாசிரியர்கள் "பிசான்சியப் பேரரசு" என்று அழைக்கின்றனர்.

உரோமை நாகரிகத்தைப் பண்டைய கிரேக்கத்தோடு இணைத்து "செவ்விய பண்டைக்காலம்" (classical antiquity) என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது உண்டு.

பண்டைய உரோமை உலகுக்கு வழங்கியவற்றுள் மேற்கத்திய நாடுகள் பெற்றுக்கொண்ட ஆட்சிமுறை, சட்டமுறை, போர்முறை, கலைகள், இலக்கியங்கள், கட்டடக் கலை, தொழில்நுட்பம், சமயம், மொழி ஆகியவை உள்ளடங்கும்.

பாடிகார்ட் நடவடிக்கை

பாடிகார்ட் நடவடிக்கை (Operation Bodyguard) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்புக்கு நேச நாட்டு உத்தியாளர்கள் வகுத்த மேல்நிலை உத்தியின் பகுதி. படையெடுப்பு நிகழப்போகும் இடம் குறித்து ஜெர்மானியர்களை ஏமாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பாடிகார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனியை வீழ்த்த மேற்கு ஐரோப்பா மீது கடல்வழியாகப் படையெடுக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். மேற்கில் ஒரு படையெடுப்பு நிகழும் என்பதை ஜெர்மானிய உத்தியாளர்களும் உணர்ந்திருந்தனர். இந்த படையெடுப்பு எப்போது எங்கு நிகழும் என்பதை ஜெர்மானியர்கள் ஊகிக்க முடியாமல் அவர்களைத் திசைதிருப்ப நேச நாட்டு உத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இந்த முயற்சிக்கு ஜெயில் திட்டம் (Plan Jael) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. (ஜெயில் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் ஒரு பாத்திரம்). பின்னர் 1943ல் நிகழ்ந்த டெஹ்ரான் மாநாட்டில் சர்ச்சில் ஸ்டாலினிடம் கூறிய பின் வரும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு “பாடிகார்ட்” (மெய்க்காப்பாளர்) நடவடிக்கை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது:

பாடிகார்ட் நடவடிக்கைக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன:

கடல்வழிப் படையெடுப்பு பிரான்சின் பா டீ கலே பகுதியில் நிகழும் என்று ஜெர்மானியப் போர்த் தலைமையகத்தை நம்ப வைப்பது. இதன் மூலம் உண்மையில் படையெடுப்பு நிகழ்ப்போகும் நார்மாண்டிப் பகுதியிலிருந்து படைகளை ஜெர்மானியர்கள் கலே பகுதிக்கு நகர்த்துவர்; கலே பகுதியிலேயே தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவர்.

ஜெர்மானியர்களால் படையெடுப்பு நிகழப்போகும் நாள் நேரம் எப்போது என்று கணிக்க முடியாது செய்தல்

படையெடுப்பு நிகழ்ந்த பின்னர், அடுத்த பதினான்கு நாட்களுக்கு ஜெர்மானியர்கள் தங்கள் பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பெரும்பாலானவற்றை பாஸ் டே கலேக்கு கிழக்கிலேயே நிறுத்தி வைக்கும்படி செய்தல்.இந்நடவடிக்கை ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை, செப்பலின் நடவடிக்கை, அயர்ன்சைட் நடவடிக்கை என பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

புளூட்டோ நடவடிக்கை

புளூட்டோ நடவடிக்கை (Operation Pluto) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையியல் வழங்கல் நடவடிக்கை (Millitary logisics/supply operation). இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீது கடல் வழியாகப் படையெடுத்திருந்த நேச நாட்டுப் படைகளுக்குத் தேவையான எரிபொருளை பிரான்சுக்குக் கொண்டு செல்ல ஆங்கிலக் கால்வாயின் கடல் படுகையில் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்பட்டன. PLUTO என்பது Pipe-Lines Under The Ocean (பெருங்கடலுக்கு அடியில் குழாய்கள்) என்பதன் முதலெழுத்துக் குறுக்கமாகும்.

மேற்கு ஐரோப்பா மீது கடல்வழியாக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கு எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்களில் ஒன்று போதிய எரிபொருள்களை வழங்குதல். கடல்வழியே செல்லும் சரக்குக் கப்பல்கள் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களால் மூழ்கடிக்கப்படும் ஆபத்து இருந்ததால், நேச நாட்டு உத்தியாளர்கள் அதற்கு மாற்றாக இன்னொரு வழியைத் தேடத் தொடங்கினர். கடலுக்கடியில் எண்ணெய்க் குழாய்களை அமைக்கும் திட்டம் 1942ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்குத் தேவையான புதிய ரக குழாய்களை வடிவமைக்கும் பணி தொடங்கியது. சோதனை முயற்சிகள் வெற்றியடைந்த பின்னர் இத்திட்டம் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 1944ல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே முதல் புளூட்டோ எண்ணெய்க் குழாய் அமைக்கப்பட்டது. மே 1945ல் போர் முடிவதற்குள் மேலும் பதினாறு குழாய்கள் அமைக்கப்பட்டன. உச்ச கட்டமாக இக்குழாய்களின் மூலம் நாளொன்றுக்கு 4000 டன் எரிபொருள் பிரிட்டனிலிருந்து பிரான்சுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் மேற்கு ஐரோப்பியப் போர்முனையில் நேச நாட்டுப் படைப்பிரிவுகளின் எரிபொருள் பற்றாக்குறை வெகுவாகக் குறைந்தது.

மேற்கு அரைக்கோளம்

மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere), என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும். இது குறிப்பாக அமெரிக்காக்கள் (அல்லது பதிய உலகம்) மற்றும் அவற்றை அடுத்துள்ள நீர்பரப்பினைக் குறிக்கும். இந்த அரைக்கோளத்தில் உள்ள ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா மற்றும் ஆசியா பகுதிகள் விலக்கப்பட்டுள்ளன.இக்காரணங்களால் சிலநேரங்களில் அமெரிக்க அரைக்கோளம் எனவும் குறிப்பிடப்படும். அரசியல்சார் புவியியலில் சிலநேரங்களில், அமெரிக்காக்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்டமேற்கு அரைக்கோளம் மேற்கு உலகம் எனவும் அறியப்படுகிறது.

நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு, மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு உருசியாவின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது. இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் நீக்கப்படுகின்றன. கூடுதலாக வடகிழக்கு கிரீன்லாந்தின் சிறுபகுதி நீக்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.

அண்டார்டிக்காவின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. மேற்கு அரைக்கோளத்தில் உள்ளது மேற்கு அண்டார்டிகா என வழங்கப்படுகிறது.

வடக்கு ஐரோப்பா

வடக்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் வடக்கிலுள்ள் நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் பால்டிக் கடலோரமாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் வட ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:

டென்மார்க்

எசுத்தோனியா

பின்லாந்து

ஐசுலாந்து

அயர்லாந்து குடியரசு

லாத்வியா

லித்துவேனியா

நோர்வே

சுவீடன்

ஐக்கிய இராச்சியம்ஸ்கான்டினாவியா வட ஐரோப்பியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் புவியியல் உட்பிரிவு.

வேதித் தொழிற்துறை

வேதித் தொழிற்துறை வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்துறையாகும். நெகிழி, ரப்பர், கண்ணாடி, உரம், மருந்து என பலதரப்பட்ட வேதிப் பொருள்கள் வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறன. உலக வேதித் தொழிற்துறை 3 டிரில்லியன் பெறுமதி வாய்ந்தது. இத்துறையின் முக்கிய நிறுவனங்கள் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, நிப்பான் ஆகிய இடங்களில் உள்ளன.

ஷெல்ட் சண்டை

ஷெல்ட் சண்டை (Battle of the Scheldt) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டைத்தொடராகும். வடக்கு பெல்ஜியம் மற்றும் தென்மேற்கு நெதர்லாந்தில் நடந்த இச்சண்டைகளில் நேச நாடுகளில் ஒன்றான கனடாவின் படைகள் ஷெல்ட் ஆற்றின் முகத்துவாரத்தை நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து கைப்பற்றின.ஜூன் 1944ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீது நேச நாடுகள் படையெடுத்தன. அடுத்த சில மாதங்களில் பிரான்சு, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் பல பகுதிகள் ஜெர்மானியர்களிடமிருந்து மீட்கப்பட்டன. மேற்குப் போர்முனையில் நேச நாட்டுப்படைகளின் விரைவான முன்னேற்றம் வேறொரு சிக்கலை உருவாக்கியது. படைகளுக்குத் தேவையான தளவாடங்களைக் குறித்த நேரத்தில் ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப் போதுமான துறைமுகங்கள் நேச நாடுகளின் கைவசம் இல்லை. செப்டம்பர் மாதம் எரிபொருள் மற்றும் பிற தளவாடஙகளின் பற்றாக்குறையால் நேச நாட்டு முன்னேற்றம் தடைபடும் நிலை உருவானது. இதனால் பெல்ஜியத்தின் முக்கிய துறைமுகமான ஆண்ட்வெர்ப்பை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின. ஆண்ட்வெர்ப் துறைமுகம் ஐரோப்பியத் தளவாடப் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைத்துவிடுமென்பது நேச நாட்டுத் தளபதிகளின் கணக்கு. ஆனால் ஆண்ட்வெர்ப் துறைமுகம் பிரிட்டானியப் படைகளின் வசமானாலும், அது அமைந்திருந்த ஷெல்ட் ஆற்றின் முகத்துவாரம் ஜெர்மானியர் வசமிருந்த்தால், எதிர்பார்த்தபடி துறைமுகத்தைப் பயன்படுத்த முடியவில்லை.

செப்டம்பர் மாதம் மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் நேச நாட்டுப்படைகள் கவனம் செலுத்திக் கொண்டிருந்த போது, ஷெல்ட் முகத்துவாரப் பகுதியில் ஜெர்மானியப் படைகள் தங்கள் நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்தன. மார்க்கெட் கார்டனின் தோல்வியால் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. அக்டோபர் 2ம் தேதி கனடிய முதலாம் ஆர்மியின் தலைமையில் நேசநாட்டுப் படைகள் ஷெல்ட் முகத்துவராத்தைக் கைப்பற்றும் பணியில் இறங்கின. அடுத்த ஐந்து வாரங்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. நீர்நிலத் தாக்குதல்கள், கடும் ஜெர்மானிய எதிர்ப்பு, சீரற்ற நிலப்பரப்பில் முன்னேற்றம் என பல கடினமான தடைகளை முறியடித்து நவம்பர் 8ம் தேதி ஷெல்ட் முகத்துவாரப்பகுதியை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. இத்தொடர் சண்டையில் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நேசநாட்டுப் படைவீரர்கள் மாண்டனர், காயமடைந்தனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இவர்களுள் பாதிக்கு மேல் கனடியர்கள். இந்த இழப்புகளால் கனடிய ராணுவத்துக்குக் கட்டாயமாக ஆட்களைச் சேர்ப்பதில் சிக்கல் உண்டானது. ஷெல்ட் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு மூன்று வாரங்களுள் ஆண்ட்வெர்ப் துறைமுகம் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

உலகின் பெரும்பகுதிகள்

LocationAfrica

ஆப்பிரிக்கா நடு  · வடக்கு (மக்கரப்)  · கிழக்கு  · தெற்கு  · மேற்கு

LocationAmericas

அமெரிக்காக்கள்

நடு  · வடக்கு  · தெற்கு  · இலத்தீன்  · கரிபியன்

LocationAsia

ஆசியா நடு  · வடக்கு  · கிழக்கு  · தென்கிழக்கு  · தெற்கு  · மேற்கு

LocationEurope

ஐரோப்பா நடு  · வடக்கு  · கிழக்கு  · தெற்கு  · மேற்கு

GreaterMiddleEast

மத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம்  · கவ்காஸ்  · லெவாண்ட்  · மெசொப்பொத்தேமியா  · பாரசிகப் பீடபூமி

LocationOceania

ஓசியானியா ஆஸ்திரேலியா  · மெலனீசியா  · மைக்குரோனீசியா  · பொலினீசியா

LocationPolarRegions

துருவம் ஆர்க்டிக்  · அண்டார்க்டிக்கா

LocationOceans

பெருங்கடல்கள் புவி  · அட்லாண்டிக்  · ஆர்க்டிக்  · இந்திய  · தென்முனை  · பசிபிக்
உலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.