முட்டைக்கோசு

முட்டைக்கோசு அல்லது முட்டைக்கோவா அல்லது கோவா (cabbage) என்பது Brassicaceae (அல்லது Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த, சில சிற்றின வகைகளைக்(Brassica oleracea or B. oleracea var. capitata,[1]var. tuba, var. sabauda[2] or var. acephala)[3] ) குறிக்கும், ஒரு கீரை ஆகும். இந்த பச்சை இலை மரக்கறி வகையானது, Brassica oleracea எனப்படும் ஒரு காட்டுவகை அல்லது இயற்கைவகையிலிருந்து பெறப்பட்டு, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு, பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகையாகி, மரக்கறியாக உணவில் பயன்படுத்தப்படும் ஒரு இனம் ஆகும். இது மிகக் குறுகிய தண்டையும், மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். இது பூக்கும் தாவர வகையில் வரும், இருவித்திலை, ஈராண்டுத் தாவரம் ஆகும். இது மனிதன், ஏனைய விலங்குகளுக்குத் தேவையான முக்கியமான உயிர்ச்சத்துக்களில் ஒன்றான ரைபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் உயிர்ச்சத்து B2 அல்லது சேர்க்கைப்பொருள் E101 ஐக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்து பல வளர்சிதைமாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும்.

முட்டைக்கோசு
Cabbage and its cross section

Cabbage and its cross section
இனம்
Brassica oleracea
பயிரிடும்வகைப் பிரிவு
Capitata Group (தலையுரு பிரிவு)
தோற்றம்
நடுநிலக் கடல், முதலாம் நூற்றாண்டு

முட்டைக்கோசு (capitata var. alba L.)
Red Cabbage (var. capitata f. rubra)
Savoy cabbage (capitata var. sabauda L.)

CabbageBG
முட்டைக்கோசு

உணவில் முட்டைக்கோசு

கிழக்கு, மத்திய ஐரோப்பிய உணவில் முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், சூப் ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

முட்டைக்கோசு உற்பத்தி

முட்டைக்கோசை சீனா, இந்தியா, உருசியா பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.

  1. "Classification for species Brassica oleracea L.". PLANTS database. United States Department of Agriculture. பார்த்த நாள் 2012-08-10.
  2. Delahaut, K. A. and Newenhouse, A. C (1997). "Growing broccoli, cauliflower, cabbage and other cole crops in Wisconsin" (PDF). University of Wisconsin. பார்த்த நாள் 2012-08-12.
  3. "Brassica oleracea L. – Cabbage". United States Department of Agriculture. பார்த்த நாள் 2012-08-10.
6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு

6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு (6-(Methylsulfinyl)hexyl isothiocyanate) என்பது C8H15NOS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதைச் சுருக்கமாக 6-எம்.ஐ.டி.சி அல்லது 6-எம்.எசு.ஐ.டி.சி என்ற ஆங்கில எழுத்துகளில் குறிப்பிடுவர். ஐசோதயோசயனேட்டு குழுவைச் சேர்ந்த கரிமகந்தகச் சேர்மம் என்று இதை வகைப்படுத்தலாம். முட்டைக்கோசு, காலிபிளவர் போன்ற வகை காய்களிலிருந்து, குறிப்பாக வசாபி எனப்படும் சப்பானிய பச்சைக் கடுகு வகையிலிருந்து 6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு பெறப்படுகிறது. மற்ற ஐசோதயோசயனேட்டுகளைப் போலவே இதுவும் குளுக்கோசினோலேட்டை மைரோசினேசு நொதி செல்லை காயப்படுத்தி நிலைமாற்றம் செய்வதால் உருவாகிறது.

புதிதாக துருவப்பட்ட வசாபி தண்டுப்பகுதியை தலைமுடியில் தேய்த்தால் அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்ற நம்பிக்கை சப்பானில் தற்போது நிலவுகிறது. ஏனெனில் உலகின் மிகப்பெரிய வசாபி தயாரிப்பாளரான கின்னி நிறுவனம் 6-எம்.ஐ.டி.சி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறுகிறது .

உக்ரைன்

உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில் ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும்.

உணவு

உணவு ( ஒலிப்பு) (Food) என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் . உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது. உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு அவ்வுயிரினத்தின் உடல் செல்களால் தன்வயமாக்கப்பட்டு, வளர்ச்சியடையவும் உயிர்வாழவும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

வரலாற்று ரீதியாக, மனிதர்கள் இரண்டு முறைகளில் உணவு சேகரித்துக் கொண்டனர்: வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் சேகரித்தல் என்பன அவ்விரு வகைகளாகும். உலகின் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான, இன்றியமையாத உணவின் பெரும்பகுதியை இன்று உணவுத் தொழில்கள் வழங்கி வருகின்றன.

அனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம், உலக வள மையம், உலக உணவு திட்டம் அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் கவுன்சில் போன்ற அனைத்துலக அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை கண்காணிக்கின்றன. நிலைத்தன்மை, உயிரியற் பல்வகைமை, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து பொருளாதாரம், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வமைப்புகள் விவாதித்து வருகின்றன.

உணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது.

உயிர்ச்சத்து சி

உயிர்ச்சத்து சி (வைட்டமின் சி) அல்லது எல். அஸ்கார்பிக் அமிலம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது மனிதர்களில் வைட்டமினாக செயல்புரிகிறது. விலங்கு மற்றும் தாவரங்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் முக்கியமான வளர்ச்சிதை மாற்ற விளைவை ஏற்படுத்துவதற்கு அஸ்கார்பேட் (அஸ்கார்பிக் அமிலத்தின் ஓர் அயனியாகும்) அவசியமாக இருக்கிறது. இது பெரும்பாலும் எல்லா உயிரினங்களினாலும் உட்புறத்திலேயே உருவாக்கப்படுகிறது; பெரும்பாலான பாலூட்டிகள் அல்லது கைரோப்டீராவின் (chiroptera) (வௌவால்கள்) வகையில் வரும் எல்லா உயிரனங்களிலும், ஆன்திரோபோடியா (Anthropoidea) (ஹாப்லோர்ஹினி) (டார்ஸியர்கள், குரங்குகள் மற்றும் மனித குரங்குகள்) துணை-இனங்கள் முழுவதிலும் இந்த அஸ்கார்பேட் உட்புறத்தில் உருவாவதில்லை. கினி பன்றிகள் மற்றும் சில பறவைகள் மற்றும் மீன்கள் போன்ற இனங்களுக்கும் இது அவசியமாக உள்ளது. இந்த வைட்டமின் குறைபாட்டினால் மனிதர்களுக்கு சரும நோய் ஏற்படுகிறது. இது பரவலாக, உணவு சேர்க்கை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.அஸ்கார்பேட் (ascorbate) அயனி, வைட்டமின் சி இன் ஃபார்மகோஃபோராகும். ஆக்ஸிஜனேற்ற உளைச்சலிலிருந்து உடலை பாதுகாப்பதன் காரணத்தினால் உயிரினங்களில் அஸ்கார்பேட் ஓர் ஆக்ஸியேற்றப்பகையாக செயல்புரிகிறது. நொதி சார்ந்த விளைவுகளுக்கு இது மிகவும் முக்கியமான துணைக்காரணியாக உள்ளது.பண்டைய காலங்களிலிருந்தே சரும நோய் அறிந்த ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நோய், பச்சை தாவர உணவு குறைவினால் ஏற்படுகிறது என்று உலகத்தில் பல பகுதிகளில் இருக்கும் மக்களாலும் கருதப்படுகிறது. 1795 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கடற்படை சரும நோயை தவிர்ப்பதற்காக கப்பல் பயணிகளுக்கு (கடலோடி அல்லது மாலுமி) எலுமிச்சை பழச்சாற்றை கொடுத்தது. இறுதியாக, 1933 ஆம் ஆண்டில், அஸ்கார்பிக் அமிலம் பிரிக்கப்பட்டது. 1934 ஆம் ஆண்டில் இது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.

வைட்டமின் சி பயன்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு ஆகியவை தொடர்ந்து வாதத்திற்குள்ளாகவே இருக்கின்றன. ஒரு நாளில் 45 முதல் 95 மி.கி வரை RDI இருக்கலாம். ஆனால் அந்த கொடுக்கப்பட்ட வரம்பிற்குள் ஒரு சரியான அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பரிந்துரைக்கப்படும் மிக-அதிக-மருந்தளவானது ஒரு நாளுக்கு 200லிருந்து 2000 மில்லி கிராமுக்கும் அதிகமாக இருக்கலாம். 68 நம்பத்தக்க ஆக்ஸிஜனேற்றபகை சேர்க்கை ஆராய்ச்சிகளின் மெட்டா-பகுப்பாய்வு சமீபத்தில் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 232,606 தனிநபர்கள் பங்கேற்றனர். அந்த ஆய்வில் அஸ்கார்பேட்டை கூடுதல் சேர்க்கையாக எடுத்துக்கொள்வதனால் எதிர்பார்த்த அளவிற்கு பலன் கிடைக்கவில்லை என்ற முடிவு வெளியானது.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு ( ஒலிப்பு) சோலானம் டியூபரோசம் (Solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. ஆண்டீய மலைப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன..

முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்ததுசோவியத் ஒன்றியம் பிரிந்தபின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

ஓசூர்

ஓசூர் (Hosur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஓசூர் வட்டம், ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒசூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

ஒசூர் கிருஷ்ணகிரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 306 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது.

காட்டுவகை

காட்டுவகை (Wild type) என்பது இயற்கையில் இனவிருத்திக்கு உட்படும் ஒரு இனத்தின், மாதிரிச் சிறப்பியல்புகளையுடைய தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் உயிரினம் ஆகும். மாற்றங்களுக்கு உட்பட முன்னர், இயற்கையில் தனது இயல்புமாறா நிலையிலேயே இவை காணப்படும். இவற்றின் மரபணுக்கள் அவற்றின் ஆரம்ப இயற்கை நிலையிலிருந்து மாறுதலற்றதாக இருக்கும்.

காட்டுவகைகள் பற்றிய அறிவு மரபியல், மரபணு திடீர்மாற்றம் தொடர்பான ஆய்வுகள் பற்றிய அறிவியலில் மிகவும் உதவியாக இருக்கும். விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்ட காட்டுவகை தாவரங்களில் இருந்து, பயிர்ச்செய்கை மூலம், குறிப்பிட்ட இயல்புகளைத் தெரிவு செய்து, தொடர்ந்து வரும் சந்ததிகளில், பயிரிடும்வகையைப் பெறலாம். பழ ஈ இனமான Drosophila melanogaster பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு இனமாகும். இவற்றில் கண் நிறம், உருவம், சிறகுகளின் அமைப்பு போன்ற சில வெளித்தோற்ற இயல்புகள், குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் மாற்றப்படக் கூடியனவாக இருக்கும்.

காபஸ்கா உணவு

காபஸ்கா (KAPUSKA ) என்பது பாரம்பரிய துருக்கிய துணை உணவாகும். இதன் பெயர் உருசிய மொழியில் முட்டைக்கோசு எனும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த பெயர் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், இந்த உணவு பொதுவாக உருசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் துருக்கிய உணவாகவே உள்ளது. துருக்கியின் பிரதேசங்களான துருஸ் மற்றும் கருங்கடலில் கபுஸ்கா பரவலாக அறியப்படுகிறது மற்றும் உட்கொள்ளப்படுகிறது.துருக்கியில் பல்வேறு வகைகளில் காபுஸ்கா சமைக்கப்படுகிறது: கொண்டைக் கடலை, புல்கர், அரிசி, ஆட்டுறைச்சி அல்லது மாட்டிறைச்சி, அல்லது காய்கறி.

இது ஏழைகளுக்கு ஏற்ற உணவாக அறியப்படுகின்றது. துருக்கிய கவிஞர் ஃபெதி நாசி அவரது இரண்டாம் உலகப்போர் நினைவுகளை எழுதும் போது, அவர்கள் மிக விரும்பி உண்ட உணவாக கபுஸ்காவை குறிப்பிடுகின்றார்.

காய்கறி

காய்கறி (மரக்கறி) எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் பழங்கள், விதைகள், மூலிகைகள் போன்றவை அடங்காது.

சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உண்ணப்படுகின்றன. நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் பச்சையாக உண்ணலாம். அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் நுண்ணுயிரிகளும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: கத்தரி, பழுக்காத தக்காளி, உருளைக் கிழங்கு, அவரைவகைகள்.

ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படி செய்வதால் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும். காய்கறிகளில் பல வகைகள் உண்டு. இலை வகை, பூக்கள் வகை, வேர் வகைகள்.

கிம்ச்சி

கிம்ச்சி (김치), IPA: kimtɕʰi), என்பது காய்கறிகளைக் கொண்டு, பல்வேறு சுவை, மணப்பொருள்கள் சேர்த்து உருவாக்காப்படும் மரபுசார்ந்த தென்கொரிய உணவு வகை. இதில் நொதிக்க வைத்தும், நொதிக்க வைக்காததுமாகிய இரண்டு வகையும் உண்டு. நாப்பா முட்டைக்கோசு, வெங்காயம், வெள்ளரிக்காய், சிவப்பு முள்ளங்கி போன்றவற்றைக் கொண்டு நூற்றுக்கணக்கான வகைகள் செய்கிறார்கள் . முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடும் உணவில் (தொடுகறி போல் (பஞ்ச்சன் (banchan)) கிம்ச்சி பரவலாகப் பயன்படுகின்றது.

கிளிமஞ்சாரோ மலை

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும்.

சமோசா

சமோசா (Samosa; ஐபிஏ :/səˈmoʊsə/) அல்லது சமூசா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும், தொடுகறியாகவும், பசி/சுவையூக்கியாகவும் திகழ்கிறது. இந்த உணவு செய்முறை வடிவில், வேறுபட்டு இருந்தாலும், நான்முக முக்கோண வடிவமே, பன்னாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள பல்வேறு நாட்டினரும், இதனை சிற்றுண்டியாக உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, அராபியத் தீபகற்பம், தென்கிழக்காசியா, தென்மேற்கு ஆசியா, நடுநிலக் கடல், இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்காவின் கொம்பு, கிழக்கு ஆபிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் உணவுப் பட்டியலில், இப்பண்டம் அடங்கி உள்ளது. பல நாடுகளின் கலாச்சார வேறுபாடுகளாலும், அம்மக்களின் குடிபெயர்வாலும், இத்தீனி பல நாடுகளிலும் பரவி வருகிறது.

சான்விச்

சான்விச் அல்லது சாண்டுவிச் என்பது பாண் துண்டுகளுக்கு இடையே இதர உணவுப் பொருட்களை வைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். சான்விச்சை எளிமையாக, வேகமாக ஆக்கலாம். இடையே முட்டைக்கோசு (lettece), தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்ற மரக்கறிகள், பால்திரளி (cheese) அல்லது வெண்ணெய், இறைச்சிகள், சுவைக் கலவைகள், மிளகு உப்பு போன்ற சுவைப்பொருட்களை இடலாம். மேற்குநாடுகளில் சான்விச் பெரிதும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது.

சிலுவை அல்லி இதழ்த் தாவரங்கள்

சிலுவை அல்லி இதழ்த் தாவரங்கள்

நான்கு அல்லி இதழ்ள் ஒன்றிற்கு ஒன்று எதிராக சிலுவை வடிவில் (+ அமைந்த பூக்களைக் கொண்ட தாவரங்கள் `சிலுவை வடிவ இதழ்’ தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.

முட்டைக்கோசு, திண்ணிய பூக்கோசு, காலிபிளவர், கடுகு, முள்ளங்கி மற்றும் நூல்கோல் போன்றவை சிலுவை அல்லி இதழ் தாவரங்களில் அடங்கும்.

ஒற்றை எலெக்ட்ரான் இல்லாமல் இருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் செல் சிதைவும், புற்றுநோயும் உருவாகின்றன. சிலுவை அல்லி இதழ்த் தாவரங்களின் காய்கறிகளை உண்டு வந்தால் புற்று நோயைக் கட்டுப்படுத்தலாம் என வாட்டன் பக்கின் உணவு சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்டைய காலத்தில் ரோமானியர்கள் அதிகளவில் முட்டைக்கோசை உண்டு வந்ததால், அவர்கள் மருத்துவர்களைத் தவிர்த்தார்கள் என்ற செய்தி வரலாற்றில் உள்ளது.

நுரையீரல், உணவுக்குழல், தொண்டை, மலக்குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோயை சிலுவை அல்லி இதழ்த் தாவரங்கள் தடுக்கின்றன.

பயிரிடும்வகைப் பிரிவு

பயிரிடப்படும் பயிர்களைப் அல்லது தாவரங்களைப் பெயரிடும்போது, ஒரு குறிப்பிட்ட பெயரிடல் முறைமை (Nomenclature) பயன்படுத்தப்படும். பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின்படி (ICNCP - International Code of Nomeclature for Cultivated Plants) உயிரியல் வகைப்பாட்டில், பயிரிடும்வகைப் பிரிவு என்பதும் ஒரு முறைசார் பகுப்பாக இருக்கின்றது.

ICNCP Art. 3.1: "வரையறுக்கப்பட்ட ஒத்த தன்மையின் அடிப்படையில், பயிரிடும்வகைகள், தனித் தாவரங்கள் அல்லது தாவரத்தொகுதி தொகுக்கப்படும் ஒரு முறைசார் பகுப்பு"

1995 ICNCP யில் Cultivar Group எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததை, 2004 ICNCP யில் Group (பெரிய G யை முதல் எழுத்தாகக் கொண்டு) என்று மாற்றியமைத்தனர். சில பொதுவான சிறப்பியல்புகளைக் கொண்ட தாவரங்கள் ஒரு பயிரிடும்வகைப் பிரிவினுள் இணைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக:

முட்டைக்கோசு - இனம் Brassica oleracea, பயிரிடும்வகைப் பிரிவு தலையுருப் பிரிவு (Capitata Group).இந்த தலையுருப் பிரிவினுள் சிவப்பு முட்டைக்கோசு (Red cabbage), வெள்ளை முட்டைக்கோசு (White cabbage), சவொய் முட்டைக்கோசு (Savoy cabbage) என்பன அடங்கும். இவை யாவும் மிகவும் குறுகிய தண்டையும், அடர்த்தியாக அடுக்கப்பட்ட இலைகளை நடுவிலும் கொண்டிருப்பதனால் நடுவில் தலை போன்ற ஒரு அமைப்பைக் கொண்டிருக்கும்.

புரோக்கோலி - இனம் Brassica oleracea, பயிரிடும்வகைப் பிரிவு இத்தாலிக்கா பிரிவு (Italica Group)

ஒரு பயிரிடும்வகையானது சில இயல்புகள் ஒரு பிரிவுடனும், வேறு சில இயல்புகள் இன்னொரு பிரிவுடனும் ஒத்ததாகக் கொண்டிருக்கையில், ஒன்றுக்கு மேற்பட்ட பயிரிடும்வகைப் பிரிவினுள் வர முடியும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஒரு பயிரிடப்படும் இனத்தில் 'மஞ்சள் பூக்களைக் கொண்டவை' ஒரு பயிரிடும்வகைப் பிரிவுக்கான காரணியாகவும், ஒரு 'நோய்கான எதிர்ப்புத் தன்மையைக் கொண்டவை' இன்னொரு காரணியாகவும் இருக்கலாம். ஒரு சில பயிர்கள் மஞ்சள் பூக்களைக் கொண்டிருப்பதுடன், குறிப்பிட்ட நோய்க்கான எதிர்ப்புத் தன்மையையும் கொண்டிருக்குமாயின், அவற்றை இரு பயிரிடும்வகைப் பிரிவுகளிலும் பாகுபடுத்தப்பட முடியும்.

பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு

பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு (Phenethyl isothiocyanate) என்பது C9H9NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் இது இயற்கையாகத் தோன்றும் ஐசோதயோசயனேட்டு சேர்மம் ஆகும் . இதன் முன்னோடிச் சேர்மமான குளுக்கோநாசுடர்டீன் முட்டைக்கோசு வகை காய்கறிகள் சிலவற்றில் குறிப்பாக ஓடைகளில் வளரும் செடி வகைகளில் காணப்படுகிறது.

ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் போன்ற புற்று நோய்களுக்கான வேதிச்சிகிச்சை பாதுகாப்புக்கு பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு ஆராயப்பட்டு வருகிறது.

குளுக்கோநாசுடர்டீன் சேர்மத்தை மைரோசினேசு நொதியால் உயிரியல் தொகுப்பு வினைக்கு உட்படுத்தும்போது பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு உற்பத்தியாகிறது.

பூக்கோசு

பூக்கோசு (அல்லது பூங்கோசு, காலிபிளவர்) ஒரு ஓராண்டுத் தாவர (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களையப்பட்ட பின்னர், அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும். இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு.

ஸ்கர்வி

ஸ்கர்வி விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஒரு நோய். பலவீனம், சோர்வாக உணர்தல், கை கால் வலி ஆகியன இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் ஆகும்.சமைப்பதால் பெரும்பாலும் உணவிலுள்ள வைட்டமின் சி குறைகிறது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.