மகிழ்கலை

மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான Entertainment இணையாக பயன்படுகின்றது. தொழிற்கலைகள், கல்விசார் கலைகள், தற்காப்பு அல்லது போர்க் கலைகள், மனவளக்கலைகள் போன்றவற்றுடன் மகிழ்கலைகளை ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.

மகிழ்கலைகள் நிகழ்ச்சியாகவோ, அரங்காடல் கலைகளாகவோ, கணினிக் கலைகளாகவோ மற்றும் பல கலை வடிவங்களாக அமையலாம்.

அரங்கு

அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்) என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்து வைப்பதற்கான ஓர் இடமாக அரங்கத்தைக் கொள்ளலாம்.

அரங்கு எனப்படுவது கலைக்குழுவால் நிகழ்த்துக்கலைகளை காட்சிப்படுத்துவதற்கான தளம். இத்தளம் ரசிப்பவர்களின் உள்ளத்திடை பொதுவாக இரு கூறுகளைக் கொண்டுள்ளது. முதலாவது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே தங்கள் முன் நிகழும் காட்சியாகவும், இரண்டாவது கலைஞர்கள் எடுத்தாளும் கதை, வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சியைக் காட்டும் கற்பனைத்தளமாகவும் திகழ்கிறது.

அரங்கேற்றக் கலைகளைகளின் காட்சிகள் பார்வையாளர்களுடன் நேர்காணல்கள், சைகைகள், உரைநடை, வசனம்,

திரைக்கதை, பாடல்கள், இசை மற்றும் நடனம் மூலம் தொடர்புகொள்வதாக அமைந்திருக்கும். பார்வையாளர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்க அவ்விடத்தின் கலை, ஒலி, ஒளி அரங்க வடிவமைப்பு போன்றவை மெருகேற்றப்படுகிறது.

கதை கூற விழையும் மனிதனுடைய இயல்பு காரணமாக மிகப் பழங்காலத்திலேயே அரங்கு உருவாகிவிட்டது எனலாம். தொடக்க காலத்தில் இருந்தே அரங்கு சமய சடங்கு, சமூகக்கூடம், அரசவை என பல வடிவங்களை எடுத்து வந்திருக்கிறது. இதற்காக, பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றையும், நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகள் போன்றவற்றிலிருந்து பல கூறுகளையும் பெற்று ஒரே கலை வடிவமாக ஆக்கியது.

நாடகம் சார்ந்த அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்து தற்போதைய நிகழ்வாக நிகழ்த்திக்காட்டுவதற்கு பயன்படும் ஒருங்கு பெற்ற மேடை அரங்கு எனலாம். அரங்கத்தில் நடைபெறும் நாடகத்தின் நடிப்பு, அரங்க அமைப்பு உள்ளிட்ட கலைகளைப் பற்றி அறிய உதவும் இயல் அரங்கியல் எனப்படுகிறது.

இசை

இசை ( ஒலிப்பு) (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர்.

இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்

உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனம் (WWE ) என்பது பொது வர்த்தகத்தில் இருக்கும், தனியார் கட்டுப்பாட்டு ஒருங்கிணைந்த ஊடகம் (தொலைக்காட்சி, இணையம், மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது) மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரதானமாக தொழில்முறை மல்யுத்தத்தை கையாள்கிறது, எனினும் முக்கிய வருவாய் ஆதாரங்கள் சினிமா, இசை, தயாரிப்பு உரிமம், மற்றும் நேரடி தயாரிப்பு விற்பனை மூலமும் வருகின்றன. வின்ஸ் மக்மஹோன் தான் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கு உரிமையாளராகவும் தலைவராகவும் இருக்கிறார், அவரது மனைவி லின்டா மக்மஹோன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக இருக்கிறார். தங்களது வாரிசுகளுடன் சேர்ந்து, குளோபல் மீடியாவின் நிர்வாக துணை தலைவர் ஷேன் மக்மஹோனும் டேலண்ட் அன் கிரியேட்டிவ் ரைட்டிங் நிர்வாகத் துணைத் தலைவரான ஸ்டீபனி மக்மஹோன்-லெவெஸ்க்கும் WWE இன் 70 சதவீத பொருளாதார நலன்களையும் நிறுவனத்தின் 96% வாக்களிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கிறார்கள்.

நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகங்கள் ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகட்டில் உள்ளன, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் நகரம், லண்டன், மற்றும் டொரோன்டோவில் அலுவலகங்கள் உள்ளன.உலக மல்யுத்த கூட்டமைப்பு பொழுதுபோக்கு நிறுவனம் என்று பெயர் மாறுவதற்கு முன்னதாக டைடன் ஸ்போர்ட்ஸ் என்று அறியப்பட்டு வந்த இந்த நிறுவனம், மிக சமீபத்தில் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனமாக மாறியிருக்கிறது.

தொழில்முறை மல்யுத்தம் என்பதில் தான் WWE இன் வர்த்தகரீதியான கவனம் மையம் கொண்டிருக்கிறது, இது மல்யுத்தத்துடன் நடிப்பு மாற்றும் நாடகம் கலந்த ஒரு செயற்கை செயல்தூண்டல் விளையாட்டு ஆகும்.இது தான் தற்போது உலகின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு அமைப்பாக இருக்கிறது, தொழில்முறை மல்யுத்தத்தின் காட்சி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை கொண்டிருக்கிற வீடியோக்களின் ஒரு விரிவான தொகுப்பைஇது கொண்டிருக்கிறது. . இந்த ஊக்குவிப்பு நிறுவனம் ஆரம்பத்தில் கேபிடல் மல்யுத்த நிறுவனம் என்ற பெயரில், உலகளாவிய மல்யுத்த கூட்டமைப்பு (WWWF) என்கிற பதாகையின் கீழ் இருந்தது, பின்னர் உலக மல்யுத்த கூட்டமைப்பு (WWF) ஆனது.WWE மூன்று வர்த்தக பெயர்களின் கீழ் செயல்படுகிறது: ரா, ஸ்மாக்டவுன், மற்றும் ECW. மூன்று உலக விருதுகளின் தாயகமாக WWW செயல்படுகிறது: WWE சாம்பியன்ஷிப், உலக ஹெவிவெயிட் சாம்பியன்சிப், மற்றும் ECW சாம்பியன்ஷிப்.

சன் தொலைக்காட்சி

சன் டிவி அல்லது சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 700 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.

தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்

தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கும் தமிழ் தொலைக்காட்சி சேவைகள் உலகின் பல நாடுகளி இருக்கின்றன. ஒளிபரப்பு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையே உள்ளடக்கினாலும், இணையம் செய்மதியூடாக்க பிற நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளை பெற முடியும்.

திரைப்படம்

திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, இயக்கமூட்டல் தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, சிஜிஐ மற்றும் கணினி இயக்கமூட்டல் மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆகியவற்றை ஒரு உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு கலை ஆகும்.

திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ ரெட் ஒன் ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது.

திரைப்படம், பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.

திரைப்படங்கள் பெரும்பாலும் பின்னனி இசை, உரையாடல்கள் மற்றும் பாடல்களுடன் காணப்படும். அவ்வகையான ஒலிப்படலம் திரையில் காணப்படும் ஒளிப்படத்திற்கு ஏற்றார் போன்று அமைந்திருக்கும். படச்சுருளுக்குள் ஒரு பகுதியில் உள்ளதாகவும், திரையில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கும்.

தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.

பாடுதல்

பாடுதல் என்பது குரல் மூலம் இசை ஓசையை எழுப்புவதாகும்.பாடுதல் என்பது பேச்சின் கூட ஒலியிழைவு மற்றும் தாளம் கொண்டு வருவதாகும். பாடும் ஒருவர் பாடகர் அல்லது வாய்ப்பாடகர் என்று அழைக்கப்படுகிறார். பாடகர்கள் சங்கீதத்தை இசைக்கருவிகளுடனோ அல்லது இசைக்கருவிகள் இல்லாமலோ பாட முடியும். பாடலை தனியாகவோ அல்லது குழுவுடனோ அல்லது இசைக்குழுவுடனோ சேர்ந்து பாடலாம்.

ஒரு வழக்கமான அடிப்படையில் பயிற்சி செய்வதன் மூலம் ஒலிகள் இன்னும் தெளிவாகவும் மற்றும் வலுவாகவும் இருக்கும் என்று அறியப்படுகிறது.. நிபுணத்துவம் கொண்ட பாடகர்கள் பொதுவாக பாரம்பரிய அல்லது ராக் இசை போன்ற ஒரு குறிப்பிட்ட இசை வகைகளை சுற்றி தங்கள் பணியை உருவாக்குகின்றனர். தொண்டை குரல் நாண்கள் பயன்படுத்தப்படும் சிறப்பு வழியில் பேசுவது பாடுவதிலிருந்து வேறுபட்டது.

பிளே போய் தொழிலகம்

பிளே போய் தொழிலகம் (Playboy Enterprises) ஒர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1953 ஆம் ஆண்டில் பெண்களை ஆபாசமாக, நிர்வாணமாக, கவர்ச்சியாக காட்டும் பிளே போய் இதழை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வ்ளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் பிளே போய் இதழினிதும் நிறுவனத்தினதும் தாக்கம் கணிசமானது.

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது.

இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள். பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினர், என்பது வாய்மொழியாக விளங்கும் புராணக்கதையாகும்.தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும் ஒரிசாவில் கோபலீலா எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புதலா நாச் எனவும் ராஜஸ்தானில் காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette)என்பர்.

மார்வல் மகிழ்கலைக் கொம்பனி

மார்வல் மகிழ்கலைக் கொம்பனி (Marvel Entertainment, Inc.) ஓர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. சிலந்தி மனிதன் (Spiderman), X-men, கப்டன் அமெரிக்கா போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது.

மார்வெல் காமிக்ஸ்

மார்வெல் காமிக்ஸ் என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனமான மார்வெல் பப்ளிஷிங், இனக். , அமெரிக்க வரைக்கதை புத்தகங்கள் மற்றும் அதன் தொடர்பான ஊடங்கங்களை உற்பத்தி செய்கிறது. இது மார்வெல் எண்டர்டைன்மண்டின் துணைநிறுவனம். இசுபைடர்மேன்,வூல்வரின்,அயர்ன் மேன்,தி எக்ஸ்-மென்,கேப்டன் அமெரிக்கா,தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்,தி ஹல்க்,தோர்,டேர்டெவில்,தி பனிஷேர்,கோஸ்ட் ரைடர்,டேட்பூல்,பிளேடு,தி சில்வர் சர்ஃபெர்,நிக் ஃபியுரீ,மூன் நைட் மற்றும் பல பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மார்வெல் அண்டம் எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் வரைக்கதை பிரிவாக டைம்லி பப்ளிகேஷன்ஸ் 1939-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, பின்பு 1950க்களில் அட்லஸ் காமிக்ஸ் என்று பொதுவாக அறியப்பட்டது. 1961-இல் ஸ்டேன் லீ,ஜாக் கிர்பி,ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலர் உருவாக்கிய வரைக்கதைகள் மற்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான டீசீ காமிக்ஸை தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்.

2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, மார்வெல் என்டர்டைன்மன்ட்டை நான்கு பில்லியன் டாலர்க்கு தி வால்ட் டிஸ்னி கம்பெனி பெற பேரம் பேசியது . இந்த பேரத்துகான வாக்குப்பதிவு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைபெற உள்ளது.

மார்வெல் ஸ்டுடியோ

மார்வெல் ஸ்டுடியோ (Marvel Studios) இந்த நிறுவனத்தை 1993ம் ஆண்டு இருந்து 1996ம் ஆண்டு வரை எல்லோரும் மார்வெல் பிலிம்ஸ் என அறியப்பட்டது. இது ஒரு அமெரிக்கா நாட்டு திரைப்பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பர்பாங், கலிபோர்னியாவில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது. இதன் தலைமையிடமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் உள்ளது, இதன் தலைவர் கேவின் பிகே ஆவார்.

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் பெரும்தொகை திரைப்படங்கள் ஆகும்.இவ் திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் அயன் மேன் 2008ஆம் ஆண்டு முதல் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019ஆம் ஆண்டு வரை 22 திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளது.

மிக்கி மவுஸ்

மிக்கி மவுஸ் (Mickey Mouse) என்பது, ஒரு வேடிக்கையான விலங்கின் கேலிச் சித்திர (cartoon) கதாப்பாத்திரமாகும். கருத்துச் சித்திரமாகவும் விளங்கும் இது, அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். உலகப்புகழ் பெற்ற இந்த மிக்கி மவுஸ், 1928 ஆம் ஆண்டு, நவம்பர் 18 இல், இயங்குபட தொழிற்கூடமாக உள்ள வால்ட் டிஸ்னி கம்பனியின் மகிழ்கலைத் தேவையின் பொருட்டு வால்ட் டிஸ்னி, மற்றும் யூபி ஐவர்க்சு (Ub Iwerks) என்பவர்களால், உருவாக்கப்பட்டவையாகும்.

லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்

லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் (ஆங்கிலம்:Lions Gate Entertainment) இது ஒரு கானடா மற்றும் அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை 3, 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் வான்கூவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளது.

வால்ட் டிஸ்னி நிறுவனம்

வால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ் ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ், பிக்ஸர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, லூகஸ்பிலிம், 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் மற்றும் ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் போன்றவை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் என்பது ஒரு அமெரிக்க திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இது பல ஹாலிவுட் திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், அலைஸ் இன் தெ வொண்டர்லேண்ட், டாய் ஸ்டோரி போன்றவை இதன் படங்களுள் முக்கியமானதாகும்.

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் திரைப்படங்களை வினியோகம் செய்யும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கலிபோர்னியா வில் அமைந்துள்ளது. இது வால்ட் டிஸ்னி கம்பனிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.

ஸ்கிரீன் ஜெம்ஸ்

ஸ்க்ரீன் ஜெம்ஸ் (ஆங்கிலம்:Screen Gems) இது ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்காவில் அமைந்துள்ளது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.