பேரினம் (உயிரியல்)

பேரினம் (இலங்கை வழக்கு - சாதி) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக நாய்ப் பேரினத்தில், உள்ள சில இனங்கள் நாய்கள், ஓநாய்கள், நரிகள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் பூனைகள், புலிகள், அரிமா இனங்கள் ஆகும்.. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) இனம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் ( (டி. என். ஏ புணர்வுகள்) ) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.

பேரினம் என்பதன் இலங்கை வழக்கு சாதி என்பதாகும். இருசொற் பெயரீட்டு முறைப்படி உயிரினங்கள் பெயரிடப்படும்போது, முதலில் வரும் சொல் உயிரினத்தின் பேரினத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டாவது சொல் உயிரினத்தின் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

Biological classification L Pengo-ta
அறிவியல் வகைப்பாடு
காட்டுமிளகு

காட்டுமிளகு, கிச்சிலிக்கரணை, மிளகரணை, அல்லது முளகரணை (Toddalia)என்று அழைக்கப்படும் இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் ஒருவகையான பேரினம் (உயிரியல்)|பேரினம் ஆகும். இதன் ஆங்கில பெயர் ஆரஞ்ச் கிலம்பர் (orange climber) ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப்பகுதி என்று அறியப்படுகிறது. இவை தென் ஆப்பிரிக்கா, வென்டா மொழி பேசும் பகுதிகளிலும், கென்யா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஆரஞ்ச் பழகையைச் சார்ந்த ரோடாசிஸ் (Rutaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது.

நீள் சிறகு கடற்பறவை

நீள் சிறகு கடற்பறவை (gull) யானது ஆலா (Tern) என்ற பறவையின் குடும்ப வகைப்பாட்டினைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதேபோல் ரன் (Lari), தாசுமேனியாக்கடல் பகுதில் வாழும் பறவை, குட்டையான இறகுளையுடைய கடல்பறவை (auk), நீரில் நடக்கும் பறவை (wader), நீர் மேல் தவழ்ந்து செல்லும் பறவை (Skimmer), போன்றவை இந்த இனத்தைச் சேர்ந்தவையாகும்.நீள் சிறகு கடற்பறவை இருபத்தியோராம் நூற்றாண்டுவரை (Larus) என்ற குடும்பத்தில் தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது வெளிநாட்டுப் பேரினங்கள் பல காரணங்களால் மாற்றம் கண்டுள்ளன. இப்பறவையின் பழைய பெயர் இடாய்ச்சு மொழியில் Möwe தென்மாக்கிய மொழியில் måge, இடச்சு meeuw மற்றும் பிரான்சிய மொழியில் mouette என்று அந்தந்த நாட்டு பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள்.நீள் சிறகு கடற்பறவை பெரும்பாலும் கருப்புத் தலையுடனும், சாம்பல் நிற மற்றும் வெள்ளை இறகுடனும் காணப்படும். இவை நீளமான அலகையும், சவ்வால் இணைந்த கால் விரல்களையும் கொண்டவை. இப்பறவைகள் பெரும்பாலும் உணவு தேடி உண்பவையாகவும் ஒருசில பறவைகள் சந்தர்ப்பவாதமாகவும் உண்டு வாழும். இவை ஒரு ஊனுண்ணியாக உள்ளது.

சிறிய வகையான நண்டுகள், மீன்களைப் பிடித்து உண்ணுகின்றன. பெரிய இரையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இப்பறவைக்கு தாடைகள் இல்லை.

அநேகமாக இப்பறவைகள் கடற்கரை ஓரத்திலும், தீவுக்கூட்டங்களிலும் வாழுகின்றன. இதன் இனப்பெருக்கம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்தாலும், அவற்றிற்கு இறகுகள் முழுவதும் முளைக்க நான்கு ஆண்டுகள் வரை ஆகும். பொதுவாக பெரிய வெள்ளை தலையுடைய பறவைகள் 49 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப் பறவைகள் பெரிய கூடு கட்டும். அதோடு இவைகள் கூடும் கூட்டத்தில் பெருத்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும். தாவரங்களின் பாகங்களால் கூடுகளைக் கட்டி முட்டை இடுகின்றன. இதன் இளம் குஞ்சுகளின் மேல் உதிரும் வகையில் சிறு சிறு முடிகள் இருக்கும்.இப்பறவைகள் கடலின் மேற்பரப்பில் தெரியும் திமிங்கிலம் போன்ற விலங்குகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. இவ்வகையான பறவை இனங்கள் அநேகமாக மனிதர்கள் போல நகரத்திலும் வனத்திலும் கூட்டமாக வாழும் குணம் கொண்டுள்ளது. இப்பறவைகளின் கூட்டங்கள் இருக்கும் இடங்களில் வேறு பறவைகள் அத்துமீறி நுழையும் போது சண்டையிட்டு விரட்டும் குணம் கொண்டுள்ளது. குணமானது.

பசிபிக் கடற்பறவை

பசிபிக் கடற்பறவை (Larus pacificus) ஆஸ்திரேலியா கடற்கரையை ஒட்டி வாழும் ஒரு பெரிய உருவம் கொண்ட பறவையாகும். இப்பறவை பொதுவாக ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியான கார்னவனிலும் சிட்னி பகுதியிலும் 1940ம் ஆண்டுகளிலிருந்து கடல் பாசி நிற கடற்பறவையுடன் (Kelp Gull) காணப்படுகிறது.

இவை விள்ளி நிற கடற்பறவை, மற்றும் போது உருவ கடற்பறவை போல் இந்த பசிபிக் கடற்பறவையும் கடற்கரையின் ஓரங்களில் கிடைக்கும் மட்டி என்ற கிளிஞ்கல் போச்சிகளையும், கடல் முள்ளெலி என்று அழைக்கப்படும் உயிரிணத்தையும் உணவாக தேடி உண்ணுகிறது.

பென்டாசெரோட்டைடீ

பென்டாசெரோட்டைடீ, பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 8 [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களில் 13 இனங்கள் மட்டுமேயுள்ளன. பென்டாசெரோட்டைடீ என்பது கிரேக்க மொழியில் "ஐந்து கொம்புகள்" என்று பொருள்படுவது. இவற்றில் முதுகுத் துடுப்புக்களில் உள்ள கூரிய முட்களையே இது குறிக்கிறது. எனினும், இக்குடும்பத்தில் எல்லா இனங்களிலும் இவ்விடத்தில் ஐந்து முட்கள் இருப்பதில்லை.

மத்தி (மீன்)

மத்தி (Sardine; pilchards) என்பது இந்திய கடற்பகுதியில் காணப்படும் ஒருவகை மீனினம் ஆகும். தமிழகத்தில் தென்மாவட்ட கடலோர மக்கள், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் மீனினமாகும். கடலூர் மாவட்டத்தில் மத்தி மீன்களே மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உள்ளது.

முன்வரலாற்றுக்காலக் குருத்தெலும்பு மீன்களின் பட்டியல்

குருத்தெலும்பு மீன்களின் பேரினம் (உயிரியல்)|பேரினங்களைப் (இலத்தீன்:chondrichthyes), இவற்றின் தொல்லுயிர் எச்சம் முதல் இங்கு பட்டியல் இடப்படுகிறது. இப்பட்டியல், உள்ளூர் பெயர்களைக் கொண்டு உருவாக்கப்படவில்லை. பொதுவாக விலங்கியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பேரினங்களின் பெயர்களைக் கொண்டு மட்டும், இப்பட்டியல் உருவாக்கப்படுகிறது. பிற பேரினப்பெயர்கள் தவிர்க்கப்பட்டன.

இப்பட்டியலில் 376 பேரினப்பெயர்கள் இருக்கின்றன. † (dagger) குறியீடு, காலத்தால் அழிந்த பேரினங்களைக் குறிக்கிறது. தற்போது இருக்கும் பேரினங்கள், தடிமனாகக் காட்டப்பட்டுள்ளன.

யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு

யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு (Joseph Pitton de Tournefort, 5 சூன், 1656 — 28 திசம்பர், 1708) என்ற தாவரவியல் பேரறிஞர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் வகைப் பாட்டியல் அலகான பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர். இவரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிலவற்றின் அடியொற்றியே, லின்னேயசு தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். பேரினம் என்ற அலகானது, லின்னேயசின் ஐந்து அலகுகளில் ஒன்றாகும். Tourn என்ற தாவரவியல் குறுக்கம், இவரின் நினைவாகப் பயன்படுத்தப் படுகிறது.

உயிரியல் வகைப்பாட்டு படிநிலைகள்
Magnorder
ஆட்களம்/பெரும்இராச்சியம் பெருந்தொகுதி/பெரும்பிரிவு பெருவகுப்பு
(supperclass)
பெருவரிசை
(Superorder)
பெருங்குடும்பம்
(Superfamily)
Supertribe Superspecies
இராச்சியம் தொகுதி வகுப்பு Legion வரிசை குடும்பம் Tribe (biology) பேரினம் இனம்
துணை இராச்சியம் துணைத்தொகுதி
(Subphylum)
துணைவகுப்பு
(Subclass)
Cohort (biology) துணைவரிசை
(Suborder)
துணைக்குடும்பம்
(Subfamily)
Subtribe துணைப்பேரினம்(Subgenus) துணையினம்
(Subspecies)
Infrakingdom/Branch Infraphylum Infraclass Infraorder Section (botany) Infraspecific name (botany)
Microphylum Parvclass Parvorder Series (botany) பல்வகைமை
Form (botany)

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.