புதிய கற்காலம்

புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.

Néolithique 0001
அணிகள், கோடரிகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள் என்பன அடங்கிய புதிய கற்காலப் பொருட்கள்
SkaraBraeJM
Skara Brae Scotland. வீட்டுத் தளபாடங்கள் முதலியன பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள்.

புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல் வளமான பிறை பிரதேசத்தில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லெவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆபிரிக்கா, வட மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.

புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் பயிர் செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

அசுன்னா பண்பாடு

அசுன்னா பண்பாடு (Hassuna culture) தற்கால ஈராக் நாட்டின் வடக்கு மெசபடோமியா பகுதியில், புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகும். கிமு 6,000 காலத்திய அசுன்னா பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், கைக்கோடாரிகள், அரிவாள்கள், தானியங்களை அரைக்கும் கற்கள், சமையல் அடுப்புகள், சுடு களிமண் மற்றும் கல் தொட்டிகள், வேளாண்மை பயன்படுத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்குகளின் எலும்புகள் போன்ற தொல்பொருட்கள் வடக்கு மெசபடோமியாவில் அசுன்னா தொல்லியல் மேடு மற்றும் செம்சரா தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யும் போது கிடைத்துள்ளது.

ஆப்பெழுத்து

ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது. ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின.

ஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன.

ஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது.

பட எழுத்து முறையிலிருந்து ஆப்பெழுத்துக்கள் உருவான வளர்ச்சிப் படிகளைக் காட்டும் படம்.

கருப்பு

கருப்பு அல்லது கறுப்பு (black) என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். நிலக்கரி, கருங்காலி மரம், சுத்தவெளி போன்றவற்றின் நிறம் கருப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது.

புதிய கற்காலம் சார்ந்த ஓவியர்கள் பயன்படுத்திய நிறம் கருப்பாகும். இது பொதுவாக ரோமானிய பேரரசின் காலத்திலிருந்து துக்கம், மரணம், தீயவை போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்காலம்

கற்காலம் ( ஒலிப்பு) என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப் பிந்திய கற்காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவுகளைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.

இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது.

கற்காலம் என்னும் சொல், இப் பரவலான காலப் பகுதியைக் குறிப்பதற்காக தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அழியக்கூடிய பிற மென்மையான பொருட்களால் செய்யப்பட்டவற்றைக் காட்டிலும், கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழியாமல் இருக்கின்றன. தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலமாகும்.

கற்காலத்தை முந்திய பகுதியாகவும், பிந்திய பகுதியாகவும் பிரிக்கவேண்டும் என 1851 ஆம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவராவார். இன்றும் பயன்பாட்டில் உள்ள, கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865 ஆம் ஆண்டில், அவர் எழுதிய வரலாற்றுக்கு முந்திய காலங்கள் (Pre-historic Times) என்னும் அவரது நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.

களிமண் பலகை

களிமண் பலகைகள் (Clay tablets) பண்டைய மெசொப்பொத்தேமியாவில், கிமு 5,000 முதல் முக்கிய குறிப்புகள் எழுவதற்கு களிமண் பலகைகள், எழுதும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. பச்சை களிமண்னை, செவ்வக வடிவில் அமைத்து, அதில் எழுத்தாணியால் மருத்துவக் குறிப்புகள், வம்ச மன்னர்கள் பெயர், சுமேரிய கடவுள்கள் பெயர், போர் வெற்றிக் குறிப்புகள், சமயச் சின்னங்கள், கடவுள் உருவங்கள், அரச முத்திரைகள் பதித்து பின்னர், நீரில் கரையால் இருக்க, களிமண் பலகைகளை சூரிய ஒளியிலோ அல்லது செங்கல் சூளையிலோ இட்டு வலுப்படுத்தினர்.

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் வாழ்ந்த சுமேரியர்களும், பின்னர் வந்த பாபிலோனியர்களும் பின்னர் மற்றவர்களும், களிமண் பலகைகளில், தங்களது குறிப்புகளை ஆப்பெழுத்தில் எழுதினர்.

கானான்

கானான் (Canaan; /ˈkeɪnən/; வடமேற்கு செமிடிக் மொழிகள்: knaʿn; Phoenician: 𐤊𐤍𐤏𐤍; விவிலிய எபிரேயம்: כנען / Knaʿn; [Masoretic]: כְּנָעַן / Kənā‘an) பழங்காலத்தில் இருந்த ஓர் நாடாகும். இது, விவிலியத்தின்படி கடவுள் ஆபிரகாமுக்கும் அவர்தம் மக்கட்கும் உறுதியளித்திருந்த நிலப்பகுதியாகும். பொது ஊழி 2000 முதல் விவிலியம் உருவாகும் வரை இங்கு வாழ்ந்த மக்கள் கானானியர் எனப்பட்டனர். தற்கால இசுரேல், லெபனான் நாடுகளின் பெரும்பகுதியை இந்நிலப்பகுதி உள்ளடக்கியிருந்தது.

கானானியர் எனும் சொல் விலியத்தில் இனத்தைக் குறிக்க அதிமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கில்கமெஷ் காப்பியம்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சாமர்ரா

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.

சுமேரிய கடவுள்கள்

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.

சுமேரிய மொழி

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.

சுமேரியர்களின் மதம்

சுமேரியன் மதம் என்பது பண்டைய சுமர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக இருந்தது. சுமேரியர்கள் தெய்வீகத்தன்மை என்பது அனைத்து பொருட்களிலும் இருப்பதாகவும், அண்ட சக்தியின் மூலம் அதனை பணிவை வெளிப்படுத்துவதன் பெறலாம் என நம்பியிருந்தனர் அவைகளாவன மரணம் மற்றும் தெய்வீக கோபம்.

டைகிரிசு ஆறு

டைகிரிசு ஆறு (Tigris) பண்டைய நாகரிகப் பகுதியான மெசொப்பொத்தேமியாவை வரையறுக்கும் சிறப்பு வாய்ந்த இரண்டு ஆறுகளில் கிழக்குப் புறமாக உள்ள ஆறு. மற்றது இயூபிரட்டீசு ஆறு ஆகும். தென்கிழக்குத் துருக்கியின் மலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு தெற்கு நோக்கி ஓடி ஈராக்கினூடாகச் செல்கிறது. இவ்வாற்றின் அரபுப் பெயர் திஜ்லா. இராக்கில் இதனைத் திஜ்லா என்றே அழைக்கின்றனர்.

தழும்பழி

தொல்லியலில் தழும்பழி (Acheulean) என்பது கல்லாயுதங்களின் உற்பத்தி முறை சார்ந்த ஒரு வகையைக் குறிக்கும்.இவ்வகைக் கல்லாயுத உற்பத்தி முறையை கீழைப் பழங்கற்கால மக்கள் உபயோகித்த நீள்வட்ட வடிவ அல்லது பேரிக்காய் வடிவம் கொண்ட கோடரிகள் குறிக்கின்றன. முதலில் கீழைப் பழங்கற்கால மக்கள் தழும்புரி என்னும் செப்பனிடப்படாத ஆயுதங்களை உபயோகித்தனர்.

பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை (தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு) அழித்து அவற்றைத் தழும்புகள் இல்லாதவாறு உருவாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.

தழும்பழி ஆயுதங்கள் கீழைப் பழங்கால ஆப்பிரிக்கா, பெரும்பலான மேற்காசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டன. இவை பொதுவாக ஓமோ இரக்டசு இனத்தின் எச்சங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன.

திராய்

திராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தெற்காசிய கற்காலம்

தெற்காசிய கற்காலம் (The South Asian Stone Age ) என்பது தெற்கு ஆசியாவில் மனிதர்கள் வாழ்ந்த பழங்கற்காலம் இடைக் கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகிய மூன்று காலகட்டத்தையும் உள்ளடக்கியது ஆகும். உடலமைப்பு ரீதியான நவீன நிறைநிலை மனிதர்கள் தெற்காசியாவில் வாழ்ந்து இருப்பதற்கான பழமையான சான்றுகள் இலங்கையின் படாடோடாலென மற்றும் பெலிலென [ குகைத் தளங்களில் காணப்பட்டுள்ளன. இன்று மேற்கு பாக்கித்தான் என்றழைக்கப்படும் பழங்கால மெகெர்கர் பகுதியில் புதிய கற்காலம் 7000 ஆண்டுகள் தொடங்கி 3300 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் இங்குதான் செப்புக்கால மனிதர்கள் தோன்றினர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கி.மு 3000 ஆண்டுவரை இடைக்கற்காலமும் கிமு 1400 ஆண்டு வரை புதிய கற்காலமும் தென்னிந்தியாவில் நீடித்து இருந்துள்ளன. இதைத் தொடர்ந்து செப்புக் காலம் முடிவுக்கு வந்து பெருங்கற்கால நிலைமாறும் காலம் நீடித்துள்ளது. கி.மு 1200 முதல் கி.மு 1000 வரையான ஆண்டுகளில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஒரே காலகட்டத்தில் இரும்புக் கால மனிதர்களின் தொடக்கம் நிகழ்ந்துள்ளது. ( வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்ட கலாச்சாரம், அல்லூர் )

நான்காம் நெபுகத்நேசர்

நான்காம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar IV, /ˌnɛbjʊkədˈnɛzər/), கிமு 520), பாபிலோன் மன்னராகத் தம்மை அறிவித்துக் கொண்டவர். அரக்கா (Arakha) என்றும் இவரை அழைப்பர். ஆர்மீனியரான அரக்கா அல்தித்தா என்பவரின் மகன். ஆனாலும், இவர் தன்னை பாபிலோனின் முன்னாள் அரசர் நபோனிடசின் மகன் எனக் கூறிக் கொண்டு, தனது பெயரை நான்காம் நெபுகத்நேசர் என மாற்றிக் கொண்டார். பாரசீக மன்னர் முதலாம் தாரியசிற்கு எதிராக இவர் கிமு 522 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார். கிமு 520-இல் தாரியசின் படைவீரரின் அம்பால் எய்தப்பட்டு நான்காம் நெபுகத்நேசர் கொல்லப்பட்டார்.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (Pre-Pottery Neolithic (PPN) மேற்கு ஆசியாவின் பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த வளமான பிறை பிரதேசத்தில் உள்ள லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 10,000 - கிமு 6,500 வரை நிலவியது.இதன் பின்னர் இப்பகுதியில் இடைக்கற்காலத்தில் மலர்ந்த நாத்தூபியன் பண்பாட்டு காலத்தில் மக்கள் கால்நடை வளர்த்தல் மற்றும் பயிரிடுதல் முறை அறிந்திருந்தினர். மட்பாண்டாத்திற்கு முந்தைய புதியகற்காலப் பகுதி கிமு 6200 வரை விளங்கியது. பின்னர் மட்பாண்ட புதிய கற்காலம் துவங்கியது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் Pre-Pottery Neolithic A (PPNA), மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் முதல் நிலைக்காலத்தை குறிப்பதாகும். இக்கற்காலம் பண்டைய அண்மை கிழக்கின் அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளில் கிமு 10,000 முதல் கிமு 8,800 முடிய விளங்கியது. வளமான பிறை தேசத்தில் அனதோலியா, லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் (அ) கால கட்டத்தில் தொல்லியல் மேடுகள் அகழ்வாய்வுவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மெல்லிய உருண்டை வடிவலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட குடியிருப்புகள், பயிர்த் தொழில், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், இறந்தவர்களை சடலங்களை குடியிருப்புகளின் தரையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்தல் இக்காலத்தின் சிறப்பம்சமாகும்.இப்புதிய கற்காலத்திற்கு எதுக்காட்டாக எரிக்கோ மற்றும் பெருவயிறு மலை தொல்லியல் களங்கள் விளங்குகிறது. இக்கற்காலத்தில் சுட்ட களிமண் மட்பாண்டத்தின் பயன்பாடு மக்கள் அறிந்திருக்கவில்லை. இக் கற்காலத்திற்கு பின்னர் இடைக் கற்காலத்தில் லெவண்ட் பகுதிகளில்

நாத்தூபியன் பண்பாடு நிலவியது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (Pre-Pottery Neolithic B (PPNB) இது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் ஒரு பகுதியாகும். இக்காலத்திய பண்பாடு வளமான பிறை பிரதேசத்தின் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 8,800 முதல் கிமு 6,500 வரை விளங்கியது. துருக்கியின் பெருவயிறு மலை மற்றும் எரிக்கோ நகரத்தின் தொல்லியல் களங்களிலிருந்து இக்கற்காலத்திய பண்பாடு அறிய முடிகிறது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) போன்று, மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), இடைக் கற்காலத்திய நூத்துபியன் பண்பாட்டிலிருந்து வளர்ச்சியுற்றது. இக்கற்காலம் அனதோலியாவின் வடகிழக்கில் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.