பால் (பானம்)

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப்பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது.

பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

பாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், தோய்த்து (அ) கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யையும் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும்.

2011ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால் பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும்.[1] அதுமட்டுமல்லாது கொழுப்பு நீக்கிய பதனிட்ட பால் பொடி ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பாலும், அதன் உபப்பொருட்களின் உள்நாட்டு தேவை இந்தியாவில் அதிகரிப்பதால் எதிர்வரும் காலங்களில் பால் இறக்குமதி செய்யப்படலாம். ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் போன்றவை உலகின் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஆகும். 2016ஆம் ஆண்டு வரையிலும் சீனா, உருசியா நாடுகள் தங்கள் பால் தேவையில் தன்னிறைவு அடையும் வரையிலும் உலகின் பாலிறக்குமதி நாடுகளில் முன்னிலை வகித்தன.

உலகளவில், பால் மற்றும் பால் பொருட்களை 6 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 750 மில்லியன் மக்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.

பால் கறத்தல்
பால் கறத்தல்
Milk glass
பால்
Cow milking machine in action DSC04132
பசுவிலிருந்து பாலை இயந்திரத்தின் மூலம் கறக்கும் படம்
Aesthetic Milk Vehicle
பால் வண்டி

பால் பற்றிய இலக்கியக் குறிப்புகள்

திருக்குறளில் பாலின் பண்பு ஒப்புமை :

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.-(குறள்: 1000)

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.-(குறள்: 1121)

வரலாறு

மனிதன் அல்லாத மற்ற பாலூட்டிகளிடத்திலிருந்து உணவுக்காக பால் பெறும் வழக்கம் புதிய கற்காலத்தில் அல்லது விவசாயம் தொடங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டது ஆகும். இதன் வளர்ச்சி கி.மு 7000 முதல் 9000 ஆண்டுகள் வாக்கில் தென்கிழக்கு ஆசியாவிலும், கி.மு 3500 முதல் 3000 காலங்களில் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கின்றன.

கறவை மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப காலங்களில் பால் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளிலிருந்தே ஆரம்ப கால தெற்காசியாவில் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தோல் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின் கி.மு நான்கு முதல் பாலூட்டிகளை வளர்த்து அதனிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது. கி.மு ஏழு ஆகிய காலங்களிளிருந்து பாலூட்டிகளிடமிருந்து பால் பெறும் வழக்கம் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அங்கிருந்து அரேபியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு பரவியுள்ளது.

பால் உற்பத்தி மூலம்

வேளாண்மைப் பொருட்களின் பட்டியலிலுள்ள பாலானது மனிதனல்லாத கால்நடைகளிடமிருந்து அவற்றின் கருத்தரிப்பு கடந்த சமயம் முதல் கறந்து எடுக்கப்படுகிறது. காது மடல் வெளியில் இருக்கும், தோலின் மீது உரோமங்களையும் கொண்டு, பாலௌஉட்டும் சுரப்பிகளைக் கொண்ட அனைத்து உயிரினங்களும் பாலூட்டிகளாகும். இவற்றில் சில மிருகங்களின் பாலினையே மனிதன் உணவாகப் பயன்படுத்துகின்றான்.

பின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.

தொழில்மயமாக்கல்

பால்வளத் தொழில் நுட்பம்

பால் குழந்தைகளுக்கு இன்றியமையாத எளியவகை ஊட்டச்சத்தாகும். பால் ஒரு முக்கிய உணவுப்பொருளாகவும், தொழில்துறையில் பாலின் பங்கு அளப்பறியது. பால் உற்பத்தி, சேமிப்பு, சேகரித்தல் (அ) கொள்முதல், நுகர்தல், மற்றும் விற்பனை போன்றவை பற்றி அறிந்து பால்வளத்தைப் பெருக்கும் தொழில்நுட்பம் பால்வளத்தொழில் நுட்பம் ஆகும்.

உலகம் முழுவதிலும் பால் உற்பத்தி

உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.[2] தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 2010 இல் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலாவதாகவும் அதன் பின் அமெரிக்காவும் அதனைத்தொடர்ந்து சீனாவும் பின் செருமனியும் பின் பிரேசிலும் அதன் பின் உருசியாவும் உள்ளன.[3] 2011இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக சுமார் 138 மில்லியன் டன்கள் அளவு பாலை உற்பத்தி செய்தன.[4] உலகம் முழுவதிலும் உள்ள முதல் 10 தரவரிசையிலுள்ள ஆடு, எருமை, மாட்டு பால் உற்பத்தி நிலவரம் 2013 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் 10 மாட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்
2013 [5]
தரவரிசை நாடு உற்பத்தி
(மெட்ரிக்
டன்களில்)
1  ஐக்கிய அமெரிக்கா 91,271,058
2  இந்தியா 60,600,000
3  சீனா 35,310,000
4  பிரேசில் 34,255,236
5  செருமனி 31,122,000
6  உருசியா 30,285,969
7  பிரான்சு 23,714,357
8  நியூசிலாந்து 18,883,000
9  துருக்கி 16,655,009
10  ஐக்கிய இராச்சியம் 13,941,00
முதல் 10 ஆட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்
in 2013 [6]
தரவரிசை நாடு உற்பத்தி
(மெட்ரிக்
டன்களில்)
1  சீனா 1,540,000
2  துருக்கி 1,101,013
3  கிரேக்க நாடு 705,000
4  சிரியா 684,578
5  உருமேனியா 632,582
6  எசுப்பானியா 600,568
7  சூடான் 540,000
8  சோமாலியா 505,000
9  ஈரான் 470,000
10  இத்தாலி 383,837
முதல் 10 செம்மறி ஆட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்
in 2013 [7]
தரவரிசை நாடு உற்பத்தி
(மெட்ரிக்
டன்களில்)
1  இந்தியா 5,000,000
2  வங்காளதேசம் 2,616,000
3  சூடான் 1,532,000
4  பாக்கித்தான் 801,000
5  மாலி 720,000
6  பிரான்சு 580,694
7  எசுப்பானியா 471,999
8  துருக்கி 415,743
9  சோமாலியா 400,000
10  கிரேக்க நாடு 340,000
முதல் 10 எருமைப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்
in 2013 [8]
தரவரிசை நாடு உற்பத்தி
(metric
டன்களில்)
1  இந்தியா 70,000,000
2  பாக்கித்தான் 24,370,000
3  சீனா 3,050,000
4  எகிப்து 2,614,500
5  நேபாளம் 1,188,433
6  மியான்மர் 309,000
7  இத்தாலி 194,893
8  இலங்கை 65,000
9  ஈரான் 65,000
10  துருக்கி 51,947
Milk production and consumption
பால் உற்பத்தி மற்றும் நுகர்வு

பால் தர நிர்ணயம்

பாலின் தரம் பொதுவாக அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், நீரின் அளவு, திரியும் காலம் ஆகியவற்றைக் கொண்டு அறியலாம்.

அமெரிக்காவில் பால் இரு வகையாக தரம் பிரிக்கப்படுகிறது.

 • தரம் ஏ (Grade A), கடைகளில் நேரடி நுகர்வுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
 • தரம் பி (Grade B), பால் உபப்பொருட்கள் உற்பத்திக்காக பயன் படுத்தப்படுகிறது (சான்றாக : பாலாடைக்கட்டி உற்பத்தி). தரம் பி பொதுவாக பால் கொள்கலனில் அடைக்கப்பட்டு அதிகம் குளிர்விக்கப்படுகிறது. பின்னர் பால் பொருட்கள் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இத்தோடல்லாது, நியூசிலாந்து நாட்டில் பாலில் மேலும் A1, A2, என்ற தரவகைகளும் உண்டு. ஏ1 பாலானது கலப்பின மாடுகளிலிருந்தும், ஏ2 பாலனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. ஏ2 பசுக்களின் பால் அதிக நோயெதிர்ப்பு ஆற்றல் மற்றும் நோய் பெற்றிருப்பதாகவும் அறியப்படுகிறது. பாலின் புரத வகையுள் 80% கேசின் எனும் புரத்தால் ஆனது.[9] ஏ2 பசுக்களின் பாலில் பீட்டா (β) கேசின் புரதத்தின் அமினோ அமிலமான புரோலின் உள்ளது. ஆனால் மரபுப்பரிமாற்றம் (அ) கலப்பினம் செய்யப்பட்ட ஏ1 பாலில் புரோலின் புரதம் ஹிஸ்டிடின் ஆக கலப்பினத்தால் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் கலப்பினப் ப்சுக்களிடமிருந்து பெறும் பாலில் நோயெதிற்பாற்றல் குறைவாக உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஏ1, ஏ2 பால் தரப்பிரிப்பு சட்ட சிக்கல்களுக்கும், வர்த்தக ரீதியாக அமெரிக்கா, ரஸ்யா, மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அரசியலாக்கப் பட்டுள்ளது.

பால் இயற்பியல், வேதியற் பண்புகள்

பாலின் இயற்பியற் பண்புகள்

நிலை

பாலின் இயற்பியற் பண்பு நிலை அதன் அடர்த்தி மற்றும் எடையைப் பொருத்து திரவ கூழ்ம நிலை ஆகும்.

அமில, கார நிலை

காரகாடித்தன்மைச் சுட்டெண் (அ) pH - 6.4 - 6.8 (மாற்றத்திற்குரியது)

பாலின் வேதிய உட்பொருட்கள்

Ch. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[10][11] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[12][13] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[13]

கொழுப்புகள்

பாலில் உள்ள கொழுப்புகள் கொழுப்புப்படலம் சூழப்பட்ட முட்டை போன்ற அமைப்புகளால் ஆனது ஆகும். உட்பகுதி ட்ரைக்லிசரல்ஸாலும், வெளிப்படலம் புரதங்களுடன் கூடிய பாஸ்போலிபிடுகளாளேயும் உருவாக்கப்பட்டது ஆகும். கொழுப்பைக் கரைக்கக் கூடிய உயிர்ச்சத்துக்களான ஏ, டி, இ, கே ஆகியவை லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய அமிலங்களுடன் சேர்ந்து பாலின் கொழுப்பில் காணப்படுகின்றது.

புரதம்

ஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரதவகை கேசின் எனப்படும்.

உப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள்

பாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன.

கார்போஹைட்ரேட்டுகள்

பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்டாஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன. இதில் லாக்டோஸ் பாலிற்கு இனிப்பு சுவையினைத் தருகின்றது.

இவை அனைத்தும் தவிர கறக்கப்பட்ட பாலில் வெள்ளை இரத்த அணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன.

பால் பதனிடல்

பால் உற்பத்திப் பொருட்கள்

பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது. பால் உற்பத்திப் பொருட்களாவன:

பாலின் பயன்கள்

 • பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
 • பால் சரும பளபளப்பைக் கொடுக்கின்றது.
 • அதிகப்படியான கால்சிய சத்தினைக் கொண்டுள்ளதால் எலும்பினை வலுவுறச்செய்கின்றது.
 • இருதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை பால் குறைக்கின்றது.
 • உடல் எடையைக் குறைப்பதற்கும் பால் பயன்படுகின்றது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

 1. "பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம்: ஜேட்லி". தி இந்து. பார்த்த நாள் 30 மே 2017.
 2. International dairy product prices are turning down: how far, how fast?, FAO Food outlook No.1, June 2006. www.fao.org. Retrieved on 21 July 2009.
 3. Dairy – World Markets and Trade (see Milk tables). USDA
 4. Schultz, Madeline (April 2012) fluid milk profile. Iowa State University
 5. "Milk, whole fresh cow producers". UN Food & Agriculture Organization. மூல முகவரியிலிருந்து July 13, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 22, 2016.
 6. "Milk, whole fresh sheep producers". UN Food & Agriculture Organization. மூல முகவரியிலிருந்து July 13, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 22, 2016.
 7. "Milk, whole fresh goat producers". UN Food & Agriculture Organization. மூல முகவரியிலிருந்து July 13, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 22, 2016.
 8. "Milk, whole fresh buffalo producers". UN Food & Agriculture Organization. மூல முகவரியிலிருந்து July 13, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 22, 2016.
 9. http://food.ndtv.com/food-drinks/a1-versus-a2-milk-does-it-matter-1414225
 10. "National Nutrient Database for Standard Reference Release 28". United States Department of Agriculture: Agricultural Research Service.
 11. "Nutrition facts, calories in food, labels, nutritional information and analysis".
 12. "USDA Table of Nutrient Retention Factors, Release 6". USDA. (Dec 2007).
 13. 13.0 13.1 "Nutritional Effects of Food Processing".

வெளியிணைப்புகள்

இவற்றையும் காணவும்

பாலாடை (பாலேடு)

பாலாடை அல்லது பாலேடு என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள். பாலாடை பாலில் இருந்து பிரித்தேடுக்கப்படுகின்றது. பாலாடை பொடி ஆகவும் ஆக்கப்பட்டு விற்கப்படுகின்றது. இது தொழில்லகாத்தில் விறைவேகச் சுழற்சி இயந்திரம் முலம் பாலாடை பால்லில் இருந்து பிரித்தேடுக்கப்படுகின்றது.

பாலாடை பசுவின் முலம் நமக்கு கிடைக்கின்றது.

மினாஸ் ஜெரைசு

மினாஸ் ஜெரைஸ் (Minas Gerais, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈminɐz ʒeˈɾajs]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். மக்கட்தொகைப்படி நாட்டின் இரண்டாவது மாநிலமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவதாகவும் பரப்பளவில் நான்காவதாகவும் விளங்குகிறது. இதன் தலைநகரமும் பெரிய நகரமுமான பெலோ அரிசாஞ்ச் இலத்தீன் அமெரிக்காவிலேயே முதன்மையான ஊரக மற்றும் நிதிய மையமாக விளங்குகிறது. மேலும் இந்நகரம் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ, சவ்வாதோர், பிரசிலியா மற்றும் போர்த்தலேசாவை அடுத்து ஆறாவது மிகப்பெரிய ஊரககுடியிருப்புத் தொகுதியாக உள்ளது. 5,500,000 மக்கள் வாழும் பெருநகர் பகுதி சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ நகரங்களை அடுத்து மூன்றாவதாக உள்ளது. பெலோ அரிசாஞ்ச்சில் பிறந்த பிரேசிலின் தற்போதைய தலைவர் டில்மா ரூசெஃப் உட்பட பிரேசிலின் பெரும்பாலான குடியரசுத் தலைவர்கள் இந்த மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.

586,528 சதுர கிலோமீட்டர்கள் (226,460 sq mi) பரப்பளவுள்ள இந்த மாநிலம் பிரேசிலின் நான்காவது பெரிய மாநிலபாக உள்ளது. காப்பி மற்றும் பால் (பானம்) தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் மரபார்ந்த கட்டிடக்கலை மற்றும் குடியேற்றவாத கலைகளின் உறைவிடமான பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.

மெக்டொனால்ட்சு

மக்டொனால்ட்சு(McDonalds) (தமிழக வழக்கு: மெக் டொனால்ட்சு) ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.

மக்டொனால்ட்சு நிறுவனம் அமெரிக்க வாழ்வுமுறைக்கும் அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்டு மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்சு ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர். மக்டொனால்ட்சு போன்ற அதிவேகஉணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை

விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

இது ஒரு விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முக்கிய விவசாயப் பொருட்கள் உணவு, இழை, எரிமம், மூலப் பொருள் என குழுப்படுத்தலாம்.

100 கிராம் (சமைக்காத) பொது உணவில் %DV ஊட்டச்சத்துப் பெறுமானம்
புரதம் உயிர்ச்சத்து கனிமம்
உணவு DV Q A B1 B2 B3 B5 B6 B9 B12 Ch. C D E K Ca Fe Mg P K Na Zn Cu Mn Se
சமைத்தலால் இழப்பு % 10 30 20 25 25 35 0 0 30 10 15 20 10 20 5 10 25
மக்காச்சோளம் 20 55 1 13 4 16 4 19 19 0 0 0 0 0 1 1 11 31 34 15 1 20 10 42 0
நெல் 14 71 0 12 3 11 20 5 2 0 0 0 0 0 0 1 9 6 7 2 0 8 9 49 22
கோதுமை 27 51 0 28 7 34 19 21 11 0 0 0 0 0 0 3 20 36 51 12 0 28 28 151 128
சோயா அவரை 73 132 0 58 51 8 8 19 94 0 24 10 0 4 59 28 87 70 70 51 0 33 83 126 25
துவரை 43 91 1 43 11 15 13 13 114 0 0 0 0 0 0 13 29 46 37 40 1 18 53 90 12
உருளைக் கிழங்கு 4 112 0 5 2 5 3 15 4 0 0 33 0 0 2 1 4 6 6 12 0 2 5 8 0
வற்றாளை 3 82 284 5 4 3 8 10 3 0 0 4 0 1 2 3 3 6 5 10 2 2 8 13 1
பசளி 6 119 188 5 11 4 1 10 49 0 4.5 47 0 10 604 10 15 20 5 16 3 4 6 45 1
சதகுப்பி 7 32 154 4 17 8 4 9 38 0 0 142 0 0 0 21 37 14 7 21 3 6 7 63 0
கேரட் 2 334 4 3 5 3 7 5 0 0 10 0 3 16 3 2 3 4 9 3 2 2 7 0
கொய்யாப் பழம் 5 24 12 4 2 5 5 6 12 0 0 381 0 4 3 2 1 5 4 12 0 2 11 8 1
பப்பாளி 1 7 22 2 2 2 2 1 10 0 0 103 0 4 3 2 1 2 1 7 0 0 1 1 1
பூசணி 2 56 184 3 6 3 3 3 4 0 0 15 0 5 1 2 4 3 4 10 0 2 6 6 0
சூரியகாந்தி எண்ணை 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 205 7 0 0 0 0 0 0 0 0 0 0
முட்டை 25 136 10 5 28 0 14 7 12 22 45 0 9 5 0 5 10 3 19 4 6 7 5 2 45
பால் 6 138 2 3 11 1 4 2 1 7 2.6 0 0 0 0 11 0 2 9 4 2 3 1 0 5
முதலாம் வகை மிகையுணர்வூக்கம்/ஒவ்வாமை/மரபு வழி ஒவ்வாமை
(எதிர்ப்பான்-இ)
இரண்டாம் வகை மிகையுணர்வூக்கம்/
எதிர்ப்பான்-சார் உயிரணு-செயலூக்கப்பட்ட நச்சுத்தன்மை
  • எதிர்ப்பான்-எம்
  • எதிர்ப்பான்-ஜி
மூன்றாம் வகை மிகையுணர்வூக்கம்
[நோயெதிர்ப்பித் தொகுதி (Immune complex)]
நான்காம் வகை மிகையுணர்வூக்கம்/செல் சார்ந்தவை
(டி செல்கள்)
தெரியாதது/
பல்வகை
தானியங்கள்
பழம்
காய்கறிகள்
மற்றயவை
தொடர்பானவை
பால்
விலங்குகளில் இருந்து
தாவரங்களில் இருந்து
வகைகள்
பால் பொருட்கள்
தலைப்புகள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.