பண்டைய அண்மை கிழக்கு


பண்டைய அண்மை கிழக்கு (ancient Near East), பண்டைய நாகரீகங்களின் தாய் வீடுகளில் ஒன்றாகும். பண்டைய அன்மைக் கிழக்குப் பகுதி, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக், தென்கிழக்கு துருக்கி, தென்மேற்கு ஈரான் மற்றும் வடகிழக்கு சிரியா பகுதிகளைக் கொண்டது.[1] அனதோலியா, பண்டைய எகிப்திய நாகரீகம், பண்டைய ஈரானிய, ஈலாம், மீடியா,[2]மற்றும் லெவண்ட் (தற்கால சிரியா), லெபனான், பாலஸ்தீனம், இசுரேல், ஜோர்டான் மற்றும் சைப்பிரசு நாகரீகங்கள், பண்டைய அன்மைக் கிழக்கில் கிமு 2600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாகரீகங்கள் ஆகும்.

வெண்கலக் காலத்தில் கிமு 4,000ம் ஆண்டில் சுமேரியா நாகரீகத்தின் தோற்றத்திற்குப் பின் பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளில் நாகரீகங்கள் பரவத் துவங்கியது.

அண்மைக் கிழக்குப் பகுதி உலக நாகரீகங்களின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [3] இப்பகுதிகளில் முதன்முதலாக வேளாண்மை செய்யப்பட்டது. புதிதாக நகரங்கள் நிறுவப்பட்டது. மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட நகர இராச்சியங்கள், பேரரசுகள், சமயங்கள், எழுத்து முறைகள், போர் ஆயுதங்கள், போர் முறைகள், சமூக நீதிச் சட்டங்கள், அறிவியல், வானவியல், சோதிடம், கணக்கு, வண்டிச் சக்கரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாகரீக காலத்தில் அண்மைக் கிழக்கில் பெரிய அளவில் பேரரசுகள் தோன்றியது.

Ancient Orient
பண்டைய அண்மைக் கிழக்கின் வரைபடம்

அண்மைக் கிழக்கின் காலக் கணிப்புகள்

செப்புக் காலம் செப்புக் காலம்
(கிமு 4500 - 3300)
முந்தைய செப்புக் காலம் கிமு 4500 - 4000 மெசொப்பொத்தேமியாவில் உபைதுகள் காலம்
பிந்தை செப்புக் காலம் கிமு 4000 - 3300 மெசொப்பொத்தேமியாவின் சுமேரியர்களின் உரூக் காலம், ஜெர்செக், பண்டைய எகிப்து, ஆதி எலாமைட்டு
வெண்கலக் காலம்
(கிமு 3300 - 1200)
ஆரம்ப வெண்கலக் காலம்
(கிமு 3300 - 2000)
முதலாம் வெண்கலக் காலம் கிமு 3300 - 3000 பண்டைய எகிப்து முதல் பண்டைய எகிப்திய வம்ச காலம் மற்றும் பீனிசியர்கள் குடியிருப்புகள் வரை
இரண்டாம் ஆரம்ப வெண்கலக் காலம் கிமு 3000 - 2700 சுமேரியாவின் துவக்க கால வம்ச மன்னர்கள் ஆட்சி முதல்
மூன்றாம் ஆரம்ப வெண்கலக் கிமு 2700 - 2200 பழைய எகிப்து இராச்சியம், அக்காடியப் பேரரசு, பண்டைய அசிரியா, ஈலாம்#பழைய எலாமைட்டு காலம், அக்காடிய அரசுகள்
நான்காம் வெண்கலக் காலம் கிமு 2200 - 2100 எகிப்தின் முதல் இடைநிலை காலம்
மத்திய வெண்கலக் காலம்
(கிமு 2000 - 1550)
முதலாம் மத்திய வெண்கலக் காலம் கிமு 2100 - 2000 மெசொப்பொத்தேமியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தின் ஆட்சி,
இரண்டாம் (`ஏ`) மத்திய வெண்கலக் காலம் கிமு 2000 - 1750 மினோவான் நாகரீகம், துவக்க கால பாபிலோனிய, எகிப்தின் மத்தியகால இராச்சியம்
இரண்டாம் (`பி`) மத்திய வெண்கலக் காலம் கிமு 1750 - 1650 எகிப்தின் இரண்டாம் இடைநிலை காலம்
இரண்டாம் (`சி`) மத்திய வெண்கலக் காலம் கிமு 1650 - 1550 இட்டைட்டுகளின் பழைய இராச்சியம்
பிந்தைய வெண்கலக் காலம்
(கிமு 1550 - 1200 )
முதலாம் பிந்தைய வெண்கலக் காலம் கிமு 1550 - 1400 இட்டைட்டுகளின் மத்திய கால இராச்சியம், ஹையசா-அஸ்ஸி, ஈலாம், மத்தியகால ஈலமைட்டுகள் காலம், புது எகிப்து இராச்சியம்
பிந்தைய வெண்கலக் காலம் II A கிமு 1400 - 1300 இட்டைட்டுகளின் புதிய இராச்சியம், மித்தான்னி, அயசா-அஸ்ஸி, உகரித்து, மைசினீயன் கிரேக்கம்
பிந்தைய வெண்கலக் காலம் II B கிமு 1300 - 1200 மத்திய அசிரியப் பேரரசு, பீனிசியர்களின் நாகரீகத்தின் உச்ச நிலை துவக்கம்
இரும்புக் காலம்
(கிமு 1200 - 539)
முதலாம் இரும்புக் காலம்
(கிமு 1200 - 1000)
முதலாம் இரும்புக் காலம் I A கிமு 1200 - 1150 எழாம் டிராய், வெண்கலக் காலம் உருக்குலைதல், கடலோடிகள்
இரும்புக் காலம் I B கிமு 1150 - 1000 புது இட்டைட்டு அரசுகள், [[ஈலாம்#புது ஈலாமைட்டுக் காலம்#அரமேனிய அரசுகள்
இரும்புக் காலம் II
(கிமு 1000 - 539)
இரும்புக் காலம் II A கிமு 1000 - 900 இருண்ட கிரேக்க காலங்கள், ஐக்கிய இசுரேல் இராச்சியம்
இரும்புக் காலம் II B கிமு 900 - 700 சமேரியாவின் இஸ்ரேல் இராச்சியம், உரார்த்து, புது அசிரியப் பேரரசு, யூத அரசு, கிரேக்க

கார்தேஜ்ஜியர்களின் முதல் குடியிருப்புகள

இரும்புக் காலம் II கிமு 700 - 539 புது பாபிலோனியப் பேரரசு, மீடியாப் பேரரசு, புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சி, பீனிசியர்களின் எழுச்சி, அகாமனிசியப் பேரரசின் எழுச்சி,
பாரம்பரியப் பழங்காலம்
(post-ANE)
(கிமு 539 - கிபி 634 )
அகாமனிசியப் பேரரசு கிமு 539 – கிமு பாரசீக அகாமனிசியப் பேரரசு
கிமு 330 - கிமு 31 மாசிடோனியப பேரரசு, ஹெலனிய காலம், செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, தாலமைக் பேரரசு, பெர்காமோன் இராச்சியம்
ரோம-பாரசீகப் போர்கள் கிமு 92 – கிபி 629 கிபி உரோமைப் பேரரசு, சசானியப் பேரரசு பைசாந்தியப் பேரரசு

வரலாறு

செப்புக் காலம்

துவக்க கால மெசபடோமியா

பண்டைய அன்மைக் கிழக்கில், வரலாற்றிற்கு முந்திய செப்புக் காலத்தின் சுமேரியர்களின் மெசொப்பொத்தேமியா, துவக்க கால வெண்கலக் காலம் (c. கிமு 4000 - கிமு 3100) வரை நீடித்தது. பின்னர் உபைத்துகளின் காலம் துவங்கியது. [4] [5]சுமேரியர்களின் பிற்காலத்தில், கிமு 34 - 32 நூற்றாண்டுகளில், துவக்க கால வெண்கலக் காலத்தில், ஆப்பெழுத்துகளில் எழுதத் துவங்கினர.

வெண்கலக் காலம்

துவக்க கால வெண்கலக் காலம்

உலகின் முதல் நாகரீகங்களில் ஒன்றான சுமேரியர்களின் நாகரீகம், கீழ் மெசொப்பொத்தேமியாவில் தோன் றியது. கிமு 6-வது ஆயிரமாண்டில் பிற்பகுதியில், எரிது பகுதியில் தோன்றிய உபைத்துகளின் காலத்தில், சுமேரியர்களின் அரசு வீழ்ச்சியுற்றது. கிமு மூவாரயிரம் ஆண்டு வரை இருந்த உபைதுகள் காலம், கிமு மூவாயிரத்தின் பிற்பகுதியில் எழுச்சி கொண்ட அசிரியர்களாலும் மற்றும் கிமு இரண்டாயிரத்தின் முற்பகுதியில் எழுச்சி கொண்ட பாபிலோனியர்களாலும் வீழ்ச்சியடைந்தது.

உலகின் முதல் பேரரசாக அக்காடியப் பேரரசு, கிமு 24 முதல் கிமு 21 வரை செழித்தோங்கியது. இதன் முக்கிய நகரங்கள் பாபிலோன், லார்சா, எப்லா, டமாஸ்கஸ், அசூர் மற்றும் ஈலாம் முக்கிய நகரஙகள் ஆகும்.

கிமு 3000 ஆயிரத்தின் நடுவில், செமிடிக் மொழி பேசும் நாடோடி அமோரிட்டு மக்கள், அரேபிய தீபகற்பத்திலிருந்து, யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரையில் குடியேறத் துவங்கினர்.[6]பின்னர் மெசபதோமியா மற்றும் பாபிலோனில் குடியேறினர்.

நடு வெண்கலக் காலம்

 • கிமு 1392 - 934 முடிய ஆட்சி செய்த மத்திய அசிரியப் பேரரசு, எகிப்து இராச்சியத்தை கைப்பற்றி, அண்மைக் கிழக்குப் பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

பிந்தைய வெண்கலக் காலம்

இரும்புக் காலம்

சமயங்கள்

பண்டைய அன்மைக் கிழக்கில் ஓரிறைக் கோட்பாடு கொண்ட யூத சமயமும், காளை மாடு போன்ற பல தெய்வ உருவ வழிபாடுகளும் இருந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

 1. "Daily Life In Ancient Mesopotamia". பார்த்த நாள் 28 February 2015.
 2. "Armenian Highland". பார்த்த நாள் 28 February 2015.
 3. Samuel Noah Kramer, History Begins at Sumer, (tr. Mendelson, F. A., Moscow, 1963).
 4. Sumer and the Sumerians, by Harriet E. W. Crawford, p 69
 5. Sumer and the Sumerians, by Harriet E. W. Crawford, p 75
 6. Amorite Encyclopædia Britannica

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

 • The History of the Ancient Near East – A database of the prehistoric Near East as well as its ancient history up to approximately the destruction of Jerusalem by the Romans ...
 • Vicino Oriente – Vicino Oriente is the journal of the Section Near East of the Department of Historical, Archaeological and Anthropological Sciences of Antiquity of Rome 'La Sapienza' University. The Journal, which is published yearly, deals with Near Eastern History, Archaeology, Epigraphy, extending its view also on the whole Mediterranean with the study of Phoenician and Punic documents. It is accompanied by 'Quaderni di Vicino Oriente', a monograph series.
 • Ancient Near East.net – an information and content portal for the archaeology, ancient history, and culture of the ancient Near East and Egypt
 • Freer Gallery of Art, Smithsonian Institution The Freer Gallery houses a famous collection of ancient Near Eastern artefacts and records, notebooks and photographs of excavations in Samarra (Iraq), Persepolis and Pasargadae (Iran)
 • The Freer Gallery of Art and Arthur M. Sackler Gallery Archives The archives for The Freer Gallery of Art and Arthur M. Sackler Gallery houses the papers of Ernst Herzfeld regarding his many excavations, along with records of other archeological excavations in the ancient Near East.
 • Archaeowiki.org—a wiki for the research and documentation of the ancient Near East and Egypt
 • ETANA – website hosted by a consortium of universities in the interests of providing digitized resources and relevant web links
 • Ancient Near East Photographs This collection, created by Professor Scott Noegel, documents artifacts and archaeological sites of the ancient Near East; from the University of Washington Libraries Digital Image Collection
 • Near East Images A directory of archaeological images of the ancient Near East
 • Bioarchaeology of the Near East An Open Access journal
அசிரியப் பேரரசின் காலக்கோடுகள்

அசிரியப் பேரரசின் காலக்கோடுகள், வடக்கு மெசொப்பொத்தேமியாவில் நிறுவப்பட்ட பண்டைய அசிரியப் பேரரசு கிமு 2500 முதல் 2025 முடிய ஆண்டது. பின்னர் கிமு 1392 – 934 முடிய மத்திய அசிரியப் பேரரசு, சுமேரியா உள்ளிட்ட முழு மெசொப்பொத்தேமியாவை ஆண்டது. கிமு 911 – 609 முடிய பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளை புது அசிரியப் பேரரசு ஆண்டது. முடிவில் அசிரியப் பேரரசு ஈலாமியர்களால் 609-இல் வீழ்த்தப்பட்டது.

அசுன்னா பண்பாடு

அசுன்னா பண்பாடு (Hassuna culture) தற்கால ஈராக் நாட்டின் வடக்கு மெசபடோமியா பகுதியில், புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகும். கிமு 6,000 காலத்திய அசுன்னா பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், கைக்கோடாரிகள், அரிவாள்கள், தானியங்களை அரைக்கும் கற்கள், சமையல் அடுப்புகள், சுடு களிமண் மற்றும் கல் தொட்டிகள், வேளாண்மை பயன்படுத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்குகளின் எலும்புகள் போன்ற தொல்பொருட்கள் வடக்கு மெசபடோமியாவில் அசுன்னா தொல்லியல் மேடு மற்றும் செம்சரா தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யும் போது கிடைத்துள்ளது.

ஆப்பெழுத்து

ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது. ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின.

ஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன.

ஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது.

பட எழுத்து முறையிலிருந்து ஆப்பெழுத்துக்கள் உருவான வளர்ச்சிப் படிகளைக் காட்டும் படம்.

இடைக் கற்காலம்

இடைக் கற்காலம் (Mesolithic) என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமான கட்டத்தைக் குறிக்கிறது.

இக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.

என்லில்

என்லில் (Enlil) பண்டைய சுமேரியாவின் நிப்பூர் போன்ற பண்டைய அண்மை கிழக்கு நகர மக்களால் வழிபட்ட காற்றின் கடவுள் ஆவார். என்லில் கடவுள் காற்று, பூமி மற்றும் சூறாவளிக்கு அதிபதி ஆவார். சுமேரியக் கடவுள்களில், என்லில் கடவுள் தலைமைக் கடவுளாக இருந்தவர். என்லில் கடவுளை அக்காதியர்கள், பாபிலோனியர்கள, அசிரியர்கள், ஹுரியத் மக்கள் வழிபட்டனர். என்லில் கடவுளின் முதன்மை வழிப்பாட்டுத் தலம் நிப்பூரில் இருந்தது. கிமு 24-வது நூற்றாண்டில் கடவுள் என்லில், அனைத்து சுமேரியக் கடவுள்களுக்கு தலைமைக் கடவுளாக வணங்கப்பட்டார். என்லில் கடவுள், வானத்திலிருந்து பூமியை பிரித்தன் மூலம் உலகம் தனியாக இயங்கத் துவங்கியதாக சுமேரியர்கள் கருதினர்

கிமு 1230-இல் ஈலாம் நாட்டினர் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய போது, என்லில் கடவுளின் வழிபாடும், முக்கியத்துவமும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

கானான்

கானான் (Canaan; /ˈkeɪnən/; வடமேற்கு செமிடிக் மொழிகள்: knaʿn; Phoenician: 𐤊𐤍𐤏𐤍; விவிலிய எபிரேயம்: כנען / Knaʿn; [Masoretic]: כְּנָעַן / Kənā‘an) பழங்காலத்தில் இருந்த ஓர் நாடாகும். இது, விவிலியத்தின்படி கடவுள் ஆபிரகாமுக்கும் அவர்தம் மக்கட்கும் உறுதியளித்திருந்த நிலப்பகுதியாகும். பொது ஊழி 2000 முதல் விவிலியம் உருவாகும் வரை இங்கு வாழ்ந்த மக்கள் கானானியர் எனப்பட்டனர். தற்கால இசுரேல், லெபனான் நாடுகளின் பெரும்பகுதியை இந்நிலப்பகுதி உள்ளடக்கியிருந்தது.

கானானியர் எனும் சொல் விலியத்தில் இனத்தைக் குறிக்க அதிமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கில்கமெஷ் காப்பியம்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சாமர்ரா

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.

சுமேரிய கடவுள்கள்

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.

சுமேரிய மொழி

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.

சுமேரியர்களின் மதம்

சுமேரியன் மதம் என்பது பண்டைய சுமர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக இருந்தது. சுமேரியர்கள் தெய்வீகத்தன்மை என்பது அனைத்து பொருட்களிலும் இருப்பதாகவும், அண்ட சக்தியின் மூலம் அதனை பணிவை வெளிப்படுத்துவதன் பெறலாம் என நம்பியிருந்தனர் அவைகளாவன மரணம் மற்றும் தெய்வீக கோபம்.

செமித்திய மொழிகள்

செமிட்டிக் மொழிகள் (Semitic languages) என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் பண்டைய அண்மை கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன. மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிட்டிக் மொழிகள் விளங்குகின்றன.

இம்மொழி கிழக்கு செமிடிக் மொழிகள் மற்றும் மேற்கு செமிடிக் மொழிகள் என இரு வகைப்படும்.

இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும் பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.

டைகிரிசு ஆறு

டைகிரிசு ஆறு (Tigris) பண்டைய நாகரிகப் பகுதியான மெசொப்பொத்தேமியாவை வரையறுக்கும் சிறப்பு வாய்ந்த இரண்டு ஆறுகளில் கிழக்குப் புறமாக உள்ள ஆறு. மற்றது இயூபிரட்டீசு ஆறு ஆகும். தென்கிழக்குத் துருக்கியின் மலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு தெற்கு நோக்கி ஓடி ஈராக்கினூடாகச் செல்கிறது. இவ்வாற்றின் அரபுப் பெயர் திஜ்லா. இராக்கில் இதனைத் திஜ்லா என்றே அழைக்கின்றனர்.

தழும்பழி

தொல்லியலில் தழும்பழி (Acheulean) என்பது கல்லாயுதங்களின் உற்பத்தி முறை சார்ந்த ஒரு வகையைக் குறிக்கும்.இவ்வகைக் கல்லாயுத உற்பத்தி முறையை கீழைப் பழங்கற்கால மக்கள் உபயோகித்த நீள்வட்ட வடிவ அல்லது பேரிக்காய் வடிவம் கொண்ட கோடரிகள் குறிக்கின்றன. முதலில் கீழைப் பழங்கற்கால மக்கள் தழும்புரி என்னும் செப்பனிடப்படாத ஆயுதங்களை உபயோகித்தனர்.

பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை (தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு) அழித்து அவற்றைத் தழும்புகள் இல்லாதவாறு உருவாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.

தழும்பழி ஆயுதங்கள் கீழைப் பழங்கால ஆப்பிரிக்கா, பெரும்பலான மேற்காசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டன. இவை பொதுவாக ஓமோ இரக்டசு இனத்தின் எச்சங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன.

திராய்

திராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தொல்லியல் மேடு

அகழ்வாய்வில் டெல் அல்லது பண்டைய தொல்லியல் மேடு ( tell, or tel) அரபு மொழி: تَل, tall or எபிரேயம்: תל‎ tell), டெல் என்பதற்கு அரபு மொழியில் மலை அல்லது உயரமான மேடு ('hill' or 'mound') எனப்படும். ஒரே நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட கட்டிட அமைப்புகள் பின்னர் சிதிலமடைந்து உயரமான மண் மேடுகள் போன்று காட்சியளிப்பவைகள் தொல்லியல் மேடு எனப்படும்.40 மீட்டர் உயரம் கொண்ட டெல் பராக் தொல்லியல் மேட்டை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக டெல் எனப்படுவது, பண்டைய அண்மை கிழக்கு தொடர்பான அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடுகளை குறிக்கும். டெல் என அழைக்கப்படும் பண்டைய தொல்லியல் மேடுகள் அதிகமாக, மக்கள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை தொடர்ந்து வாழ்ந்து வரும் மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, தெற்கு லெவண்ட், அனதோலியா மற்றும் ஈரான் போன்ற நிலப்பரப்புகளில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்

பண்டைய அண்மைக் கிழக்கின் தற்கால மத்திய கிழக்கு நாடுகளில், கிமு 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பண்டைய நகர அரசுகள் இருந்தன.

இப்பண்டைய நகர அரசுகளின் ஆட்சிகள், கிமு 6ம் நூற்றண்டில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு மற்றும் கிமு நான்காம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்புகளாலும், பின்ன்ர் கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமிய படையெடுப்புகளாலும் முடிவிற்கு வந்தது.

வெண்கலக் காலத்திய பண்டைய அண்மைக் கிழக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரம் 30,000 மக்களுடன் விளங்கியது. மத்திய வெண்கலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரம் 65,000 மக்கள்தொகையுடனும், பாபிலோன் நகரம் 50,000 முதல் 60,000 மக்கள்தொகையுடனும், 20,000 – 30,000 மக்கள்தொகையுடன் இருந்த நினிவே நகரம், கிமு 700ல் (இரும்புக் காலத்தில்) 1 இலட்சம் மக்கள்தொகையுடன் விளங்கியது.

மத்திய அசிரியப் பேரரசு

மத்திய அசிரியப் பேரரசு (Middle Assyrian Empire), பழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை, கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். இப்பேரரசு மித்தான்னிப் பேரரசிலிருந்து தன்னாட்சியுடன் ஆண்டது.

மெசொப்பொத்தேமியா

மெசொப்பொதாமியா (Mesopotamia), தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பகுதியாகும். இன்றைய ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா எனும் சொல், மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், சுற்ற தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.

புவியியல்
வரலாறு
அரசர்கள்
மொழிகள்
மக்கள் / பண்பாடு / கலை / இலக்கியம்
தொல்லியல்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.