தூனிசியா

துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس, தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسيةஅல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.

தூனிசியக் குடியரசு
الجمهورية التونسية
அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா
Flag of தூனிசியா முத்திரை of தூனிசியா
கொடி முத்திரை
குறிக்கோள்: حرية، نظام، عدالة
"சுதந்திரம், ஒழுங்கு, நீதி"
நாட்டுப்பண்: ஹிமத் அல்-ஹிமா
Location of தூனிசியா
தலைநகரம்தூனிஸ்
36°50′N 10°9′E / 36.833°N 10.150°E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் தூனிசியர்
அரசாங்கம் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் ஃபுவாத் முபாதா
 •  பிரதமர் முகமது கனூச்சி
விடுதலை
 •  பிரான்ஸ் இடம் இருந்து மார்ச் 20 1956 
பரப்பு
 •  மொத்தம் 1,63,610 கிமீ2 (92வது)
63,170 சதுர மைல்
 •  நீர் (%) 5.0
மக்கள் தொகை
 •  ஜூலை 2005 கணக்கெடுப்பு 10,102,000 (78வது)
 •  1994 கணக்கெடுப்பு 8,785,711
 •  அடர்த்தி 62/km2 (133வது (2005))
161/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $ 97.74 பில்லியன் (60வது)
 •  தலைவிகிதம் $9,630 (73வது)
ஜினி (2000)39.8
மத்திமம்
மமேசு (2007)Green Arrow Up Darker.svg 0.766
Error: Invalid HDI value · 91வது
நாணயம் தூனிசிய தினார் (TND)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 216
இணையக் குறி .tn

வெளி இணைப்புகள்

அரபு மொழி

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 21 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது.இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.

அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.

ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்

இது மொத்த தேசிய உற்பத்தி ஆள்வீத வருமானத்தின் அடிப்படையில் நிலைபடுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும். இங்கு 2005 ஆம் ஆண்டுக்கான ஆள்வீத வருமான அமெரிக்க டொலரில் தரப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நிதி நிறுவனம் (International Monetary Fund) இல் அங்கத்துவம் பெற்றுள்ள 180 நாடுகளுக்குத் தரப்பட்டுள்ளது.

இருள்நாறி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Jasminum|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி (Jasminum sambac) என விளக்குகிறது.

மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.

”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.

உலக பாரம்பரியக் குழு

உலக பாரம்பரியக் குழு (World Heritage Committee) என்பது உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய மரபொழுங்குகளைச் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு குழுவாகும். 21 நாட்டு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.உலக பாரம்பரிய மரபொழுங்கின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம். ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கி வருகின்றன.. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

கூட்டுசேரா இயக்கம்

கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் 17வது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது.இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.தற்போதைய உறுப்பினர்கள்===

ஆபிரிக்கா

ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்.

சனவரி 11

சனவரி 11 (January 11) கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.

சனவரி 14

சனவரி 14 (January 14) கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன.

சமயம்

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

சூலை 25

சூலை 25 (July 25) கிரிகோரியன் ஆண்டின் 206 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 207 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 159 நாட்கள் உள்ளன.

செப்டம்பர் 9

செப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன் ஆண்டின் 252 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.

தக்காளி

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.

தூதரகங்களின் பட்டியல், ஓமான்

இது தூதரகங்களின் பட்டியல், ஓமான் (honorary consulates தவிர்த்து)

தூதரகங்களின் பட்டியல், பகுரைன்

இது பஹ்ரேய்ன் நாட்டுத் தூதரகங்களின் பட்டியல்.

நவம்பர் 12

நவம்பர் 12 (November 12) கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன.

பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

2010 களின்படி, உலகில் பௌத்தம் 488 மில்லியன், 495 மில்லியன், அல்லது 535 மில்லியன் பேரினால் பின்பற்றப்படுகிறது. இது உலக மொத்த சனத்தொகையில் 7% - 8% ஆகும்.

மக்ரிபு

மாகரெபு (Maghreb, or ;நேரடிப் பொருள்: "பொழுது சாய்தல்"; அரபு மொழி: المغرب العربي al-Maghrib al-ʻArabī, "அராபிய மேற்கு"'; முன்பு பார்பரி கடற்கரை என அறியப்பட்டது), அல்லது பெரும் மாகரெபு (அரபு மொழி: المغرب الكبير al-Maghrib al-Kabīr), பெரும்பான்மையான மேற்கத்திய வடக்கு ஆப்பிரிக்கா அல்லது எகிப்திற்கு மேற்கிலுள்ள வடமேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளைக் குறிக்கும். மரபுப்படியான வரையறை அட்லாசு மலைகளையும் மொரோக்கோ, அல்சீரியா, தூனிசியா, லிபியாவின் கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கியது. 1989இல் அராபிய மாகரெபு ஒன்றியம் உருவானபிறகு தற்போதைய மாகரெபிற்கான வரையறையில் மூரித்தானியாவும் சர்ச்சைக்குரிய (பெரும்பாலும் மொராக்கோவின் கட்டுப்பாட்டிலுள்ள) மேற்கு சகாராவும் உள்ளடங்கி உள்ளன. எசுப்பானியாவில் (711–1492) அல்-அன்டாலுசு காலத்தில் மாகரெபின் குடிகள் "மூர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் எசுப்பானியாவின் இசுலாமியப் பகுதிகள் பொதுவாக மாகரெபில் சேர்க்கப்பட்டன. இதனாலேயே எசுப்பானிய இசுலாமியரை மேற்கத்திய ஆவணங்கள் மூர்கள் எனக் குறிப்பிடுகின்றன.

வரலாற்றில் இந்தப் பகுதியை குறிப்பிடுகையில் மூரித்தானியா, நுமிடியா, புராதன லிபியா, உரோமோனிய ஆபிரிக்கா பகுதிகளை உள்ளடக்கியதாக காட்டுகின்றன. மாக்ரிப் என்ற அராபியச் சொல்லிற்கு "மேற்கு" என்று பொருள்படும். எனவே அல்-மாகரெபு என்பது ஞாயிறு மறையும் மேற்குப் பகுதி எனப்பொருள்படும். இது ஏழாம் நூற்றாண்டில் இசுலாமியர் கைப்பற்றிய பகுதிகளின் மிக மேற்கான பகுதியாக இருந்தது.பெர்பர் மொழியில் இது தமாசுகா எனப்படுகின்றது; இது பெர்பர்களின் நாடு எனப் பொருள்படும். இந்தப் பெயர் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெர்பர் செயற்பாட்டாளர்களால் பரப்பப்பட்டுள்ளது.

தற்போதைய நாடுகள் இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்படுவதற்கு முன்பாக மாகரெபு மிகவும் பரவலாக தெற்கில் அட்லாசு மலைக்கும் நடுநிலக் கடலுக்கும் இடைப்பட்ட சிறு பகுதியைக் குறித்தது. கிழக்கு லிபியாவை உள்ளடக்கியும் தற்கால மூரித்தானாவை விலக்கியும் குறிப்பிடப்பட்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட வட ஆப்பிரிக்காவின் மேற்கு நடுநிலக் கடலின் கடலோரப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அல்சீரியா, மொரக்கோ, துனிசியா பகுதிகளைக் குறிக்க குறிப்பாக பயன்படுத்தப்பட்டது.ஆப்பிரிகக் கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அட்லாசு மலைகளாலும் சகாரா பாலைவனத்தாலும் விலகியிருந்ததால் மாகரெபு மக்கள் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் நடுநிலக் கடல் நாடுகளுடன் வணிக, பண்பாட்டு தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

பெர்பர்களின் நுமிடியா இராச்சியத்திலும் பின்னதாக உரோமைப் பேரரசு காலத்திலும் இப்பகுதி தனித்த அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தது. இடையில் சிறிது காலத்திற்கு செருமானிய வாண்டல்கள் ஆக்கிரமித்தனர்; பின்னர் சிறிது காலத்திற்கு பைசாந்தியப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. இசுலாமிய கலீபகங்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மற்றும் பாத்திம கலீபகங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 8ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பெர்பிய இராச்சியங்கள் ஆண்டு வந்தன. ஓட்டோமான் துருக்கியர்களும் சிறிது காலத்திற்கு இப்பகுதியை ஆண்டுள்ளனர்.

மூரித்தானியா, மொராக்கோ, துனீசியா, அல்சீரியா, மற்றும் லிபியா1989இல் மாகரெபு ஒன்றியத்தை நிறுவின; பொதுச் சந்தையில் கூட்டுறவை வளர்க்கவும் பொருளியல் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இம்முனைவு மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் இதனை முன்மொழிந்த முஅம்மர் அல் கதாஃபி இதனை அரபு வல்லரசாக்க கனவு கண்டார். மொராக்கோவின் வற்புறுத்தலால் மேற்கு சகாரா ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது.மேற்கு சகாரா குறித்து அல்சீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையேயான பிணக்கு வலிதாக மீளெழுந்தபோது இருநாடுகளுக்கும் இடையேயான தீரா எல்லைப் பிரச்சினைகளும் மீண்டும் எழுந்தன. இந்தப் பிணக்கினால் ஒன்றியத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு தற்போது செயலிழந்துள்ளது. இருப்பினும், இப்பகுதியிலுள்ள நிலையற்றத் தன்மையும் வளரும் அண்டைநாட்டு அச்சுறுத்தல்களும் இப்பகுதியில் கூட்டுறவின் இன்றியமையாமையை வலுப்படுத்துகின்றது – அராபிய மாகரெபு ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் மே 2015இல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கைக்கான தேவையை வலியுறுத்தி உள்ளனர்.

மார்ச் 18

மார்ச் 18 (March 18) கிரிகோரியன் ஆண்டின் 77 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 288 நாட்கள் உள்ளன.

மார்ச் 20

மார்ச் 20 (March 20) கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி டொலர் கண்கீடு கொள்வனவு ஆற்றல் சமநிலை மூலம் பெறப்பட்டதாகும். இதன் மூலங்கள் அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி, த வேர்ல்டு ஃபக்ட்புக் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.

இறைமையுள்ள
நாடுகள்
நிலப்பகுதிகளும்
சார்பு மண்டலங்களும்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.