தாவீது அரசர்

தாவீது (எபிரேய மொழி: דָּוִד, דָּוִיד ; Dawid; Strong's Daveed; beloved; அரபு மொழி: داوود or داود[note A] Dāwūd) என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தார்.

அரசர் தாவீது
ஒன்றிணைந்த இஸ்ரயேலின் அரசர்
David SM Maggiore
ஆட்சியூதா மீது c. கி.மு.1010–1003; யூதா & இஸ்ரேல் மீது c. கி.மு.1003–970
முன்னிருந்தவர்சவுல்
சாலமோன்
மரபுதாவீது குலம்
தந்தைஈசாய்
தாய்நிட்சவெத்
பிறப்புc. கி.மு.1040
பெத்லகேம்
இறப்புc. கி.மு.970
எருசலேம்

விவிலியத்தில்

Samuel e david
தாவீதின் திருப்பொழிவு

விவிலியத்தில் தாவீதைப் பற்றி அதிகமான தகவல்கள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன.

கடவுளின் தேர்வு

இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர், அவர் தேவனுடைய ஆலோசனையை பின்பற்றாமல் தேவனை மறந்ததால் ஆண்டவர் அவரை புறக்கணித்தார்: "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை." (1 சாமுவேல் 15:11) என்று தேவன் கூறினார்.

"உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? என்று சாமுவேல் கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாய்ன் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் செய் என்று ஈசாய்ன் வீட்டிற்கு அனுப்புகின்றார். அப்பொழுது ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். "இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல். அங்கு ஈசயின் இளைய மகன் அதுவரையில் அழைககப்படவில்லை. தாவிதின் தந்தை ஈசாய்ன் பார்வையில், தாவிது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவிது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் "தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். (1 சாமுவேல் 16:10-13) [1]

சவுலின் அரசவையில் தாவீது

ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி, சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார்; தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். (1 சாமுவேல் 16:14,23)

தாவீதும் கோலியாத்தும்

David-goliath28
தாவீது கோலியாத்தின் தலையை கொய்தல்

அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான். தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார். தாவீது தம் கோலைப் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் கையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய் நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர் என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறி நின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார். (1 சாமுவேல் 17:4-51)

தாவீதும் யோனத்தானும்

தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை. பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவிதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார். தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர். (1 சாமுவேல் 18:1-4)

தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையான இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள். நீ வெளியில் இருக்கம் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்கைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் எனறார். (1 சாமுவேல் 19:1-3)

அரசர் சவுலும் தாவீதும்

மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார். அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார். (1 சாமுவேல் 19:8-10)

சிறிது காலத்திற்கு பின் சவுலைக் கொல்ல தாவீதுக்கு வாய்ப்பு கிடைத்தும், அவர் அவ்வாறு செய்யவில்லை; அதனால் இருவரும் சமாதானம் அடைந்தனர். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்! என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார். (1 சாமுவேல் 26:25)

இஸ்ரயேல் அரசர் தாவீது

பெலிஸ்தியரோடு நடைபெற்ற போரில் சவுலும் யோனத்தானும் இற்ந்ததும், தாவீது யூதாவின் அரசர் ஆனார். அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து போர்களிலும் தாவீது வெற்றி பெற்று ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசை உருவாக்கி, எருசலேமை அதன் தலைநகர் ஆக்கினார். தாவீது பாவங்களுக்காக இறைவாக்கினர் நாத்தான் அவரைக் கண்டித்தபோது, தாவீது மனம் வருந்தி தவம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டினார். திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவர் மகன் அப்சலோம் இவருக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்டார். தாவீது முதுமை அடைந்த வேளையில், மகன் சாலமோனைத் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். தாவீது இறந்ததும் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

இசைவல்லுநர் தாவீது

David Playing the Harp 1670 Jan de Bray
தாவீது யாழ் மீட்டுதல்

விவிலியத்தின் பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.[2] திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகந்தார். இவர், இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார்.

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தாவீது பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

திருப்பாடல்கள் 34:6-11

ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் ஆண்டவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப்பாடியது:

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.

திருப்பாடல்கள் 18:1-3

தாவீது ஆண்டவரில் மகிழ்ந்து பாடிய புகழ்ப்பாடல்:

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.

திருப்பாடல்கள் 40:1-3

KDP IMG 4885
தாவீது அரசரின் அரண்மனை மீதங்கள். (அகழ்வாய்வு சான்று)

தாவீதின் வரலாற்றுத்தன்மை

அகழ்வாய்வு சான்றுகள்:

அர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு.850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க தாவீதின் இல்லம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கி.மு.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[3]

விவிலிய பதிவுகள்:

விவிலியத்தின் பல நூல்கள் தாவீதைப் பற்றி பேசுகின்றன. சிறப்பாக பழைய ஏற்பாட்டின் 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 அரசர்கள், 1 குறிப்பேடு, 2 குறிப்பேடு நூல்கள், புதிய ஏற்பாட்டின் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் ஆகியவை தாவீதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. BibleGateway.com: Search for a Bible passage in over 35 languages and 50 versions
  2. 2 சாமுவேல் 23:1
  3. Finkelstein, Israel; Neil Asher SilbermanDavid and Solomon: In Search of the Bible's Sacred Kings and the Roots of the Western Tradition Simon & Schuster Ltd (16 October 2006) ISBN 978-0743243629 p20
  • Kirsch, Jonathan (2000) King David: the real life of the man who ruled Israel. Ballantine. ISBN 0-345-43275-4.
  • See also the entry "David" in Easton's Bible Dictionary.
  • Dever, William G. (2001) What did the Bible writers know and when did they know it? William B. Eerdmans Publ. Co., Cambridge UK.

மேலும் வாசிக்க

  • For a more complete summary of all the episodes in the Saul/David story in Samuel (but excluding Chronicles), see synopsis

வெளி இணைப்புகள்

2 குறிப்பேடு

2 குறிப்பேடு (2 Chronicles) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் முன்னே அமைந்துள்ள 1 குறிப்பேடு என்னும் நூல் தாவீது அரசர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறுகிறது; எருசலேமில் கோவில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாவீது அரசரே செய்தார் என்று விளக்குகிறது.

2 சாமுவேல்

2 சாமுவேல் (2 Samuel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதற்கு முன்னால் அமைந்த 1 சாமுவேல் இந்நூல் கூறும் வரலாற்றிற்கு முந்திய காலக் கட்டத்தை விரித்துரைக்கிறது.

இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)

நீதித் தலைவர்கள் நூலின்படி சவுலின் ஒன்றிணைந்த முடியாட்சிக்கு முன்பு இசுரயேலர் கோத்திரங்கள் நீதித் தலைவர்கள் என்பவர்களின் கீழ் கூட்டுக் குழுவாக வாழ்ந்தனர். ஆயினும் நீதித் தலைவர் அபிமெலேக் முதலாவது இசுரேலிய அரசராக அறிவிக்கப்பட இருந்தார். ஆகவே அவர் தூபால் போரில் கொல்லப்படும் வரை இசுரவேலை நீதி செய்து ஆண்டார். ஏறக்குறைய கி.மு. 1020 இல் வெளியாரின் பாரிய அச்சுருத்தலால் இசுரயேலர் கோத்திரங்கள் ஒன்றிணைந்த முடியாட்சியை உருவாக்க ஐக்கியப்பட்டனர். சாமுவேல் பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்த சவுலை கிட்டத்தட்ட கி.மு. 1026 இல் முதலாவது இசுரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தார். ஆனால் தாவீது கிட்டத்தட்ட கி.மு. 1009–1000 இல் பலமான ஒன்றிணைந்த இசுரயேலிய முடியாட்சியை உருவாக்கினார்.

தாவீது அரசர் கி.மு. 1006 இல் நாட்டின் தலைநகராக எருசலேமை ஏற்படுத்தினார். இதற்கு முன் எபிரோன் தாவீதிற்குக் கீழ்ப்பட்ட யூத மற்றும் பெஞ்சமினின் தலைநகராகவும், கிப்பா சவுலுக்குக் கீழ்ப்பட்ட ஐக்கிய முடியாட்சி தலைநகராகவும் இருந்தது.

கியார்கியோன்

கியார்கியோன் Giorgione)(1477–1510)ஓர் உயர் மறுமலர்ச்சி வகை சார்ந்த வெனிஸ் ஓவியர். இவரது படைப்புகள் மனிதனையும் இயற்கையையும் இணைக்கும் வகைப்பட்டது ஆகும் . பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கியோவன்னி பெல்லினி என்னும் பிரபல ஓவியரின் ஓவியங்களின் மீது கொண்ட பற்றே இவரை ஓவியராக்கியது எனலாம்.

சவுல்

சவுல் (Saul; ((lang-he|שָׁאוּל}}; அரபு மொழி: طالوت; கிரேக்க மொழி: Σαούλ; இலத்தீன்: Saul) (ஏறக்குறைய கி.மு 1079 – 1007) என்பவர் ஒன்றிணைந்த இசுரவேல் அரசின் முதலாவது அரசன் ஆவார். இவர் இறைவாக்கினர் சாமுவேலினால் அரசனாக நியமிக்கப்பட்டு, கீபாவிலிருந்து அரசாட்சி செய்தார். கில்போ மலையில் நடைபெற்ற போரில் பிலிஸ்தியர்களிடம் பிடிபடுவதைத் தவிர்க்க வாள் மீது வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டார். இப்போரில் அவருடைய மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர். இவரைத் தொடர்ந்து அவரின் மகன் இசபோத் மற்றும் அவருடைய மருமகன் தாவீது ஆகியோர் ஆட்சி செய்தனர். சவுலின் வாழ்வு, ஆட்சி பற்றிய விபரங்கள் சாமுவேல் நூலில் காணப்படுகின்றது.

சாலமோனின் கோவில்

சாலமோனின் கோவில் (Temple of Solomon) என்பது பண்டைய எருசலேம் நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் இதுவே என்பதால், இக்கோவிலுக்கு "முதல் கோவில்" (First Temple) என்னும் பெயரும் உண்டு.

பழைய ஏற்பாட்டின்படி, இக்கோவில் இசுரயேலின் மன்னராக ஆட்சிசெய்த சாலமோன் காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.ஒருவேளை, இசுரயேலர் எருசலேமைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.

தந்தையாம் கடவுள்

தந்தையாம் கடவுள் (God the Father) என்னும் பட்டம், ஒரு கடவுட் கொள்கையை உடைய யூத, கிறித்தவ மதப்பிரிவுகளால் தரப்படும் பட்டங்களுள் ஒன்றாகும். யூத மதத்தினருக்கு கடவுள் படைத்து, காத்து வழிநடத்துபவராயிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவற்றோடு கிறித்தவத்தில் திரித்துவக் கோட்பாட்டினை எடுத்தியம்பும் விதமாகவும் கடவுளுக்கு இப் பெயர் அமைந்துள்ளது.

தாவீதின் கல்லறை

தாவீது அரசர் கல்லறை அல்லது தாவீதின் கல்லறை (King David's Tomb; எபிரேயம்: קבר דוד המלך‎) என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி இசுரயேல் அரசரான தாவீது அரசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது எருசலேமின் சீயோன் மலையில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலைப் பகுதியி உள்ள கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும், கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை" என அடையாளங் காணப்பட்டது. இக்கட்டடம் தற்போது "புலம்பெயர் யெசிவா"வின் பகுதியாகவுள்ளது.

தாவீதின் நகர்

தாவீதின் நகர் (City of David, எபிரேயம்: עיר דוד‎, அரபு மொழி: مدينة داوود) என்பது எருசலேம் பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும். இது கோவில் மலையிலிருந்து தெற்கே செல்லும் குறுகிய நிலக்கூம்பு ஆகும். இது வெண்கல யுகத்தில் சுவர் கொண்ட நகராகவும், பாரம்பரியத்தின்படி தாவீது அரசர் இங்கு தன் அரண்மனையினை கட்டி தன் தலைநகரை நிறுவிய இடமாகவும் உள்ளது. தாவீதின் நகர் இயற்கையாகவே மேற்கில் தைரோபன் பள்ளத்தாக்கு, தெற்கில் கின்னம் பள்ளத்தாக்கு, கிழக்கில் கிதரோன் பள்ளத்தாக்கு மற்றும் வழுக்கும் பள்ளத்தாக்கினால் பாதுகாப்பப்பட்டது.

புதிய ஏற்பாட்டு இயேசு வரலாறு

புதிய ஏற்பாட்டு இயேசு வரலாறு (Life of Jesus in the New Testament) என்ற தலைப்பில், விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி நமக்குத் தரப்படும் தகவல் அடிப்படையில் இயேசுவின் வரலாற்றை எடுத்துரைக்கும் முயற்சி குறிக்கப்படுகிறது.

இந்த நற்செய்தி நூல்களே இயேசுவின் வரலாற்றுக்கு முதன்மை ஆதாரங்கள்.ஆயினும், புதிய ஏற்பாட்டின் பிற நூல்கள் சிலவும் இயேசுவைப் பற்றிய சில தகவல்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நற்செய்தி நூல்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட புனித பவுலின் திருமுகங்கள் இயேசுவின் இறுதி இராவுணவு போன்ற நிகழ்ச்சிகள் பற்றிப் பேசுகின்றன. திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் இயேசுவின் விண்ணேற்றம் பற்றிக் கூறப்படும் செய்திகள், அப்பொருள் பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைவிட அதிக அளவில் உள்ளன. (திருத்தூதர் பணிகள் 1:1-1)

பெலிஸ்த்திய மொழி

பெலிஸ்திய மொழி அல்லது பிலிஸ்திய மொழி முன்னாள் கானான் நாட்டின் தென்மேற்கு கரையோரத்தில் பிலிஸ்தியர்களால் பேசப்பட்ட மொழியாகும். இம்மொழி பற்றிய அறிவு மிக குறுகியதாகும். விவிலியத்தில் ஆசோத் என இம்மொழி குறிக்கப்படுகிறது. மேலும் தாவீது அரசர் சிறுவனாக இருக்கும் போது, போரில் வெற்றிக் கொண்ட கோலியாத் ஒரு பெலிஸ்தியனாவான்.

பெலிஸ்த்திய மொழியை வேறு மொழிகளுடன் ஒப்பிட போதுமான அளவு ஆதாரங்கள் இல்லை. இம்மொழி கிரேக்க மொழியுடன் தொடர்புடையதாக பெலிஸ்தரின் வரலாற்றை ஆராயுபவர்களின் கருத்தாகும்.

மகனாகிய கடவுள்

மகனாகிய கடவுள் என்னும் பட்டம், இயேசு கிறிஸ்துவுக்கு கிறித்தவ மதப்பிரிவினரால் தரப்படும் அடையாளம் ஆகும். தந்தையாகிய கடவுள் தனது ஒரே மகனை அனுப்பி உலகத்தை பாவங்களில் இருந்து மீட்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் சமய, பாரம்பரிய அடிப்படையில் அமைந்த பட்டியலாகும். இவ்விடங்கள் ஆதாரபூர்வமாக அமையாது, விவிலியம் உள்ளூர் மக்களின் வாய்வழிப் பாரம்பரியம் மூலம் அறியப்பட்டது. லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், ஈராக், ஜோர்தான், ஈரான் ஆகியன அப்புனித இடங்களைப் பாதுகாக்க நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளன. பல இடங்கள் பற்றிய விடங்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லப்பட்டன என்பதற்கு பயணிகளின் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளன.

கத்தோலிக்க புனிதர்கள்
கன்னி மரியா
தேவதூதர்கள்
குலமுதல்வர்கள்
இறைவாக்கினர்கள்
திருத்தூதர்கள்
நற்செய்தியாளர்கள்
சீடர்கள்
மறைசாட்சிகள்
திருத்தந்தையர்கள்
திருச்சபைத்
தந்தையர்கள்
மறைவல்லுநர்கள்
கன்னியர்கள்
எபிரேய விவிலிய இறைவாக்கினர்கள்
முன் குலமுதல்வர்கள் (விவிலியம்)
குலமுதல்வர்களும் குலமுதல்விகளும்
தோராவில் இசுரேலிய இறைவாக்கினர்கள்
நவீம் குறிப்பிடும் இறைவாக்கினர்கள்
பெரிய இறைவாக்கினர்கள்
சிறிய இறைவாக்கினர்கள்
நோவாவியல் இறைவாக்கினர்கள்
ஏனைய இறைவாக்கினர்கள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.