டனாக்

டனாக் (தனாக்) என்பது யூதர்களுக்கு புனித நூலாகிய யூத விவிலியத்தின் தொகுப்பைக் குறிக்கும் பெயர் ஆகும். இது எபிரேயத்தில் תַּנַ"ךְ‎ (Tanakh) என்று எழுதப்படும். அதன் ஒலிப்பு taˈnaχ அல்லது təˈnax என்று வரும் (Tenakh, Tenak, Tanach போன்ற சொல் வடிவங்களும் உண்டு)[1]

டனாக் என்னும் சுருக்கப் பெயர் தோரா (Torah), நவியீம் (Nevi'im), கெதுவிம் (Ketuvim) என்னும் மூன்று எபிரேயச் சொற்களின் முதல் எழுத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைச்சொல் ஆகும் (அதாவது: TaNaKh). இச்சொல் எபிரேய விவிலியத்தின் மூன்று பகுதிகளையும் கீழ்வருமாறு குறித்துநிற்கிறது:

  • தோரா (Torah): இதன் பொருள் "படிப்பினை" என்பதாகும். இதில் விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் அடங்கும். இவற்றை மோசே எழுதினார் என்பது மரபு.[2]
  • நவீம் (Nevi'im): இதன் பொருள் "இறைவாக்கினர் நூல்கள்" என்பதாகும்.[3]
  • கெத்துவிம் (Ketuvim): இதன் பொருள் "எழுத்துப் படைப்புகள்" என்பதாகும்.[4]
Entire Tanakh scroll set
"தனாக்" - எபிரேய விவிலியத்தின் 24 நூல்களையும் உள்ளடக்கிய நூல் சுருள்கள்.

தனாக் நூல்களின் எண்ணிக்கை

யூத மரபுப்படி, தாநாக்கில் அடங்கியுள்ள நூல்கள் 24 ஆகும். அவை பின்வருமாறு:

  • தோரா - ஐந்து நூல்கள்
  • நவீம் - எட்டு நூல்கள்
  • கெத்துவிம் - பதினொரு நூல்கள்.

தோரா நூல் வரிசை

நவீம் நூல் வரிசை

(இப்பன்னிரு சிறு நூல்களும் ஒரே சுருளில் அடங்கியிருந்ததால் ஒரே நூலாக எண்ணப்பட்டன)

கெத்துவிம் நூல் வரிசை

The "Five Megilot" / "Five Scrolls": ஐந்து சுருள்கள்:

பிற கெதுவிம் (எழுத்துப் படைப்புகள்):

உசாத்துணை

  1. தாநாக் - எபிரேய விவிலிய நூல்கள்.
  2. தோரா - விவிலிய நூற்பகுதி
  3. நவியீம் - விவிலிய நூற்பகுதி
  4. கெதுவிம் - விவிலிய நூற்பகுதி

வெளி இணைப்புக்கள்

அரமேயம்

அரமேயம் (Aramaic; אַרָמָיָא Arāmāyā, சீரியா: ܐܪܡܝܐ‎, அரபு மொழி: آرامية) என்பது ஒரு மொழி அல்லது மொழிக்குடும்பம் ஆகும். இது ஆப்பிரிக்க-ஆசிய துணை பிரிவை சேர்ந்த செமித்திய மொழி ஆகும். குறிப்பாக இது கானானிய மொழிகளான எபிரேயம் பொனீசியம் போன்றவை அடங்கிய வடமேற்கு செமித்திய குடும்ப பிரிவாகும் அரமேய எழுத்துமுறை பரலாக பல மொழிகளிலும் எபிரேயம் சிரிக் அரேபிய எழுத்து முறைகளில் எடுத்தாளப்படுகிறது. 3000 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்ட செமித்திய மொழியான அரமேயம் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. மத்திய கிழக்கில் இருந்த செமித்திய மக்களின் பேச்சு மொழியாகவும் அரமேயம் இருந்தது. வரலாற்றுரீதியாக அரமேயம் சிரியாவிலும் புறாத்து ஆற்றின் வடபகுதி பள்ளத்தாக்குகளிலும் இருந்த அரமேய பழங்குடிகளின் மொழி. கிமு 1000 ஆண்டுவாக்கில் அரமேயர்கள் தற்போதய மேற்கு சிரியா பகுதியில் பல அரசுக்களை கொண்டிருந்தனர். புது அசிரியன்கள் பேரரசின் (கிபி 911-615) தலைமையில் அரமேயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெசபடோமியா, சிரியா முழுவதும் வளர்ந்தது. அரமேயத்தின் புகழ் அதிகளவில் இருந்த போது இது தற்கால ஈராக், சிரியா, லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், சோர்டான், ஈரானின் வடமேற்கு, குவைத், வடக்கு அரேபியா, கிழக்கு அரேபியா, தென்கிழக்கு தென் மத்திய துருக்கியில் அரமேயத்தின் பல வடிவங்கள் பேசப்பட்டது.

தானியே, எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அரமேயம் இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது. புது அரமேயம் இன்று பல மக்கட் கூட்டங்களாற் பேசப்படுகிறது. இவர்கள் சிதறி வாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியாவில் வாழ்ந்த அசிரியர்களால் பேசப்பட்டது. புது அசிரியன் அதிகாரிளின் எழுத்தர்கள் அரமேயத்தை பயன்படுத்தினார்கள், அதனாலும் சில நிருவாக பயன்களாலும் அவர்களுக்கு பின் வந்த புது பாபிலோன்யன்களும் (கிபி 605-539) அகாமனிசியர்களும் (கிபி 539-323) அரமேயத்தை நிருவாகத்திலும் வணிகத்திலும் பயன்படுத்தினார்கள்.தரப்படுத்தப்பட்ட அரேமியத்தை (இது அகாமனிசியர் பேரரசின் அரேமியம் என்றும் அழைக்கப்படுகிறது) அகாமனிசியர்கள் வணிகத்தில் பயன்படுத்தினார்கள். அதிகாரபூர்வமற்றதாக இருந்தாலும் அனைவராலும் அகாமனிசியர் பகுதிகளில் வணிகத்துக்கு பயன்படுத்தும் மொழியாக அரேமியம்

இருந்தது. அரேமயத்தின் நெடிய வரலாறும் பன்முகமும் பரவலாக பேசப்பட்டதும் பல வட்டார வழக்குகள் தோன்ற காரணமாயின. இந்த வட்டார வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன அவற்றில் பல தனி மொழியாக வளர்ச்சி கண்டன. எனவே அரமேயம் என்பது தனி ஒரு மொழியை மட்டும் குறிக்காது. எந்த இடத்தில் எவ்வளவு காலம் பேசப்படுகிறது என்பதை பொருத்து அதில் மாற்றம் இருக்கும். அதிகமான மக்களால் பேசப்படும் கிழக்கு அரமேயமும் மான்டய்க்கம் தற்காலத்தைய வட ஈராக், வட கிழக்கு சிரியா, வடமேற்கு ஈரான், தென் கிழக்கு துருக்கி என்று குர்துகள் வசிக்கும் பகுதியிலேயே பேசப்படுகின்றன. அழியும் தருவாயிலுள்ள வட அரமேயம் சிறு குழுக்கலால் வட சிரியாவிலும் இசுரேலிலும் பேசப்படுகின்றது.

சில அரமேய மொழிகள் சில குழுக்களால் புனிதம் வாய்ந்தவையாக கருதப்பட்டு மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. மான்டய்க் அப்படிப்பட்ட மொழி ஆகும். வாழும் அரேமிய மொழியான இது மாண்டேயிசம் எனப்படும் இனக்குழுவின் மொழியாகவும் உள்ளது. சிரிஅக் என்பது சிரியக்

கிறுத்துவம், கிழக்கு அசிரியன் திருச்சபை, அசிரியன் மரபுவழி திருச்சபை, அசிரியன் பெந்தகொசுத்தே திருச்சபை, பழமையான கிழக்கு அசிரியன்

திருச்சபை, சிரியக் கத்தோலிக்க திருச்சபை, மாரோநைட் திருச்சபை, இந்திய புனிதர் தாமசின் கிறுத்துவ திருச்சபை போன்றவை திகமாக சிரியக் என்ற

அரேமய மொழியை புனிதமாக கருதி மத சடங்குகளில் பயன்படுத்துகின்றன.

தாவீதின் கல்லறை

தாவீது அரசர் கல்லறை அல்லது தாவீதின் கல்லறை (King David's Tomb; எபிரேயம்: קבר דוד המלך‎) என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி இசுரயேல் அரசரான தாவீது அரசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது எருசலேமின் சீயோன் மலையில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலைப் பகுதியி உள்ள கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும், கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை" என அடையாளங் காணப்பட்டது. இக்கட்டடம் தற்போது "புலம்பெயர் யெசிவா"வின் பகுதியாகவுள்ளது.

யூதம்

யூதம் (ஆங்கிலம்: Judaism, எபிரேயம்: יהודה, "யெகுதா" (Yehudah)) என்பது யூத இன மக்களின் சமயம் ஆகும். இது யூதர்களுடைய சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு கடவுட் கொள்கை உடைய பண்டைய ஆபிரகாமிய சமயமான இது தோராவை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையே யூத மதம் என்று யூதர்கள் கருதுகின்றனர். தோரா என்பது டனாக் அல்லது எபிரேய வேதாகம என்ற பெரிய உரையின் ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் அடங்கிய துணை நூல்களும் உள்ளன. உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் பின்பற்றுபவர்களைக் கொண்ட யூத மதம் உலகின் பத்தாவது பெரிய சமயமாக இருக்கிறது.

மரபுவழி யூதமானது, தோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள் தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது, யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.

யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.

யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது. வெண்கலக் காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில், யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது. யூதம், ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்:

* தனக் (Tanakh) புத்தகத்தில், யூதர்கள்.

* எஸ்தர் (Esther), புத்தகத்தில், யூதர்கள்.

* மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் பிள்ளைகள்".

யூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்:

* ஆபிரகாமிய சமயங்கள்* கிறிஸ்தவம்

* இசுலாம்

* பகாய் சமயம்.

யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின. ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:

* மேற்கத்திய நாகரிகம், ஹெலனிஸமாக வளர்ச்சி அடைந்தது

* யூதவியல் வளர்ச்சி

* கிறிஸ்தவத்தின் தாய் மதம்

* கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன.யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர். 2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.43% யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர். 43% யூதர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள், தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.

ராகேலின் கல்லறை

ராகேலின் கல்லறை (Rachel's Tomb, எபிரேயம்: קבר רחל‎, அரபு மொழி: قبر راحيل), என்பது எபிரேய குலத்தலைவியாகிய ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் என போற்றப்படுகிறது. இக்கல்லறை பெத்லகேமின் தென் நுழைவில் அமைந்துள்ளதுடன் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பற்றி யூதர்களின் டனாக், கிறித்தவர்களின் பழைய ஏற்பாடு, முசுலிம்களின் இலக்கியம் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் வடக்கிலுள்ள சில பகுதிகளும் அடக்க இடமாகக் கருதப்பட்டாலும், இவ்விடம் நீண்ட காலமாக அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது.

லெவியாதன்

லெவியாதன் (Leviathan, /lɪˈvaɪ.əθən/) என்பது யூத டனாக், மற்றும் விவிலிய பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் கடல்வாழ் உயிரினம் ஆகும். இச்சொல்லானது இலத்தீன மொழிகளில் உருவத்தில் பெரிய அளவிலான கடல்வாழ் உயிரினங்களையும் பிற உருவத்தில் பெரிய உயிரினங்களையும் குறிப்பிடும் சொல்லாக பயன்படுகின்றது.

இலக்கியத்தில் (காட்டாக, ஏர்மன் மெல்வில்லின் மோபி-டிக்) பெரிய திமிலங்களை குறிக்கிறது. தற்கால எபிரேயத்தில் திமிங்கிலத்திற்கான சொல்லாகவும் இது விளங்குகிறது.

இதன் உருவம் யோபு 41இல் விரிவாக சித்தரிக்கப்படுகின்றது. இதை திருப்பாடல்கள் (நூல்) 104:26 மற்றும் எசாயா 27:1இல் குறிப்புகள் உள்ளன.

விவிலிய, வரலாற்று இசுரயேலர்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.