செப்டம்பர் 13

செப்டம்பர் 13 (September 13) கிரிகோரியன் ஆண்டின் 256 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 257 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 109 நாட்கள் உள்ளன.

<< செப்டம்பர் 2019 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
MMXIX

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. https://www-03.ibm.com/ibm/history/exhibits/650/650_pr2.html

வெளி இணைப்புகள்

மாதங்களும் நாட்களும்
சனவரி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
பெப்ரவரி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 (29)
மார்ச் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ஏப்ரல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
மே 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ஜூன் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
ஜூலை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ஆகஸ்ட் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
செப்டம்பர் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
அக்டோபர் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
நவம்பர் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
டிசம்பர்     1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
தொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0
1897

1897 (MDCCCXCVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.

1910

1910 (MCMX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

1916

1916 (MCMXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.

1949

1949 (MCMXLIX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

1969

1969 (MCMLXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.

1975

1975 (MCMLXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது.

2008

2008 (MMVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.

தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 12 வரை சர்வசித்து ஆண்டும், ஏப்ரல் 13 இலிருந்து சர்வதாரி ஆண்டும் ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2038, ஜனவரி 16 இலிருந்து 2039.

2009

2009 (MMIX) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.

பன்னாட்டு வானியல் ஆண்டு என்று 2009 குறிப்பிட்டுள்ளது.

2010

2010 (MMX) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். சீன நாட்காட்டியில் 2010 பெப்ரவரி 14 முதல் 2011 பிப்ரவரி 2 வரை நீடித்த இவ்வாண்டு தங்கப்புலி ஆண்டு எனப்படுகிறது.

2015

2015 (MMXV) கிரெகோரியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறுபத்து எட்டாவது அமர்வு, இவ்வாண்டைப் பன்னாட்டு ஒளி ஆண்டாகவும், பன்னாட்டு மண்களின் ஆண்டாகவும் நியமித்தது.

குறுங்கோள்

குறுங்கோள் (dwarf planet) என்பது சூரியனின் நேரடிச் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு வான்பொருள் எனவும், அத்துடன் இதன் வடிவம் பொறிமுறை விசைகளால் அல்லாமல் புவியீர்ப்பு விசையினால் கட்டுப்படுத்தப்படும் அளவுக்கு பெரியதுமாகவும், ஆனால் தனது சுற்றுப்பாதைச் சூழலில் உள்ள வான்பொருட்களை நீக்காமலும் இருக்கும் ஒரு வான்பொருள் என பன்னாட்டு வானியல் ஒன்றியத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது.நெப்டியூனைவிட அதிக தூரத்தில் புளூட்டோவை விட பருமனில் கூடிய பல வான்பொருட்கள் சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஏரிசு என்ற பெரும் வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், இவ்வகையான வான்பொருட்களுக்கு குறுங்கோள் என்ற பெயரை 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு வானியல் ஒன்றியம் சூட்டியது இந்தப் புதிய வகைப்பாட்டின் படி, கோள்கள் தமது சுற்றுப்பாதைச் சூழலில் 'அண்மையிலுள்ள பொருட்களை' நீக்கக்கூடியதாகப் பெரிதாக இருக்க வேண்டும். அதேவேளையில் தமது ஈர்ப்பு விசையினால் கவர முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் வான்பொருட்கள் சிறிய சூரியக் குடும்பப் பொருட்கள் எனப்படுகின்றன. குறுங்கோள்கள் இந்த இரு வகைகளுக்கும் இடைப்பட்டவை ஆகும். கோள்கள் என்ற வகைக்குள் இருந்து குறுங்கோள்களை அகற்றும் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்துள்ளது. எரிசு மற்றும் ஏனைய குறுங்கோள்களைக் கண்டுபிடித்த மைக்கேல் பிரவுண் இம்முடிவை வரவேற்றுள்ளார்,, ஆனால் "குறுங்கோள்" என்ற பதத்தை 1990 ஆம் ஆண்டிலேயே கோடிட்டுக் காட்டிய அலன் ஸ்டேர்ன் என்பவர் இம்முடிவை நிராகரித்துள்ளார்.

நமது சூரியக் குடும்பத்தில் தற்போது செரசு, புளூட்டோ, அவுமேயா, மெக்கேமேக், ஏரிசு ஆகிய ஐந்து குறுங்கோள்கள் இருப்பதை பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும், இவற்றில் செரசு, புளூட்டோ ஆகிய வான்பொருட்கள் மட்டுமே குறுங்கோள் என்ற வகைப்பாட்டுக்குள் இருப்பதற்கான போதியளவு தகவல்களைக் கொண்டுள்ளன. ஏரிசு புளூட்டோவை விடப் பெரிதாக இருப்பதால் அது குறுங்கோளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்டியூனுக்கு அப்பாலுள்ள விண்பொருட்களில் தனி ஒளித்தரம் +1 ஐ விட அதிகமாக உள்ள (குறைந்தது 838 கிமீ விட்டத்தைக் கொண்ட) பெயரிடப்படாத விண்பொருட்கள், அவை குறுங்கோள்களாக இருக்கும் பட்சத்தில் பெயரிடப்படவேண்டும் என வானியல் ஒன்றியம் முடிவு செய்தது. இதன்படி, தற்போது அறியப்பட்டுள்ள மெக்கேமெக், அவுமேயா ஆகிய இரண்டும் தகுந்த பெயரிடப்பட்டு குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டன.

சூரியக் குடும்பத்தில் குறைந்தது மேலும் ஐம்பது குறுங்கோள்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான கைப்பர் பட்டையும் ஆராயப்படும் இடத்து 200 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், கைப்பர் பட்டைக்கு வெளியே சிதறிய பொருட்களையும் கருத்தில் கொண்டால் 2,000 இற்கும் அதிகமான குறுங்கோள்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

செப்டம்பர் 2006

செப்டம்பர் 2006 (September 2006), 2006 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும்.

செப்டம்பர் 2008

செப்டம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாதி மாதம் செப்டம்பர் 17 புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 16 வியாழக்கிழமையில் முடிவடைகிறது.

செப்டம்பர் 2012

செப்டம்பர் 2012 (September 2012), ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாசி மாதம் 2012 செப்டம்பர் 17 திங்கட்கிழமை தொடங்கி, 2012 அக்டோபர் 16 செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது.

டைட்டசு

டைட்டசு (Titus, டிசம்பர் 30, கிபி 39 – செப்டம்பர் 13, கிபி 81) கிபி 79 முதல் 81 வரை ஆட்சியிலிருந்த ஒரு உரோமைப் பேரரசர் ஆவார். பிளாவிய வம்சத்தைச் சேர்ந்த இவர், இவரது தந்தை வெசுப்பாசியானின் இறப்பிற்குப் பின்னர் பேரரசரானார். இதன் மூலம், மரபு வழியில் உரோமைப் பேரரசராக முடிசூடிய முதலாவது நபர் இவராவார்.

பேரரசராவதற்கு முன்னர், டைட்டசு இராணுவத் தளபதியாக போர் முனைகளில் பெரும் வெற்றி ஈட்டியவர். முதலாம் யூத-உரோமைப் போரின் போது யுதேயாவில் தந்தையின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்தார். கிபி 68 இல் பேரரசர் நீரோவின் இறப்பிற்குப் பின்னர் இப்போர் நடவடிக்கையில் சிறிது தளர்வு ஏற்பட்டது. இக்காலப் பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்டது. இவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமை ஆண்டார்கள். இவர்களில் கடைசியாக பேரரசரானவர் வெசுப்பாசியான். இதன் பின்னர், டைட்டசு யூதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கிபி 70-இல் எருசலேமைக் கைப்பற்றி, எருசலேம் நகரையும் இரண்டாம் கோவிலையும் அழித்தார். இவ்வெற்றியை அடுத்து, டைட்டசுக்கு வெற்றியாளருக்கான உரோமை விருது வழங்கப்பட்டது. இவ்வெற்றியைக் கொண்டாடும் முகமாக அமைக்கப்பட்ட "டைட்டசின் வளைவு" இன்றும் நினைவுகூரப்படுகிறது.

தந்தை வெசுப்பாசியானின் ஆட்சியின் போது, டைட்டசு பிரட்டோரியக் காவலர்களின் தலைவனாகப் பணியாற்றிய போது, யூத மகாராணியான பெரனீசு என்பவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக டைட்டசு மீது கெட்ட பெயர் இருந்தது. ஆனாலும், கிபி 79 இல் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பேரரசராகி சிறப்பான ஆட்சி நடத்தினார்.

இவரது ஆட்சிக் காலத்தில் கொலோசியம் கட்டி முடிக்கப்பட்டது. கிபி 79 இல் வெசுவியசு எரிமலை வெடிப்பு, கிபி 80 இல் உரோம் நகர் தீப்பிடித்து எரிந்த இரு நிகழ்வுகளிலும், டைட்டசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானளவு நிவாரணம் வழங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த டைட்டசு கிபி 81 செப்டம்பர் 13 இல் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவருக்குப் பின்னர் இவருடய சகோதரர் டொமீசியான் ஆட்சியில் அமர்ந்தார்.

தாய் விக்கிப்பீடியா

தாய் விக்கிப்பீடியா (Thai Wikipedia) விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தாய் மொழிப் பதிப்பு ஆகும். 2003, திசம்பர் மாதம் இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது இடத்தில் இருக்கும் தாய் விக்கியில் 2012 செப்டம்பர் 13 இல் 76,044 கட்டுரைகள் உள்ளன. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.

மு. அருணாசலம்

மு. அருணாசலம் (அக்டோபர் 29, 1909 -நவம்பர் 23, 1992) ), தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

ராபர்ட் பெல்லார்மின்

புனித ராபர்ட் பெல்லார்மின் (இத்தாலியம்: Roberto Francesco Romolo Bellarmino; 4 அக்டோபர் 1542 – 17 செப்டம்பர் 1621) ஒரு இத்தாலிய இயேசு சபைத் துறவியும், கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலும் ஆவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களுல் ஒருவர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 1930இல் திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் அளிக்கப்பட்டது. அடுத்தவருடமே இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். இவரின் விழா நாள் 17 செப்டம்பர் ஆகும்.

ஷேன் வோர்ன்

ஷேன் கெய்த் வோர்ன் (ஷேன் வோர்ன், Shane Warne) (பிறப்பு. செப்டம்பர் 13, 1969) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் அணித்தலைவர் ஆவார்.துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார். மேலும் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் விசுடன் சர்வதேச முன்னணி துடுப்பாட்ட வீரராக ஷேன் வோர்னை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. 2000 இல் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் பன்னாட்டுத் துடுப்பாடப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீராராகவும் உள்ளார். அனைத்துவிதமான துடுப்பாட்ட வடிவங்களில் இருந்தும் சூலை, 2013 இல் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.