செபராது யூதர்கள்

செபராது யூதர்கள் அல்லது எசுப்பானிய யூதர்கள் (Sephardi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் இரண்டாம் ஆயிரமாண்டு ஆரம்பத்தில் ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் சமூகமாக ஒன்றாகினர். இவர்களின் சமூகம் எசுப்பானியா, போர்த்துகல் பகுதிகளில் உருவாகியது.[1]

செபராது யூதர்கள்
יהדות ספרד
மொத்த மக்கள்தொகை
2,200,000
உலக யூதர்களில் 16%
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்1.4 மில்லியன்
 பிரான்சு300,000–400,000
 ஐக்கிய அமெரிக்கா200,000–300,000
 அர்கெந்தீனா50,000
 எசுப்பானியா40,000
 கனடா30,000
 துருக்கி26,000
 இத்தாலி24,930
 மெக்சிக்கோ15,000
 ஐக்கிய இராச்சியம்8,000
 பனாமா8,000
 கொலம்பியா7,000
 மொரோக்கோ6,000
 கிரேக்க நாடு6,000
 தூனிசியா2,000
 அல்ஜீரியா2,000
 பொசுனியா எர்செகோவினா2,000
 பல்கேரியா2,000
 கியூபா1,500
 செர்பியா1,000
 நெதர்லாந்து600
மொழி(கள்)
வரலாற்று: இலதீனம், அண்டலுசியா அரபு, ககெத்தியம், யூதேய போத்துக்கீசம், யூதேய பேபர், யூதேய காட்டலான், சுவாடித், உள்ளூர் மொழிகள்
தற்காலம்: உள்ளூர் மொழிகள், முதன்மையாக எபிரேயம், பிரெஞ்சு, ஆங்கிலம், எசுப்பானியம், துருக்கி, போத்துக்கீசம், இத்தாலியம், இலதீனம், அரபு.
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அஸ்கனாசு யூதர்கள், கிழக்கத்திய யூதர்கள், பிற யூதக்குழுக்கள், சமாரியர், பிற லெவண்ட், அசிரியர், பிற செமித்திக் மக்கள், எசுப்பானியர், போத்துக்கீசர், கிஸ்பானியர்/இலத்தினியர்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Ashkenazic and Sephardic Jews". பார்த்த நாள் 15 நவம்பர் 2016.

வெளி இணைப்புகள்

Genealogy:

Genetics:

History and community:

Philosophical:

Music and liturgy:

அஸ்கனாசு யூதர்கள்

அஸ்கனாசு யூதர்கள் (Ashkenazi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் முதலாம் ஆயிரமாண்டு இறுதியில் புனித உரோமைப் பேரரசு காலத்தில் ஒரு சமூகமாக ஒன்றாகினர். அஸ்கனாசு யூதர்களின் பாரம்பரிய புலம்பெயர் மொழியாக இத்திய மொழி காணப்பட்டது. தற்காலம் வரைக்கும் எபிரேயம் புனித மொழியாக மாத்திரம் பயன்பட்டது.

இத்தாலி யூதர்கள்

இத்தாலிய யூதர்கள் (Italian Jews) எனப்படுவோர் இத்தாலியில் வாழும் அல்லது இத்தாலியை வம்சாவளி யூதர்களைக் குறிக்கும்.

எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள்

மேலத்தேய செபராது யூதர்கள் (Western Sephardim) அல்லது எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள் (Spanish and Portuguese Jews) எனப்படுவோர் ஐபீரிய யூத துணைக் குழுவாகும். ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் பெரியவில் வசித்த இவர்கள் 1492 இல் எசுப்பானியாவில் இருந்தும் 1497 இல் போத்துக்கலில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

கொசேர் உணவுகள்

கொசேர் உணவுகள் (கொஷேர், Kosher foods) யூதர்களின் கேஷ்ரூத் எனப்படும் உணவுக் கட்டுபாட்டுக் கொள்கைகளுக்குட்பட்ட உணவுகளாகும். இது லேவியர் மற்றும் இணைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. எபிரேய மொழியில் கொசேர் (כָּשֵׁר, ), என்பது "தகுதியான" (இங்கு உண்ணத்தகுந்த) என்ற பொருளுடையது. சமயச் சட்டப்படி இல்லாத உணவுகள் திரைஃப் (טרײף, , எனப்படுகின்றன; இது "கிழிந்த" எனப் பொருள்படும்.

கொச்சி யூதர்கள்

கொச்சி யூதர்கள் (Cochin Jews) அல்லது மலபார் யூதர்கள் (Malabar Jews) எனப்படுவோர் இந்தியாவிலுள்ள பழமையான இந்திய யூதர்கள் ஆவர். இவர்கள் சாலொமோன் கால வம்சத்தினர் எனக் கருதப்படுகிறனர். கொச்சி யூதர்கள் தென்னிந்தியாவின் கொச்சி இராச்சியத்தில் குடியேறினர். இது தற்போது கேரள மாநிலத்தின் பகுதியாகவுள்ளது.

சிரிய யூதர்கள்

சிரிய யூதர்கள் (Syrian Jews) தற்போதைய சிரியாவில் வசித்த யூதர்களையும் சிரியாவிற்கு வெளியில் பிறந்த அவர்களின் வாரிசுகளையும் குறிக்கும். சிரிய யூதர்கள் இரு குழுக்களிலிருந்து உருவாகினர். ஒரு குழு பண்டைய யூதர்களாக மத்திய கிழக்கையும் வட ஆப்பிரிகாவையும் சேர்ந்தவர்கள். மற்றையது ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இருந்து பலவந்தமாக 1492 இல் வெளியேற்றப்பட்டு சிரியாவை வந்தடைந்த செபராது யூதர்கள் ஆவர்.

மிஸ்ராகி யூதர்கள்

மிஸ்ராகி யூதர்கள் எனப்படுவோர் மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் விவிலிய முதல் இன்றுவரை வசித்து வரும் யூத சமுகத்தைச் சேர்ந்த யூதர்கள் ஆவர். இவர்கள் "கிழக்கின் மைந்தர்" அல்லது "கீழத்தேய யூதர்கள்" எனவும் அழைக்கப்படுவர். பாபிலோனிய யூதர்களினதும் மலை யூதர்களினதும் வம்சாவளியினரான இவர்கள் ஈராக், சீரியா, பஃரேன், குவைத், அசர்பஜிஸ்தான், ஈரான், உபெக்கிஸ்தான், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய தற்கால இடங்களைச் சேர்ந்தவராவர். சிலவேளைகளில் யெமனிய யூதர்கள் இவர்களும் உள்வாங்கப்பட்டாலும் அவர்களின் வரலாறு பாபிலோனிய யூதர்களில் இருந்து வேறுபட்டது.

யெமனிய யூதர்கள்

யெமனிய யூதர்கள் (Yemenite Jews) யெமன் நாட்டில் வாழ்ந்த அல்லது வாழும் யூதர்களைக் குறிக்கும். யெமனிய யூத வம்சாவழியைச் சேர்ந்தவர்களும் இதே பெயரால் அழைக்கப்படுகின்றனர். சூன் 1949 இற்கும் 1950 இற்கும் இடைப்பட்ட காலத்தில் யெமனில் வாழ்ந்த யூதர்கள் இராணுவ நடவடிக்கையூடாக இசுரேலுக்கு கொண்டுவரப்பட்டனர். யெமனில் யூதர்களுக்கு எதிராக நடந்த துன்புறுத்தலின் பின், பல யெமனிய யூதர்கள் சிறிய அளவில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்றனர். மிகச் சிலரே யெமனில் வாழ்கின்றனர். அவர்கள் கடுமைக்கும் வன்முறைக்கும் யூத எதிர்ப்புக் கொள்கைக்கும் ஒவ்வொரு நாளும் முகம் கொடுக்கின்றனர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.