சீனா

சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது.

உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. 1949 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக இறைமை, தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும்.

இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் வல்லரசும் ஆகும். சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு, சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த வறுமை வீதம் (poverty rate) 2001 ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும்.

People's Republic of China
  • 中华人民共和国
  • Zhōnghuá Rénmín Gònghéguó
Flag of the People's Republic of China National Emblem of the People's Republic of China
கொடி National Emblem
நாட்டுப்பண்: 
Area controlled by the People's Republic of China shown in dark green; claimed but uncontrolled regions shown in light green.
Area controlled by the People's Republic of China shown in dark green; claimed but uncontrolled regions shown in light green.
தலைநகரம்பெய்ஜிங்[lower-alpha 1]
39°55′N 116°23′E / 39.917°N 116.383°E
பெரிய நகர் சாங்காய்[1]
ஆட்சி மொழி(கள்) Standard Chinese[2][lower-alpha 2]
பிராந்திய மொழிகள்
Official written language Vernacular Chinese
Official script Simplified Chinese[2]
இனக் குழு
மக்கள் Chinese
அரசாங்கம் Socialist single-party state[4]
 •  President சீ சின்பிங்[lower-alpha 4]
 •  Premier லீ கெச்சியாங்
 •  Congress Chairman Zhang Dejiang
 •  Conference Chairman Yu Zhengsheng
 •  First-ranked Secretary of the Secretariat Liu Yunshan
 •  Secretary of the Central Commission for Discipline Inspection Wang Qishan
 •  First Vice Premier Zhang Gaoli
சட்டமன்றம் தேசிய மக்கள் பேராயம்
உருவாக்கம்
 •  சியா அரசமரபு established during pre-imperial time c. 2070 BCE 
 •  First Unification of imperial China under the சின் அரசமரபு 221 BCE 
 •  குடியரசு உருவாக்கம் 1 சனவரி 1912 
 •  மக்கள் குடியரசு தோற்றம் 1 ஒக்டோபர் 1949 
பரப்பு
 •  மொத்தம் 9 கிமீ2[lower-alpha 5] (3rd/4th)
3 சதுர மைல்
 •  நீர் (%) 2.8%[lower-alpha 6]
மக்கள் தொகை
 •  2015 கணக்கெடுப்பு 1,376,049,000[9] (1st)
 •  2010 கணக்கெடுப்பு 1,339,724,852[10] (1st)
 •  அடர்த்தி 2013 :[11] 145/km2 (83rd)
373/sq mi
மொ.உ.உ (கொஆச) 2015 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $18.976 trillion[12] (1st)
 •  தலைவிகிதம் $13,801[12] (87th)
மொ.உ.உ (பெயரளவு) 2015 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $11.212 trillion[12] (2nd)
 •  தலைவிகிதம் $8,154[12] (75th)
ஜினி (2014)46.9[13]
உயர்
மமேசு (2014)Green Arrow Up Darker.svg 0.727[14]
உயர் · 90th
நாணயம் ரென்மின்பி (yuan)(¥)[lower-alpha 7] (CNY)
நேர வலயம் China Standard Time (ஒ.அ.நே+8)
திகதி அமைப்பு
வாகனம் செலுத்தல் right[lower-alpha 8]
அழைப்புக்குறி +86
இணையக் குறி
  • .cn
  • .中國
  • .中国

வரலாறு

ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு Chopsticks மூலம் உணவு உட்கொள்ளும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

PRCFounding
1949 ஆம் ஆண்டில் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதை மாவோ சே துங் அறிவிக்கும் காட்சி.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் மா சே துங் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளன்று தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (Great Leap Forward) எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். லியூ ஷாவோக்கி அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, டெங் சியாவோபிங் ஆகியோரின் பொறுப்பில் இருந்தது.

1966 ஆம் ஆண்டில், மாவோவும் அவரது கூட்டாளிகளும் கலாச்சாரப் புரட்சியைத் தொடக்கி வைத்தனர் இது பத்தாண்டுகள் கழித்து மாவோ இறக்கும்வரை தொடர்ந்தது. கட்சிக்குள் நிலவிய பதவிப் போட்டியினாலும், சோவியத் ஒன்றியத்தின் மீது ஏற்பட்ட பயத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இக் கலாச்சாரப் புரட்சி சமுதாயத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில், சீனாவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு அதன் உச்சத்தை எட்டியபோது, மாவோவும், பிரதமர் சூ என்லாயும் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனை பெய்ஜிங்கில் சந்தித்து அந்நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டில், தாய்வானில் இயங்கிவந்த சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டிருந்த சீனாவுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமையும், அதன் பாதுகாப்புச் சபைக்கான நிலையான உறுப்புரிமையும், மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டது.

DengXiaoping
டெங் சியாவோபிங் சீனாவின் சந்தை நோக்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடக்கி வைத்தவர்.

1976 ஆம் ஆண்டில் மாவோ காலமானதும், கலாச்சாரப் புரட்சியின்போது இடம்பெற்ற அட்டூழியங்களுக்காகக் குற்றம் சுமத்தி நால்வர் குழு (Gang of Four) என அழைக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மாவோவின் வாரிசு எனக் கருதப்பட்ட ஹுவா குவோபெங்கிடமிருந்து டெங் சியாவோபெங் பதவியைக் கைப்பற்றினார். டென் சியாவோ பெங் தான் நேரடியாகக் கட்சித் தலைவர் பதவியையோ அல்லது நாட்டின் தலைவர் பதவியையோ வகிக்காவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கிருந்த செல்வாக்கினால், குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நாட்டை வழிநடத்தினார். தொடர்ந்து பொதுவுடமைக் கட்சி, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், கம்யூன்களையும் கலைத்துவிட்டது. பல குடியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் பெற்றார்கள். இவ்வாறான மேம்பட்ட ஊக்குவிப்புகளினால், வேளாண்மை உற்பத்திகள் பெருமளவு அதிகரித்தன. இந்த நிலைமைகள், சீனா திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து, கலப்புப் பொருளாதார முறைக்கு மாறும் சூழ்நிலையைக் குறித்தன.

புவியியல்

ChinaGeography
சீனாவின் புவியமைப்பு

சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். சீனாவின் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.

சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனா உரிமைக்கோரும் திபெத் மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. இதுதவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும். சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றுள் யாங்சி ஆறு அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் எனற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கிப் பாய்ந்து பசிப்பிக் சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்தியாவில் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' இந்து சமுத்திரத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது.

அரசியல்

சீன மக்கள் குடியரசின் அரசமைப்பு

National Emblem of the People's Republic of China

அரசமைப்புச் சட்டம்
சட்டமன்றம்
தேசிய மக்கள் பேராயம்
தேசிய மக்கள் பேராய நிலைக் குழு
சீன சனாதிபதி - கூ சிங்தாவ்
செயற்குழு/நிர்வாகம்
சீன மக்கள் குடியரசின் அரச மன்றம்
சீனப் பிரதமர் -
மக்கள் விடுதலைப் படை
நீதிமன்றம்
உச்ச மக்கள் நீதிமன்றம்
அரசியல்
சீனப் பொதுவுடமைக் கட்சி
சீ.பொ.க நடுவண் செயற்குழு
சீ.பொ.க தேசிய பேராயம்
வரலாறும் கொள்கைகளும்
மா சே துங் - மாசேதுங் கோட்பாடு
டங் சியாவுபிங் - டங் சியாவுபிங் கோட்பாடு
யான் சமீன் - Three Represents
கூ சிங்தாவ் - அறிவியல் வளர்ச்சியல் கருத்துரு
சிக்கல்கள்

தொகு

மக்கள்

China linguistic map
மொழி

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், டாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர்.

சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பல குடும்ப நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இவற்றில் முக்கியமானது ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம். முதல் குழந்தை பெண் குழந்தையாக வாய்த்தாலோ, தம்பதியினர் கிராமப்புறத்தில் வசித்தாலோ இரண்டாவது குழந்தையைப் பெறலாம். உண்மையில் இத்திட்டம் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தினாலும், 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகித நிலை ஏற்பட்டுள்ளது.

சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். இம்மொழியை அடிப்படையாகக் கொண்ட பல வட்டார மொழிகள் சீனாவில் பேசப்படுகிறது. இதில் ஒன்றான மாண்டரின் சீன மொழி, உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற சிறப்பைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

1949 முதல் சீனா பொதுவுடமைத் தத்துவத்தைக் கடைபிடித்து வரும் நாடாகும். 1980 ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9% வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. சீனா உலகில் பாறை எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகும்[15]

சுற்றுலாத்துறை

The Great wall - by Hao Wei
சீனப்பெருஞ்சுவர்

சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் வரையுமான மாதங்கள் சீனச் சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 பாகை செல்சியஸ் இருக்கும் அதேவேலை இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.

முக்கிய விழாக்கள்

சீன புத்தாண்டு – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதிகாரபூர்வமாக மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் வரை இவ்விழாவை கொண்டாடுவர். பட்டாசு (வெடி) சப்தங்களும், வாண வேடிக்கைகளும் காணப்படும்.

இலாந்தர் பண்டிகை இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல.

சிங் மிங் ஏப்ரலில் நடக்கும், சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.

டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. 'வுட் யுவான்' என்ற கவிஞரைக் கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும். படகு குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒரே சமயத்தில் துடுப்பை வீசிப் படகைச் செலுத்தும் காட்சி கண்ணைப்பறிக்கும். பல வெளிநாட்டுக் குழுக்களும் இப்போட்டியில் பங்குபற்றுவது வழக்கமாகும்.

Footnotes

  1. Or (previously) "Peking".
  2. போர்த்துக்கேய மொழி (மக்காவு மாத்திரம்), ஆங்கிலம் (ஆங்காங் மாத்திரம்).
  3. Ethnic minorities that are recognized officially.
  4. Xi Jinping holds four concurrent positions: General Secretary of the Communist Party of China, President of the People's Republic of China, and Chairman of the Central Military Commission for both state and party.[5]
  5. The area given is the official United Nations figure for the mainland and excludes ஆங்காங், மக்காவு and சீனக் குடியரசு.[6] It also excludes the Trans-Karakoram Tract (5,800 km2 (2,200 sq mi)), அக்சாய் சின் (37,244 km2 (14,380 sq mi)) and other territories in dispute with India. The total area of China is listed as 9,572,900 km2 (3,696,100 sq mi) by the Encyclopædia Britannica.[7] For further information, see Territorial changes of the People's Republic of China.
  6. This figure was calculated using data from the CIA World Factbook.[8]
  7. The ஹொங்கொங் டொலர் is used in ஆங்காங் and the Macanese pataca is used in மக்காவு.
  8. Except ஆங்காங், மக்காவு.

உசாத்துணை

  1. Chan, Kam Wing (2007). "Misconceptions and Complexities in the Study of China's Cities: Definitions, Statistics, and Implications" (PDF). Eurasian Geography and Economics 48 (4): 383–412. doi:10.2747/1538-7216.48.4.383. Archived from the original on 15 சனவரி 2013. https://web.archive.org/web/20130115173048/http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf. பார்த்த நாள்: 7 ஆகத்து 2011. p. 395
  2. 2.0 2.1 "Law of the People's Republic of China on the Standard Spoken and Written Chinese Language (Order of the President No.37)". Chinese Government (31 ஒக்டோபர் 2000). பார்த்த நாள் 21 சூன் 2013. "For purposes of this Law, the standard spoken and written Chinese language means Putonghua (a common speech with pronunciation based on the Beijing dialect) and the standardized Chinese characters."
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Constitution of the People's Republic of China". The National People's Congress of the People's Republic of China (15 நவம்பர் 2007). பார்த்த நாள் 8 பெப்ரவரி 2015.
  5. "New man at helm: Xi Jinping elected to lead China". RT.com. 15 நவம்பர் 2012. Retrieved 2 சனவரி 2013.
  6. "Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density". UN Statistics (2007). பார்த்த நாள் 31 சூலை 2010.
  7. "China". Encyclopædia Britannica. பார்த்த நாள் 16 நவம்பர் 2012.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CIA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. "United Nations world population prospects"(PDF) 2015 revision
  10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; groups என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. "Population density (people per sq. km of land area)". IMF. பார்த்த நாள் 16 மே 2015.
  12. 12.0 12.1 12.2 12.3 "Report for Selected Countries and Subjects: China". World Economic Outlook. International Monetary Fund (ஏப்ரல் 2015). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2015.
  13. "2015 Human Development Report Summary" (PDF) 17. United Nations Development Programme (2015). பார்த்த நாள் 14 திசம்பர் 2015.
  14. "2015 Human Development Report". United Nations Development Programme (2014). பார்த்த நாள் 14 திசம்பர் 2015.
  15. 2012 டிசம்பரிலிருந்து உலகில் அதிகம் பாறை எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

வெளி இணைப்புகள்

Overviews
Government
Studies
Travel
Maps

ஆள்கூற்று: 35°N 103°E / 35°N 103°E

அடுக்குத் தூபி

அடுக்குத் தூபி (Pagoda), பௌத்தக் கட்டிடக் கலை நயத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளில் பல அடுக்கு மாடிகள் கொண்ட தூபி வடிவத்தில் கட்டப்பட்ட பௌத்த வழிபாட்டுத் தலமாகும்.நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், பர்மா, இலங்கை, லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இதுபோன்ற அடுக்குத் தூபிக்கள் விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியா

ஆசியா ( ஒலிப்பு) (/ˈeɪʒə/ or /ˈeɪʃə/) உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.

ஆசியா என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல. ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனர்.

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக் கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரள மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பிற்கு வரும் ஐந்தாவது நபர் இவராவார்.

இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு

இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு மொத்தம் 4.42 மில்லியன் கிலோமீட்டர்கள் (2.059 மில்லியன் மைல்கள்) நீளமுள்ள சாலைகளைக் கொண்டு உலகின் இரண்டாவது மிகப்பெரும் சாலை வலையமைப்பைக் கொண்டுள்ள நாடாகத் திகழ்கிறது. ஓர் சதுர கிமீ நிலப்பரப்பிற்கு 0.66 கிமீ சாலை என சாலை அடர்த்தி ஐக்கிய அமெரிக்காவின் நாடுகளினதை (0.65) விட சற்றே கூடுதலாகவும் சீனா (0.16) அல்லது பிரேசிலை விட (0.20) மிகக் கூடுதலாகவும் உள்ளது. 2002ஆம் ஆண்டு நிலவரப்படி இவற்றில் 47.3% சாலைகள் மட்டுமே நிலப்பாவப்பட்ட சாலைகளாகும்.

இமயமலை

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது.

உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது. இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது.

இமயமலை மேற்கு-வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது. இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நம்சா பர்வா பரம்ஹபுத்ராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது. மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும்.

கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம் ( ஒலிப்பு) (Encyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

சமாரியம்

சமாரியம் (Samarium) என்பது Sm என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய அணு எண் 62 ஆகும். மிதமான கடினத்தன்மையும் வெள்லியைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட இச்சேர்மம் காற்றில் மெல்ல ஆக்சிசனேற்றம் அடைகிறது. லாந்தனைடு குழுவின் குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருக்கும் சமாரியம் வழக்கமாக +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. சமாரியம்(II) இன் சேர்மங்க்களும் அறியப்படுகின்றன. குறிப்பாக சமாரியம் மோனாக்சைடு SmO, மோனோசால்கோசெனைடுகள் SmS, SmSe மற்றும் SmTe , சமாரியம்(II) அயோடைடு போன்ற சேர்மங்களும் அறியப்படுகின்றன. சமாரியம்(II) அயோடைடு வேதித் தொகுப்பு வினைகளில் ஒரு பொதுவான ஒடுக்கும் முகவராகும். உயிர்னச் செயல்பாடுகளில் சமாரியத்தின் பங்க்கு ஈதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இது சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டுள்ளது.

1879 ஆம் ஆண்டு பிரெஞ்ச்சு வேதியியலாளர் பால்-எமில் லெக்காக் டி பாய்சுபவுத்ரன் சமாரியத்தைக் கண்டுபிடித்தார். சாமர்சுகைட்டு என்ற கனிமத்திலிருந்து இது பிரித்தெடுக்கப்படுவதால் இத்தனிமத்திற்கு சமாரியம் என்ற பெயரை சூட்டினார். சாமர்சுகைட்டு என்ற பெயரும் முன்னதாக உருசிய கனிமவியல் அலுவலர் வாசிலி சாமர்சிகை-பைகோவெட்சு என்பவரின் நினைவாக சூட்டப்பட்ட பெயராகும். சமாரியம் ஓர் அரு மண் உலோகமாக வகைப்படுத்தப்படுகிறது. புவியில் அதிகமாக கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் சமாரியத்திற்கு 40 ஆவது இடம் கிடைத்துள்ளது. பல்வேறு கனிமங்க்களில் இது 2.8% அளவுக்கு தோன்றுகிறது. செரைட்டு, கடோலினைட்டு, சாமர்சுகைட்டு, மோனசைட்டு மற்றும் பாசுட்னாசைடு உள்ளிட்ட கனிமங்கள் இவற்றில் சிலவாகும். மோனசைட்டு மற்றும் பாசுட்னாசைடு உள்ளிட்ட கனிமங்கள் இரண்டும் வணிக முறையில் சமாரியம் தயாரிப்பதற்கு ஏற்ற பொதுவான கனிமங்களாகும். இவை சீனா, அமெரிக்கா, பிரேசில், இந்தியா, இலங்கை, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் அதிகமாகக் கிடைக்கின்றன. சமாரியம் வெட்டி எடுப்பதிலும் உற்பத்தியிலும் சீனா உலகின் முன்னணி நாடாக திகழ்கிறது.

சமாரியம்-கோபால்ட்டு காந்தங்கள் தயாரிப்பில் பயன்படுவது சமாரியத்தின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பயணாகும். நியோடிமியம் காந்தங்க்களை அடுத்து இவை நிலைத்த காந்தங்களாக உள்ளன. இருப்பினும் சமாரியம் சேர்மங்கள் 700 பாகை செல்சியசு வெப்பனிலைக்கும் அதிகமான வெப்ப நிலைகளிலும் நிலையாக காந்தப்பண்புகளை இழக்காமல் எதிர்த்து நிற்கின்றன. கலப்புலோகத்தின் கியூரி புள்ளி இதற்கு காரணமாகும்.சமாரியம் -153 என்ற கதிரியக்க ஐசோடோப்பு சமாரியத்தின் மருத்துவ பயனளிக்கும் திறன் மிக்க ஐசோடோப்பு ஆகும். நுரையீரல் புற்று, மார்பகப்புற்று போன்ற சில வகை புற்று நோய்களுக்கு காரணமான செல்களை அழிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. சமாரியம்-149 என்ற மற்றொரு ஐசோடோப்பு ஒரு வலிமையான நியூட்ரான் உறிஞ்சியாகும். எனவே இதை அணுக்கரு உலைகளில் பயன்படுத்துகிறார்கள். அணுக்கரு உலை செயல்பாடுகளின் போது சமாரியம் சிதைவு விளைபொருளாக உருவாகிறது என்பதால் இதை கருத்திற்கொண்டு அணுக்கரு உலைகள் வடிவமைக்கப்படுகின்றன. வேதி வினைகளில் வினையூக்கியாக, கதிரியக்கக் கார்பன் கணக்கீடு, எக்சுகதிர் சீரொளி என பிற பயன்களுக்காகவும் சமாரியம் அறியப்படுகிறது.

சீனக் குடியரசு

Republic of chinaகிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது தாய்வான் என்றே அழைக்கப்பட்டது. 1970களின் பின்னர் "சீனா" என்பது சீன மக்கள் குடியரசைக் குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது சீன தைபே என அழைக்கப்படலாயிற்று. அண்டை நாடுகளாக மேற்கில் சீன மக்கள் குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தைபே உள்ளது.

சீனர்கள், மகாபாரதம்

சீனர்கள் (Chinas or Chīnaḥ (சமஸ்கிருதம் चीन:), மகாபாரத காவியம் மற்றும் புராணங்கள் கூறும், பண்டைய பரத கண்டத்தின் வடகிழக்கில் வாழ்ந்த மஞ்சள் நிற மக்களாவர். இம்மக்கள் தற்கால சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

சீனா - 988 (நெல்)

சீனா - 988 (China-988) எனப்படுவது; 1975 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 135 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம்,சீனாவின் இரண்டாம்தர நெல் வகையாகும். அரைக் குள்ளப் பயிரான 100 - 110 சென்டிமீட்டர் (100-110 cm) உயரம் வளரும் இந்த நெற்பயிரின் தானியங்கள், நேர்த்தியற்று கரடுமுரடான காணப்படுகிறது. நல்ல தரமான உயர் தலைமுறை நெல் வகையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்த நெல் இரகம், சம்மு காசுமீர் மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.

தஜிகிஸ்தான்

தஜிகிஸ்தான் குடியரசு (Tajikistan, தஜிக் மொழி: Тоҷикистон), மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், மற்றும் கிழக்கே சீனா ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன. தஜிக் இனக்குழு தஜிகிஸ்தானின் முக்கிய இனமாகும். இவர்கள் பொதுவாக ஈரானியர்களினதும் உஸ்பெக் மக்களினதும் கலாச்சாரம், மற்றும் வரலாறுகளை ஒத்துள்ளனர். தஜிக் மொழியைப் பேசுகின்றனர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு தஜிக் சோவியத் சோசலிசக் குடியரசு என்று அழைக்கப்பட்டது.

செப்டம்பர் 9, 1991இல் சோவியத்தில் இருந்து விடுதலை அடைந்த பின்னர் 1992 முதல் 1997 வரையில் இங்கு மிக மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. போரின் முடிவில் அரசியல் சீரடையத் தொடங்கியதும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. பொருளாதாரம் வளரத் தொடங்கியது. இந்நாட்டின் இயற்கை வளங்களான பருத்தி, அலுமீனியம் ஆகியன பொருளாதாரம் சீரடைய உதவின.

தலாய் லாமா

தலாய் லாமா (Dalai Lama) என்பது கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா (திபெத்தியம்: བླ་མ, bla-ma, ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும். திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று இன்றைய தலாய் லாமா விளக்கம் தருகிறார்.

மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். கெலுக் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் கேண்டன் டிரிபா ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

5-வது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். அதிலிருந்து தலாய் லாமாக்கள் ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை தலாய் லாமாக்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். 14-வது தலாய் லாமா மார்ச் 14, 2011 வரை மத்திய திபெத்திய நிருவாகத்தின் (நாட்டுக்கு வெளியே அமைந்த திபெத் அரசு) தலைவராக இருந்தார். மார்ச் 14, 2011ல் அப்பொறுப்பில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். வருங்காலத்தில் தலாய் லாமா என்ற அமைப்பு நீக்கப்படலாம் என்றும் அடுத்த தலாய் லாமா திபெத்துக்கு வெளியே தேர்த்தெடுக்கப்படுவார், அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார் . இதை சீன அரசு உடனடியாக மறுத்து அடுத்த தலாய் லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது.

தேரவாத பௌத்தம்

தேரவாதம் (பாளி: थेरवाद, சமஸ்கிருதம்: स्थविरवाद ஸ்தாவிரவாத) பௌத்தத்தில் மிக பழமையான பிரிவு. பெரும்பான்மையாக மரபுவழி பௌத்தத்துக்கு ஓரளவு சமமாக இருக்கிறது. இலங்கை மக்களின் 70 சதவீதம் இச்சமயத்தை சேர்ந்தனர். கம்போடியா, தாய்லாந்து. லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும் பெரும்பான்மையாக தேரவாதத்தை பின்பற்றுகின்றனர். தென்மேற்கு சீனா, வியட்நாம், வங்காளதேசம், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை மக்கள் தேரவாதத்தை சேர்ந்தனர். உலகிலேயே ஏறத்தாழ 100 மில்லியன் மக்களால் தேரவாதம் பின்பற்றப்பட்டது.

பாசியான்

பா சியான் அல்லது பாஹியான் (Fa Xian, Fa-Hien அல்லது Fa-hsien, கிபி 337 – கி. 422) என்பவர் சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி. இவர் கிபி 399 - 412 காலப்பகுதியில் பௌத்த நூல்களைத் தேடி நேபாளம், இந்தியா, மற்றும் இலங்கைக்கு இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டமைக்காக அறியப்படுகிறார். புத்தரின் பிறப்பிடமான லும்பினிக்கு சென்றமைக்காகவும் இவர் அறியப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பும் வழியில் பெரும் சூறாவளியில் சிக்கி தீவு ஒன்றில் ஜாவா எனக் கருதப்படுகிறது) கரையொதுங்கினார். பின்னர் சீனாவின் லாவோஷாங் நகரில் தங்கி தான் சேகரித்து வந்த பல பௌத்த நூல்களை மொழிபெயர்த்தார்.

தனது பயணத்தைப் பற்றி அவர் எழுதிய நூலில் ஆரம்பகால பௌத்தம், மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பட்டுப் பாதை வழியே காணப்பட்ட பல நாடுகளின் புவியியல், வரலாறு ஆகியவற்றை எழுதினார்.

பௌத்த யாத்திரை தலங்கள்

பௌத்த யாத்திரை தலங்கள் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், நேபாளத்தின் தெற்கிலும் மற்றும் இலங்கை, கம்போடியா போன்ற தென்கிழக்காசியா நாடுகளில் பல பௌத்த புனித யாத்திரைத் தலங்கள் உள்ளன.

பௌத்தம்

பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் கிமு 4-ஆம், கிமு 6-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.

பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.

மாண்டரின் மொழி

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.

வட கொரியா

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது.

எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது.

1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.

.

இறைமையுள்ள நாடுகள்
ஏற்கப்படாத நாடுகள்
சார்பு மண்டலங்களும்
சிறப்பு நிர்வாகப் பகுதிகளும்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.