சில்பா

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சில்பா (Zilpah; זִלְפָּה "தளர்ச்சி", எபிரேயம்: Zilpa) என்பவர் லேயாளின் பணிப்பெண்ணும், பிள்ளைகளைப் பெறும்படி யாக்கோபுவுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவரும் ஆவார் (Genesis 30:9).

சில்பா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை லேயா தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு காத்து, ஆசேர் என்ற பெயர்களை வழங்கினார். தொடக்க நூல் (Genesis 30:10-13) சில்பாவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.[1])

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[2]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனா
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்

உசாத்துணை

  1. Women, similar to wives from vadimcherny.org
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
ஆகத்து 28

ஆகத்து 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

ஆசேர்

ஆசேர் (Asher, எபிரேயம்: אָשֵׁר, தற்கால Asher திபேரியம் ʼĀšēr) என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் எட்டாவது மகனும் சில்பாவின் இரண்டாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ஆசேர் கோத்திரத்தின் தந்தையாவார்.

தோரா ஆசேர் எனும் பெயர் மகிழ்ச்சி/ஆசீர்வாதம் எனும் பொருள் உள்ளது என்கிறது. சில விவிலிய ஆய்வாளர்கள் ஆசேர் எனும் பெயர் கடவுளர்களில் ஒன்றாகவும் ஆராதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

இசக்கார்

இசக்கார் (Issachar; எபிரேயம்: יִשָּׂשכָר, தற்கால Yissakhar திபேரியம் Yiśśāḵār ; "reward; recompense") என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவினதும் லேயாவினதும் (லேயாவின் ஐந்தாவது மகனும் யூக்கோபுவின் ஒன்பதாவது மகனும்) ஆவார். இவர் இசுரயேலிய இசக்கார் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். தோரா இசக்கார் எனும் சொல்லுக்கு இரு வேறுபட்ட சொற்பிறப்பியல்களைத் தருகின்றது. விவிலிய ஆய்வாளர்கள் யாவே பாரம்பரியம், எலோகிம் பாரம்பரியம் மூலம் இவ்வேறுபாட்டை விளக்குகின்றனர். யாவே பாரம்பரியத்தின்படி, இஸ் சகர் என்பதிலிருந்து "வாடகை மனிதன்" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா யாக்கோபுவை மயக்க மருந்துச் செடிக்காக பாலியல் விருப்பம் கொள்ளச் செய்தாள். எலோகிம் பாரம்பரியத்தின்படி, "யெஸ் சகர்" என்பதிலிருந்து "பரிசு" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா தன்னுடைய பணிப்பெண்னை (சில்பா) யாக்கோபுடன் கூடியிருக்கக் கொடுத்ததால் கிடைத்த பரிசு என நினைத்தாள்.

ஈசாக்கு

ஈசாக்கு என்பவர் விவிலியத்தின்படி, இஸ்ரயேலரின் முதுபெரும் தந்தையர் மூவரில் ஒருவராவார். இவர் ஆபிரகாம் மற்றும் சாராள் ஆகியோரின் மகனும் யாக்கோபுவின் தந்தையுமாவார். இவரது வரலாறு தொடக்கநூலில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2007

ஏப்ரல் 2007 2007 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும்.

காதலன் யாரடி (திரைப்படம்)

காதலன் யாரடி 2014 பெப்ரவரியில் வெளிவந்த திரைப்படமாகும். இதை ராசேசு கிரவுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவசித், சில்பா போன்ற பலர் நடித்துள்ளனர்.

காத்து (யாக்கோபுவின் மகன்)

காத்து (Gad, எபிரேயம்: גָּד, தற்கால Gad திபேரியம் Gāḏ ; "நற்பேறு") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஏழாவது மகனும் சில்பாவின் முதலாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய காத்து கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். தோரா காத்து எனும் பெயர் நற்பேறு/நல்வாய்ப்பு எனும் பொருள் உள்ளது என்கிறது.

சிமியோன் (யாக்கோபுவின் மகன்)

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சிமியோன் (Simeon; எபிரேயம்: שִׁמְעוֹן /ˈsɪmiən, தற்கால Shim'on திபேரியம் Šim‘ōn) யாக்கோபுவினதும் லேயாவினதும் இரண்டாவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய சிமியோன் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர். ஆயினும், இக்குலம் விவிலியத்தின் குறைவாக இடம்பிடித்துள்ளனர். மேலும், சில விவிலிய அறிஞர்கள் சிமியோன் குலமாக இல்லை என நினைக்கின்றனர்.

சூன் 8

சூன் 8 (June 8) கிரிகோரியன் ஆண்டின் 159 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 160 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன.

செபுலோன்

செபுலோன் (Zebulun, Zebulon, Zabulon அல்லது Zaboules எபிரேயம்: זְבֻלוּן, זְבוּלֻן, זְבוּלוּן, எபிரேயம் Zevulun/Zvulun) என்பவர் தொடக்க நூல், எண்ணிக்கை நூல் என்பன குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஆறாவது மகனும் லேயாவின் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய செபுலோன் கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர்.

தாண் (விவிலியம்)

தாண் (Dan, எபிரேயம்: דָּן; பொருள்: "நீதி" அல்லது "அவர் நீதி செய்தார்") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஐந்தாவது மகனும் பில்காவின் முதலாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய தாண் கோத்திரத்தின் தந்தையாவார்.விவிலியம் குறிப்பிடுவதன்படி, இவருடைய தாய் ராகேலின் பணிப்பெண்னாக இருந்து, யாக்கோபுவின் மனைவியானார்.(Genesis 30:1-6)

தொடக்க நூல் 46:23 இன்படி, சிம்சோன் தாண் குலத்தவராவார்.

பில்கா

பில்கா (Bilhah; בִּלְהָה "தடுமாற்றம்; கூச்சம்", எபிரேயம்: Bilha) தொடக்க நூல் குறிப்பிடும் ஒரு நபராவார் (Genesis 29:29). அதில் அவர் லாபானின் பணிப்பெண் என்றும், ராகேலுக்கு பணிப்பெண்ணாக ராகேல் யாக்கோபுவைத் திருமணம் செய்யும்போது கொடுக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராக்கேல் குழந்தை இல்லாது இருக்கும்போது, பிள்ளை பெறுவதற்காக யாக்கோபுவின் மனைவியாக ராக்கேல் மூலம் கொடுக்கப்பட்டார் (Genesis 30:3-5). பில்கா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை ராக்கேல் தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு தாண், நப்தலி எனப் பெயரிட்டார் (Genesis 30:6-8, 35:25). தொடக்க நூல் (Genesis 35:22) பில்காவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.

பெஞ்சமின்

யூத, கிறித்தவ, இசுலாமிய பாரம்பரியத்தின்படி, பெஞ்சமின் அல்லது புன்யாமீன் (Benjamin) யாக்கோபுவின் பதின்மூன்று பிள்ளைகளில் (12 ஆண்கள், 1 பெண்) கடைசிப் பிள்ளையும், ராகேலின் இரண்டாவதும் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய பெஞ்சமின் கோத்திரத்தின் தந்தையாவார். விவிலியம் கூறுவதன்படி, ராகேலின் முதற்பிள்ளை யோசேப்பு போலல்லாது பெஞ்சமின் கானானில் பிறந்தார்.

மிஸ்டர் ரோமியோ

மிஸ்டர் ரோமியோ 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவாவும், சில்பா செட்டியும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளனர்.

யாக்கோபு

யாக்கோபு (ஆங்கிலம்: Jacob; ; எபிரேயம்: יַעֲקֹב;Yaʿăqōḇ ; கிரேக்க மொழி: Ἰακώβ; அரபு மொழி: يَعْقُوب), மற்றும் கடவுளுடன் போராடியவர் எனப் பொருளுள்ள இசுரேல் (எபிரேயம்: יִשְׂרָאֵל; அரபு மொழி: إِسْرَائِيل) எனப்படும் இவர் எபிரேய விவிலியம், தல்மூட், புதிய ஏற்பாடு, திருக்குர்ஆன் என்பவற்றில் குறிப்பிடப்படும் மூன்றாவது பிதாப்பிதா ஆவார். இவர் மூலமே கடவுள் இசுரவேலர்களின் முன்னோரான எபிரேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். இவருக்கு பின்பு வழங்கப்பட்ட பெயரான இசுரேல் என்பதிலிருந்து இவருடைய சந்ததியினர் இசுரேலியர் என அழைக்கப்பட்டனர்.

யோசேப்பு (யாக்கோபுவின் மகன்)

யோசேப்பு (ஆங்கிலம்:Joseph; எபிரேயம்: יוֹסֵף‎, ஒலிப்பு: Yôsēp̄; "யாவே சேர்த்துத் தருவாராக"; அரபு மொழி: يوسف, Yūsuf ) என்பவர் எபிரேய விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபராவார். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுவின் வழிமரபினர்கள் கானான் நாட்டிலிருந்து வெளியேறி எகிப்தில் குடிபுகும் நிகழ்வு இவர் எகிப்தில் ஆளுநராக இருந்த போது நிகழ்ந்தது. பின்நாட்களின் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைப்பட இது வழிவகுத்தது.

விவிலியத்தின் தொடக்க நூலின் படி யாக்கோபுவின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். ராகேலின் முதல் மகனும் ஆவார். இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். ஆனாலும் இவர் படிப்படியாக எகிப்தில் பாரோவுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்தார். உலகெங்கும் கொடிய பஞ்சம் வந்த போது இவர் எகிப்து நாட்டில் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை இவர் பாரோவின் அனுமதியோடு தன் சகோதரர்களுக்கு உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.

ராகேல்

ராகேல் (Rachel; எபிரேயம்: רָחֵל, தற்கால Rakhél திபேரியம் Rāḥēl) என்பவர் பிதாப்பிதாவான யாக்கோபுவினுடைய இரு மனைவியர்களுள் அவருடைய விருப்பத்திற்கு உரியவரும், பன்னிரு இசுரயேலர் குலங்களில் இரண்டின் தந்தையர்களான யோசேப்பு, பெஞ்சமின் ஆகியோரின் தாயும் ஆவார். "ராகேல்" எனும் பெயரின் பாவனையற்ற மூலத்திலிருந்து பொருள் தருகிறது. அப்பெயரின் மூல அர்த்தம் "பெண் செம்மறியாட்டின் பயணத்திற்கேற்ற நல்லதொரு பயணி" என்பதாகும். ராகேல் லாபானின் மகளும், யாக்கோபுவினுடைய முதல் மனைவியாகிய லேயாளின் தங்கையுமாவார்.

ரூபன் (விவிலியம்)

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கிலம்:Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.

லேயா

லேயா (Leah; எபிரேயம்: לֵאָה, தற்கால Le'a திபேரியம் Lēʼā ISO 259-3: Leˀa)) என்பவர் யாக்கோபுவின் முதல் மனைவியும் பன்னிரண்டு இசுரயேலர் குலத்தவர்களின் தந்தையர் அறுவரின் தாயும், தீனாவின் என்ற பெண் பிள்ளையின் தாயும் ஆவார். லேயா லாபானின் மகளும், ராக்கேலின் தமக்கையும் ஆவார்.

தோரா லேயாளை அறிமுகப்படுத்துகையில் "லேயா மங்கிய பார்வை உடையவள்" எனக் குறிப்பிடுகிறது (எபிரேயம்: ועיני לאה רכות‎) (Genesis 29:17).

பிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)
லேயா
ராகேல்
பில்கா (ராகேலின் பணிப்பெண்)
சில்பா (லேயாவின் பணிப்பெண்)

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.