சாலமோன்

சாலமோன் (ஆங்கிலம்:Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה(Shlomo), அரபு மொழி: سليمان‎ (Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn)) என்பவர் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரசனின் மகனும் ஆவார்.

சாலமோன் அரசர்
இஸ்ரயேலின் அரசர்
Åhus kyrka-07
முன்னிருந்தவர்தாவீது
பின்வந்தவர்ரெகபெயாம்
வாரிசு(கள்)ரெகபெயாம்
மரபுதாவீதின் வழி
தந்தைதாவீது
தாய்பத்சேபா
பிறப்புஎருசலேம்
இறப்புஎருசலேம்

விவிலியக் குறிப்புகள்

1 அரசர்கள், 1 குறிப்பேடு,[1] என்னும் விவிலிய நூல்கள் சாலமோனை ஒன்றிணைந்த யூதா-இசுரயேல் நாட்டின் அரசராக அடையாளம் காட்டுகின்றன. யூத சமய நூலாகிய தால்முத் சாலமோனை 48 இறைவாக்கினருள் ஒருவராகக் கருதுகிறது.[2] சாலமோன், தாவீது அரசருக்கும் பத்சபா என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.[3] சாலமோனின் தந்தை தாவீது வட பகுதியாகிய இசுரயேலையும் தென் பகுதியாகிய யூதாவையும் வலுவான அரசாக மாற்றினார். அவருக்கு முன் சவுல் இசுரயேலின் முதல் அரசராக இருந்தார். இவ்வாறு, சாலமோன் ஒன்றிணைந்த அரசின் மூன்றாவது, மற்றும் கடைசி அரசர் ஆனார்.

சாலமோனின் ஆட்சிக்குப் பின் வட நாடு இசுரயேல் என்றும், தென்னாடு யூதா என்றும் தனித்தனியாகப் பிரிந்தன.

குர்ஆன் சாலமோனை முதன்மையான இறைவாக்கினராக சுலைமான் நபி கருதுகின்றது. சாலமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.

சாலமோனின் சிறப்பு

சாலமோன் தன் நாட்டின் தலைநகராகிய எருசலேமில் கடவுளுக்கு புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது "முதல் கோவில்" (First Temple) என்று அழைக்கப்படுகிறது.[3]. மேலும், விவிலியம் சாலமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).

König Salomon empfängt die Königin von Saba (Antwerpen 17 Jh)
அரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.

சாலலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.

சாலமோன் ஆட்சிக்காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.[4]

சாலமோனின் வாரிசு

சாலமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43). சாலமோன் வழிமரபில் வந்த யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

உசாத்துணை

  1. http://www.jstor.org/pss/1517303
  2. Rashi to Megillah 14a
  3. 3.0 3.1 Barton, George A. "Temple of Solomon". Jewish Encyclopedia. New York, NY.: Funk & Wagnalls. 98–101. DOI:10.1038/2151043a0. அணுகப்பட்டது 2007-05-15.
  4. Peter J. Leithart, A House for My Name, 157, Canon Press, 2000. ISBN 978-1-885767-69-1
1 அரசர்கள் (நூல்)

1 அரசர்கள் (1 Kings) / 1 இராஜாக்கள் என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 அரசர்கள் என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

அகாமனிசியப் பேரரசு

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya, ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது. இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.

இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.

மேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

ஆப்பெழுத்து

ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது. ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின.

ஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன.

ஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது.

பட எழுத்து முறையிலிருந்து ஆப்பெழுத்துக்கள் உருவான வளர்ச்சிப் படிகளைக் காட்டும் படம்.

இனிமைமிகு பாடல் (நூல்)

இனிமைமிகு பாடல் (Song of Songs/Canticle of Canticles) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

எருசலேம் கோவில்

எருசலேம் கோவில் (Temple in Jerusalem) என்பது பழைய எருசலேம் நகரில், முன்னாட்களில் "கோவில் மலை" (Temple Mount) என்றும், இந்நாட்களில் அல்-அக்சா மசூதி அமைந்துள்ள இடமாகவும் உள்ள பகுதியில் வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்பட்ட வழிபாட்டுக் கட்டடங்களைக் குறிக்கும்.

கானான்

கானான் (Canaan; ; வடமேற்கு செமிடிக் மொழிகள்: knaʿn; Phoenician: 𐤊𐤍𐤏𐤍; விவிலிய எபிரேயம்: כנען / Knaʿn; [Masoretic]: כְּנָעַן / Kənā‘an) பழங்காலத்தில் இருந்த ஓர் நாடாகும். இது, விவிலியத்தின்படி கடவுள் ஆபிரகாமுக்கும் அவர்தம் மக்கட்கும் உறுதியளித்திருந்த நிலப்பகுதியாகும். பொது ஊழி 2000 முதல் விவிலியம் உருவாகும் வரை இங்கு வாழ்ந்த மக்கள் கானானியர் எனப்பட்டனர். தற்கால இசுரேல், லெபனான் நாடுகளின் பெரும்பகுதியை இந்நிலப்பகுதி உள்ளடக்கியிருந்தது.

கானானியர் எனும் சொல் விலியத்தில் இனத்தைக் குறிக்க அதிமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிங் (திரைப்படம்)

கிங் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாலமோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், ஸ்னேகா, வடிவேல், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்தார்.

கில்கமெஷ் காப்பியம்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சாமர்ரா

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.

சாலமோனின் கோவில்

சாலமோனின் கோவில் (Temple of Solomon) என்பது பண்டைய எருசலேம் நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் இதுவே என்பதால், இக்கோவிலுக்கு "முதல் கோவில்" (First Temple) என்னும் பெயரும் உண்டு.

பழைய ஏற்பாட்டின்படி, இக்கோவில் இசுரயேலின் மன்னராக ஆட்சிசெய்த சாலமோன் காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.ஒருவேளை, இசுரயேலர் எருசலேமைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.

சுமேரிய கடவுள்கள்

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.

சுமேரிய மொழி

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.

சுமேரியர்களின் மதம்

சுமேரியன் மதம் என்பது பண்டைய சுமர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக இருந்தது. சுமேரியர்கள் தெய்வீகத்தன்மை என்பது அனைத்து பொருட்களிலும் இருப்பதாகவும், அண்ட சக்தியின் மூலம் அதனை பணிவை வெளிப்படுத்துவதன் பெறலாம் என நம்பியிருந்தனர் அவைகளாவன மரணம் மற்றும் தெய்வீக கோபம்.

டைகிரிசு ஆறு

டைகிரிசு ஆறு (Tigris) பண்டைய நாகரிகப் பகுதியான மெசொப்பொத்தேமியாவை வரையறுக்கும் சிறப்பு வாய்ந்த இரண்டு ஆறுகளில் கிழக்குப் புறமாக உள்ள ஆறு. மற்றது இயூபிரட்டீசு ஆறு ஆகும். தென்கிழக்குத் துருக்கியின் மலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு தெற்கு நோக்கி ஓடி ஈராக்கினூடாகச் செல்கிறது. இவ்வாற்றின் அரபுப் பெயர் திஜ்லா. இராக்கில் இதனைத் திஜ்லா என்றே அழைக்கின்றனர்.

தழும்பழி

தொல்லியலில் தழும்பழி (Acheulean) என்பது கல்லாயுதங்களின் உற்பத்தி முறை சார்ந்த ஒரு வகையைக் குறிக்கும்.இவ்வகைக் கல்லாயுத உற்பத்தி முறையை கீழைப் பழங்கற்கால மக்கள் உபயோகித்த நீள்வட்ட வடிவ அல்லது பேரிக்காய் வடிவம் கொண்ட கோடரிகள் குறிக்கின்றன. முதலில் கீழைப் பழங்கற்கால மக்கள் தழும்புரி என்னும் செப்பனிடப்படாத ஆயுதங்களை உபயோகித்தனர்.

பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை (தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு) அழித்து அவற்றைத் தழும்புகள் இல்லாதவாறு உருவாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.

தழும்பழி ஆயுதங்கள் கீழைப் பழங்கால ஆப்பிரிக்கா, பெரும்பலான மேற்காசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டன. இவை பொதுவாக ஓமோ இரக்டசு இனத்தின் எச்சங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன.

திராய்

திராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

நீதிமொழிகள் (நூல்)

நீதிமொழிகள் (Book of Proverbs) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

யூதர்

யூதர் (எபிரேயம்: יְהוּדִי, யெகுடி (ஒருமை) יהודים யெகுடிம் (பன்மை), ஆங்கிலம்: Jew, Jews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது . இவர்களில் 42.5 வீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 வீதமானோரும் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).

சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல் (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எபிரேய விவிலிய இறைவாக்கினர்கள்
முன் குலமுதல்வர்கள் (விவிலியம்)
குலமுதல்வர்களும் குலமுதல்விகளும்
தோராவில் இசுரேலிய இறைவாக்கினர்கள்
நவீம் குறிப்பிடும் இறைவாக்கினர்கள்
பெரிய இறைவாக்கினர்கள்
சிறிய இறைவாக்கினர்கள்
நோவாவியல் இறைவாக்கினர்கள்
ஏனைய இறைவாக்கினர்கள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.