சர்வாதிகார ஆட்சி

     சர்வாதிகார ஆட்சி என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் ஒரு அரசாங்கம் மூலமாக முழு அதிகாரத்துடன் கடுமையான விதிகள் விதிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு தனிமனிதனாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவாகவோ இருந்து ஒரு சமுதாயத்தின் மரியாதை மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதே சா்வாதிகார ஆட்சி எனப்படும்.
   எதேச்சதிகாரம் என்பது மக்கள் அல்லது தாழ்ந்த நிலையில் உள்ளவா;களை ஒடுக்குவதற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறவர்களுக்கு பொருத்தமாக அமைகின்றது. மேலும் குறிப்பாக எதேச்சதிகாரம் என்பது பெரும்பாலும் நாட்டை ஆளும் மன்னா் மற்றும் மாநில அல்லது அரசாங்க தலைவருக்கு பொருந்தும். இந்த அர்த்தத்தில் ஆராய்ந்தால் இது கொடுங்கோன்மைக்கு உரியது மற்றும் சர்வாதிகாரியுடனான உறவுகளுடன் தொடர்புடையது

பெயராய்வு :

   ஆங்கில அகராதியில் சர்வாதிகாரத்தை “நிராகரிப்பின் ஆட்சி மற்றும் முழு அதிகாரத்தின் செயல்பாடாக” வரையறுக்கிறது. டெஸ்போட் என்பது கிரேக்க வார்த்தையான டெஸ்போட்ஸ் என்பதிலிருந்து வருகிறது. அதாவது “அதிகாரம் செலுத்துபவா் அல்லது அதிகாரத்துடன் கூடிய ஒன்று”. வரலாறு முழுவதும் பல கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களை விவரிப்பதற்கு இந்த சொல்லை பயன்படுத்தப்படுகிறது. இது பண்டைய எகிப்தின் பார்வோர்களால் செய்யப்படும் முழு அதிகாரத்தையும் உறுதிப்படுத்தியது. பைசண்டைன் நீதிமன்றங்களில் பிரபுத்துவத்தை அடையாளப்படுத்தியது. பைசண்டைன் வஸால் மாநிலங்களின் ஆட்சியாளர்களை நியமித்தது. மேலும் பைசண்டைன் பேரரசர்களின் தலைப்பாக செயல்பட்டது. கிரேக்க செல்வாக்கு பெற்ற சூழல்களில், இந்த சொல்லை ஒரு கௌரவமான ஒரு மரியாதைக்குரியதாக சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

சா்வாதிகார ஆட்சியாளா்கள் :

பெனிட்டோ அமில்காா் அன்டியா முசோலினி (1883 ஜுலை 29 - 1945 ஏப்ரல் 28):

     பெனிட்டோ அமில்காா் அன்டியா முசோலினி என்ற முழுப்பெயா; கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922-1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவா். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சா்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினாா். அரச கட்டமைப்புகளையும், தனியாா் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளா்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை மூலமாக பாசிச அரசை உருவாக்கி பேணினா். ஹிட்லருடன் சோ்ந்து இரண்டாம் உலகப்போாின் போது நேசநாடுகளுக்கு எதிராக போாிட்டு தோற்றுப்போனா். ஏப்ரல் 1945இல் முசோலினி தம் மனைவி கிளாரா பெடடாசியுடன் சுவிட்சா்லாந்துக்கு தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பாா்ட்டிசான்காளால் பிடிபட்டு பின்னா் அவரும், அவாின் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனா். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தல் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டது. இவ்வாறு முசோலினியின் சா்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

அடால்ப் ஹிட்லா; (1889 ஏப்ரல் 20 - 1945 ஏப்ரல் 30) :

     அடால்ப் ஹிட்லா் ஜொ்மனியின் நாசிசக்கட்சியின் தலைவராக விளங்கயவா். அவா் 1933 ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டாா். பின்னா் 1934-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் தலைவரானாா். 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டாா். ஹிட்லா் ஜொ்மனி நாட்டின் ஃபியுரா் என அழைக்கப்பட்டாா். இரண்டாம் உலகப்போாின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜொ்மன் தலைநகா் பொ்லினில் ஹிட்லாின் நாசிப்படைகள் வீழ்ச்சியடைந்தது. இரண்டாம் உலகப்போாில் ஹிட்லாின் படைகள் தோல்வியடைந்தது. செம்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவருடைய மனைவியும் தற்கொலை செய்துகொண்டாா் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புகள் :

References[edit source]

Despotism. archive.org (film documentary). Prelinger Archives. Chicago, IL: Encyclopædia Britannica, Inc. 1946. OCLC 6325325. Retrieved 2015-01-27.

"Are dictators ever good?". the Guardian.

"The definition of despotism". dictionary.com. Retrieved 15 August 2016.

See: Politics (Aristotle) 7.1327b [1]

Boesche, Roger (1990). "Fearing Monarchs and Merchants: Montesquieu's Two Theories of Despotism". The Western Political Quarterly. 43 (4): 741-61. JSTOR 448734. doi:10.1177/106591299004300405.

WordNet Search - 3.0[dead link]

World History, Spielvogel J. Jackson. Glencoe/McGraw-Hill, Columbus, OH. p. 520

Montesquieu, "The Spirit of Laws", Book II, 1.

ஆட்சி

ஆட்சி (ஒலிப்பு ) ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆண்டின் மனிதர் (டைம் இதழ்)

ஆண்டின் மனிதர் (Person of the Year) என்னும் விருது, புகழ்பெற்ற "டைம் வார இதழ்" (டைம் (இதழ்)) என்னும் வெளியீட்டின் நிர்வாகத்தால் ஒவ்வோர் ஆண்டும் உலகில் தம் செயல்பாட்டால் நல்லதுக்கோ தீயதுக்கோ பேரளவில் அறியப்பட்ட மனிதர்கள், குழுக்கள், கருத்துகள், கருவிகள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பட்டத்தையும் அதையொட்டி வெளியிடப்படும் சிறப்பிதழையும் குறிக்கிறது.

ஆஸ்கார் ரொமெரோ

ஆஸ்கார் ரொமெரோ (15 ஆகஸ்ட் 1917 – 24 மார்ச் 1980) என்பவர் எல் சால்வடோரில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராகப்பணியாற்றியவர் ஆவார். இவர் பணியில் இருந்த போதே தம் நாடான எல் சால்வடோரில் நிலவிய வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, சர்வாதிகார ஆட்சி, படுகொலைகள் மற்றும் வதைப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இதனால் 1980இல் இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது இராணுவக் கூலிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1997இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவருக்கு இறை ஊழியர் மட்டமளித்தார். இவர் பலராலும் அமெரிக்காக்கள், குறிப்பாக எல் சால்வடோரின் பாதுகாவலராகக்கருதப்படுகின்றார்; கத்தோலிக்கத்திருச்சபைக்கு வெளியே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் ஒரு சில லூத்தரனியப்பிரிவுகளில் இவர் புனிதரென ஏற்கப்படுகின்றார்.

இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் மேற்கு வாயிற்கதவின்மேல் சித்தரிக்கப்பட்டுள்ள நான்கு 20ம் நூற்றாண்டின் மறைசாட்சியருள் இவரும் ஒருவர். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய செய்தி ஏடான A Different View, இவரை உலக மக்களாட்சியின் 15 வீரர்களுள் ஒருவர் (15 Champions of World Democracy) எனப்பட்டியல் இட்டது.இவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு 4 சனவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்தார்.

இடி அமீன்

இடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.

உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது.

உகான்டு கான்

தோகோன் தெமுர் (மொங்கோலியம்: Тогоонтөмөр, டோகூன் டோமோர், 25 மே 1320– 23 மே 1370), வடக்கு யுவான் வம்சத்தால் மங்கோலியாவில் கொடுக்கப்பட்ட பேரரசர் ஹுயிசோங் (சீனம்: 惠宗) என்கிற கோயில் பெயராலும் அழைக்கப்படுகிற இவர் யுவான் வம்சப் பேரரசர் குசாலாவின் மகன் ஆவார். இவர் இறப்பிற்குப் பிறகு சீனாவின் மிங் வம்ச பேரரசர் ஹோங்வுவால் கொடுக்கப்பட்ட சண்டி (சீனம்: 順帝) என்கிற பெயராலும் அழைக்கப்படுகிறார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசின் கடைசி ககான் ஆகக் கருதப்படுகிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.இவரது ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், மங்கோலியா மங்கோலியர்கள் வசமே இருந்தபோதிலும் யுவான் ஆட்சியானது சிவப்பு டர்பன் கலகத்தால் தூக்கியெறியப்பட்டு மிங் வம்ச ஆட்சி தொடங்கியது.

பேரரசர் ஹுயிசோங் கர்மபாக்களின் (திபெத்திய புத்த மதத்தின் கர்மா கியாகு பள்ளியின் தலைவர்கள்) புத்த மாணவராவார், மற்றும் தை சிதுபாக்களின் முந்தைய அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் குறிப்பிடத்தக்க வகையில் ஜோனாங் அறிஞர் டொல்போபா ஷெரப் கியல்ட்சனை தனக்குக் கற்பிப்பதற்காக அழைத்தார், ஆனால் மறுக்கப்பட்டார்.

எசுப்பானிய உள்நாட்டுப் போர்

எசுப்பானிய உள்நாட்டுப் போர் என்பது, இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அரசுக்கு எதிராக அதன் படையினரில் ஒரு பகுதியினர் நடத்திய சதிப்புரட்சி முயற்சியின் விளைவாக எசுப்பெயினில் ஏற்பட்ட பெரிய உள்நாட்டுப் போரைக் குறிக்கும். இது 1936 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் தொடக்கம் 1939 ஏப்ரல் 1 ஆம் நாள் வரை எசுப்பெயின் நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது. இது புரட்சியாளர் வெற்றி பெற்றதுடன் முடிவுக்கு வந்தது. பாசிஸ்ட் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. இப் போரில் தோல்வியடைந்த அரசு தரப்பினருக்கு சோவியத் ஒன்றியமும், மெக்சிக்கோவும் ஆதரவு அளித்தன. புரட்சியாளர்களுக்கு இத்தாலி, ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இருந்தது. இது இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியிருந்தது. இது கம்யூனிச சோவியத் ஒன்றியத்துக்கும்; பாசிச இத்தாலி, நாசி ஜேர்மனி ஆகியவற்றுக்கும் இடையிலான மறைமுகப் போராகவே நடைபெற்றது. மக்கள் ஊடகங்களின் வருகையினால் இப்போர் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உலகின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம், உலக அரசியல் பிரிவினைகளும், இது தரப்பாரும் நடத்திய அட்டூழியங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

எல்லா உள்நாட்டுப் போர்களையும் போலவே இதிலும், குடும்ப உறுப்பினர்களும், அயலவர்களும், நண்பர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. போராளிகள் மட்டுமன்றிப் பொது மக்களும் அவர்களது அரசியல், சமய நோக்குகள் காரணமாக இரு தரப்பினராலும் கொல்லப்பட்டனர். 1939 இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் குடியரசு ஆதரவாளர்கள் வெற்றிபெற்ற தேசிய வாதிகளால் அவ்வப்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர்.

எசுப்பானியா

எசுப்பானியா (Spain, (listen) ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ( கேட்க)) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.

இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் எசுப்பானிய மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.

எசுப்பானியா, அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்ற முறையில் அமைந்ததுமான ஒரு குடியரசு நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது ஐக்கிய நாடுகள் அவை, நேட்டோ, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.

எதுவார்தோ காலியானோ

எதுவார்தோ காலியானோ (Eduardo Hughes Galeano, செப்டம்பர் 3, 1940 - ஏப்பிரல் 13, 2015) இலத்தின் அமெரிக்க நாடுகளின் முன்னணி எழுத்தாளர், புதின ஆசிரியர், இதழாளர் எனக் கொண்டாடப்படும் அறிஞர் ஆவார். உருகுவை நாட்டினரான இவர் சோசலிசம், தேசிய இன மக்கள் விடுதலை ஆகியவற்றைப் பரப்பியவர். ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.

சர்வாதிகாரம்

சர்வாதிகாரம் என்பது நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசு வடிவம் ஆகும். இதில் ஆட்சியாளர் ஒரு சர்வாதிகாரியாகச் செயல்படுவார். கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ரோமச் சர்வாதிகாரிகள் தொடர்பில், சர்வாதிகாரி என்பதன் பொருள் சற்று வேறானது. அக்காலத்தில் ரோமச் சர்வாதிகாரி என்பது, ரோமக் குடியரசின் ஒரு அரசியல் பதவி. நெருக்கடிநிலைக் காலங்களில் மட்டுமே இவர்களுக்கு முழுமையான அதிகாரம் இருக்கும். பிற காலங்களில் இவர்களது அதிகாரம் தன்விருப்பிலானதோ அல்லது பொறுப்பற்றதோ அல்ல. இவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். எனினும், கிமு 2 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்துக்குப் பின் வந்த ரோமச் சக்கரவர்த்திகள் அதிகாரத்தைத் தனிப்பட்டமுறையில் பயன்படுத்தியதுடன் தன்விருப்பாகவும் செயல்பட்டனர்.

தற்காலப் பயன்பாட்டில் சர்வாதிகாரம் என்பது நினைத்தபடி செயலாற்றும் அதிகாரம் கொண்டதும், சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ, நாட்டுக்குள் இருக்கும் வேறெந்த சமூக அரசியல் காரணிகளுக்கோ கட்டுப்படாததுமான தலைமையைக் கொண்டிருக்கும்.

சில அறிஞர்கள், சர்வாதிகாரம் என்பது ஆளப்படுபவர்களின் இசைவு இன்றி ஆளுவதற்கான அதிகாரம் கொண்ட ஒரு அரசு வடிவம் என வரைவிலக்கணம் கூறுகின்றனர். வேறு சிலரோ இதை, "மக்களின் பொது நடத்தைகளினதும், தனிப்பட்ட நடத்தைகளினதும் ஏறத்தாழ எல்லா அம்சங்களையும் நெறிப்படுத்துகின்ற ஒரு அரசு" என்கின்றனர்.

ஜயாது கான்

ஜயாது கான் (மொங்கோலியம்: Заяат хаан, ஜயயடு கயன், 1304–1332), இயற்பெயர் துக் தெமுர், வென்சோங் (யுவானின் வென்சோங் பேரரசர், சீனம்: 元文宗, 16 பிப்ரவரி 1304 – 2 செப்டம்பர் 1332) என்கிற கோயில் பெயராலும் அழைக்கப்படுகிற இவர், யுவான் வம்சத்தின் ஒரு பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசு அல்லது மங்கோலியர்களின் 12வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது.

13 அக்டோபர் 1328 ஆம் ஆண்டு முதல் 3 ஏப்ரல் 1329 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவர் ஆட்சி செய்தார். இவரது சகோதரர் குடுக்டு கான் குசலாவுக்கு ஆதரவாகப் பதவியைக் கைவிட்டுவிட்டு, பின் மீண்டும் 8 செப்டம்பர் 1329 முதல் 2 செப்டம்பர் 1332 வரை குடுக்டு கான் குசலா மரணம் அடைந்தபின்னர் பதவிவகித்தார்.

இவரது தந்தையின் விசுவாசமான கலகக்காரர்கள் காரணமாக, துக் தெமுர் கயிசன் வழித்தோன்றல்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார்; ஆனால் இவரது மூத்த சகோதரர் குசலாவின் குடும்பத்தைத் துன்புறுத்தி, பின்னர் அதற்காக வருத்தம் கொண்டார். இவரது பெயருக்கு மங்கோலியா மொழியில் “ஆசீர்வதிக்கப்பட்ட/அதிர்ஷ்டமான கான்” என்று பொருள்.

துக் தெமுர் ஆட்சியில் பல கலாச்சார நிகழ்ச்சிகள் தழைத்தோங்கின, இவரும் கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், மற்றும் தரமான நூல்களை வாசித்தல் போன்றவற்றைச் செய்தார். இவரது மிகவும் திறமையான கவிதை மற்றும் கைப்பிரதி எடுத்துக்காட்டுகள் இன்றளவும் உள்ளன. இவர் ‘’தி இம்பீரியல் டைனஸ்டீஸ் கிரான்ட் இன்ஸ்டிடியூசன்ஸ் ஃபார் மேனேஜிங் த வேர்ல்ட்’’ என்ற தொகுப்பைத் தொகுக்க ஆணையிட்டு மேற்பார்வையும் செய்தார்; இந்த உரை தயாரிப்பு மூலம், இவர் தனது ஆட்சியை புதிய தொடக்கமாக அறிவித்தார், இது நிர்வாக நடைமுறைகள் மற்றும் கடந்தகால விதிகள் ஆகியவற்றின் பங்குகளை எடுத்துக் கொண்டு, மங்கோலிய வம்ச ஆட்சி முறையில் ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்நோக்கியது. ஆனால் இவருடைய ஆட்சி சிறிது காலமே இருந்தது, இவருடைய நிர்வாகமானது, 1328 ஆம் ஆண்டில் இவருக்கு பதவி கிடைக்க உதவிய கிப்சக்கியரான எல் தெமுர் மற்றும் மெர்கிட் இனத்தைச் சேர்ந்த பயன் போன்ற சக்தி வாய்ந்த அமைச்சர்களின் கைகளில் இருந்தது.

திருத்தந்தை பிரான்சிசு

திருத்தந்தை பிரான்சிசு (, ; ஆங்கிலம்:Francis இலத்தீன்: Franciscus இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி. 17 டிசம்பர் 1936) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.

தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 913இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.

இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன.

நிறைவேற்றுப் பிரிவு (அரசு)

அரசறிவியலில், நிறைவேற்றுப் பிரிவு என்பது, அரசொன்றின் அன்றாட நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரமும் பொறுப்பும் கொண்ட அவ்வரசின் ஒரு பிரிவாகும். அதிகாரத்தை அரசின் வெவ்வேறு பிரிவுகளுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பது "அதிகாரப் பிரிப்பு" என்னும் மக்களாட்சியின் மைய எண்ணக்கரு ஆகும்.

பல நாடுகளில் அரசு என்பது நிறைவேற்றுப் பிரிவையே குறிக்கிறது. அரசின் பல்வேறு அதிகாரக்கள் ஒருவரிடமே குவிந்திருக்கும் வல்லாண்மை முறை, முழுமையான முடியாட்சி போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில், நிறைவேற்றுப் பிரிவு என்று தனியாக ஒன்று இருப்பதில்லை. ஏனெனில் சம அளவான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வெவேறு அரசின் பிரிவுகளுக்கான தேவை எதுவும் இருப்பதில்லை.

அதிகாரப் பிரிப்பு என்பது அரசின் அதிகாரத்தை நிறைவேற்றுப் பிரிவுக்கு வெளியே பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். வரலாற்றில் பல முறை நிகழ்ந்ததுபோல் அரசுத்தலைவர்கள் கொடுங்கோன்மை ஆட்சி நடத்துவதைத் தவிர்த்து மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பது இப் பகிர்வின் ஒரு நோக்கமாகும். நிறைவேற்று அதிகாரிக்குச் சட்டங்களை ஆக்கும் அல்லது அவற்றை விளக்கும் அதிகாரமோ பொறுப்போ கிடையாது. சட்டங்களை ஆக்கும் அதிகாரமும் பொறுப்பும், சட்டவாக்க சபைக்கும், அதனை விளக்கும் அதிகாரமும் பொறுப்பும் நீதித் துறைக்கும் உரியது. சட்டவாக்கசபையினால் ஆக்கப்படுவனவும், நீதித்துறையால் விரித்து விளக்கப்படுவனவுமான சட்டங்களை நிறைவேற்றுவதே நிறைவேற்றுப் பிரிவின் பங்களிப்பு ஆகும்.

பார்க் சுங்-கீ

பார்க் சுங்-கீ (ஆங்கிலம்:Park Chung-hee) 1917 நவம்பர் 14 - 1979 அக்டோபர் 26) என்பவர் தென் கொரிய அரசியல்வாதி ஆவார். அவர் 1963 முதல் 1979 இல் அவர் படுகொலை செய்யப்படும்வரை தென் கொரியா அதிபராக இருந்தவர். இராணுவப் புரட்சி மூலம் நாட்டின் தலைவராக உருவெடுத்தார். இவர் அதிபர் பதவிக்கு முன்னர், தென் கொரிய இராணுவத்தில் இராணுவத் தலைவராக பணியாற்றிய பின்னர் 1961 முதல் 1963 வரை தேசிய புனரமைப்புக்கான உச்ச சபையின் தலைவராக இருந்தார்.

தென் கொரியாவை வளர்ந்த நாடுகளுக்குள் கொண்டுவர முயன்ற பார்க், தொடர்ச்சியான பொருளாதாரக் கொள்கைகளில் தீவரம் காட்டியதின் விளைவாக விரைவான பொருளாதார வளர்ச்சியையும் தொழில்மயமாக்கலையும் தேசத்திற்கு கொண்டு வந்தது, அது இறுதியில் ஆன் ஆற்றின் அதிசயம் என்று அறியப்பட்டது. இதன் விளைவாக 60 மற்றும் 70 களில் தென் கொரியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக மாறியது.

பார்க் இறந்த பின்னரும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது, இறுதியில் நாடு சனநாயகப்படுத்தப்பட்டது. நவீன தென் கொரிய அரசியல் உரையாடலிலும், பொதுவாக தென்கொரிய மக்களிடையே அவரது சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயக விரோத வழிகளிலும் பார்க் ஒரு சர்ச்சைக்குரிய நபராக உள்ளார். தென் கொரியாவை மறுவடிவமைத்து நவீனமயமாக்கிய ஆன் நதியில் அதிசயத்தைத் தக்கவைத்ததற்காக சிலர் அவருக்கு பெருமை சேர்த்தாலும், நாட்டை ஆளும் மற்றவர்கள் அவரது சர்வாதிகார வழியை விமர்சிக்கின்றனர் (குறிப்பாக 1971 க்குப் பிறகு).

பிரெஞ்சுப் புரட்சி

பிரெஞ்சுப் புரட்சி (French Revolution, பிரெஞ்சு: Révolution française; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் (inalienable rights) போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர்.

1789 இல் ஸ்டேட் ஜெனரல் (பிரெஞ்சு பாராளுமன்றம்) கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்களெனப் பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம்மூலம் கொல்லப்பட்டனர். குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப் போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின் சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. பின் 1799 வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் நெப்போலியன் பொனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றிச் சில ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார்.

நவீன வரலாற்று யுகத்தின் வளர்ச்சியில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு பெரியது. குடியரசு ஆட்சிமுறை, புதிய அரசியல் கொள்கைகள், தாராண்மிய மக்களாட்சி முறை, மதச்சார்பின்மை, ஒட்டுமொத்தப் போர்முறை ஆகியவை பிரெஞ்சு புரட்சியால் உருவாகி வளர்ச்சி பெற்ற விசயங்களுள் அடங்கும். 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்கள் காணக் கிடைக்கின்றன.

மே 28

மே 28 (May 28) கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.

ராணா வம்சம்

ராணா வம்சம் (Rana dynasty) (நேபாளி: राणा वंश, நேபாளத்தை 1846 - 1951 முடிய ஆண்ட, கஸ் ராஜ்புத்திர சர்வாதிகார ராணா வம்சத்தினர் ஆவார். நேபாள இராச்சிய ஷா மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள்.

ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.

இவ்வம்சத்தினர் தங்களை லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.

வேலுத்தம்பி தளவாய்

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765–1809) திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில் தளவாய் மற்றும் படை தளபதியாக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் நாஞ்சில் நாட்டு களரி வீரன் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.