சமாரியா

சமாரியா (Samaria, /sə.ˈmɛr..ə/[1]), or the Shomron (எபிரேயம்: שומרון‎, Standard Šomron Tiberian Šōmərôn ; அரபு மொழி: السامرة, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus ) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் சொல் இசுரேலிய அரசின் தலைநகரான பண்டைய சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

Palestine under the Persians Smith 1915
Samaria (green) within Palestine, under Persian rule

உசாத்துணை

  1. LDS.org: "Book of Mormon Pronunciation Guide" (retrieved 2012-02-25), IPA-ified from «sa-mĕr´ē-a»
  2. Harvard Expedition to Samaria, 1908–1910, ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆமோஸ் (நூல்)

ஆமோஸ் (Amos) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

இசுரயேல் அரசு

இசுரவேல் அரசு என்பது இசுரேலிய வரலாற்று அரசுகள் மற்றும் வரலாற்று மொம்மை அரசுகளைக் குறிக்கும். அவை பின்வருமாறு:

இசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி) (கி.மு. 1020–931), இசுரேலியர்களால் அமைக்கப்பட்டதும், ஓரு தனி அரசரின் கீழ் ஐக்கியமாக்கப்பட்ட அரசு

இசுரவேல் அரசு (சமாரியா) (கி.மு. 931–722 ), வட இசுரேலிய அரசு

யூத அரசு (கி.மு. 931–586), தென் இசுரேலிய அரசு

மக்கபேயர் அரசு (கி.மு. 140-37), மக்கபேயரால் ஆட்சி செய்யப்பட்ட அரசு

ஏரோதிய அரசு, முதலாம் ஏரோதினால் ஆட்சி செய்யப்பட்ட உரோம வாடிக்கை அரசு (கி.மு. 37-4 BCE)

இசுரவேல் அரசு என்பதன் மேலதிக பயன்பாடு:

இசுரேலிய அரசியல் அமைப்பு "இசுரவேல் அரசு" எனும் பெயரைக் கொண்டுள்ளது

இசுரயேல் அரசு (சமாரியா)

எபிரேய விவிலியத்தின்படி, இசுரவேல் அரசு (Kingdom of Israel, எபிரேயம்: מַמְלֶכֶת יִשְׂרָאֵל) என்பது முந்தைய ஒன்றிணைந்த முடியாட்சியினை தொடர்ந்து வந்த அரசுகளில் ஒன்று ஆகும். இது இசுரவேல் அரசு என அழைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட கி.மு. 930கள் முதல் அசிரிய பேரரசினால் 720 களில் வெற்றி கொள்ளப்படும் வரை காணப்பட்டது. இதன் பிரதான நகரங்களாக சிக்கோம், தீர்சா, சம்ரோன், சமாரியா என்பன காணப்பட்டன.

வரலாற்றாசிரியர்கள் யூத அரசிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட தென் அரசு அல்லது சமாரிய அரசு என அழைத்தனர்.

இசுரேல்

இசுரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל‎; யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இசுரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இசுரவேல், இசுரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது. இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின் செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது. அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன. அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது. இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது. இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.

இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட, எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது. இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள், ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.

இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு. இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும். 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.

இயேசுவோடு தொடர்புடைய புதிய ஏற்பாட்டு இடங்கள்

இயேசுவோடு தொடர்புடைய புதிய ஏற்பாட்டு இடங்கள் (New Testament places associated with Jesus) என்னும் தலைப்பின் கீழ் இயேசு பாலத்தீனத்தில் பிறந்து, வளர்ந்து, போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இடங்கள் உட்பட, அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய எகிப்து போன்ற இடங்களும் புதிய ஏற்பாட்டு ஆதாரங்கள் அடிப்படையில் தரப்படுகின்றன.

எலிசா

எலிசா (/ɪˈlaɪʃə/;எபிரேயம்: אֱלִישָׁע, தற்கால Elisha திபேரியம் ʼĔlîšāʻ ; "கடவுள் என் மீட்பு", Greek: Ἐλισσαῖος, Elissaîos or Ἐλισαιέ, Elisaié, Arabic: اليسع Elyasaʻ) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதம் நிகழ்த்திய ஓர் இறைவாக்கினர். இவரைப் பற்றி இசுலாம் மற்றும் பாகாய் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவருடைய பெயர் எபிரேய மொழியின் ஊடாக ஒலிபெயராக "எலிசா" என்று உச்சரிக்கப்படுகின்றது.

ஒசேயா

இறைவாக்கினர் ஓசேயா (/ˌhoʊˈziːə/ or /hoʊˈzeɪə/; கிரேக்கம் Ὠσηέ = Ōsēé) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஒசேயா நூலின் ஆசிரியர் இவர் என நம்பப்படுகின்றது. இவர் 12 சிறு இறைவாக்கினர்களுள் ஒருவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெயேரி ஆவார். சுமார் 60 ஆண்டுகள் இவர் இறைவாக்குரைத்தார். இவர் ஒருவரே இசுரேலிய இறைவாக்கினர்களுல் தனது வாக்குகளை நூல்வடிவில் விட்டுச்சென்றவர் ஆவார்.

ஒசேயா (நூல்)

ஒசேயா (Hosea) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)

கிம் கி-டக் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. அவற்றில் சில விருதுகளையும் பெற்றுள்ளன. இயக்குனராக, தயாரிப்பாளராக கிம் கி-டக் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை, 69வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது பயட்டா திரைப்படத்திற்காகவும்,61வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருது சிறந்த இயக்குனருக்காக 3-அயன் திரைப்படத்திற்காகவும், 54வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிலவர் பீர் விருது சிறந்த இயக்குனருக்காக சமாரியா திரைப்படத்திற்காகவும் கிடைத்தது. மேலும் 2011 கேன்ஸ் பட திருவிழாவில் அன் சர்டர்ன் ரிகாட் பரிசு அரிராங் படத்திற்காகவும் கிடைத்தது.

ஞானக் கொள்கை

ஞானக் கொள்கை (Gnosticism) என்பது தொடக்க காலக் கிறித்தவ சபையோடு தொடர்புடையதாய் எழுந்து, பின்னர் தப்பறை என்று கண்டிக்கப்பட்ட சமய நம்பிக்கை மற்றும் ஆன்மிக செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கொள்கை ஆகும். அது கிரேக்க கலாச்சாரத்தில் பரவிய யூதம், கிரேக்க-உரோமை மறைகள், சோராஸ்டரியம் மற்றும் புது-பிளேட்டனிசம் ஆகியவற்றோடும் தொடர்புடையதாய் விளங்கியது.

டெல் அவீவ் மாவட்டம்

டெல் அவீவ் மாவட்டம் (எபிரேயம்: מָחוֹז תֵּל אָבִיב; அரபு மொழி: منطقة تل أبيب) இசுரேல் நாட்டில் உள்ள ஆறு நிர்வாக மாவட்டங்களில் மிகச் சிறிய மாவட்டமாகவும் மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 13,88,400 ஆகும். இதில் 98.9% யூதர்கள் மற்றும் 1.10% அராபியர்கள்

டெல் அவீவ் நகரம் மாவட்டத்தின் தலைநகர் மற்றும் தொழில்நுட்ப பெருநகரம் ஆகும். மாவட்டத்தின் இரு தொழில்நுட்ப மற்றும் வரத்தக நகரங்களில் ஒன்றாகும். அருகில் உள்ள மற்றொரு நகரம் குஷ் தான் ஆகும்.

இசுரேலின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் டெல் அவீவ் மாவட்டம் மட்டுமே ஜூடா மற்றும் சமாரியா பகுதி எல்லையுடன் தொடர்பில்லாத மற்றும் சர்வதேச எல்லை இல்லாத மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கே மத்திய மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. மேற்கே மத்தியதரைக் கடல் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி 7,259/கிமீ2 ஆகும்.

திருத்தூதர் பணிகள்

திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் பணி (Acts of the Apostles) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஐந்தாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Práxeis tōn Apostólōn (Πράξεις των Αποστόλων) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Acta Apostolorum எனவும் உள்ளது . இந்நூல் 28 அதிகாரங்களை உள்ளடக்கியது. வாழ்க்கை வரலாறு, புனைவு, அரும்செயல்கள் போன்றவை விரவியுள்ள இந்நூலில் தொடக்க காலத்தில் கிறித்தவம் பரவிய கதை உயிரோட்டத்தோடு எடுத்துரைக்கப்படுகிறது.

தூய ஆவி

தூய ஆவி என்பதற்கு கடவுளின் ஞானம், கடவுளின் ஆற்றல், கடவுளின் சாரம் என்று பல்வேறு பொருள்கள் உண்டு. திரித்துவக் கொள்கையுடைய கிறித்துவப் பிரிவுகளின் படி, தூய ஆவி என்பவர் கடவுளின் மூன்றாம் ஆள் (நபர்) ஆவார்.

புது அசிரியப் பேரரசு

புது அசிரியப் பேரரசு (Neo-Assyrian Empire) இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த,

பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும். இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார்.

பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது. அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை. கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், ஆசியா மைனர், காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர். பழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.

கிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர்.

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.

மக்கபேயர் அரசு

மக்கபேயர் அரசு அல்லது ஹஸ்மோனிய அரசு (Hasmonean dynasty எபிரேயம்: חשמונאים‎, r Ḥashmona'im; Audio) என்பது யூதேயா மற்றும் அதனைச் சூழ்ந்திருந்த பிரதேசங்களை உன்னத பழம்பொருட் காலத்தில் ஆட்சி செய்த அரசாகும். கிட்டத்தட்ட கி.மு. 140 - 116 காலப்பகுதியில் செலூசிட்டிடமிருந்து பெற்ற அரை அதிகாரத்தில் யூதேயாவை ஆண்டனர். கி,மு 110 இலிருந்து செலூசிட் பேரரசு

சிதவடைந்ததும் முழு சுதந்திர அரசாக மாறி, தன் எல்லையை கலிலேயா, இத்துரியா, பெரா, இதுமேயா, சமாரியா என விரிபுபடுத்தியது. சில வரலாற்றாசிரியர்கள் இக்காலத்தை சுதந்திர இசுரேலிய அரசு எனக் குறிப்படுகின்றனர். கி.மு. 63 இல் இவ்வரசு உரோமைக் குடியரசால் வெற்றி கொள்ளப்பட்டு, உரோம வாடிக்கை அரசாக மாற்றப்பட்டது. கி.மு. 37 இல் ஏரோதிய அரசிடம் தோற்கும் வரை 103 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆயினும் முதலாம் ஏரோது மக்கபேய இளவரசியை திருமணம் செய்வதனூடாக தன் பிரதேசத்து சட்ட ஒழுங்கை காப்பற்ற முனைந்தபோதும், மக்கபேய கடைசி ஆண் வாரிசை தன்னுடைய எரிக்கோ அரண்மனையில் வைத்து மூழ்கடிக்கத் திட்டமிட்டான்.

மறைபணி (கிறித்தவம்)

மறைபணி (மறைப்பணி) அல்லது மறை பரப்புப் பணி அல்லது நற்செய்தி அறிவிப்புப் பணி (Mission) என்பது கிறித்தவர்கள் உலகெங்கும் செய்யும் சமயப்பணியைக் குறிக்கிறது. கிறித்தவ சமயத்தைப் பரப்புதல், மனித நேய நடவடிக்கைகள், ஏழைகள் மற்றும் இயலாதோருக்கு உதவுதல் ஆகிய செயல்பாடுகள் மறைப்பணியில் அடங்கும். கிறிஸ்தவர்கள் பார்வையில் இது கிறிஸ்துவின் ஆட்சியை உலகெங்கும் நிறுவ, அவர்கள் ஆற்றும் நற்செய்திப் பணியைக் குறிக்கிறது. "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்." "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் (என்) சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, கிறிஸ்தவ சமயத்தினர் பலர் இப்பணியை செய்து வருகின்றனர்.

மெசொப்பொத்தேமியா

மெசொப்பொதாமியா (Mesopotamia), தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பகுதியாகும். இன்றைய ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா எனும் சொல், மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், சுற்ற தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.

யூதா ததேயு (திருத்தூதர்)

புனித யூதா ததேயு (Saint Jude (Apostle), முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல் ஆனா Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா என்றோ அழைப்பர். யோவான் நற்செய்தியாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்.

இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்கு கிறித்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.

சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் (ஈரான்) இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது மீபோருட்கள் பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

இவரது விழா நாள் அக்டோபர் 28.

"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" என்னும் வாசனத்தின் அடிப்படையில் யூதா திருமுக ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாரிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம்.

விவிலிய எபிரேயம்

விவிலிய எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית מִקְרָאִית), உயர்தர எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית קְלָסִית‎), என்பது எபிரேய மொழியின் தொன்மையான வடிவம். கிட்டத்தட்ட மத்தியதரைக் கடலின் கிழக்கு மற்றும் யோர்தான் ஆற்றின் மேற்கு ஆகிய இடத்திலுள்ள கானான் எனப்பட்ட இடத்தில் இந்த கானானிய செமித்திய மொழி பேசப்பட்டது. இது கி.மு. 10ம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் கோவில் காலம் வரை (கி.பி. 70) பயன்பட்டது. விவிலிய எபிரேயம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட மிஸ்னாயிக் எபிரேயமாக வளர்ந்தது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.