கிரீத்தேசியக் காலம்

கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் (உச்சரிப்பு /kriːˈteɪʃəs/, கலைச்சொல் கற்பொடிக் காலம்) என்பது ஜூராசிக் காலத்தின் (. ± 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் (66 ± 4 Ma) தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே பனரோசோயிக் பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, மெசோசோயிக் மற்றும் செனோசோயிக் ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது.

கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Cretaceous என்பது இலத்தீன் மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் creta என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.[7] இது 1822 ஆம் ஆண்டு பெல்சிய நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.[8] ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது.

FaringdonCobble

Numerous borings in a Cretaceous cobble, Faringdon, England; these are excellent examples of fossil bioerosion.

Cretaceous hardground

Cretaceous hardground from டெக்சஸ் with encrusting ஆளி (மெல்லுடலி) and borings. The scale bar is 1.0 cm.

கிரீத்தேசியக் காலம் காலம்
145–66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
PreЄ
K
Pg
N
Mean atmospheric O
2
content over period duration
c. 30 vol %[1][2]
(150 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 1700 ppm[3][4]
(6 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 18 °C[5][6]
(4 °C above modern level)
வார்ப்புரு:கிரீத்தேசியக் காலம் graphical timeline

மேற்கோள்கள்

குறிப்புகள்

  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Glossary of Geology (3rd ed. ). Washington, D.C.: American Geological Institute. 1972. பக். p. 165.
  8. (in Russian) Great Soviet Encyclopedia (3rd ed. ). Moscow: Sovetskaya Enciklopediya. 1974. பக். vol. 16, p. 50.

வெளியிணைப்புகள்

ஆக்கிலூபேட்டர்

ஆக்கிலூபேட்டர் (உச்சரிப்பு /əˌkɪloʊˈbeɪtɔr/; "ஆக்கைல்ஸ்' போராளி/வீரன்") என்பது, டிரோமியோசோரிட் தேரோபோட் தொன்மா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது தற்போதைய மங்கோலியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது ஒரு இருகாலி, இரைகொல்லியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பின் காலில் உள்ள இரண்டாம் விரலின் அரிவாள் வடிவிலான நகங்களைப் பயன்படுத்தி இது இரைகளை வேட்டையாடும். இது ஒரு பெரிய டிரோமியோசோரிட் ஆகும். இதன் நீண்ட மூக்கிலிருந்து வால் வரையான நீளம் 15 தொடக்கம் 20 அடிகள் வரை இருக்கும்.

இதன் பொதுப் பெயர் டிரோஜான் போரின் கிரேக்க வீரனான ஆக்கைல்ஸ் என்பவனுடைய பெயரும், போராளி அல்லது வீரன் எனப் பொருள்படும் மங்கோலியச் சொல்லான பேட்டர் என்பதும் சேர்ந்து உருவானது.

ஆக்ரோகாந்தோசோரஸ்

ஆக்ரோகாந்தோசோரஸ் (Acrocanthosaurus) (உச்சரிப்பு /ˌækrəˌkænθəˈsɔrəs/ or ak-ro-KAN-tho-SAWR-us; பொருள்: 'உயர்ந்த-முதுகெலும்புப் பல்லி') என்பது அலோசோரிட் தேரோபோட் தொன்மாப் பேரினத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இவை தற்போதைய வட அமெரிக்காவில் ஏறத்தாழ 125 தொடக்கம் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரை நடுக் கிரேத்தேசியக் காலத்தில் வாழ்ந்தன. பல தொன்மாப் பேரினங்களைப் போலவே ஆக்ரோகாந்தோசோரஸ், ஆ. ஆதோகென்சிஸ் என்னும் ஓரே ஒரு இனத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இதன் பற்களாகக் கருதப்படுவன கிழக்குப் பகுதியில் மேரிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பினும், புதைபடிவ எச்சங்கள், பெரும்பான்மையாக ஐக்கிய அமெரிக்காவில், ஒக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலேயே காணப்பட்டுள்ளது.

ஆக்ரோகாந்தோசோரஸ், ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதன் பெயர் குறிப்பதைப் போலவே இதற்கு உயர்ந்த முள்ளந்தண்டுகள் காணப்படுகின்றன. இது மிகப்பெரிய தேரோப்பொட்டுகளில் ஒன்றாகும். இதன் நீள 12 மீட்டர் (40 அடி) வரை இருக்கும். இவை சுமார் 2.40 மெட்ரிக் தொன்கள் வரை எடையும் கொண்டவை.

ஆடமந்திசோரஸ்

ஆடமந்திசோரஸ் (உச்சரிப்பு /ˌædəˌmæntɨˈsɔrəs/ A-da-MAN-ti-SAWR-us; "ஆடமந்தினா பல்லி") என்பது, டைட்டனோசோரியா சோரோப்பொட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது தற்போதைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது,அதன் ஆறு வால் எலும்புகளைக் கொண்டே அறியப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சோரோப்பொட் என்பதால் இது நீண்ட கழுத்தையும், நீண்ட வாலையும் கொண்ட ஒரு பெரிய விலங்கு என ஊகிக்கலாம். வேறு பகுதிகளையும் கண்டெடுத்தால் மட்டுமே இதன் உருவம் பற்றி நிச்சயமாகக் கூறமுடியும்.

ஆடாசோரஸ்

'ஆடாசோரஸ் (உச்சரிப்பு /ˌɑːdəˈsɔrəs/ (AH-dah-SAWR-us); "ஆடாவின் பல்லி") என்பது, டிரோமியோசோரிட் தேரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது, இன்றைய மத்திய ஆசியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது இதன் பின்னங்கால்களில் அரிவாள் வடிவிலான வளைந்த நகங்களுடன் கூடிய ஒரு சிறிய இருகாலி, ஊனுண்ணி ஆகும். ஒரு வளர்ந்த விலங்கு 2.5 மீட்டர் (8 அடி) நீளம் இருக்கக்கூடும்.

மங்கோலியாவின் தேசியப் பழங்கதைகளில் ஆடா என்பது ஒரு தீய ஆவியாகும். இச் சொல்லுடன் பல்லி என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான சோரஸ் என்பதையும் சேர்த்து இதற்குப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் பேரினத்திலுள்ள ஒரே இனமான ஆ. மங்கோலியென்சிஸ் என்பதற்கு அது கண்டுபிடிக்கப்பட்ட இடமான மங்கோலியாவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

ஆலமோசோரஸ்

ஆலமோசோரஸ் (உச்சரிப்பு /ˌæləməˈsɔrəs/; பொருள்: "ஆலமோ பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோபோட் டயனோசோர் பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசஸ் காலத்தில் வாழ்ந்தன. இது ஒரு பெரிய நாலுகாலி, தாவர உண்ணி ஆகும். இவை 16 மீட்டர் (53 அடி) வரை நீளமும், 33 தொன்கள் (30 மெட்ரிக் தொன்) வரை எடையும் கொண்டவை. ஆலமோசோரஸ் ஏனைய சோரோப்பொட்டுகளைப் போலவே நீண்ட கழுத்தும், நீண்ட வாலும் கொண்டவை.

ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ்

ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ் (பொருள்: ஆல்பேர்ட்டா கொம்புள்ள முகம்) என்பது செண்ட்ரோசோரின் கொம்புள்ள தொன்மாப் பேரினம் ஆகும். இது, அல்பேர்ட்டா கனடாவில் உள்ள நடுக் கம்பானியக் காலத்தைச் சேர்ந்த மேல் கிரீத்தேசிய ஓல்ட்மான் உருவாக்கத்திலும், அமெரிக்காவின் மொண்டானாவில் உள்ள ஜூடித் ஆற்று உருவாக்கத்திலும் காணப்பட்டது. இது ஆகஸ்ட் 2001 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முழுமையான மண்டையோட்டில் (TMP.2001.26.1) இருந்தே அறியப்படுகிறது.

ஆல்பேர்ட்டோசோரஸ்

ஆல்பேர்ட்டோசோரஸ் (உச்சரிப்பு /ælˌbɝtoʊˈsɔrəs/; meaning "ஆல்பேர்ட்டா பல்லி") என்பது தைரனோசோரிட் தேரோபோட் தொன்மா பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய மேற்கு வட அமெரிக்காவில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரேத்தாசியக் காலத்தில் வாழ்ந்தன. இதன் இனவகையான ஆ. சார்க்கோ ஃபேகஸ் இன்றைய கனடாவின் மாகாணமான ஆல்பேர்ட்டாவுக்குள் அடங்கியுள்ளது. இதனாலேயே இம் மாகாணத்தின் பெயர் இப் பேரினத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரினத்துக்குள் அடங்கும் இனங்கள் குறித்து அறிவியலாளரிடையே கருத்து வேற்றுமை காணப்படுகின்றது.

ஒரு தைரனோசோரிட் என்றவகையில் ஆல்பேர்ட்டோசோரஸ் ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதற்கு மிகச் சிறிய இரு விரல்கள் கொண்ட முன்னங்கைகளும், பெரிய தலையும், பல கூரிய பற்களும் அமைந்துள்ளன. இது இதன் சூழலின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஈஜிப்டோசோரஸ்

ஈஜிப்டோசோரஸ் (உச்சரிப்பு /iːˌdʒɪptəˈsɔrəs/ பொருள்: 'எகிப்தின் பல்லி') என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம் ஆகும். இந்த நாலுகாலி சோரோப்போட் ஒரு தாவர உண்ணி ஆகும். இதன் புதைபடிவங்கள் எகிப்து, நைகர் மற்றும் பல சகாரா பாலைவனப் பகுதிகளில் காண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அறியப்பட்ட எல்லா எடுத்துக் காட்டுகளும் 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டவை. புதைபடிவங்கள் ஒன்றான மியூனிச் நகரில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 1944 இல் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சினால் இது வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் அழிந்தபோது இப் புதைபடிவங்களும் காணாமல் போய்விட்டன.

ஈயோலோசோரஸ்

ஈயோலோசோரஸ் (உச்சரிப்பு /ˌiːələˈsɔrəs/; "ஈயலூவின் பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. பிற பல சோரோப்போட்டுகளைப் போலவே இது, நீளமான கழுத்தையும், வாலையும் கொண்ட நாலுகாலி தாவர உண்ணி ஆகும். இதன் எச்சங்கள் முழுமை அற்றவை இதனால் இதன் நீளத்தைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், மதிப்பீடுகளின்படி இது 14 மீட்டர் (45 அடி) நீளம் கொண்டதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

எறும்பு

எறும்பு, குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தைத் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.

ஏவாசெராடொப்ஸ்

ஏவாசெராடொப்ஸ் என்பது செராடொப்சிட் தொன்மா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இது இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் பிந்திய கம்பானியக் காலத்தைச் சேர்ந்தது.

ஏவாசெராடொப்சின் முதலாவது புதைபடிவம் மொண்டானாவில் உள்ள ஜூடித் ஆற்று அமைவுப் பகுதியில் 1981 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை வரலாற்றுக்கு முந்தியகால ஆற்றுப் படுகையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் பரந்து காணப்பட்டது. இந்த ஏவாசிராடொப்ஸ் மாதிரி, இதன் உடல் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு மண்படிவில் மூடப்பட்டிருக்கலாம்.

முதல் கண்டுபிடிப்பு எடீ கோல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பீட்டர் டாட்சன் என்பவரால் 1986 ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டது. இதன் பெயர் எடியின் மனைவியான ஏவாவின் பெயரைத் தழுவியது.

கெளிறு

நீரின் அடித்தளத்தில் வாழும் நன்னீர் மீன் வகைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது கெளிறு மீன். இதைக் கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. எனவே இதை பூனை மீன் (cat fish) என்றும் அழைப்பதுண்டு.

சிங்கோபானா

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/சிங்கோபானா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} சிங்கோபானா (பொருள் - 'நீண்ட கழுத்து') என்பது தான்சானியாவின் மத்தியக் கற்பொடிக் காலத்தில் (கிரீத்தேசியக் காலம்) இருந்த ஒரு டைட்டனோரிய சௌரோபோடா பேரினத்தைச் சேர்ந்த ஒரு தொன்மாவாகும். இது சிங்கோபானா சாங்வென்சிஸ் என்னும் ஒரு உறுப்பினத்தைக் கொண்டு அறியப்படுகிறது.

பூனை மீன்

பூனை மீன்

பெருந்தலைக் கடலாமை

பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle, Caretta caretta) என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ (35 அங்குலம்) வளரக்கூடிய இதன் எடை 135 கி ஆகும். இது மஞ்சள் முதல் பழுப்பு நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட இரண்டாவது ஆமை இதுவாகும். இவற்றின் ஆயுட்காலம் 47 ஆண்டுகள் தொடக்கம் 67 ஆண்டுகள் வரையாகும்.

முதலை

முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.

ரோசிதுகள்

ரோசிதுகள் (Rosids) என்பவை பூக்கும் தாவரங்கள் வகையிலுள்ள ஒரு பெரிய உயிரினக் கிளையின் (ஒற்றை மரபுவரிசை) உறுப்பினர்களைக் குறிக்கிறது. பூக்கும் தாவர வகையில் நான்கில் ஒரு பாகத்திற்கு மேல் சுமார் 70,000 தாவர இனங்கள் இவ்வுயிரினக் கிளையில் இடம்பெற்றுள்ளனஉயிரின வகைபாடு மற்றும் சூழலின் அடிப்படையைப் பொறுத்து ஒற்றை மரபுவரிசைத் தாவரங்கள் 16 முதல் 20 வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிசைகளில் மொத்தமாக 140 குடும்பங்களைச் சேர்ந்த தாவரங்கள் காணப்படுகின்றன.

கிரீத்தேசியக் காலம் முதலாக ரோசித் புதைப்படிவுகள் அறியப்படுகின்றன. 99.6 மற்றும் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரீத்தேசிய நிலவியல் காலப் பகுதியின் அப்டியன் அல்லது அல்பியன் நிலவியல் நிலைகளில் ரோசித் வகை தாவரங்கள் தோன்றியிருக்கலாம் என்று மூலக்கூற்று கடிகை தொழில்நுட்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

விலாங்கு

விலாங்கு (Eel) என்பது அங்க்விலிஃபார்மீசு Anguilliformes என்ற வரிசையைச் சேர்ந்த அனைத்து மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இந்த வரிசையில் மொத்தம் 20 குடும்பங்கள், 111 பேரினங்கள் மற்றும் சுமார் 800 இனங்கள் உள்ளன. இவற்றில் பல இனங்கள் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தவையாகும்.

ஸ்டைராக்கோசோரஸ்

ஸ்டைராக்கோசோரஸ் என்பது, செராடொப்சிய தொன்மாக் குழுவைச் சேர்ந்த ஒரு பேரினம். தாவர உண்ணியான இது 76.5 - 75 மில்லியன் ஆண்டுவரை பழமையான கிரீத்தேசியக் காலத்தின் கம்பானியக் காலகட்டத்தைச் சேர்ந்தது. இதன் கழுத்தில் அமைந்துள்ள நீட்சி அமைப்பில் நான்கு தொடக்கம் ஆறு வரையான கொம்புகள் உள்ளன. கன்னப்பகுதிகளில் இரண்டு சிறிய கொம்புகளும், மூக்கிலிருந்து ஒரு பெரிய கொம்பும் காணப்படும். இப் பெரிய கொம்பு 60 சதம மீட்டர் வரை நீளமாகவும் 15 சதமமீட்டர் அகலமாகவும் இருக்கும்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.