காசா

காசா அல்லது காசா நகர் (Gaza, அரபு மொழி: غزة) என்பது காசாகரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 515,556. பாலத்தீனத்தின் பெரிய நகரம் இதுவாகும். கி.மு. 15ம் நூற்றாண்டிலிருந்து இங்கு மக்கள் வாழத் தொடங்கினர்.[4]

காசா
ஏனைய transcription(s)
 • அரபிغزة
 • Also spelledகாசா நகர் (unofficial)
Gaza City
அதிகார சபைGaza
உருவாக்கம்கிமு 15ம் நூற்றாண்டு
அரசு
 • வகைCity (from 1994[1])
பரப்பளவு[2]
 • Jurisdiction45,000
மக்கள்தொகை (2012)[3]
 • Jurisdiction515
இணையதளம்www.gaza-city.org

மேற்கோள்கள்

  1. Palestine Facts Timeline Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA).
  2. "Gaza City". Gaza Municipality. மூல முகவரியிலிருந்து June 20, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-02-16.
  3. "Localities in Gaza Governorate by Type of Locality and Population Estimates, 2007-2016". Palestinian Central Bureau of Statistics(PCBS). பார்த்த நாள் 2013-10-20.
  4. "Gaza (Gaza Strip)". International Dictionary of Historic Places 4. (1996). Fitzroy Dearborn Publishers. 287–290.
ஆசியா

ஆசியா ( ஒலிப்பு) (/ˈeɪʒə/ or /ˈeɪʃə/) உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.

ஆசியா என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல. ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனர்.

இசுரேல்

இசுரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל‎; யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இசுரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இசுரவேல், இசுரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது. இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின் செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது. அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன. அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது. இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது. இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.

இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட, எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது. இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள், ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.

இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு. இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும். 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.

இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு

இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு (Israeli–Palestinian conflict) இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்றுவரை இசுரேலுக்கும் பலத்தீனத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் தொடர்போராட்டத்தை குறிக்கிறது. இந்தப் பிணக்குகள் பிரித்தானியர் ஆண்டுவந்த காலத்திலிருந்தே சீயோனியர்களுக்கும் (yishuv) அரபு மக்களுக்கும் இடையே இருந்து வந்துள்ளது. இது பரந்த அரபு-இசுரேல் முரண்பாட்டின் மைய அங்கமாகும். இந்தப் பிணக்கே உலகின் "மிகவும் சிக்கலான பிணக்காக" கருதப்படுகிறது.இந்தப் பிணக்கை தீர்க்கும் வழியாக தன்னாட்சியுடைய பலத்தீனத்தையும் அதையடுத்த இசுரேலையும் கொண்டவாறு இரு நாடுகளை உருவாக்கும் தீர்வு பலமுறை முன்மொழியப்பட்டுள்ளன. பல கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பாலான இசுரேலியர்களும் பாலத்தீனர்களும் இந்த பிணக்கைத் தீர்க்க இருநாடுகள் தீர்வே சிறந்ததாக ஒப்புக் கொள்கின்றனர். மிகுதியான பலத்தீனர்கள் மேற்குக் கரையும் காசா கரையும் உள்ளடங்கியப் பகுதி தங்கள் வருங்கால நாடாக கருதுகின்றனர்; இதற்கு பெரும்பாலான இசுரேலியர்களும் உடன்படுகின்றனர். ஒரு சில கல்வியாளர்கள் இசுரேல், காசாக் கரை, மேற்கு கரை ஒவ்வொன்றும் சம உரிமையுடனான, இரட்டைக் குடியுரிமை பெற்ற, ஒரே நாட்டின் பகுதிகளாக ஒருநாட்டுத் தீர்வை முன்வைத்துள்ளனர். இருப்பினும், எந்தவொரு இறுதித் தீர்வைக் குறித்தும் குறிப்பிடத்தக்க அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும் எதிர்தரப்பின் நம்பகத்தன்மை குறித்தும் எந்தளவில் வாக்குறுதிகளை காப்பாற்றும் என்பது குறித்தும் மற்ற தரப்பிற்கு ஐயங்கள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரில் பாலஸ்தீனம் மீது குண்டுவீச்சு

இரண்டாம் உலகப் போரின் போது பாசிச இத்தாலியின் வேந்திய வான்படை பிரித்தானியக் கட்டுப்பாட்டிலிருந்த பாலஸ்தீனம் மீது பலமுறை குண்டு வீசித் தாக்கியது. தற்காலத்தில் இஸ்ரேல், மேற்குக் கரை, காசா என்று வழங்கப்படும் பகுதிகள் அனைத்தும் அப்போது பாலஸ்தீனம் என்று வழங்கப்பட்டு வந்தன. ஜூலை 1940 இல் இத்தாலிய வான்படை பாலஸ்தீன நகரங்கள் மீது குண்டு வீசத் தொடங்கியது. டெல் அவீவ், ஹைஃபா போன்ற நகர்ப்புறங்கள் முக்கியமாகக் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.

விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.

மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.

காசா ட இந்தியா

காசா ட இந்தியா (Casa da Índia, இந்திய மாளிகை) பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் போர்த்துக்கேய அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (feitoria) விளங்கியது. தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது லிசுபனில் உள்ள டெர்ரீரோ டோ பாசோ (தற்போதைய பிராசா டோ கொமர்சியோ) சதுக்கத்தில் அமைந்துள்ள ரிபீரா அரண்மனையில் இயங்கியது.

காசாக்கரை

காசாக்கரை (Gaza Strip, அரபு மொழி: قطاع غزة) என்பது நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும். இதன் எல்லைகளாக தென்மேற்கே (11 கிமீ) எகிப்தும், கிழக்கு மற்றும் வடக்கே (51 km (32 mi)) இசுரேலும் உள்ளன. காசாக் கரை அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள்.

சூன் 26

சூன் 26 (June 26) கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.

சூலை 2014

சூலை 2014 (July 2014) , 2014 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் வியாழக்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் சூலை 17, வியாழக்கிழமையில் தொடங்கி, ஆகஸ்டு 16 சனிக்கிழமையில் முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின்படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் ரம்சான் மாதம் சூன் 29 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி சூலை 29 செவ்வாய்க்கிழமையில் முடிவடைந்தது. ரோமாபுரி மன்னர் ஜூலியஸ் சீசர் நினைவாக ஜூலை மாதம் ஏற்பட்டது. அதற்கு முன் ‘குவாண்டிலிஸ்’ என்ற பெயர் இருந்தது.

சூலை 8

சூலை 8 (July 8) கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன.

டிசம்பர் 27

டிசம்பர் 27 (December 27) கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன

நீலம் மாம்பழம்

நீலம் மாம்பழம் என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும். இதற்கு காசா லட்டுஎன்ற வேறு பெயரும் உண்டு.

இவ்வகை மாமரம் வாணிகரீதியில் பயிரிடப்படும் முதன்மை இரகம் ஆகும். இம்மரம் ஆண்டு தோரும் சீரான விளைச்சல் தரக்கூடியது. இதன் பழங்கள் சுமாரான அளவு கொண்டதாகவும், நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நல்ல சுவையும் மணமும் உடையது. சாறு நிறைந்த ஆறஞ்சு கலந்த மஞ்சள் நிறசதைப்பற்றுக் கொண்டது.

பலத்தீன தேசிய ஆணையம்

பலத்தீன தேசிய ஆணையம் (Palestinian National Authority, PA; அரபு மொழி: السلطة الوطنية الفلسطينية As-Sulṭah Al-Waṭaniyyah Al-Filasṭīniyyah) 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளின்படி மேற்குக் கரையிலும் காசா கரையிலும் உடன்பாட்டில் ஏற்கப்பட்ட "ஏ" மற்றும் "பி" நிலப்பகுதிகளை ஆள்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக தன்னாட்சி அமைப்பாகும். 2006 தேர்தல்களை அடுத்தும் 2007 காசா கரையில் ஃபத்தாக்களுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் ஏற்பட்ட சண்டைகளை அடுத்தும் இதன் ஆளுமை மேற்கு கரையில் மட்டுமே இருந்தது. ஐக்கிய நாடுகள் அவை பலத்தீனத்தை உறுப்பினரல்லா ஐ.நா. பார்வையாளர் நாடாக ஏற்றுக் கொண்ட பிறகு, 2013 சனவரி முதல் ஃபத்தா-கட்டுப்பாட்டிலுள்ள பலத்தீன ஆணையம் தன்னை பலத்தீன் நாடு என அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிட துவங்கியது.

பலத்தீன் நாடு

பலஸ்தீன நாடு (State of Palestine, அரபு:دولة فلسطين, dawlat filastin, எபிரேய மொழி: מדינת פלסטין, medinat phalastin ) என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது.

பிலமோன் (புதிய ஏற்பாட்டு நபர்)

பிலமோன் (/fɪˈliːmən,_faɪʔ/; கிரேக்க மொழி: Φιλήμων) என்பவர் அனத்தோலியாவில் வாழ்ந்த துவக்ககால கிறித்தவர்களுள் ஒருவரும் புதிய ஏற்பாட்டு நூலான திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்தின் பெறுநரும் ஆவார். இவரது மனைவி அப்பியா என்பது மரபு.கொலோசை நகரத்தவரான இவர் செல்வந்தரும் அந்த நகரில் திருப்பட்டம் பெற்றவரும் ஆவார் (ஆயராக இருக்கலாம்). இவரின் வீட்டிலேயே திருச்சபை கூடியது என பவுல் குறிக்கின்றார். இவரிடமிருந்து தப்பியோடிய ஒனேசிமை மன்னித்து ஏற்கும்படி பவுல் இவருக்கு பரிந்துரைக் கடிதம் எழுதினார்.

நீரோ மன்னர் நிகழ்த்திய கொடுமைகளின்போது இவர் அப்பியா, ஒனேசிம் மற்றும் அர்க்கிப்புவோடு கொல்லப்பட்டார் என்பர்.

தயர் நகரின் தொரோதியுஸ் இவரை எழுபது சீடர்களில் ஒருவராகவும் காசா நகரின் ஆயராகவும் குறிக்கின்றார்.

பிலிஸ்தியர்கள்

பிலிஸ்தியர்கள் அல்லது பெலஸ்தியர்கள் (Philistine) தற்கால கிரேக்கத்திற்கும் - துருக்கி இடையே உள்ள ஏஜியன் கடலில் உள்ள கிரீட் மற்றும் சைப்பிரசு தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் இசுரவேலர்களின் நாட்டின் தெற்குப் பகுதியில், மத்தியதரைக் கடல் ஒட்டிய காசா, அஸ்தோது, எக்ரோன் , காத் மற்றும் அஸ்கெலோன் போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.

வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், யூதர்களின் பழைய ஏற்பாடு நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.

யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் இணைச் சட்டம் (நூல்): 2:23 மற்றும் எரேமியா (நூல்): 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் கிரிட் தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.புது எகிப்திய பேரரசரும், எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 - 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் அனதோலியா, சைப்பிரசு மற்றும் சிரியாவின் பகுதிகளை தாக்கி, இறுதியில் எகிப்தை தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் உரோமானியர்கள் பாலஸ்தீனம் எனப்பெயரிட்டனர்.போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் தாவீது, பிலிஸ்திய மக்களை வென்றதாக யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் தொடக்க நூல் 10:14 மற்றும் விடுதலைப் பயணம் 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.

பிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான கோலியாத்தை, இஸ்ரவேலச் சிறுவன் தாவீது கவண் கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.

போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி

போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company, போர்த்துக்கீச மொழி: Companhia do commércio da Índia அல்லது Companhia da Índia Oriental) ஓர் போர்த்துகல் நாட்டு முன்னுரிமை வழங்கப்பட்ட வணிக நிறுவனம் ஆகும்.

மாரியோ பார்க்காசு யோசா

மாரியோ பார்க்காசு யோசா (எசுப்பானிய ஒலிப்பு: [ˈmaɾjo ˈβarɣaz ˈʎosa], ஆங்கிலம்: Mario Vargas Llosa, பி. மார்ச் 28, 1936) ஒரு பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்றவர். யோசா, இலத்தீன் அமெரிக்காவின் (தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின்) முதன்மையான எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

எசுப்பானிய மொழியில் எழுதும் யோசா 1960களில் நாய்களின் நகரம் எனப் பொருள் படும் எசுப்பானிய மொழிப் புதினம் La ciudad y los perros (ல சியுடாடு இ லொசு பெர்ரொசு) என்பதை 1963 இல் எழுதினார். இது ஆங்கிலத்தில் தி டைம் ஆஃப் தி ஃகீரோ (The Time of the Hero) என அறியப்படுகின்றது. 1965 இல் பச்சை வீடு எனப்பொருள்படும் ல காசா பெர்டே (La Casa Verde, ஆங்கிலத்தில் தி கிரீன் ஃகவுசு The Green House) என்னும் புதினத்தை எழுதினார். பெரு நாட்டின் தனிவல்லாட்சியர் (சர்வாதிகாரி) மானுவேல் ஏ. ஓதிரியா (Manuel A. Odría) என்பாரின் ஆட்சியை அடிப்படையாக கொண்டு 1969 இல் வரைந்த கான்வர்சேசியோன் என் ல கத்தேடரல் (Conversación en la catedral) (ஆங்கிலத்தில் கன்வர்சேசன் இன் தி கத்தீடரல் Conversation in the Cathedral) என்னும் புதினம் போன்ற பற்பல எழுத்துகளின் வழி புகழ் எய்தினார். நகைச்சுவை புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்புகளை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட லோசா 1990ம் ஆண்டு பெரு நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993ம் ஆண்டு எசுப்பானியா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இவர் தற்போது இலண்டன் (ஐக்கிய இராச்சியம்) நகரில் வசித்து வருகிறார்.

ஹமாஸ்

ஹமாஸ் (Ḥamas, அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலஸ்தீன சுணி இஸ்லாமிய போராளி இயக்கமும் பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்.

ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு ஷேக் அகமது யாசின், மற்றும் முகமது தாஹா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.