கலீசியா

கலீசியா (ஆங்கிலம்: Galicia; இடாய்ச்சு: Galicien; பிரெஞ்சு: Galice) என்பது எசுப்பானியாவின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. இங்கு 2.78 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதன் பரப்பளவு 29,574.4 சதுர கி.மீ. ஆகும். இதன் தலைநகரம் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆகும்.

Ayuntamiento de Santiago de Compostela
சாந்தியாகோ தே கோம்போசுதேலாவிலுள்ள கலீசிய மாகாணத் தலைவரின் அதிகாரபூர்வ உறைவிடம்
11-ஆம் நூற்றாண்டு

11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.

ஆப்சுபர்கு அரசமரபு

ஆப்சுபர்கு அரச மரபு அல்லது சுருக்கமாக ஆப்சுபர்கு (Habsburg) கோமகன்கள், அரசர்கள், மற்றும் மன்னர்களின் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தினர் ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையான பங்காற்றி உள்ளனர். இவர்கள் ஆசுதிரியா, பின்னர் ஆசுத்திரியா-அங்கேரியை 600 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுள்ளனர். சில காலம் எசுப்பானியா, நெதர்லாந்து, மற்றும் புனித உரோமைப் பேரரசும் இவர்களது ஆட்சியில் இருந்தன.

1515இல் வியன்னாவில் ஆப்சுபர்கு குடும்பத்தைச் சேர்ந்த ஆசுதிரியா அரசருக்கும் யக்கியெல்லோன் அரசமரபைச் சேர்ந்த போலந்து, லித்துவேனியா மன்னர்களுக்கும் இடையே பொகிமியா மற்றும் அங்கேரியின் மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் ஆசுதிரிய மன்னர் அப்பகுதியின் ஆட்சியைக் கைக்கொள்வார் என்று உடன்பாடு ஏற்பட்டது. சார்தீனியா இராச்சியமும் இவர்களது கைவசம் இருந்தது.

இந்த அரச மரபின் கடைசி பேரரசியாக பூர்பொன்-பார்மாவின் சீடா இருந்தார். இவர் 1989இல் சுவிட்சர்லாந்தில் இறந்தார். 1916 முதல் 1918 வரை தமது கணவர் சார்லசுடன் ஆட்சி புரிந்துள்ளார்.

ஒரென்ஸ் பெருங்கோவில்

ஒரென்ஸ் பெருங்கோவில் (Ourense Cathedral, Catedral de Ourense or Catedral do San Martiño) என்பது வட மேற்கு எசுப்பானியாவின் ஒரென்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில். இது 1931 ஆம் ஆண்டில் பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது. 1220 ஆம் ஆண்டில் இதனுடைய கட்டுமானப்பணிகள் நிறைவுற்றிருக்க வேண்டும். இது பிரதானமாக கோதிக் வடிவிலேயே அமைந்துள்ளது.

கீரைகளின் பட்டியல்

கீரைகளின் பட்டியல்.

கெல்ட்டியர்

கெல்ட்டியர் (Kelts) அல்லது செல்ட்டியர் (Celts) எனப்படுவோர் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு இன-மொழிக் குழுவினர். இவர்கள் செல்ட்டிய மொழிகளைப் பேசியதுடன் ஒரே வகையான பண்பாடுகளையும் கொண்டிருந்தனர்.. இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.

கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.

ஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் "கெல்டிக்" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். ("கெல்டிக்" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே "கெல்டிக்ஸ்" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் "கெல்டிக்" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை "பிரிட்டன் கெல்டிக்" என்று அழைத்தனர்.

முதனிலைச் செல்டியப் பண்பாடு எனக் கருதக்கூடிய மிகப் பழைய தொல்லியல் பண்பாடு கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியைச் சேர்ந்ததும் மைய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதுமான பிந்திய வெண்கலக் காலத்துத் தாழிக்களப் பண்பாடு ஆகும். இரும்புக்காலத்து மைய ஐரோப்பாவின் ஆல்ஸ்ட்டாட் பண்பாட்டு (Hallstatt culture) மக்கள் இவர்களின் வழிவந்த முழுமையான செல்ட்டியர். ஆசுத்திரியாவின் ஆல்ஸ்ட்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டுத் தொல்லியல் களத்தை ஒட்டி இவர்களுக்கு அப்பெயர் வழங்குகிறது.

சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்

சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் (ஆங்கிலம்:Santiago de Compostela Cathedral, கலிசியன்: Catedral de Santiago de Compostela) என்பது எசுப்பானியாவின் உலக பாரம்பரியக்களமான சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரத்தில் கலீசியாவில் அமைந்துள்ள ஒரு பேராலயம் ஆகும். இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான செபதேயுவின் மகன் யாக்கோபுவின் கல்லறை இப்பேராலயத்திலே அமைந்துள்ளது. உரோமானியக் கட்டிடங்களில் வடிவில் இப்பேராலயம் கட்டப்பட்டிருந்தாலும் கோதிக் பற்றும் பராக் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

சாராடைட்டு

சாராடைட்டு (Zaratite) என்பது Ni3CO3(OH)4•4H2O என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பிரகாசமான மரகத பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் நிக்கல் கார்பனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சம அளவு படிக அமைப்புத் திட்டத்தில் பெருத்தது முதல் தகடுபோல படர்ந்த மார்பு போன்றும் நரம்பு நிரப்பிகள் போன்றும் படிகமாகிறது. இக்கனிமத்தின் ஒப்படர்த்தி அளவு 2.6 என்றும் மோவின் கடினத்தன்மை எண் 3 முதல் 3.5 என்றும் அறியப்படுகிறது. சாராடைட்டின் கட்டமைப்பில் பிளவு ஏதும் இல்லை மற்றும் நொறுங்கினால் சங்குருவான முறிவும் ஏற்படுகிறது. எண்ணெய்ப்பசை முதல் பளபளப்பானவது வரையிலான ஒளிர்வை இது பெற்றுள்ளது.

மீக்காரப் பாறைகள் பாம்புப்பாறைகளாக மாற்ரமடையும் காலத்தில் முதன்மையாக நிக்கல் மற்றும் இரும்பு தனிமங்களைக் கொண்டிருக்கும் குரோமைட்டு, பென்ட்லான்டைட்டு, பைரோடைட்டு, மில்லரைட்டு போன்ற கனிமங்கள் மாற்றமடைவதாலும், மேலும் இவை நீரேற்றம் அடைவதாலும் உருவாகும் இரண்டாம்நிலை அரிய கனிமம் சாராடைட்டு ஆகும். NiCO3•6H2O, என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட எல்யெரைட்டு என்ற கனிம இதனோடு தொடர்புடைய கனிமமாகும்.

எசுப்பானியா நாட்டில் உள்ள கலீசியா பகுதியில் இக்கனிமம் 1851 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்நாட்டின் அரசியல் நிபுணரும் நாடக ஆசிரியருமான அன்டோனியோ கில் ஒய் சாரேட் (1793–1861) என்பவரின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது

செபதேயுவின் மகன் யாக்கோபு

செபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார்.

செர்வண்டைட்டு

செர்வண்டைட்டு (Cervantite) என்பது Sb3+Sb5+O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஆண்டிமனி என்ற தனிமத்தின் ஆக்சைடு தாதுப்பொருளாகும்.

1850 ஆம் ஆண்டில் முதன்முதலாக இக்கனிமம் எசுப்பானியாவில் உள்ள செர்வண்டேசு , சியாரா டெ ஆங்கரேசு, உலூகோ மற்றும் கலீசியா போன்ற இடங்களில் காணப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பெயரால் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. இக்கனிமத்தின் கண்டுபிடிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் அங்கீகரிக்கப்படாமல் பின்னர் 1862 ஆம் ஆண்டில் செர்பியாவில் உள்ள சயாகா இசுடோலிசு மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பிறகுதான் அங்கீகரிக்கப்பட்டது. ஆண்டிமனி காணப்படும் இரண்டாம் நிலை கனிமப்பொருளாக இது கருதப்படுகிறது. இசிடிப்னைட் முதல்நிலைக் கனிமப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

நவம்பர் 19

நவம்பர் 19 (November 19) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.

போர்த்துகல்

போர்த்துகல் (போர்த்துக்கீசம்: Portugal), என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு (Portuguese Republic, போர்த்துக்கீசம்: República Portuguesa) ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். கண்ட ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும். இவை போர்த்துகலின் தன்னாட்சிப் பகுதிகள். போர்த்துகல் என்னும் பெயர், போர்ட்டசு கேல் என்னும் இலத்தீன் பெயர் கொண்ட அதன் இரண்டாவது பெரிய நகரான போர்ட்டோ என்பதில் இருந்து பெறப்பட்டது. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.

தர்போதைய போர்த்துகல் குடியரசின் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதிகள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் உரோமரும், விசிகோதியர், சுவேபியர் ஆகியோரும் ஆட்சி செய்த பின்னர், 8 ஆம் நூற்றாண்டில் ஐபீரியத் தீவக்குறை முழுவதையும் இசுலாமியரான மூர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். கிறித்தவ மீட்பின்போது, 1139 ஆம் ஆண்டில், போர்த்துகல் கலீசியாவில் இருந்து பிரிந்து தனியான இராச்சியம் ஆனது. இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப் பழைய தேச அரசு என்ற பெருமையையும் பெற்றது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியதன் விளைவாக, போர்த்துகல் மேற்கத்திய செல்வாக்கை விரிவாக்கி முதல் உலகப் பேரரசை நிறுவியதுடன், உலகின் முக்கியமான பொருளாதார, அரசியல், படைத்துறை வல்லரசுகளில் ஒன்றாகவும் ஆனது. அத்துடன், நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக் கூடிய காலமான ஏறத்தாழ 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது போர்த்துக்கேயப் பேரரசே. இது 1415ல் செயுட்டாவைக் கைப்பற்றியதில் இருந்து 1999ல் மாக்கூவுக்கும் 2002ல் கிழக்குத் திமோருக்கும் விடுதலை அளிக்கும்வரை நீடித்து இருந்தது. இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் இன்று 53 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் பரந்த பகுதியில் பரவி இருந்தது. எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது.

போர்த்துகல் மிகவும் கூடிய மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது. இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது.

மார்த்தா

புனித மார்த்தா (Martha of Bethany) (அரமேயம்: מַרְתָּא - Martâ) என்பவர் புதிய ஏற்பாட்டு நூல்களாகிய லூக்கா நற்செய்தியிலும் யோவான் நற்செய்தியிலும் விவரிக்கப்படுகின்ற ஒருவர் ஆவார்.

மார்த்தாவும் அவருடைய உடன்பிறப்புகளான இலாசர் மற்றும் மரியா ஆகியோர் எருசலேம் அருகே பெத்தானியா என்னும் ஊரில் வாழ்ந்துவந்ததாக புதிய ஏற்பாடு தகவல் தருகின்றது. குடும்பத்தில் மரியா முதலிலும், அவருக்கு அடுத்தவராக இலாசரும், இருவருக்கும் இளையவராக மரியாவும் இருந்தனர். இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சியைக் கண்டவருள் மார்த்தாவும் ஒருவர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.