கரந்தடிப் போர் முறை

கரந்தடிப் போர்முறை அல்லது கொரில்லாப் போர்முறை (Guerrilla warfare) என்பது ஒருவகை ஒழுங்கில்லாப் போர்முறை ஆகும். இந்தப் போர்முறை ஆயுதம் தாங்கிய குடிமக்கள் அடங்கிய ஓர் சிறிய போராளிக் குழு பெரிய விரைவாக இயங்க இயலாத வழமையானப் படைகளை எதிர்கொள்வதாகும். இதற்கு பதுங்கித் தாக்குதல், நாசமாக்கல், திடீர்த் தாக்குதல், எதிர்பாராத தன்மை, மிக விரைவான இயக்கம் போன்ற படைத்துறை செய்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி கொள்வதும் தாக்கப்படக்கூடிய இலக்குகளை தாக்கி விரைவாகத் திரும்பிவிடுதலும் ஆகும்.

இது உலகின் பல மொழிகளிலும் கொரில்லாப் போர் என்று வழங்கப்படுகிறது. எசுப்பானிய மொழியில் இந்தச் சொல்லிற்கு சிறிய போர் என்ற பொருளாகும். 18ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இந்தச் சொல் இத்தகைய போர்வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரில்லா என்ற சொல் ஆங்கிலத்தில் 1809 முதல் புழக்கத்தில் உள்ளது.

Afghan Muja crossing from Saohol Sar pass in Durand border region of Pakistan, August 1985
ஆப்கன் முஜாஹிதீன் கொரில்லாக்கள் பாக்கித்தான் எல்லையில்

வரலாறு

ஸ்பானிய மொழியில் குடிப்போர் என்பதே கொரில்லா போரின் அர்த்தமாகும்.இம்முறை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் உள்ளது.ஆண் என்பதற்கு கொரில்லா எனவும்,பெண் என்றால் கொரில்லிரா எனவும் இப்போர் முறையில் அழைப்பர்.பெனின்சுலர் போரில் நெப்போலியன் துருப்புகளுக்கு எதிராக ஸ்பானிய மக்கள் கொரில்லா போரில் ஈடுபட்டனர்.ஆங்கிலத்தில் கொரில்லா என்பது அப்போர் புரிபவர்களைக் குறிக்கும்.

கொரில்லா தந்திரங்களை எகிப்து மற்றும் மெசபடோமியாவில் கி.மு. 3100 முன்னரே பழங்குடி மக்களுக்கு மத்தியில் நடைபெற்று உள்ளது. தேசியவாதம், தாராளவாதம், சோசலிசம், மற்றும் மத அடிப்படைவாதம் போன்ற கொள்கைகள் கிளர்ச்சிகள் மற்றும் கரந்தடிப் போர்கள் வடிவம்பெற்றன[1].

எதிர்ப்புரட்சிகர கரந்தடிப் போர்

கோட்பாடுகள்

கரந்தடிப் போர் ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப நடைபெறாததால் அதைத் தோற்கடிக்கக் கடினமாக இருக்கக்கூடும், ஆனால் 1950 கள் மற்றும் 1960 களில் நடந்த சில எதிர்ப்புரட்சிகர கரந்தடிப் போர்களில் சில கோட்பாடுகள் வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்டன.

உத்திகள், செய்முறைகள் மற்றும் அமைப்பு

கரந்தடிப் போர்முறையில் உத்திகளும் செய்முறைகளும் சிறிய விரைந்தியங்கும் போராளிக்குழு பெரிய படையை எதிர்ப்பதைக் குவியப்படுத்துகின்றன.[2] உள்ளூர் மக்களின் ஆதரவுடன் சிறியக் குழுக்களை ஒழுங்குபடுத்துவதும் அவர்கள் இயங்கக்கூடிய நிலப்பரப்பு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் கொரில்லாக்களின் நோக்கமாகும்.

எதிரிப் படைகளை பெரும் எண்ணிக்கையில் கரந்தடிப் படை எதிர்கொள்வதில்லை; சிறிய குழாமாக இருக்கும் எதிரி வீரர்களை தேடி ஒழிப்பதன் மூலம் தங்கள் இழப்புகளைக் குறைப்பதுடன் எதிரிக்கு எரிச்சல் மூட்டவும் முடிகிறது. எதிரி ஆட்களை மட்டுமல்லாது ஆயுதக் கிடங்கு போன்ற எதிரியின் வளங்களையும் தங்களது இலக்காக கொள்கிறார்கள். இதனால் எதிரியின் பலம் குறைகிறது; இந்தப் போர்முறையில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க இயலாது எதிரிப்படை பின்வாங்குகிறது.

பொதுவாக கொரில்லாப் போர்முறையில் குடிமக்கள் போல நடித்து எதிரிப்படையால் இனம் காண முடியாத போர்முறை இது என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது இந்தப் போர்முறையின் முதன்மை சிறப்புக் கூறு இல்லை. எங்கெல்லாம் போராளிகள் மறைந்திருந்து தாக்க முடியுமோ தவிர அந்த வாய்ப்பு பெரிய வழமையான எதிரிப்படைக்கு இல்லாதிருக்கிறதோ அங்கு இந்தப் போர்முறையை கையாள முடியும்.

மா சே துங் மற்றும் வடக்கு வியத்நாமிய ஹோ சி மின் போன்ற பொதுவுடமைத் தலைவர்கள் கரந்தடிப் போர்முறைக்கு அறிமுறை அடிப்படை வழங்கி செயலாக்கினர். இந்த உத்திமுறைகளே கூபாவின் ஃபோகோ கோட்பாட்டுக்கும் ஆப்கானித்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான முஜாஹிதீன் படைகளுக்கும் முன்மாதிரியாக விளங்கின.[3]

சங் கை செக்குடனான சீன உள்நாட்டுப் போரின்போது மா சே துங் கரந்தடிப் போரின் அடிப்படை உத்திகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: "எதிரி முன்னேறுகிறான், நாம் பின்வாங்குகிறோம்; எதிரி தங்குகிறான், நாம் துன்புறுத்துகிறோம்; எதிரி களைப்படைகிறான், நாம் தாக்குகிறோம்; எதிரி பின்வாங்குகிறான், நாம் துரத்துகிறோம்."[4]

இந்தப் போர்முறை உத்திகள் இருபதாம் நூற்றாண்டில் தான் துவங்கின என்றபோதும் தற்கால கரந்தடிப் போரை ஒத்த சண்டைகள் பழங்காலங்களிலும் சிறிய அளவுகளில் நடைபெற்றுள்ளன. தற்கால வளர்ச்சிக்குத் தூண்டலாக 19ஆம் நூற்றாண்டில் மத்தியாசு ரமன் மெல்லாவின் மானுவல் டெ கொர்ரா டெ கொரில்லாசு என்ற நூல் வகுத்த அறிமுறை வடிவமும் தங்களின் புரட்சிகள் வெற்றி பெற்ற பின்னர் எழுதப்பட்ட மா சே துங்கின் புத்தகமும், செ குவாரவின் நூலும் லெனினின் நூலும் அமைந்தன. செ குவாராவின் வார்த்தைகளில் கரந்தடிப் போர் "பெரும்பான்மையினரால் ஆதரவளிக்கப்படும் ஆனால் சிறிதளவே ஆயுதபலம் கொண்ட தரப்பினர் தங்கள் பாதுகாப்பிற்காக அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் போராகும்".

இந்தியாவில் மராட்டிய இந்துப் பேரரசர் சிவாஜியின் தலைமையில் கரந்தடிப்போர்கள் 17-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்டுள்ளன.

யுத்த நெறி புத்தகம்

புகழ் பெற்ற க்யூப போராளி எர்னெஸ்ரோ சேகுவேரா கரந்தடிப்போரில் ஈடுபட்ட வீரர் ஆவார்.இவர் கரந்தடிப் போரின் நுணுக்கங்கள் பற்றி எழுதிய புத்தகமே யுத்த நெறியாகும்.

கரந்தடிப் போர்கள் நடைபெற்ற புகழ் பெற்ற யுத்தங்கள்

 • ஸ்பெயினில் நெப்போலியனுக்கு எதிராக
 • வியட்னாமில் அமெரிக்காவுக்கு எதிராக
 • முஜாகிதீன் போராளிகள் சோவியத் யூனியனில்
 • பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் க்யூபாவில்
 • மாவோவின் செம்படை
 • சோவியத்தின் செஞ்சேனைகள்.
 • தமிழீழ விடுதலைபுலிகள் இந்திய இராணுவத்திற்கு எதிராக.

மேற்கோள்கள்

 1. Boot, Max (2013). Invisible Armies: An Epic History of Guerrilla Warfare from Ancient Times to the Present. Liveright. பக். 10–11, 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87140-424-4.
 2. Creveld, Martin Van (2000). "Technology and War II:Postmodern War?". in Charles Townshend. The Oxford History of Modern War. New York, USA: Oxford University Press. பக். 356–358. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-285373-2.
 3. McNeilly, Mark. Sun Tzu and the Art of Modern Warfare, 2003, p. 204. "American arming and support of the anti-Soviet Mujahadeen in Afghanistan is another example."
 4. Mao Tse-tung, “A Single Spark Can Start a Prairie Fire”, Selected Works, Eng. ed., FLP, Peking, 1965, Vol. I, p. 124.

வெளி இணைப்புகள்

இந்தியத் தேசிய இராணுவம்

இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிஹாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அடக்குமுறைத் தன்மையோடு இந்தியா இரண்டாம் உலகப் போரில் இறக்கிவிடப்பட்டதற்கு 1937 மற்றும் 1939 இல் இரண்டுமுறை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் போஸால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த போரில் பங்கேற்பதற்கு எதிராக முயற்சி எடுத்ததற்குப் பின்னர் அவர் 1939 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இவருக்கு பக்க பலமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்சியில் இருந்தார்.போர் வெடித்தபோது பிரித்தானிய அரசு அவரை 1940 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வீட்டுசசிறையில் அடைத்தது. இருப்பினும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்தப் போர் அதிக இரத்தம் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கையில் தப்பிச்சென்ற அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச்சென்று பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கான இராணுவத்தை உருவாக்க இரண்டாம் உலகப்போர் அச்சு நாடுகளிடம் உதவி கோரினார். இங்கே அவர் இர்வின் ரோமலின் இந்தியப் போர்க்கைதிகளை வைத்து இந்திய தேசிய இராணுவம் என்று பிரபலமான இராணுவத்தை உருவாக்கினார். பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கு விடுதலைப் படையை உருவாக்குதல் என்ற போஸின் இளம்பருவ கனவினுடைய கருத்தாக்கமாக இது வந்துசேர்ந்தது. சுதந்திர அரசாங்கமாகவுள்ள ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் என்று பிரபலமான இயக்கத்தை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார். ஜப்பானிலும் தென்கிழக்காசியாவிலும் தனது வழியை அமைத்துக்கொண்டார். அத்துடன் அவர் இந்தியப் போர்க்கைதிகளுடன் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் இணைந்து இந்திய தேசிய ராணுவத்தையும் ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதனுடைய நோக்கம், பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு எதிராக இந்தியப் படைவீரர்களுக்கிடையே கலகங்களைத் தூண்டும் விதமாக பொதுமக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தும் போரிடும் படையாக இந்தியாவை அடையவேணடும் என்பதே.

இந்திய தேசிய இராணுவம் பர்மாவின் அரகான் காடுகள் மற்றும் அஸ்ஸாமில் பிரித்தானிய இந்திய இராணுவம் உள்ளிட்ட கூட்டுப்படைகளின் எதிர்ப்பைக் கண்டது, ஜப்பானியர்களின் 15 வது இராணுவத்துடன் இம்பால் மற்றும் கோஹிமாவை முற்றுகையிட்டது. இந்தப் போரின்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது; போஸ் அவற்றிற்கு ஷாகித் (தியாகம்) என்றும் சுவராஜ் (சுதந்திரம்) என்றும் பெயரிட்டார்.

தடங்கலான அனுப்புகைகள், ஜப்பானியர்களிடமிருந்து பெற்ற மோசமான ஆயுதங்கள் மற்றும் அளிப்புக்கள் மற்றும் பயிற்சி உதவியின்மை ஆகியவற்றால் இந்திய தேசிய இராணுவம் தோற்றுப்போயிருக்கலாம். போஸ் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது முழு ஆஸாச் ஹிந்த் இயக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய இராணுவத்தின் துருப்புக்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டனர். இருப்பினும் போஸின் துணிச்சலான நடவடிக்கைகளும் அடிப்படைவாத முன்முயற்சியும் அந்த நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறது. பிரித்தானிய பேரரசு கூட்டாளிகளாக கருதப்பட்ட பிரித்தானிய இந்திய போர்வீரர்கள் சொந்த நாட்டு விசுவாசமாகத் தூண்டுவதாகவும் அமைந்தது.ஐஎன்ஏ வழக்குகள் (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில்

நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது. இந்திய தேசிய இராணுவப் போர்வீரர்களின் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்த ஆஸாத் ஹிந்த் மற்றும் அதன் இராணுவத்தின் கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் வெகுமக்கள் கலகங்களும் கிளர்ச்சிகளும் ஏற்படலாம் என்ற அச்சத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது, பிபிசி அவர்கள் கதையை ஒலிபரப்புவதை பிரித்தானிய அரசாங்கம் தடைசெய்தது. செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு கூட்டாக தண்டனை நிறைவேற்றப்பட்டதை செய்தித்தாள்கள் தெரிவித்தன. விசாரணையின்போதும் அதற்குப் பின்னரும் பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளுக்கிடையே கலகங்கள் மூண்டன, அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ராயல் இந்திய கடற்படை கராச்சியிலிருந்து மும்பை வரை மற்றும் வைசாக்கிலிருந்து கொல்கத்தா வரையிலுமாக இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் ஆதரவைக் கண்டதாகும். இந்தியாவின் இறுதிக்கட்ட சுதந்திரத்திற்கான முக்கிய இயக்கு சக்தியாக இருந்தவை பிரித்தானிய இந்திய ஆயுதப் படையினருக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய தேசிய இராணுவமும் அதனுடைய கலகங்களும் ஆகும் என்று பல வரலாற்றாய்வாளர்களும் வாதிடுகின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

பனிக்காலப் போர்

பனிக்காலப் போர் (Winter War) என்பது சோவியத் ஒன்றியத்துக்கும், பின்லாந்துக்கும் இடையே நடைபெற்ற போரை குறிக்கும். இப்போர் நடந்த போது, வெப்பநிலை சராசரியாக −43 °செ (−45 °ப) அளவு இருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய மூன்று மாத காலத்தில், 1939 நவம்பர் 30 அன்று சோவியத்து ஒன்றியம், பின்லாந்து மீது ஆக்கிரமிப்பு செய்ததால், இப்போர் தொடங்கிற்று. மூன்றரை மாதங்கள் கழித்து 1940 மார்ச்சு 13 அன்று மாசுக்கோ அமைதி உடன்பாடு ஏற்பட்டதனால், இப்போர் முடிவுக்கு வந்தது. உலக நாடுகள் சங்கம் இப்போர் முறையற்றது எனக் கருதியதால், சோவியத் ஒன்றியத்தை சங்கத்திலிருந்து விலக்கியது.

சில பின்லாந்து பகுதிகளை சோவியத் ஒன்றியம் பெற்ற பிறகு சில சலுகைகளைகளுடன் பின்லாந்து குறிப்பிடத்தகுந்த எல்லைப்புற பகுதிகளை கேட்டது அந்த நிலத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் கொடுக்கப்படும் நிலத்தை ஒதுக்கப்படும் என்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லைப்புற நிலத்தை கேட்டது. குறிப்பாக பின்லாந்து எல்லையிலிருந்து 32 கிமீ தொலைவிலுள்ள சென் பீட்டர்சுபெர்க் பாதுகாப்புக்காக கேட்டது. நிலத்தை தர பின்லாந்து மறுத்த காரணத்தால் சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது படையெடுத்தது. பின்லாந்து முழுவதையும் சோவியத் ஒன்றியம் தன் ஆளுகைக்கு கீழ் கொணடுவர

திட்டமிட்டிருந்தது சில ஆதாரங்கள் மூலம் தெரியவந்த்து. பின்லாந்தை முழுவதும் வெற்றிகொண்ட பின் தன் கைப்பாவை அரசை அங்கு நிறுவ திட்டமிட்ருந்தது மோலோடோவ்- ரிப்பன்டிராப் உடன்பாடு சாட்சியாகும். மற்ற சில ஆதாரங்கள் சோவியத் ஒன்றியம் பின்லாந்து முழுவதையும் கைப்பற்ற நினைக்கவில்லை என்கின்றன.

சோவியத்தின் தாக்குதலை பின்லாந்து இரண்டு மாத காலத்துக்கு முறியடித்தது, பின்பு சோவியத் படை போர் உத்தியை மாற்றி தாக்குதலை

தொடர்ந்தார்கள் புதிய உத்தியால் பின்லாந்து தற்காப்பை முறியடித்தார்கள். 1940 மார்ச்சில் படை நடவடிக்கை மாசுக்கோ அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. பின்லாந்து 11% நிலங்களை விட்டுக்கொடுக்க இசைவு தெரிவித்தது. இப்பகுதியில் பின்லாந்தின் 30% பொருளாதாரம் இருந்தது. சோவியத்தின் இழப்புகள் அதிகமாக இருந்தன மேலும் அந்நாட்டின் மதிப்பு உலக நாடுகளிடம் சரிந்தது. போருக்கு முன் கோரிய நிலத்தை விட அதிகமாக பெற்றது. சோவியத் வட பின்லாந்திலுள்ள ஐரோப்பாவின் பெரிய நன்னீர் ஏரியான லடோகா ஏரியை பெற்றது. பின்லாந்து தன் இறையாண்மையை தக்கவைத்து கொண்டதுடன் உலக நாடுகள் மத்தியில் மதிப்பை பெற்றது.

சோவியத் படைகளின் மோசமான நடவடிக்கையால் அடால்ப் இட்லர் சோவியத்தை தாக்கி வெற்றி பெறலாம் என எண்ணி சோவியத் படைகள் வலுவற்றவை என்ற மேலைநாடுகளின் கருத்தை உறுதி செய்தார். 15 மாதங்கள் அமைதிக்கு பின் சூன் 1941 பின்லாந்து நாசி செர்மனி [[பார்போசா

நடவடிக்கை]]யை சோவியத்துக்கு எதிராக தொடங்கியது பின்லாந்து அதனுடன் சேர்ந்து சோவியத் மீது தாக்குதலை தொடுத்தது இது பனிப்போரின்

தொடர்ச்சியான போர் என அழைக்கப்பட்டது..

முதல் பூவர் போர்

முதல் பூவர் போர் (First Boer War), அல்லது முதல் ஆங்கில-பூவர் போர் அல்லது டிரான்சுவால் போர், எனப்படும் போர் பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்திற்கும் தென்னாபிரிக்கக் குடியரசுக்கும் இடையே திசம்பர் 16, 1880 முதல் மார்ச் 23, 1881 வரை நடந்த போராகும்.

19ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்காவைப் பிடிக்க நடந்த போட்டியில் பிரித்தானியப் பேரரசு தெற்கு ஆபிரிக்கா முழுமையையும் தனது கட்டுக்குள் கொணர முயன்றது. 1815இல் நெப்போலியப் போர்கள் முடிவடைந்த நிலையில் நன்னம்பிக்கை முனையைக் கைப்பற்றியிருந்தனர். தாங்கள் குடியேறிய பகுதிகளை பிரித்தானியா கட்டுப்படுத்துவதை டச்சு, செருமனி, பிரான்சிய நாட்டினரின் கலவையினமாகிய பூர்கள் விரும்பவில்லை. சிலர் வடக்கு நோக்கிச் சென்று ஆரஞ்சு விடுதலை இராச்சியம் என்ற புதிய நாட்டை உருவாக்கிக் கொண்டனர். வைரச் சுரங்கங்கள் நிறைந்திருந்த ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தைக் கைப்பற்ற 1877இல் பிரித்தானியப் படையினர் முன்னேறினர்.

டிரான்சுவாலின் தலைவர் பவுல் குருகர் பிரித்தானியர் வெளியேற இறுதி எச்சரிக்கை விடுத்தார். இதற்கு மறுதளித்த பிரித்தானியர் திசம்பர் 16, 1880இல் முதலாம் பூவர் போர் மூண்டது. சாண்டுசுபுரூய்ட், வொல்க்சுகிரஸ்ட் ஆரஞ்சு விடுதலை இராச்சியம், டிரான்சுவால் ஆகியன இணைந்து போரில் ஈடுபட்டன. போரில் இறந்த வீரர்களுக்கு மாற்றாக இளைஞர்களையும் முதியோரையும் பூவர் அரசு ஈடுபடுத்தியது. இவர்களுடன் கருப்பின மக்களும் இணைந்தனர். மொத்த பூவர் போர்ப்படையில் 20 முதல் 25 % கருப்பர்களாக இருந்தனர். செருமானியப் பேரரசு பூர்களுக்கு ஆதரவளித்தது. அவர்களது கிரப் துப்பாக்கிகளை பூர்களுக்கு வழங்கியது. பெரும்பான்மையானச் சண்டை குதிரைப்படை வீரர்களுக்கிடையே நடைபெற்றது.

அமெரிக்கப் போருக்குப் பின்னர் பிரித்தானியர் தோல்வியடைந்த முதல் போராக முதலாம் பூவர் போர் திகழ்ந்தது. தோல்வியடைந்த பிரித்தானியர் அமைதி உடன்படிக்கையில் தங்களுக்கு விருப்பமில்லாத சரத்துக்களுடன் கையொப்பமிட வேண்டியதாயிற்று. இதுவே பிரித்தானியர் தங்களது சிவப்பு மேலங்கியுடன் போரிட்ட கடைசி போராக அமைந்தது; இப்போரிலிருந்து காக்கி சீருடைகளை அணிந்து பிரித்தானியர் போரிட்டனர். பூர்களின் கரந்தடிப் போர் முறை, நகரும் தன்மை, குறிபார்த்து சுடும் திறன், தற்காப்பு நிலைகளை கூடுதலாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் நவீனத் துப்பாக்கிகளைக் கொண்டிருந்த, பட்டறிவு வாயந்த பிரித்தானியரை வென்றனர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.