கன்பூசியஸ்

கான்பூசியஸ் ((சீனம்: பின்யின்: Kǒng zǐவேட்-கில்சு: K'ung-tzu, or சீனம்: 孔夫子; பின்யின்: Kǒng Fūzǐ; வேட்-கில்சு: K'ung-fu-tzu), நேரடி அர்த்தமாக " காங் குரு",[1] செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)[2][3] ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.

அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச[4][5][6] (206 BC – 220 AD)கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட(道家) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் (儒家) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.

கன்பூசியஸ்
சீன மெய்யியல்
பண்டைக்கால மெய்யியல்
Confucius 02
孔夫子
முழுப் பெயர்孔丘 கொங் கியு
பிறப்புசெப்டெம்பர் 28, கிமு 551
குபு, சீனா
இறப்புகிமு 479
குபு, சீனா
சிந்தனை
மரபு(கள்)
கன்பூசிஸியத்தின் நிறுவனர்
முக்கிய
ஆர்வங்கள்
நன்னெறி மெய்யியல், சமூக மெய்யியல், ஒழுக்கம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கான்பூசியசியம்

பிறப்பு

சீனாவில் பல ராஜாக்கள் இருந்தனர்.அவர்கள் பதவி ஆசையில் மக்களையே துன்புறுத்தினர்.மொத்தத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மன்னர்களே மக்களை வதைத்தனர்.ஹன்பூஸியஸ் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு பெரிய அதிசயம் நடந்தததாக சீன மக்கள் நம்பினர்.அதாவது 'சி லின்'என்ற ஒற்றைக் கொம்புக்குதிரை(unicorn) திடீரென்று தோன்றி ஒரு முக்கியமான செய்தியை அறிவித்ததாம்: "பளிங்கு போல் துய்மையான ஒரு குழந்தை இங்கே பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை எந்நாட்டையும் ஆட்சி செய்யாத ஓர் அரசனாகத் திகழும்". சி லின் குதிரை தோன்றி சிறிது காலத்துக்குப் பின்னர் அது சொன்ன செய்தி நிஜமாகிவிட்டது. சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில் அந்த அற்புதக்ககுழந்தை கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தது.இக்குழந்தையின் தந்தை பெயர் ஷ லியாங் ஹி.தாயின் பெயர் ஜென் சென் ட்சாய்.இவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் குங் சியு என்று பெயர் சூட்டினார்கள்.பிற்காலத்தில் அவரது சீடர்கள் குங்க்புட்சு என்று கூப்பிட்டனர்.அதன் அர்த்தம் குருநாதர் குங் என்பதாகும்.இதையே மேலைத்தேயர்கள் ஹன்பூசியஸ் என்றனர்.

குடும்பசுழல்

ஹன்பூசியசஸின் தந்தை ஷ லியாங் ஹி முதலில் சிறந்த வீரராகவும் பின் நீதிபதியாகவும் பின் கிராமத்து ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஹன்பூசியஸ் பிறந்தபோதே தந்தைக்கு மிகவும் வயதாகி விட்டது. ஹன்பூசியசிக்கு மூன்று வயது உள்ளபோதே தந்தை இறந்துவிட்டார். ஹன்பூசியசிக்கு பின் படிப்பின்மீது ஆர்வம் வந்தது.புத்தகங்கள் அனைத்தையும் தேடித்தேடிப் படித்தார். இருப்பினும் இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றார். இவருக்கு முதலில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் பின் உள்ளுர்ப் பூங்காக்களைக் கவனித்தல், பின் தானியக் களஞ்சியத்தைப் பாதுகாத்தல் என்று வேலைகள் கொடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் ஹன்பூசியஸ்க்கு திருமணம் சீகுவான் என்ற பெண்ணுடன் நடைபெற்றது. அடுத்த ஒரு வருடத்திலேயே குங் லீ என்ற மகனும் பிறந்தான்.

தத்துவவியல்

இவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.

நீதிநெறி

இவருடைய தத்துவங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் மேன்மையை பற்றியே எடுத்துரைத்தது. இவருடைய நீதிவிளக்கங்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்டது. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.

廄焚。子退朝,曰:“傷人乎?” 不問馬。

ஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு இவரிடம் வந்தது உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏஎதேனும் காயம் ஏற்பட்டதா? அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.

己所不欲,勿施於人。

உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.

அரசியல்

கன்பூசியஸின் அரசியல் கோட்பாடுகல் அவரின் நன்னெறி விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே. இவரின் கருத்துப்படி ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் ல்ஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.

சீடர்கள்

இவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான்(Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.

வாழ்க்கை

இச்சமயத்தில்தான் கன்பூசியசும் யோசித்து மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இருபத்திரண்டு வயதிலேயே பள்ளியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், எது நல்லது, எது கெட்டது, கல்வியின் முக்கியத்துவம், கடவுள் வழிபாடு, சட்டம், அரசியல், ஆட்சிமுறை என்று சொல்லிக் கொடுத்தார். இவற்றைத் தொகுத்து பின் நூலாக்கினார். ஹன்பூசியசிடம் கிட்டத்தட்ட 3௦௦௦ சீடர்கள் படித்தனர். லூ மாநிலத்து மன்னன் மக்களுக்கு நல்லது செய்ய விடவில்லை என்பதால் முப்பத்து ஐந்து வயதில் பக்கத்துக்கு மாநிலமான சி க்குச் சென்றார். ஹன்பூசியசின் நற்பாடத்தை சீடர்கள் மட்டுமே கேட்டனர். அது மக்களுக்குச் செல்லவில்லை. இதனால் கன்பூசியஸ் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் லூ மாநிலத்திற்குச் சென்று தான் படிப்பித்தவற்றை நூலாக எழுதினார். அவ்வகையில் இவர் எழுதிய நூல்களாவன:

 1. எழுச்சிப் பாடல் நூல்
 2. நூல்
 3. மாற்றம் பற்றிய நூல்
 4. சடங்கு முறை நூல்
 5. இசைத் தொகுப்பு நூல்
 6. இளவேனிலும் இலையுதிர் காலமும்.

இவரின் ஐம்பத்தோராம் வயதில் அரசாங்கப்பதவி கிடைத்தது சுங் து நகரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின் இவர் நன்றாகச் செயற்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரியாகவும் பின் லூ மாநிலத்தின் நீதித்துறை தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். பின் அரசனின் கெட்ட பழக்கம் காரணமாக 13 வருடங்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக சீடர்களின் சொற்படி கி.மு 484 ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலமான லூ வுக்கே வந்து சேர்ந்தார். 3௦௦௦ மாணவர்களுள் 72 பேரே இவரின் போதனைகளை உலகிற்குப் பரப்பியவர்கள்.

Cemetery of Confucius, Qufu, Kina
Cemetery of Confucius, Qufu, Kina

கி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. 1. நல்ல பண்புகள்.

 • நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
 • நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.
 • நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.
 • நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 • உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.
 • கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
 • நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.

2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்

 • அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
 • ஆர்வத்துடன் உழைப்பார்கள்.
 • சோம்பலாக இருக்கமாட்டார்கள்.
 • பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.
 • புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.
 • அன்போடு பழகுவார்கள்.
 • நிலைமாறாமல் இருப்பார்கள்.
 • தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.
 • ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.
 • அனைவரையும் அரவணைப்பார்கள்.
 • எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.
 • தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.
 • சட்டத்தை மதிக்கிறார்கள்.
 • சுதந்திரமாக வாழ்வார்கள்.
 • பொறாமைப்பட மாட்டார்கள்.

3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்

 • பணிவன்பு
 • சகித்துக்கொள்ளும் தன்மை
 • சக மனிதர்கள் மீது நம்பிக்கை
 • விடாமுயற்சி
 • கருணை

4. மென்மையான குணங்கள் எவை?

 • மனஉறுதி
 • விடாமுயற்சி
 • மென்மையாகப் பேசுவது

5. கெட்ட குணங்கள்

 • பாசாங்கு செய்தல்
 • கோபப்படுவார்கள்.
 • சண்டை செய்வார்கள்.
 • வதந்திகளை பரப்புவார்கள்.

6. படிப்பு

 • சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்
 • படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
 • உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
 • நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.
 • ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.

7. தலைவர்

 • பதவிக்கு மரியாதை கொடுப்பார்.
 • நம்பிக்கைக்குரியவர்.
 • உயிரைத் துச்சமாக மதிப்பர்.
 • நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
 • நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.
 • அமைதியாக இருப்பார்கள்.
 1. கடவுள்,கோயில்,சடங்குகள்
 • கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.
 • பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.

8. வெறும் சில

 • கெட்டதை எண்ணாதே
 • நேர்மையின் வழியில் நட
 • தன்னடக்கத்துடன் இரு
 • மனஉறுதியுடன் இரு
 • கண்ட நேரத்தில் சாப்பிடாதே
 • வயிறு நிறையச் சாப்பிடாதே.
 • மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே
 • எளிமையாக இரு
 • தவறு செய்தவர்களை மன்னித்திடு

மேற்கோள்கள்

 1. சாதாரணமாக குறுக்கப்பட்ட பெயர் சீனம்: 孔子; பின்யின்: Kǒngzǐ; பார்க்கபெயர்கள் பகுதி
 2. http://plato.stanford.edu/entries/confucius/
 3. http://www.google.com/search?q=confucius&hl=en&safe=active&rls=com.microsoft:en-us&sa=X&tbo=p&tbs=tl:1,tll:551BC,tlh:551BC&ei=utUTS5GsHYuPtgev8dGsCQ&oi=toolbelt_timeline_result&resnum=2&ct=timeline-date&ved=0CCYQzQEwAQ
 4. Ban 111, vol.56
 5. Gao 2003
 6. Chen 2003
கன்பூசியம்

கன்பூசியம் அல்லது கன்பூசியஸ்நெறி (Confucianism) என்பது சீனத்து ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது கன்பூசியஸ் ('குங்-பூ-ட்சு’ அதாவது ”ஆசிரியர் காங்”, கி.மு 551 - 479) என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின் (கி.மு. 771 - 476) ”ஒழுக்க-சமூகவரசியல் போதனை”களாக தோன்றி, பின்னர் ஆன் அரசமரபின் காலத்தில் (கி.மு 206 - கி.பி 220) இயக்கமறுப்புசார் (Metaphysical) கூறுகளையும் அண்டவமைப்புசார் (Cosmological) கூறுகளையும் ஏற்படுத்திக்கொண்டது. சின் அரசமரபிற்குப் பிறகு சட்டவியல் (இதுவும் ஒரு சீன மெய்யியல்) கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கன்பூசியஸ்நெறி சீனாவின் அதிகாரபூர்வ நாட்டுக் கொள்கை ஆயிற்று. பின்னர், சீனக் குடியரசு அமைந்ததைத் தொடர்ந்து ‘மக்களின் மூன்று கொள்கைகள்’ என்ற அரசியல்சார் கொள்கை கன்பூசியஸ்நெறியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

கன்பூசியஸ்நெறியின் மையக்கரு மாந்தநேயமே, தனிநபர் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம், குறிப்பாய் தற்பண்படுத்தல் மற்றும் தன்னாக்கம் கொண்ட செயல்பாடுகள் மூலம், மனிதர்கள் கற்றுக்கொடுக்கப்படக் கூடியவர்கள், மேம்படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் முழுமைபடுத்தப்படக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையே அடிப்படை. கன்பூசியஸ்நெறி பண்புநலன்களை வளர்த்துக்கொளல் மற்றும் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறது. இவற்றுள் மிக அடிப்படையானவை ’ரென்’, ’இயி’ மற்றும் ’இலி’ என்பவை. ’ரென்’ என்பது ஒரு சமூகத்தில் உள்ள பிற நபர்கள் மீதான மாந்தநேயமும் பொதுநலம் மீதான கடமையுணர்வும் ஆகும். ’இயி’ என்பது நியாயத்தை நிலைநிறுத்த முனைதலும் நன்மை செய்ய விழையும் ஒழுக்க மனப்பான்மையும் ஆகும். ’இலி’ என்பது ஒரு சமூகத்தினுள் ஒரு மனிதன் எவ்வாறு முறையாக செயல்பட வேண்டும் என நிர்னயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். ’ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் உயிரான அறப்பண்புகளைக் காக்க வேண்டி ஒருவன் தன் உயிரையும் கூட தர வேண்டும் என்று கன்பூசியஸ்நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் என்ற மனிதர் சீனத்து பழைய மதங்களின் மீது நம்பிக்கைகொண்டவர் என்றபொழுதிலும், கன்பூசியஸ்நெறி என்ற கொள்கை மாந்தநேயம் சார்ந்ததாயும், இறைசாரா நெறியாகவுமே இருக்கிறது, இது மீஇயற்கையிலோ அல்லது உருவஞ்சார் இறைவனிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

கன்பூசியஸ் நெறியினால் வலுவாக தாக்கமடைந்த கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளின் பட்டியல் பெருநிலச் சீனா, தாய்வான், கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாம், மற்றும் சிங்கப்பூர் போன்ற சீன மக்கள் பெருவாரியாக சென்று குடியமர்ந்த பலப்பல நிலப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் கன்பூசிய கருத்துக்கள் நிலவினாலும், இச்சமூகத்தைச் சேராத சிலரும் தங்களை கன்பூசியர்கள் (கன்பூசியஸ் நெறியைப் பின்பற்றுபவர்) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர், கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாய் காணுவதற்குப் பதில் பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறியாய் காண்கின்றனர், அப்பிற நெறிகள் மக்களாட்சி, மார்க்சியம், முதலாளித்துவம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பௌத்தம் போன்றவை. ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியத்தை ஒரு சமயமாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.

கன்பூசியசின் கருத்துக்களானது பல நாடுகளில் வாழ்வியல் சிந்தனைகளில் பெரும்பங்கு வகித்தன. கன்பூசியசின் கொள்கைகள் கன்பூசியம் என்ற வாழ்க்கை முறையாக வளர்ச்சியடைந்து பின்பற்றப்படுகின்றன. கன்பூசியம் என்பது ஒரு மதம் அல்ல. ஆனால் கிறித்தவத்தின் அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் அணுகுமுறையை அது பகிர்ந்துகொள்கிறது. இதுவே கன்பூசிய தத்துவத்தின் அடித்தளமாகும். கன்பூசியம், முழுமையாக கருணை, சக மனிதனின் மீதான மரியாதை மற்றும் நன்னடத்தையை வெளிப்படுத்தும் நல்லொழுக்கங்களுக்கான பாராட்டு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கன்பூசியஸ் நிலையம்

கன்பூசியஸ் நிலையம் உலக நாடுகளில் சீன மொழியையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற நிலையம் ஆகும். இதன் கிளைகள் உலக நாடுகள் பலவற்றில் சீன மொழியைப் படிப்பிக்கின்றன. இது சீன மக்கள் குடியரசின் ஆதரவைப் பெற்ற ஓர் அமைப்பு ஆகும்.

கல்வி

கல்வி

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்னும் ஊர், வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம். அந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, கர்நாடக நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கட்குச், “சுந்திரகிரி மன்னர்கள்’ என்று பெயர். அம்மன்னர்களது ஆட்சியை, அவர்களுடைய அழிந்த கோட்டைகளும், அகழியும் நினைவுபடுத்துகின்றன. அவற்றைச் சார்ந்துள்ள மலைக்கு, “சந்திரகிரி’ என்று பெயர். அந்த மலைச்சரிவில் அமைந்த தலைநகரும், சந்திரகிரி என்னும் பெயரையே பெற்றிருந்தது.

அந்நகரத்தில், நாகம்மாள் என்னும் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அப்பெண்மணி ஓர் அந்தணனின் மனைவி. நாகம்மாளின் நல்வினைப் பயனால், அவளுக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அக்குழந்தைக்கு, “திம்மரசு’ என்னும் பெயர் சூட்டி, அருமைமிகு வளர்ந்து வந்தனர்.

நாகம்மாள், அதன் பின்னர் பிறந்த ஓர் ஆண் குழந்தைக்கு கோவிந்தராசு என்னும் பெயரையும், பெண் குழந்தைக்கு கிருஷ்ணாம்பாள் என்னும் பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள்.

திம்மரசு, கோவிந்தராசு, கிருஷ்ணாம்பாள் ஆகிய மூவரும் சிறுவர்களாக இருந்தபோதே, அவர்களுடைய பெற்றோர் இறந்து விட்டனர். தாய்ப் பறவையை இழந்த, சிறகு முளைக்காத குஞ்சுகள் போலப் பிள்ளைகள் மூவரும் அல்லலுற்றனர்.

அவர்களுக்கு உண்ண உணவில்லை; உடுத்த உடை இல்லை. அவர்கள் மிகவும் வறுமையில் வாடினர். உடன் பிறந்தாரைப் பாதுகாக்கும் பொறுப்பு திம்மரசுக்கு உரியதாயிற்று. திம்மரசு இளைஞர். அவர் என்ன செய்வார் பாவம்!

திம்மரசு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி வந்து, தம்முடன் பிறந்தவர்களுக்குக் கொடுத்து, தாமும் உண்டு ஒருவாறு காலத்தைக் கழித்து வந்தார்.

திம்மரசு பிச்சை வாங்கச் செல்லும்போது, அவரது உள்ளம் உருகும்; உடல் நடுங்கும்; மென்மையான முகத்தில் துன்பம் தோன்றும்; கண்களில் நீர் நிறைந்து வழியும்; பிச்சை இடாதவரின் கடுஞ்சொல்லும், சுடுமுகமும், அவரது துன்பத்தை மேலும் மேலும் வளர்த்த வண்ணம் இருந்தன.

அந்நிலையில், திம்மரசின் பிஞ்சு உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றி, அவரை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது. “எப்படியாவது நாம் படித்துவிட்டால் இந்த இழி தொழிலை விட்டு விடலாம்!’ என்று நினைத்தார்.

அந்த வருத்தத்தினிடையே திம்மரசு, “படித்தேயாக வேண்டும்’ என்னும் முடிவைக் கொண்டார். உடனே அந்த ஊரில் இருந்த ஆசிரியரை அடைந்து, வணங்கி நின்று, “”ஐயா! படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகிறது. நான் எடுப்பதோ பிச்சை, உடுப்பதோ கந்தல் ஆடை. நீங்கள் அருள்கூர்ந்து அடியேனுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகளில் அடியேனும் ஒருவன்!” என்று கூறினார்.

அதைக் கேட்ட ஆசிரியர், தம் கையில் இருந்த பிரம்பைக் கீழே வைத்தார்; சிறுவனாகிய திம்மரசை நோக்கினார். “”சிறுவனே! உன் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. அது எல்லாருடைய உள்ளத்திலும் உண்டாகிற அழுக்கில்லாத ஆசை. இங்குக் கிடக்கும் பனையோலைகளே உனக்குப் பெருவாழ்வளிக்கும் பொன்னேடுகள். இப்பனையோலையில் எழுதி தருகிறேன். நீ படித்துக்கொள்!” என்று கூறினார்.

திம்மரசின் உள்ளம் குளிர்ந்தது; முகம் மலர்ந்தது.

அன்றே திம்மரசு படிக்கத் தொடங்கினார். “இன்ன நேரத்தில் இன்ன வேலை செய்ய வேண்டும்’ என்று ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்; முறைப்படி கடமை புரிந்தார்.

திம்மரசு தெலுங்கில் ஓரளவு அறிவு பெற்ற பின், வடமொழியையும் பயின்றார். அவர் இரு மொழிகளிலும் உள்ள இலக்கிய இலக்கணங்களை நன்கு பயின்றார். அதன் பின்னர், மனு முதலியோர் இயற்றிய பொருள் நூல்களையும், வியாசர் முதலியோர் இயற்றிய நீதி நூல்களையும், நீதி சாஸ்திர நூல்களையும் கற்றுப் பெரும்புலமை பெற்றார்.

திம்மரசு இரவு பகலாக இருபது வயது வரை கற்றார். கல்வியும், ஒழுக்கமும் அவருக்கு இரு கண்களாக இருந்தன. தமக்கு உண்டாகும் ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும், நூற்பொருளை அறிந்து கொள்ளவும் பலர் அவரது குடிசைக்குச் சென்றனர்.

உணவு தேடி வீடு வீடாகச் சென்ற திம்மரசை, பொருள் தேடி வந்து சேர்ந்தது. அவரது ஓலைக் குடிசை, உயர்ந்த மாளிகை ஆயிற்று. பின்னாளில் நாட்டின் முதல் மந்திரியாக உயர்ந்து பேரும் புகழும் பெற்றார்.

- செப்டம்பர் 03,2010

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும்.

இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.

கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது. ஆனால் குழந்தைப் பருவத்தில் கற்கும்போது முழுமையான பரிமாணம் அடைந்து முழுமையான மனிதனாகவும், சமுதாயத்திற்கு உதவிகளை அளிக்கும்படியும் மாற்றம் அடைகின்றனர்.

கிமு 6-ஆம் நூற்றாண்டு

கிமு 6ம் நூற்றாண்டு (6th century BC) என்பது கிமு 600 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கிமு 501 ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.

இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது.

பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.

இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.

குடிமையியல்

குடிமையியல் என்பது குடியுரிமையின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை அம்சங்களைப் பற்றிய அறிவின் திரட்டு ஆகும். அதே போல் குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்; ஒரு அரசியல் அமைப்பின் உறுப்பினர்களாகவும் அரசாங்கத்திற்காகவும் ஒருவருக்கொருவர் ஆற்றிக்கொள்ள வேண்டிய குடிமக்களின் கடமைகள் இவற்றைப் பற்றிய விரிவான ஆய்வியலாகும்.. இது குடிமையியல் சட்டம் மற்றும் குடிமக்கள் நடத்தைக்கான விதித் தொகுப்பு, குடிமக்கள் பற்றிய கவனத்தோடு அரசாங்கத்தைப் பற்றிய ஆய்வு ஆகியவற்றையும், அரசாங்கத்தின் செயல்பாடுகளிலும் மற்றும் அதன் அத்துமீறல்கள், தவறுதல்களைம் வெளிப்புறத்திலிருந்து எதிர்க்கும் காரணிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

கொடுக்கப்பட்ட அரசியல் அல்லது நெறிமுறை மரபின்படி, குடிமக்களுக்கு கல்வி புகட்டுவதைக் குடிமையியல் குறிக்கிறது. குடிமையியலின் வரலாறு, பண்டைய சீனாவில் கன்பூசியஸ் மற்றும் பழங்கால கிரேக்கத்தில் பிளேட்டோ ஆகியோரால் முன் வைக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்து தொடங்குகின்றது எனலாம். மேற்கத்திய பாரம்பரியத்தாலான தாக்கம் சீனாவிற்கு வந்த பிறகு, மரபின்படியான சீன சட்டமும், சோவியத் சட்டத்தின் காரணமான தாக்கமும் திரும்பிய காலங்களுக்குப் பிறகு, 1839 இல் துவங்கிய மேற்கத்திய சட்டபூர்வ மரபுகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன் மதிப்புடையதாக இருந்தது. இஸ்பெசிபிக் என்பது சீன சட்டங்களில் பயன்பட்ட பொதுவான, சாதாரண மொழியாகும். இம்மொழியானது கல்வியில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது.

சமூகவியல்

சமூகவியல் (Sociology) என்பது மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆயும் ஓர் இயல் ஆகும். இது சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும், பகுப்பாய்வு முறைகளையும் பயன்படுத்தும் ஒரு சமூக அறிவியல் ஆகும். மனிதர்கள் சமூக விலங்குகள். அதாவது மனிதர்களின் அனேக செயல்பாடுகள் பிற மனிதருடன் சேர்ந்தே அமைகின்றன. ஆகையால் சமூகவியலின் முக்கிய ஆய்வுப் பொருளாக சமூகம் அல்லது மக்கள் குழு அமைகின்றது. சமூகம் தனிமனிதனை எப்படி பாதிக்கின்றது, தனிமனிதன் சமூகத்தை எப்படி பாதிக்கின்றான் என்பதும் சமூகவியலின் ஆய்வுக் களமே. சமூகவியலின் தந்தை ஆகஸ்ட் கோம்ட் (Auguste Comte) என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார்.

சீ சிங்

சீ சிங் («பாடல்களின் தொகுப்பு» Shih-ching, Shijing, அல்லது வாழ்த்துப்பாக்களின் நூல் (Book of Odes) என்பது சீனத்தின் முதல் நூலாகும். இன்று கிடைக்கும் சீன நூல்களில் மிகத் தொன்மையானது இதுவே. இந்த நூலை ஆங்கிலத்தில் Classic of Poetry என்று அழைக்கின்றனர், இது பெரும்பாலும் மிகச்சிறந்த பாடல்களின் தொகுப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் காலம் கி.மு. 11 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். "ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்" என்னும் பாரம்பரிய நூல்களை கன்பூசியஸ் தொகுத்ததாகக் கூறப்படுகிறது, அதில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு காலகட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகள் சீனாவிலும் அண்டை நாடுகளிலும் அறிஞர்களால் மனனம் செய்யப்பட்டு, நினைவில் வைக்கப்பட்டிருந்து. பின் எழுத்தால் எழுதப்பட்டன. சிங் அரசமரபு காலத்தில் அதன் ஓசை வடிவங்கள் பழைய சீன ஒலியியல் பற்றிய ஆய்வுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, நூலுக்கு இருந்த திரிபான விளக்கங்கள் மாற்றப்பட்டு பழைய உரை விளக்கங்கள் மீட்கப்பட்டன.

சீ சிங் என்பதில் உள்ள ஷீ என்ற சொல்லுக்குக் கவிதை அல்லது பாடல் என்றும், சிங் எனபதற்கு பல பொருள்கள் உண்டு என்றாலும் இதில் செவ்விலக்கியம் என்ற சொல்லும், தொகுப்பு என்ற பொருளும் முதன்மையானவை. இதன் பாடல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சீன நூல்கள் பட்டியல்

சீனாவின் நெடிய வரலாற்றின் முக்கிய நூல்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

சீன மொழி

சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும்.

பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.

சீனமொழிக் கல்வி

உலகில் அதிகமான மக்களால் (1.3 பில்லியனுக்கு மேல்) தாய்மொழியாக எழுதப்படும் மொழி சீன மொழி ஆகும் சீனாவின் நீண்ட தனித்துவமான பண்பாடும், அதன் இன்றைய பொருளாதார எழுச்சியும் சீன மொழியை உலக அரங்கில் இன்றியமையாததாக ஆக்கி இருக்கிறது. 2010ல் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் கூடுதலான வெளி நாட்டினர் சீன மொழியைக் கற்பர் என Chinese National Office for Teaching Chinese as a Foreign Language தெரிவித்துள்ளது . சீன மொழியை கற்க உதவும் வகையில் சீன அரசு உலகெங்கும் கன்பூசியஸ் நிலையங்களை உருவாக்கி வருகிறது.

சீனாவின் தத்துவங்கள்

வார்ப்புரு:Asian philosophy sidebar

சீனாவின் தத்துவங்கள் (Chinese Philosophy) என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் தத்துவங்களில் ஒன்றாகும். சீனாவில் கலாச்சாரமும், அறிவும், வளர்ந்த பழங்காலங்களை “நூறு கருத்துப்பள்ளிகள் காலம்” “அரசுகள் போரிட்ட காலம்”, “வசந்த காலம் இலையுதிா் காலம்” என்று பலவகைக் காலங்களகக் கூறப்பட்டுவந்துள்ளது., சீனாவின் தத்துவங்கள் இந்தக்காலங்காளில் தோன்றியது என்று கருதப்படுகிறது. சீனத்தத்துவம் அறிவுபூா்வமாகவும் கலாசாரபூா்வமாகவும் மேன்மையடைந்த தத்துவங்களாகும். பெரும்பான்மையான சீனாவின் தத்துவங்கள் ‘அரசுகளின் போா்க்காலம் என்றழைக்கப்பட்ட காலங்களில் வடிவம் பெற்றிருந்தாலும் சீனத்தத்துவத்தின் ஒரு சில கூறுகள் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னமாகவே இருந்துள்ளன. கிமு 672 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட யி ஜுஸ் (மாற்றம் குறித்த நூல்) என்னும் நூலில் தெய்வம் குறித்த கருத்துக்களின் தொகுப்பும் இடம் பெற்றுள்ளன. ”அரசுகளின் போா்க்காலத்தில்” தான் சியிடான் என்னும் அறிஞா் சீனத்தத்துவப் பாா்வைகளை கன்பூசியனிசம் எனவும் லிகலிசம் எனவும் தொகுத்தாா். டாவோயிசம் பிறந்தது அந்தக்காலத்தில்தான். இத்துடன் தோன்றிய மற்ற பாா்வைகளான அக்கல்சுரலிசம், சீன நேசுரலிசம், லாஜ்ஜியன் போன்றவை முழுவதுமாக மறைந்து போயின.

சீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மூன்றாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது சீனாவிலாகும். இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கே 43 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 30 பண்பாட்டுக் களங்களும், 9 இயற்கைக் களங்களும், 4 கலப்பும் இருக்கின்றன. இவை சீனாவின் மிக முக்கியமான பெறுமதி வாய்ந்த சுற்றுலா மையங்களை உள்ளடக்கி இருக்கின்றன. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை சீனா டிசம்பர் 12, 1985 இல் ஏற்றுக் கொண்டது.

1985 இல் உலக கலாசார மற்றும் இயற்கை மரபு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் படி

அக்டோபர் 29, 1999 சீனா யுனெஸ்கோவின் ஒப்புதலால் உலக பாரம்பரிய குழு உறுப்பினர் நாடாக ஆனது. 1986 ஆம் ஆண்டில் இருந்தே சீனா தனது நாட்டிலுள்ள உலக பாரம்பரிய மரபுக் களங்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கத் தொடங்கியது.

செப்டம்பர் 28

செப்டம்பர் 28 (September 28) கிரிகோரியன் ஆண்டின் 271 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 272 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 94 நாட்கள் உள்ளன.

டாய் மலை

டாய் மலை (Mount Tai, சீனம்: 泰山; பின்யின்: Tài Shān) சீனாவின் சான்டோங் மாநிலத்தில் டாய் யன் நகரத்தின் வடக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, பண்பாட்டு மையமான மலையாகும். பச்சைக்கல் பேரரசர் சிகரம் (எளிய சீனம்: 玉皇顶; மரபுவழிச் சீனம்: 玉皇頂; பின்யின்: Yùhuáng Dǐng) இந்த மலையின் மிக உயர்ந்த சிகரமாகும்; இது உயரம் பொதுவாக 1,545 மீட்டர்கள் (5,069 ft) எனக் குறிப்பிடப்படுகின்றது; ஆனால் சீன மக்கள் குடியரசு இதன் உயரத்தை 1,532.7 மீட்டர்கள் (5,029 ft)ஆகக் குறித்துள்ளது.சீனாவின் ஐந்து புனித மலைகளில் ஒன்றாக டாய் மலை உள்ளது. இது சூரியோதயம், பிறப்பு, மீட்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது;ஐந்து மலைகளில் இதுவே முதலாவதாக கருதப்படுகின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டாய் மலை புனிதத்தலமாக இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீனாவின் சடங்கு மையங்களில் முதன்மையானதொன்றாகவும் இருந்துள்ளது.

டிசம்பர் 2014

டிசம்பர் 2014 (December 2014), 2014 ஆம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் புதன்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை தொடங்கி 2015 சனவரி 14 முடிவடைந்தது..

பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

பெல்கிறேட்

பெல்கிறேட் (அல்லது பெல்கிரேடு) (Belgrade) சேர்பியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். 1403ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாகும். 17 மாநகரங்களைக் கொண்ட இது சேர்பியாவில் சுயாட்சியுள்ள பிரதேசமாக உள்ளது. இந்த பெயருக்கு வெள்ளை நகரம் என்று பொருள்.

மென்சியசு

மென்சியசு (Mencius, Meng Ke; கிமு 372 - கிமு 289) ஒரு முதன்மைச் சீன மெய்யியலாளர்கர். கன்பூசியசு கொள்கைகளைப் பின்பற்றி, அவற்றுக்கு சார்பாக கருத்துரைத்தவர். கன்பூசிய மெய்யியலில் கன்பூசியசுக்கு அடுத்ததாக இவர் முக்கியப்படுகிறார். 'மனித இயல்பு நல்லது' என்ற கருத்துக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.

யின் யாங்கு

யின் மற்றும் யாங்கு (Yin and Yang)சீன மொழி: 陰陽 என்பது மரபுவழி சீனதத்துவத்தில் இரட்டைத் தத்துவத்தை விளக்கும் ஒரு கருத்து ஆகும். வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிா்மறையும் நோ்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சாா்ந்துள்ளது என்பதையும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதை விளக்கும் தத்துவம் இது. அண்டம் துவங்கும் பொழுது பெருந்திறனின் சக்தியெல்லாம் இணைந்து எதிரும் புதிருமாகவும் நோ்மறை எதிா்மறையாகவும் குழம்பியதில் இவை ஒரு ஒழுங்கினை அடைந்து பொருட்களாகவும் உயிா்களாகவும் உருப்பெற்றன என்கிறது சீன அண்டவியல். யின் என்பது உயிா்ப்பற்ற ஏற்றுக்கொள்கின்ற தன்மையுடையதாகவும் யாங்கு என்பது உயிா்ப்புள்ள வழங்கும் தன்மையுடையதாகவும் உலகில் எல்லா மாற்றங்களிலும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு வருடமும் வரும் பருவ மாற்றங்களிலும் நில அமைப்பிலும், ஆண் பெண் என்ற இரு தத்துவங்களிலும் சமூக அரசியல் சரித்திரம் போன்றவற்றிலும் ஒழுங்கு ஒழுங்கின்மை இது போன்று இரண்டும் மாறி மாறி வருவதே இயற்கையாகும்.சீன அண்டவியலில் பல பரிமாணங்கள் உள்ளன. யின் மற்றும் யாங்கு தொடா்பான சீன அண்டவியலில் அண்டத்தில் அண்டத்தினால் சுயமாகத் தோற்றுவிக்கப்பட்ட சக்தி “கியூ” என்று அழைக்கப்பட்டது. யின் யாங்கு அண்டவியலில் “கியூ ” என்னும் சக்தி பல வடிவங்களாக உருவெடுத்தது. மனித இனமும் இதில் அடங்கும். உலகில் உள்ள நோ்மறை எதிா்மறை வடிவங்களான, ஒளியும் இருளும், நெருப்பும் நீரும் விரிவடைதலும் சுருங்குதலும் போன்ற பலவும் யின்யாங்கு தத்துவத்தின் வழிப்பாடுகளாகவே உணரப்பட்டன. இந்த இரட்டைத் தத்துவம் பல சீனப் பழங்கால அறிவியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளிலும் பிரதிபலிப்பதுடன் பாரம்பரிய சீன மருத்துவத்திற்கும் வழிகாட்டியாக உள்ளது. இவை மட்டுமல்லாமல் சீன சண்டைக் கலைகளுக்கும் உடற்பயிற்சி முறைகளுக்குமான “பாகுசாஸ்”, டெய்ஜி கூவான் மற்றும் சைகோஸ் போன்றவைக்கும் இத்தத்துவங்களே வழிகாட்டிகளாக விளங்குகின்றன.

இரட்டையில் ஒற்றுமை என்பது பலத்த தத்துவங்களின் அடிப்படை. எதிரும் புதிரும் வேறாக இருந்தாலும் ஒன்றை ஒன்று சாா்ந்துள்ளது என்பதிலிருந்தும் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை என்பது இரண்டுமான ஒன்று, இரண்டையும் இணைத்த ஒன்றைவிட சக்தி வாய்ந்த ஒன்று என்பது கூறப்பட்டுள்ளது. பகலின்றி இரவில்லை, ஒளியில்லாமல் இருளில்லை. அதுபோலவே இருளில்லாமல் ஒளியில்லை. இருளில்லாமல் ஒளியை அறியவும் முடியாது. இவைதான் யிங் யாங்கு தத்துவத்தின் அடிப்படை. யிங் யாங்கின் குறியீடும் இரண்டு எதிா்துருவங்களின் சமபங்கையும், ஒன்றில் மற்றொன்று சரிபங்காக அங்கம் வகிக்கின்றது என்பதையும் விளக்குகின்றது.

தாவோ தத்துவத்தின் பொருள்இயல் கடந்த ஆய்வில் உண்மை எது பொய் எது என்பதும் நன்மை எது தீமை எது என்பதும் பாா்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றும் இவை எதுவும் அறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே யின் யாங்கு தத்துவமும் உண்மையும் பொய்யும், தீதும் நன்றும் பிரிக்கப்பட முடியாது என்று கூறுகின்றது.

கன்பூசியஸ் தத்துவத்தின் அறிவுரைகளிலும் குறிப்பாக கிமு 2 ஆம் நூற்றாண்டு தத்துவ அறிஞா் டாங் ஜோஸ்சு யின் யாங்கு கருத்துக்கு நன்நெறி விளக்கமும் கற்பித்தார்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.