கடற்காயல்

கடற்காயல் அல்லது வாவி அல்லது களப்பு (lagoon) எனப்படுவது காயல்[1] அல்லது உப்பங்கழி [2] எனப்படும் கடல் சார்ந்த ஏரி ஆகும்.

கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள உவர் நீர்ப் பரப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை "கடலிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மணல்திட்டுக்கள், பெருவெட்டுக் கூழாங்கற்கள் அல்லது மிகக்குறைவாக கற்களால் பிரிக்கப்பட்டுள்ள, பல்வேறு அளவுகளில் நீர் கொள்ளளவு மற்றும் உப்புத்தன்மை கொண்ட, தாழ்ந்த கடற்கரை உப்புநீர் பரப்பு. இந்தப் பரப்பில் உள்ள உப்புத்தன்மை மழை, ஆவியாதல், வெள்ளநீர்வரத்து, கடலலை ஏற்றிறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல்நீர் ஏற்றம் போன்றவைகளால் வேறுபடும்" என வரையறுத்துள்ளது.

Kara-Bogaz Gol from space, September 1995
துருக்மெனிசுதானில் உள்ள ஓர் கடற்காயல்.

படிமங்கள்

GlenrockLagoonFromLeichhardtLookout

ஆத்திரேலியாவிலுள்ள கிளென்ராக் கடற்காயல்

Lagoa dos Patos PIA03444 lrg

பிரேசில் உள்ள லகோவா டோசு படோசு கடற்கோளம்

Lagoon-of-venice-landsat-1 Names

செயற்கைக் கோளிலிருந்து கடற்காயலின் தோற்றம்

Zalewszczecinski.jpeg

செயற்கைக் கோளிலிருந்து மற்றொரு கடற்காயல் c. 2000.

Baltic spits

பால்டிக் கடலில் உள்ள கடற்காயல்கள்.

Kiritimati-EO

கிரிதிமதி பவழத்தீவின் பாதியளவு பரப்பு கடற்காயல்களால், சில நன்னீராகவும் சில உவர் நீராகவும்.

Blue lagoon

துருக்கியிலுள்ள நீல கடற்காயல்

Washdyke Lagoon

நியூசிலாந்தின் வாசுடைக்கு[Washdyke] கடற்காயல்

Lovelandya

இத்தாலியின் மரனோ கடற்காயல்

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. காயல் தமிழ் விக்சனரி
  2. உப்பங்கழி தமிழ் விக்சனரி

உசாத்துணைகள்

  • Reid, George K. (1961). Ecology of Inland Waters and Estuaries. New York: Van Nostrand Reinhold Company.
  • Aronson, R.B. (1993). "Hurricane effects on backreef echinoderms of the Caribbean". Coral Reefs.
கலிவேளி ஏரி

கலிவேளி ஏரி (Kaliveli Lake, அல்லது Kaliveli Lagoon) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை சதுப்பு நில ஏரி மற்றும் கடற்காயல், நீர்த்தடம் ஆகும்.

இந்த ஏரி வங்காள விரிகுடாவின் அருகில் கோரமண்டல் கடற்கரையில் ஏறக்குறைய புதுச்சேரி நகரத்தில் இருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) வடக்கிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) வடக்கில் உள்ளது.

கோரா திவ்

கோரா திவ் (Cora Divh) அல்லது கோரா தீவே (Coradeeve) (லிட்டில் பேசஸ் டி பெட்ரோ பாங் எனவும் அழைக்கப்படும்) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும். இக்கரைத்தட்டின் பெயரில் இருந்தே இந்திய ரோந்துக் கப்பல் ஒன்றிற்குப் பெயரிடப்பட்டது.

சியாட்டில்

சியாட்டில் (Seattle {IPAc-en|audio=GT Seattle AE.ogg|s|i|ˈ|æ|t|əl}} ) அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் துறைமுக நகரம் ஆகும். வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுண்டியின் தலைமையிடமாகவும் விளங்குகின்றது.

இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாசிங்டன் மாநிலத்திலும் வட அமெரிக்காவின் பசிபிக்பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது. சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று. மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது. சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது.அமைதிப் பெருங்கடலின் கடற்காயல் புசே சவுண்டிற்கும் வாசிங்டன் ஏரிக்கும் இடையேயுள்ள பூசந்தியில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது.சியாட்டில் பகுதியில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேறிகள் குடியேறும் முன்னரே தொல்குடி அமெரிக்கர் கிட்டத்தட்ட குறைந்தது 4,000 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர். எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர்.தொடக்கத்தில் ஐரோப்பியரால் நியூ யார்க்-ஆல்க்கி அன்றும் டுவாம்ப் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

சியாட்டிலின் முதன்மைத் தொழிலாக மரம் வெட்டுதலும் வெட்டுமர வணிகமும் இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிளோன்டிகே தங்க வேட்டைக் காலத்தில் அலாஸ்காவிற்கான வாயிலாகவும் கப்பல் கட்டுதலும் சந்தையிடமாகவும் மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் போயிங் நிறுவனம் சியாட்டிலில் தனது வானூர்தி தயாரிப்பைத் துவங்கியது; இதையொட்டி சியாட்டில் வானூர்திகள் மற்றும் உதிரிகள் தயாரிக்கும் மையமாக உருமாறிற்று. 1980களில் தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்தது; இப்பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைய வணிக முன்னோடி அமேசானும் நிறுவப்பட்டன. மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் சியாட்டிலில் பிறந்தவர். வளர்ச்சி வீதம் உயர, போக்குவரத்து வசதிகளாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவப்பட்டது; புதிய சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டது. புதிய மென்பொருள், உயிரித் தொழில்நுட்பம், இணைய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பொருளியல் வளர்ச்சியும் முன்னேற்றமும் நகரத்தின் மக்கள்தொகையை 1990க்கும் 2000க்கும் இடையே 50,000 வரை கூட்டியது.

சியாட்டிலுக்கு இசைத்துறையிலும் சிறப்பான வரலாறு உண்டு. 1918இலிருந்து 1951 வரை ஜாக்சன் தெருவில் கிட்டத்தட்ட 24 ஜாஸ் இரவு விடுதிகள் இருந்தன. இங்கிருந்தே புகழ்பெற்ற ரே சார்ல்ஸ், குயின்சி ஜோன்சு, எர்னெஸ்டைன் ஆண்டர்சன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்கள் தம் இசைவாழ்வில் முதன்மை பெற்றனர். ராக் இசைக் கலைஞர் ஜிமி ஹென்றிக்ஸ் இங்குதான் பிறந்தார். நிர்வானா, பேர்ல் ஜெம், சவுன்டுகார்டன், ஃபூ ஃபைட்டர்சு, மாற்று ராக்கிசை கிரஞ்சு ஆகியோரும் இங்கேத்தவர்களே.இயர் கம்சு தி பிரைட்சு, பிரேசியர், கிரேஸ் அனாடமி போன்றத் தொலைக்காட்சித் தொடர்களில் நிகழிடமாக சியாட்டில் உள்ளது.

சியாட்டில் விளையாட்டுத் துறையிலும் சிறப்பாக உள்ளது. சியாட்டில் மாரினர்சு (அடிபந்தாட்டம்), சியாட்டில் சீஹாக்சு (அமெரிக்கக் கால்பந்தாட்டம்), சவுண்டர்சு காற்பந்துக் கழகம் (கால்பந்து கூட்டமைப்பு) போன்ற பல சிறந்த விளையாட்டு அணிகளின் தாயகமாக உள்ளது. மேற்கிலுள்ள பூஜே சவுண்டும் அமைதிப் பெருங்கடலும் கிழக்கேயுள்ள வாசிங்டன் ஏரியும் to நீர் விளையாட்டுக்களுக்கு களமாக விளங்குகின்றன.

சியாட்டிலில் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில் முதன்மையானவை வாசிங்டன் பல்கலைக்கழகமும் சியாட்டில் பல்கலைக்கழகமும் ஆகும்.

சியாட்டிலின் வானிலை வேனிற்காலத்தில் மிதமானதாக (நடுக்கடல் வானிலை) உள்ளது.

சில்கா ஏரி

சில்கா ஏரி, கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும். சில்கா ஏரி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், குர்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களில் வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் நீளத்தில பரந்துள்ளது.

1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் சில்கா ஏரியில் பெரிய அளவில் வலசை வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சில்கா ஏரி புகலிடமாக உள்ளது.சில்கா ஏரியின் சூழலியல் மீன் வளத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது. சில்கா ஏரியின் கரையிலும், தீவுகளிலும் மீன்பிடித் தொழிலை நம்பி, 132 கிராமங்களைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள்.குளிர்காலத்தில் ருசியா, மங்கோலியா, நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, லடாக் மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து 160 பறவை இனங்கள் சில்கா ஏரிக்கு வலசை வருகின்றன.

சுண்டிக்குளம் கடல் நீரேரி

சுண்டிக்குளம் கடல் நீரேரி (Chundikkulam Lagoon) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கடற்காயல் ஆகும். சுண்டிக்குளம் கிராமம் இந்தக் கடற்காயலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இக்கடற்காயல் ஆனையிறவு கடல் நீரேரி (Elephant Pass lagoon), அல்லது சுண்டிக்குளம் கடல் நீரேரி அல்லது சுண்டிக்குளம் தொடுவாய் எனவும் அழைக்கப்படுகின்றது.

கனகராயன் ஆறு, நெதெலி ஆறு, தேராவில் ஆறு போன்ற தெற்குப் பகுதி ஆறுகளில் இருந்து இக்கடல் நீரேரிக்கு நீர் வருகின்றது. இது யாழ்ப்பாணக் கடல் நீரேரியுடன் இணைந்திருந்தது, ஆனாலும் ஆனையிறவில் தரைப்பாலம் கட்டப்பட்டதில் இருந்து இது ஒர் ஏரியாகவே கணிக்கப்படுகின்றது. இங்குள்ள நீர் உவர் நீர் ஆகும்.

சுண்டிக்குளம் கடல் நீரேரிப் பகுதி பனை மரங்களினாலும், புதர் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது. இந்நிலம் இறால் பண்ணைகளுக்காகவும் உப்பு தயாரிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

இக்கடற்காயலில் அலையாத்திக் காடு மற்றும் கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான பகுதி 1938 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அரிவாள் மூக்கன், வாத்து, நாமக்கோழிகள், ஆலா போன்ற நீர்ப்பறவைகள் ஏராளமாக இங்கு வருகின்றன.

செசோட்டிரிஸ் கரைத்தட்டு

செசோட்டிரிஸ் கரைத்தட்டு (Sesostris Bank) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.

நந்திக்கடல்

நந்திக் கடல் (ஆங்கிலம்:Nantikkaṭal) என்பது இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயல் ஆகும். இதன் அர்த்தம் சங்குகளின் கடல் என்பதாகும்.. பேராறு உள்ளடங்கலாக சில ஆறுகள் இக்கடற்காயலில் கலக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனால் நந்திக்கடல் முல்லைத்தீவு கடற்காயல் என அழைக்கப்படுவதும் உண்டு.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்விடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது.

நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து)

நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து) (Blue Lagoon (geothermal spa)) ஐஸ்லாந்தின் மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இது ஒரு எரிமலை மூலம் உருவான ஒரு சூடான நீராவி பகுதியாகும். இந்த இடம் தென்மேற்கு ஐஸ்லாந்திலுள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிரின்ட்விக் (Grindvik) என்னும் இடத்தில் ஒரு லாவா நிலத்தில் அமைந்துள்ளது. இது கெஃப்லாவிக் (Keflavik) விமான நிலையத்திலிருந்து 13 கிமீ (8 மைல்) தூரத்திலும், ரேக்ஜாவிக் நகரிலிருந்து 39 கிமீ (24 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இதனருகில் ஒரு புவிவெப்ப மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இவ்விடம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும்.

சூடான நீரில் சிலிக்கா மற்றும் சல்பர் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன. எனவே சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை இதன் நீர் குணப்படுத்த உதவுகிறது. இதன் வெப்ப நிலை சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் உள்ளது. இது ஆண்டு முழுவதும் உறைபனி நிலையிலும் அதே வெப்பத்துடன் இருக்கும்.

நுகுனோனு

நுகுனோனு (ஆங்கிலம்:Nukunonu) என்பது தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் நியூசிலாந்தின் ஒரு பகுதியான டோக்கெலாவின் மிகப்பெரிய பவளத் தீவு ஆகும். இது மத்திய கடற்காயலால் சூழப்பட்டுள்ள 30 சிறு தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 5.5 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அத்துடன் இதன் கடற்காயல் மேற்பரப்புப் பரப்பளவு 109 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். தென்னை, தாழை, உப்பு ஆகியவையும் மீன்பிடியும் அங்கு வாழும் மக்களின் பிரதான பொருளாதாரத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்களும், வேலையும் ஆகும்.

நையாறு (முல்லைத்தீவு)

நையாறு (ஆங்கிலம்:Nay Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது நையாறு கடற்காயல் என்னும் கடற்காயலில் கடலில் கலக்குகின்றது.

நையாறு கடற்காயல்

நையாறு கடற்காயல் (ஆங்கிலம்:Nai Aru Lagoon) என்பது இலங்கையின் வடமேற்குப் பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கயவாய் கடற்காயல் ஆகும். இந்தக் கடற்காயலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகும் நையாறு உட்பட பல சிறு ஆறுகளில் இருந்து நீர் வருகின்றது. இந்த கடற்காயலின் நீர் உவர் நீர் ஆகும். நையாறு கடற்காயற் பகுதி தென்னை, பனை மரங்களினாலும், அடர்ந்த காடுகளினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் இறால் மீன்பிடிப்புக்காகவும், நெல் பயிரிடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கடற்காயலில் அலையாத்திக் காடும், கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இங்குள்ள பகுதிகளுக்கு நீள் சிறகு கடற்பறவை, வாத்து, ஆலா போன்ற நீர்ப்பறவைகள் உட்பட மேலும் பலவகைக் கடற்கரைப் பறவைகளும் ஏராளமாக வருகின்றன.

பஸ்ஸாஸ் டி பெட்ரோ

பஸ்ஸாஸ் டி பெட்ரோ (Bassas de Pedro) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது முன்யால் பார், படுவா கரைத்தட்டு ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.

போர்ட்டோ அலெக்ரி

போர்ட்டோ அலெக்ரி (Porto Alegre, உள்ளூர் போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈpoɾtʊ aˈlɛɡɾɪ] ( listen); பொருள்:மகிழ்ச்சியான துறைமுகம்) பிரேசில்|பிரேசிலின் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1,509,939 மக்கள்தொகை (2010) கொண்ட இந்த நகரம் பிரேசிலின் பத்தாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக விளங்குகிறது. 4,405,760 மக்கள் வாழும் (2010) பெருநகரப்பகுதி நாட்டின் நான்காவது பெரும் பெருநகரப் பகுதியாக உள்ளது. நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள மாநிலத் தலைநகரமாகவும் உள்ளது. இந்த நகரம் பிரேசிலின் முதன்மையான அரசியல், பண்பாட்டு, பொருளியல் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

போர்ட்டோ அலெக்ரி 1772இல் போர்த்துகல்லின் அசோர் பகுதியிலிருந்து குடிபுகுந்தவர்களால் நிறுவப்பட்டது. 19வது நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக செருமனி, இத்தாலி,போலந்து நாடுகளிலிருந்து மக்கள் குடிபெயர்ந்தனர். இங்குள்ள மக்கள்தொகையில் பெரும்பாலோர் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இரியோ குயைபா எனப்படும் குயைபா ஏரியின் கிழக்குக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்கு ஐந்து ஆறுகள் சேர்ந்து உருவாகியுள்ள லகோவா தோசு பதோசு (வாத்துக்களின் கடற்காயல்) என்ற மிகப்பெரும் தூயநீர் கடற்காயலில் பெரும் கப்பல்கள் கூட செல்ல முடியும்.

உள்ளூர் பொருட்கள் போக்குவரத்திற்கு இந்த நகரத்தின் துறைமுகம் முக்கியமானதாக உள்ளது. பொருளியலில் தொழில்துறை மற்றும் வேளாண்மை முதலிடம் பெறுகின்றன. பிளம் பழங்கள், பீச் பழங்கள், நெல் மற்றும் மரவள்ளி ஊரகப் பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. காலணி மற்றும் தோல்சரக்கு நுட்பியல் தொழிலகங்கள் முதன்மையாக உள்ளன.

குயைபா ஏரியின் நீண்ட கடற்கரையும் அதனை அடுத்துள்ள 40 குன்றுகளும் போர்ட்டோ அலெக்ரி நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன. பரந்த நீர்ப்பரப்புடைய ஏரியில் உள்ள பல தீவுகள் காட்டுயிர் உய்வகமாக தனிப்பட்ட சூழலை உருவாக்கியுள்ளன. நகரப் பகுதியில் 28% பரப்பளவில் 9,288 இனங்கள் உள்ள இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அத்திலாந்திக்கு காடுகள் அமைந்துள்ளன. தீவுகளிலும் குன்றுகளிலும் பல்வேறு விலங்கு வளங்களையும் காணலாம். இந்நகர அமைப்பில் பல பூங்காக்கள், சதுக்கங்கள், நிழற்சாலைகள் அடங்கியுள்ளன.

அண்மைக் காலத்தில் போர்ட்டோ அலெக்ரி பல அரசு-சார்பற்ற அமைப்புகளின் முனைப்பான உலக சமூக மன்றத்தை நடத்தி உள்ளது. மக்களே வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை தீர்மானிக்கும் பங்கேற்பு வரவுச்செலவுத் திட்டம் என்ற முறைமையை முதலில் செயலாக்கியதற்காக புகழ் பெற்றது. 2006இல் இங்கு உலகத் தேவலாயங்களின் சபையின் (World Council of Churches) 9வது அமர்வு நடந்துள்ளது. 2000ஆம் ஆண்டிலிருந்து, போர்ட்டோ அலெக்ரி பன்னாட்டு கட்டற்ற மென்பொருள் மன்றம் என்ற உலகின் பெரும் கட்டற்ற மென்பொருள் நிகழ்வை நடத்தி வருகிறது.

2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாடப்படும் நகரங்களில் ஒன்றாக போர்ட்டோ அலெக்ரி உள்ளது.

மாசூரோ

மாசூரோ /ˈmædʒəroʊ/ (கயின மொழியில்: Mājro, [mʲæzʲ(ɛ͡ʌ)rˠɤ͡oo̯]) என்பது 64 தீவுகள் உள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய பவளத்தீவான, மார்சல் தீவுகளில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும். சுமார் 9.7 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi) அளவிலுள்ள இப்பவளத்தீவின் கடற்காயல் சுமார் 295 சதுர கிலோமீட்டர்கள் (114 sq mi) அளவில் உள்ளது.

முத்துஐயன்கட்டு குளம்

முத்தையன் கட்டுக்குளம் (Muthuiyankaddu Kulam) இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளமாகும். இது ஒட்டிசுட்டானில் இருந்து சுமார் 4 மைல் (6 கிலோமீற்றர்) தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இதன் சரியான அமைவிடம் 09°12'07"N 80°36'31"E ஆகும். செயற்கைக் குளமான இதற்கு நீர் வழங்கும் ஆறு பேராறு (ஆறு) ஆகும்.இதன் பராமரிப்பு வடமாகாணசபை , நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.இதன் மொத்த பரப்பளவு 66 சதுரமைல் (171 சதுர கிலோமீட்டர்). இது 41,000 ஏக்கர் அடி (50,572,755 கனமீற்றர்) கொள்ளளவுடையது.

யாழ்ப்பாணக் கடல் நீரேரி

யாழ்ப்பாண நீரேரி அல்லது யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்பது யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு அப்பாலுள்ள பெரிய கடற் காயல் ஆகும்.

இக் கடற்காயல் மக்கட் தொகை அடர்த்திமிக்க யாழ்ப்பாணக் குடாநாட்டினால் சூழப்பட்டுள்ளது.

அமெரிக்க பூநாரை, வாத்து, ஆலா போன்ற பறவைகளும் கரைப்பறவைகளும் இங்கு வருகின்றன.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.