ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.

1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.

2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.[3]

Flag of ஐரோப்பிய ஒன்றியத்தின்
கொடி
குறிக்கோள்: In varietate concordia  (இலத்தீன்)
"United in diversity"[1]
நாட்டுப்பண்: ஐரோப்பிய வணக்கம்  (orchestral)
EU27 as a single entity in the world
அரசியல் மையங்கள்பிரஸ்ஸல்ஸ்
ஸ்திராஸ்பூர்க்
லக்சம்பேர்க்
ஆட்சி மொழிகள்
மக்கள் ஐரோப்பியர்
உறுப்பு நாடுகள்
அரசாங்கம் Sui generis
 •  ஆணையம் José Manuel Barroso
 •  பாராளுமன்றம் Hans-Gert Pöttering
 •  Council சுலோவீனியா
 •  European Council Janez Janša
அமைப்பு
 •  1951 பரிஸ் ஒப்பந்தம் ஏப்ரல் 18 1951 
 •  1957 உரோம் ஒப்பந்தம் மார்ச் 25 1957 
 •  1992 மாசுடிரிச் ஒப்பநதம் பெப்ரவரி 7 1992 
பரப்பு
 •  மொத்தம் 43,81,376 கிமீ2 (7வது¹)
16,69,807 சதுர மைல்
 •  நீர் (%) 3.08
மக்கள் தொகை
 •  2008 கணக்கெடுப்பு 497,198,740 (3வது¹)
 •  அடர்த்தி 114/km2 (69வது¹)
289/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 (IMF) கணக்கெடுப்பு
 •  மொத்தம் $14,953 டிரில்லியன் (1வது¹)
 •  தலைவிகிதம் $28,213 (14வது¹)
மொ.உ.உ (பெயரளவு) 2007 (IMF) கணக்கெடுப்பு
 •  மொத்தம் $16,574 டிரில்லியன் (1வது¹)
 •  தலைவிகிதம் $33,482 (13வது¹)
நாணயம்
நேர வலயம் (ஒ.அ.நே+0 to +2)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+1 to +3)
இணையக் குறி .eu

வரலாறு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.

1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.

1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.

போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.

1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.

2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

புவியியல்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 4,423,147 சதுர கிலோமீட்டர்கள் (1,707,787 sq mi) பரப்பளவை கொண்டன.[lower-alpha 1] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். 4,810.45 மீட்டர்கள் (15,782 ft) கடல்மட்டத்திற்கு மேல்.[4]

உறுப்பு நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.[5] இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும்.

மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

Name Capital Accession Population
(2016)[6]
Area (km2) Population density
(per km²)
 ஆஸ்திரியா வியன்னா 1 சனவரி 1995 87,00,471 83,855 103.76
 பெல்ஜியம் பிரசெல்சு Founder 1,12,89,853 30,528 369.82
 பல்கேரியா சோஃவியா 1 சனவரி 2007 71,53,784 1,10,994 64.45
 குரோவாசியா சாகிரேப் 1 சூலை 2013 41,90,669 56,594 74.05
 சைப்பிரசு நிக்கோசியா 1 மே 2004 8,48,319 9,251 91.7
 செக் குடியரசு பிராகா 1 மே 2004 1,05,53,843 78,866 133.82
 டென்மார்க் கோபனாவன் 1 சனவரி 1973 57,07,251 43,075 132.5
 எசுத்தோனியா தாலின் 1 மே 2004 13,15,944 45,227 29.1
 பின்லாந்து எல்சிங்கி 1 சனவரி 1995 54,87,308 3,38,424 16.21
 பிரான்சு பாரிஸ் Founder 6,66,61,621 6,40,679 104.05
 செருமனி பெர்லின் Founder[lower-alpha 2] 8,21,62,000 3,57,021 230.13
 கிரேக்க நாடு ஏதென்ஸ் 1 சனவரி 1981 1,07,93,526 1,31,990 81.78
 அங்கேரி புடாபெஸ்ட் 1 மே 2004 98,30,485 93,030 105.67
 அயர்லாந்து டப்லின் 1 சனவரி 1973 46,58,530 70,273 66.29
 இத்தாலி உரோம் Founder 6,06,65,551 3,01,338 201.32
 லாத்வியா ரீகா 1 மே 2004 19,68,957 64,589 30.48
 லித்துவேனியா வில்னியஸ் 1 மே 2004 28,88,558 65,200 44.3
 லக்சம்பர்க் லக்சம்பர்க் (நகரம்) Founder 5,76,249 2,586 222.83
 மால்ட்டா வல்லெட்டா 1 மே 2004 4,34,403 316 1,374.69
 நெதர்லாந்து ஆம்ஸ்டர்டம் Founder 1,69,79,120 41,543 408.71
 போலந்து வார்சாவா 1 மே 2004 3,79,67,209 3,12,685 121.42
 போர்த்துகல் லிஸ்பன் 1 சனவரி 1986 1,03,41,330 92,390 111.93
 உருமேனியா புக்கரெஸ்ட் 1 சனவரி 2007 1,97,59,968 2,38,391 82.89
 சிலவாக்கியா பிராத்திஸ்லாவா 1 மே 2004 54,26,252 49,035 110.66
 சுலோவீனியா லியுப்லியானா 1 மே 2004 20,64,188 20,273 101.82
 எசுப்பானியா மத்ரித் 1 சனவரி 1986 4,64,38,422 5,04,030 92.13
 சுவீடன் ஸ்டாக்ஹோம் 1 சனவரி 1995 98,51,017 4,49,964 21.89
 ஐக்கிய இராச்சியம் இலண்டன் 1 சனவரி 1973 6,53,41,183 2,43,610 268.22
Totals: 28 countries 510,056,011 4,475,757 113.96

மொழிகள்

மொழி தாய்மொழியாக கொண்டவர்கள் மொத்தம்
ஆங்கில மொழி 13% 51%
செருமன் மொழி 16% 27%
பிரென்ச்சு 12% 24%
இடாலியன் 13% 16%
ஸ்பானியம் 8% 15%
போலிஷ் 8% 9%
ரோமானியன் 5% 5%
டச்சு 4% 5%
கங்கேரியன் 3% 3%
போர்த்துக்கீச மொழி 2% 3%
செக் 2% 3%
ஸ்வீடிஷ் 2% 3%
கிரேக்க மொழி 2% 3%
பல்கேரியன் 2% 2%
சுலோவாக் 1% 2%
டானிஷ் 1% 1%
பின்னிஷ் 1% 1%
லிதுஆனியன் 1% 1%
கிரோவாசியன் 1% 1%
சுலோவேனியன் <1% <1%
எஸ்டோனியன் <1% <1%
ஐரிஷ் <1% <1%
லற்வியன் <1% <1%
மால்த்தியம் <1% <1%

Published in June 2012.[7]
Survey conducted in February – March 2012.
Native: Native language[8]
Total: EU citizens able to hold a
conversation in this language[9]

ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: பல்கேரிய மொழி, குரோவாசிய மொழி, செக் மொழி, டேனிய மொழி, டச்சு மொழி, ஆங்கிலம், எசுத்தோனிய மொழி, பின்னிய மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம் (மொழி), அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, ஐரிய மொழி, இலத்துவிய மொழி, இலித்துவானிய மொழி, மால்திய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, சுலோவாக்கிய மொழி, சுலோவேனிய மொழி, எசுப்பானியம், மற்றும் சுவீடிய மொழி.[10][11] முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும்.[12] இடாய்ச்சு மொழி அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.[13]யுராலிய மொழிக்குடும்பத்தை சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தன. சிரில்லிக் எழுத்துக்கள் இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.[14]

சனத்தொகை

Member State Population
in millions
Population
 % of EU
Area
km2
Area
% of EU
Pop. density
People/km2
 ஐரோப்பிய ஒன்றியம் 494.8 100% 4,422,773 100% 112
 ஆஸ்திரியா 8.3 1.7% 83,858 1.9% 99
 பெல்ஜியம் 10.5 2.1% 30,510 0.7% 344
 பல்கேரியா 7.7 1.6% 110,912 2.5% 70
 குரோவாசியா 4.3 0.9% 56,594 1.3% 75.8
 சைப்பிரசு 0.8 0.2% 9,250 0.2% 84
 செக் குடியரசு 10.3 2.1% 78,866 1.8% 131
 டென்மார்க் 5.4 1.1% 43,094 1.0% 126
 எசுத்தோனியா 1.4 0.3% 45,226 1.0% 29
 பின்லாந்து 5.3 1.1% 337,030 7.6% 16
 பிரான்சு[15] 65.03 13.% 643,548 14.6% 111
 செருமனி 80.4 16.6% 357,021 8.1% 225
 கிரேக்க நாடு 11.1 2.2% 131,940 3.0% 84
 அங்கேரி 10.1 2.0% 93,030 2.1% 108
 அயர்லாந்து 4.2 0.8% 70,280 1.6% 60
 இத்தாலி 58.8 11.9% 301,320 6.8% 195
 லாத்வியா 2.3 0.5% 64,589 1.5% 35
 லித்துவேனியா 3.4 0.7% 65,200 1.5% 52
 லக்சம்பர்க் 0.5 0.1% 2,586 0.1% 181
 மால்ட்டா 0.4 0.1% 316 0.0% 1,261
 நெதர்லாந்து 16.4 3.3% 41,526 0.9% 394
 போலந்து 38.1 7.7% 312,685 7.1% 122
 போர்த்துகல் 10.6 2.1% 92,931 2.1% 114
 உருமேனியா 21.6 4.4% 238,391 5.4% 91
 எசுப்பானியா 44.7 9.0% 504,782 11.4% 87
 சிலவாக்கியா 5.4 1.1% 48,845 1.1% 111
 சுலோவீனியா 2.0 0.4% 20,253 0.5% 99
 சுவீடன் 9.1 1.8% 449,964 10.2% 20
 ஐக்கிய இராச்சியம் 60.7 12.3% 244,820 5.5% 246

ஐக்கிய இராச்சியம் வெளியேறல்

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து, சூன் 2016-இல் நடந்த பொதுசன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளிவேற வேண்டும் என விரும்பி பெரும்பாலன மக்கள் வாக்களித்தனர்.[16][17]ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்பாத ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலக முன்வந்துள்ளார்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Symbols of the EU". Europa (web portal). பார்த்த நாள் 2008-01-09.
  2. "அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு". அக்டோபர் 12, 2012. தினமலர். பார்த்த நாள் அக்டோபர் 12, 2012.
  3. குரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது
  4. "Mont Blanc shrinks by 45 cm (17.72 in) in two years". Sydney Morning Herald. 6 November 2009. http://www.smh.com.au/environment/mont-blanc-shrinks-by-45cm-in-two-years-20091106-i0kk.html. பார்த்த நாள்: 26 November 2010.
  5. "European Countries". Europa web portal. பார்த்த நாள் 18 September 2010.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; population என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "Europeans and Their Languages, 2012 Report" (PDF). பார்த்த நாள் 3 June 2013.
  8. European Commission (2012). "Europeans and their Languages". Special Eurobarometer 386 54–59. europa.eu. பார்த்த நாள் 16 December 2012.
  9. European Commission (2012). "Europeans and their Languages". Special Eurobarometer 386 78–83. europa.eu. பார்த்த நாள் 16 December 2012.
  10. EUR-Lex (12 December 2006). "Council Regulation (EC) No 1791/2006 of 20 November 2006". Official Journal of the European Union. Europa web portal. பார்த்த நாள் 2 February 2007.
  11. "Languages in Europe – Official EU Languages". EUROPA web portal. பார்த்த நாள் 12 October 2009.
  12. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)" (PDF). Europa web portal. பார்த்த நாள் 11 March 2011. "English is the most commonly known language in the EU with over a half of the respondents (51%) speaking it either as their mother tongue or as a foreign language."
  13. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)" (PDF). Europa web portal. பார்த்த நாள் 11 March 2011. "56% of citizens in the EU Member States are able to hold a conversation in one language apart from their mother tongue."
  14. European Commission (2004). "Many tongues, one family. Languages in the European Union" (PDF). Europa web portal. பார்த்த நாள் 3 February 2007.
  15. Figures for France include the four overseas departments (பிரெஞ்சு கயானா, Guadeloupe, மர்தினிக்கு, Réunion) which are integral parts of the European Union, but do not include the overseas collectivities and territories, which are not part of the European Union. Figures for Metropolitan France proper are: population 63.6 million, area 551 695 km², and population density 113/km².
  16. வாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்
  17. பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?

வெளி இணைப்புக்கள்


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found, or a closing </ref> is missing

அக்ரோத்திரியும் டெகேலியாவும்

அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடுத்தப் போது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.

அங்கேரி

அங்கேரி (Hungary, ஹங்கேரி, (அங்கேரியம்: Magyarország [ˈmɒɟɒrorsaːɡ] (listen), மகியறோர்சாக்), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோவாசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆசுதிரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. புடாபெஸ்ட் இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, விசெகிராது குழு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி அங்கேரியம் ஆகும்.பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், ரோமர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை கிறித்தவ இராச்சியமாக மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது. 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.

முதலாம் உலகப் போரை அடுத்து, அங்கேரி தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள்தொகையையும், 32% அங்கேரிய இனக்குடிகளையும் இழந்ததை அடுத்து 1920 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திரயானன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்க்கேரியின் தற்போதைய எல்லைகள் வகுக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது அங்கேரி அச்சு நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இதனால் அது மேலும் தனது பலத்தையும், மக்களையும் இழந்தது. போரின் முடிவில், அங்கேரி சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்குள் வந்தது. இதனால் அங்கு 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது. 1956 அங்கேரியப் புரட்சியின் போது இந்நாடு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 1989 இல் ஆசுதிரியாவுடனான எல்லைப் பகுதியை அது திறந்து விட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

1989 அக்டோபர் 23 இல் அங்கேரி சனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று மிக அதிகமான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணைக் கொண்டுள்ள இந்நாடு ஒரு உயர்-நடுத்தர-வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது. அங்கேரி ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு நாடாகும். இங்கு ஆண்டுக்கு 10.675 மில்லியன் (2013) சுற்றுலாப் பயணிகள் வருகின்றன. இங்கு உலகின் மிகப் பெரிய வெப்ப நீர்க் குகை, உலகின் இரண்டாவது பெரிய வெந்நீரூற்று (ஏவீசு ஏரி), நடு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி), ஐரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை புன்னிலம் (ஓர்த்தோபாகி தேசிய வனம்) ஆகியன இங்குள்ளன.

இத்தாலி

இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

எசுத்தோனியா

எஸ்தோனியா (வார்ப்புரு:Lang-et)வார்ப்புரு:Need IPA, உத்தியோகபூர்வமாக எஸ்தோனியக் குடியரசு என்பது (வார்ப்புரு:Lang-et), வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லத்வியாவும் (343 km), கிழக்கே பெய்பசு ஏரியும் ரசியாவும் (338.6 km) அமைந்துள்ளன. பால்டிக் கடலுக்கு அப்பால் சுவீடன் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன. எஸ்தோனிய நிலப்பரப்பு 45,227 km2 (17,462 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, ஈரப்பதனுடன் கூடிய கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது. எஸ்தோனியர் ஃபின்னிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தோராவர். மேலும் இவர்களது மொழியான எஸ்தோனிய மொழி ஃபினோ-உக்ரிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழி ஃபின்னிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் அங்கேரிய மொழியும் சாமி மொழியும் இம்மொழியுடன் சிறிய தொடர்புடையன.

எஸ்தோனியா சனநாயகப் பாராளுமன்றக் குடியரசாகும். இது பதினைந்து பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரமும் பெரிய நகரமும் தலினின் ஆகும். எஸ்தோனியா 1.3 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோவலயம் மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமையம் ஆகிய உறுப்பு நாடுகளில் மிகவும் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. முன்னேறிய உயர் வருவாய்ப் பொருளாதாரம் கொண்ட அபிவிருத்தியடைந்த நாடான எஸ்தோனியா முன்னைய சோவியத் குடியரசுகளிலேயே உயர் நபர்வீத மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்டுள்ளது. மேலும், பொருளாதார ஒத்துழைப்புக்கும், அபிவிருத்திக்குமான ஒன்றியத்தின் அங்கத்தினராகவும் உள்ளது.

மனிதவள அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி, எஸ்தோனியா உயர் நிலையிலுள்ளதோடு, பத்திரிகைச் சுதந்திரம், (2012ல் உலகளவில் மூன்றாவது), பொருளாதாரச் சுதந்திரம், தனிமனித உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலும் சிறந்த நிலையிலுள்ளது. எஸ்தோனியா ஐரோப்பிய நாடுகளிலேயே சிறந்த இணையத்தள வசதி கொண்ட நாடாக உள்ளதோடு, மின் அரசாங்க அமைப்பிலும் முன்னணியிலுள்ளது.

ஐரோ

ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.

"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.

ஐரோ வலயம்

ஐரோ வலயம் (Eurozone; ஒலிப்பு, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (ஆங்கிலம்: Euro Area) என்றழைக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளும்

ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் அவையின் பார்வையாளர் உறுப்பினராக 1974 முதல் இருந்துள்ளது;2011 முதல் சிறப்பு பங்கேற்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஒன்றியத்திற்கு தனியான வாக்குரிமை இல்லாதபோதும் இதன் 28 உறுப்பினர்கள் வாக்குரிமை பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாவர்.

சிலோவாக்கியா

ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.

சைப்பிரசு

சைப்பிரசு (Cyprus, ; கிரேக்க மொழி: Κύπρος; துருக்கியம்: Kıbrıs) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் சைப்ரசு குடியரசு என்பதாகும்.

சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.

சூரிச் இலண்டன் மாநாட்டுக்கு பின் துருக்கி சைப்ரசு குடியரசின் தோற்றத்தை ஒப்புக்கொண்டது. சைப்ரசு தீவு பிரிக்கவேண்டும் என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது. துருக்கியதும் துருக்கிய சைப்ரசு தலைவர்களின் நோக்கமும் விடுதலை பெற்ற துருக்கிய நாட்டை சைப்ரசின் வடபகுதியில் அமைப்பது என்பதாகும்.

ஜிப்ரால்ட்டர்

ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம் மண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின்படி ஸ்பெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.

தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்

தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம் ( ATM usage fees) தங்கள் தன்னியக்க இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக பல வங்கிகளும் வங்கிகளுக்கிடை பிணையங்களும் வசூலிக்கும் கட்டணமாகும். சில செயற்பாடுகளில், வங்கி உறுப்பினரல்லாதோரிடமிருந்து மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அல்லாது அனைத்துப் பயனர்களிடத்தும் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. மனிதர்களால் பணம் வழங்குவதை விட இயந்திரங்கள் மூலமாக வழங்குவது வங்கிகளுக்கு குறைந்த செலவாகும் என்பதால் பலரும் இத்தகைய கட்டணங்களை எதிர்க்கிறார்கள்.

இரண்டு வகையான கட்டணங்கள் இதில் அடங்கும்: உபரிக் கட்டணம் மற்றும் அன்னியக் கட்டணம். உபரிக் கட்டணம் தன்னியக்க இயந்திரத்தின் உரிமையாளர் ( நிறுவியவர் அல்லது தனிப்பட்ட விற்பனை அமைப்பு) நிர்ணயிப்பதாகும்; இது அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படுகிறது. அன்னியக் கட்டணம் அல்லது செயற்பாட்டுக் கட்டணம் அட்டையை வழங்கியவரால் வசூலிக்கப்படுவது; இது தங்கள் பிணையத்தில் இல்லாத இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படுகிறது.

[[|240px|தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்||right]]

பின்லாந்து

பின்லாந்து (பின்லாந்து மொழியில்: சுவோமி; சுவீடிய மொழியில்: ஃபின்லாண்ட் ) வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலாதமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிரான்சு

பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது.

கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது.

பிரெஞ்சுக் குடியரசானது, ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. இந் நாட்டின் முக்கியமான குறிக்கோள்கள் மனிதரினதும் குடிமக்களதும் உரிமைகள் சாற்றுரையில் அடங்கியுள்ளன. பிரான்சின் அரசியலமைப்பு, அந்நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. வாங்கு திறன் சமநிலை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது நிலையில் உள்ள இதன் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரியது. திரட்டிய வீட்டுச் செல்வ அடைப்படையில் பிரான்சே ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது.

பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.

பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

பொட்டாசியம் சல்பைட்டு

பொட்டாசியம் சல்பைட்டு ( Potassium sulfite ) என்பது K2SO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும் . பொட்டாசியம் என்றநேர்மின் அயனி யும் சல்பைட்டு என்ற எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. உணவுடன் சேர்க்கப்படும் கூட்டுப்பொருளான இது உணவு பதனிகளாகப் பயன்படுகின்றன. உணவு கூட்டுப் பொருளான பொட்டாசியம் சல்பைட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் E225 என்று எண்ணிட்டுள்ளது. சர்வதேச எண்ணிடும் அமைப்பும் INS எண் 225 என்று எண்ணிட்டுள்ளது. ஆசுத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இதைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை.

பொட்டாசியம் சிட்ரேட்டு

பொட்டாசியம் சிட்ரேட்டு (Potassium citrate) என்பது C6H5K3O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிட்ரிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பான இச்சேர்மம் முப்பொட்டாசியம் சிட்ரேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்துடன் நீர் உறிஞ்சும் திறன் கொண்ட படிகத் தூளாக பொட்டாசியம் சிட்ரேட்டு காணப்படுகிறது. எடையில் 38.3% பொட்டாசியத்தைக் கொண்டிருக்கும் இச்சேர்மம் மணமற்றதாகவும் உவர்ப்புச் சுவையுடனும் காணப்படுகிறது. ஒரு நீரேற்று வடிவ பொட்டாசியம் சிட்ரேட்டு நீருறிஞ்சும் தன்மை மிகுந்த சேர்மமாகவும் நீர்த்துப் போகக் கூடிய தன்மையுடனும் காணப்படுகிறது.

உணவுச் சேர்ப்புப் பொருளாக பொட்டாசியம் சிட்ரேட்டு சேர்க்கப்படும் போது இது அமிலத் தன்மையை முறைப்படுத்துகிறது. மேலும் இதற்கான ஐரோப்பிய ஒன்றியம் எண் E332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூரிக் அமிலம் அல்லது சிசுடின் காரணமாக உருவாகும் சிறுநீரக கற்களைக் கட்டுப்படுத்தி ஒரு மருந்தாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது.

பொட்டாசியம் பைசல்பைட்டு

பொட்டாசியம் பைசல்பைட்டு (potassium bisulfite) அல்லது பொட்டாசியம் ஐதரசன் சல்பைட்டு (Potassium hydrogen sulfite) என்பது KHSO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். மதுபானத் தயாரிப்பில் நுண்ணுயிரகற்றல் என்ற காரணத்திற்காக இது சேர்க்கப்படுகிறது. கூட்டுப் பொருளான பொட்டாசியம் பைசல்பைட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் E228 என்று எண்ணிட்டுள்ளது.

போர்த்துகல்

போர்த்துகல் (போர்த்துக்கீசம்: Portugal), என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு (Portuguese Republic, போர்த்துக்கீசம்: República Portuguesa) ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். கண்ட ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும். இவை போர்த்துகலின் தன்னாட்சிப் பகுதிகள். போர்த்துகல் என்னும் பெயர், போர்ட்டசு கேல் என்னும் இலத்தீன் பெயர் கொண்ட அதன் இரண்டாவது பெரிய நகரான போர்ட்டோ என்பதில் இருந்து பெறப்பட்டது. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.

தர்போதைய போர்த்துகல் குடியரசின் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதிகள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் உரோமரும், விசிகோதியர், சுவேபியர் ஆகியோரும் ஆட்சி செய்த பின்னர், 8 ஆம் நூற்றாண்டில் ஐபீரியத் தீவக்குறை முழுவதையும் இசுலாமியரான மூர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். கிறித்தவ மீட்பின்போது, 1139 ஆம் ஆண்டில், போர்த்துகல் கலீசியாவில் இருந்து பிரிந்து தனியான இராச்சியம் ஆனது. இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப் பழைய தேச அரசு என்ற பெருமையையும் பெற்றது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியதன் விளைவாக, போர்த்துகல் மேற்கத்திய செல்வாக்கை விரிவாக்கி முதல் உலகப் பேரரசை நிறுவியதுடன், உலகின் முக்கியமான பொருளாதார, அரசியல், படைத்துறை வல்லரசுகளில் ஒன்றாகவும் ஆனது. அத்துடன், நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக் கூடிய காலமான ஏறத்தாழ 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது போர்த்துக்கேயப் பேரரசே. இது 1415ல் செயுட்டாவைக் கைப்பற்றியதில் இருந்து 1999ல் மாக்கூவுக்கும் 2002ல் கிழக்குத் திமோருக்கும் விடுதலை அளிக்கும்வரை நீடித்து இருந்தது. இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் இன்று 53 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் பரந்த பகுதியில் பரவி இருந்தது. எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது.

போர்த்துகல் மிகவும் கூடிய மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது. இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது.

போலந்து

போலந்து என்றழைக்கப்படும் போலந்து குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசு, சிலோவேக்கியா ஆகியனவும் கிழக்கில் உக்ரைன், பெலாரஸ் ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் பால்டிக் கடலும், உருசியாவின் கலினின்கிராட் ஒப்லாசுத்தும் உள்ளன. போலந்தின் மொத்தப் பரப்பளவு 312,679 சதுர கிலோமீட்டர் (120,726 சதுர மைல்). இதன் அடிப்படையில் போலந்து உலகின் 69 ஆவது பெரிய நாடாகவும், ஐரோப்பாவில் 9 ஆவது பெரியதாகவும் இருக்கிறது. 38 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போலந்து உலகின் 34 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது பெரிய நாடாகவும் உள்ளது. போலந்து, "வோய்வோட்சிப்" எனப்படும் 16 மாகாணங்களைக் கொண்ட ஒற்றையாட்சி நாடு. இது, ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ, ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி, பன்னாட்டு ஆற்றல் முகமை, ஐரோப்பிய அவை, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, பன்னாட்டு அணு ஆற்றல் முகமை, ஜி6, பால்டிக் கடல் நாடுகள் அமைப்பு, விசேகிராட் குழு, வெய்மார் முக்கோணம், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் உறுப்பு நாடாகவும் உள்ளது.

போலந்தின் உருவாக்கம், இன்றைய போலந்து நாட்டுக்குள் அடங்கும் பகுதிகளை ஆண்ட முதலாம் மியெசுக்கோ (Mieszko I) 966 ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தழுவியதுடன் தொடர்பானதாகக் கடுதப்படுகின்றது. 1025 ஆம் ஆண்டில் போலந்து இராச்சியம் உருவானது. 1569ல் லுப்லின் ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம் உருவாக்கப்பட்டதன் மூலம், போலந்து, லித்துவேனியப் பெரிய டச்சியுடன் நீண்டகாலக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. 1795 ஆம் ஆண்டில், போலந்தை, பிரசிய இராச்சியம், உருசியப் பேரரசு, ஆசுத்திரியா ஆகியவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால், இந்த உறவு முடிவுக்கு வந்தது. 1918 ஆம் ஆண்டில், போலந்து, இரண்டாவது போலந்துக் குடியரசு ஆக விடுதலை பெற்றுக்கொண்டது. 1939 செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், செருமனிக்கும் உருசியாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்-ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன. ஏறத்தாழ ஆறு மில்லியன் போலந்து மக்கள் இப்போரில் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலந்து, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வட்டத்துள் அடங்கியதான போலந்து மக்கள் குடியரசாக உருவாகி 1989 வரை நிலைத்திருந்தது. 1989 ஆம் ஆண்டுப் புரட்சியின் போது 45 ஆண்டுக்கால பொதுவுடைமை ஆட்சி தூக்கி எறியப்பட்டு சனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது பெரும் அழிவுகளுக்கு உட்பட்டிருந்தும், போலந்தின் பெரும்பாலான பண்பாட்டுச் செல்வங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 14 யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்கள் போலந்தில் உள்ளன. பொதுவுடைமை ஆட்சி நீக்கப்பட்ட பின்னர், மனித வளர்ச்சி தொடர்பில் போலந்து அதியுயர் தரத்தை எட்டியுள்ளது.

வடக்கு சைப்பிரசு

வடக்கு சைப்பிரசு (Northern Cyprus) (வடkku சைப்பிரசு துருக்கி குடியரசு) முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் நடைமுறையில் ஒரு சுதந்திர நாடு. இது தனது சுதந்திரத்தை 1983 ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பை துருக்கி மட்டுமே ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கவில்லை. இந்த பகுதி படைத்துறை, பொருளாதார, அரசியல் வழிகளில் துருக்கியைச் சார்ந்து இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய கொடி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்
1901–1925
1926–1950
1951–1975
1976–2000
2001–தற்போது
2012 நோபல் பரிசு வென்றவர்கள்
வேதியியல்
இலக்கியம்
அமைதி
இயற்பியல்
மருத்துவம்/உடலியங்கியல்
பொருளியல்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.