ஐபீரிய மூவலந்தீவு

ஐபீரிய மூவலந்தீவு அல்லது ஐபீரிய குடாநாடு என்பது ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும். ஐரோப்பியாவில் உள்ள மூன்று மூவலந்தீவில் இதுவே தென்மேற்குக் கோடியில் உள்ளது. இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் நிலநடுக்கடலும், வடக்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ2 (km²).

Iberian peninsula
ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள உள்ள ஐபீரிய மூவலந்தீவின் படம். இதில் எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காட்டப்பட்டுள்ளன

வரலாறு

இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த முன்மாந்த இனங்களான ஓமோ எரெக்டசு (Homo erectus), ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஓமோ ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அட்டாப்புயெர்க்கா (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் [1]. இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் பாசுக் மக்களும் ஓரினமாகும். பாசுக் மக்கள் யூசுக்கால்டுனாக் (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூசுக்க்காரா மொழி பேசும் மனிதர்கள்

கடலோடிகளாகிய ஃவினீசியர்களும், கிரேக்கர்களும், கார்த்தேசியர்களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை ஐபீரியா என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால இலத்தீன் பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)).

புவியியல்

ஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது. இதன் கிழக்கேயும் தென்கிழக்கேயும் மத்திய தரைக் கடலும், வடக்கேயும் மேற்கேயும் தென் மேற்கேயும் அத்திலாந்திக் பெருங்கடலும் உள்ளன. பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. இதன் தென்முனை ஆபிரிக்காவின் வட மேற்குக் கரைக்கு மிக அருகாக உள்ளது. கிப்ரால்டர் நீரிணையும் மத்திய தரைக்கடலும் இதனை ஆபிரிக்காவிலிருந்து பிரிக்கின்றன.

இந்த மூவலந்தீவின் தென் முனையாக புன்ரா டி டரிபாவும் (36°00′15″N 5°36′37″W) வட முனையாக புன்ரா டி எஸ்ரகா டி பரேசும் (43°47′38″N 7°41′17″W) அமைந்துள்ளன. இந்த இரு முனைகளுக்கும் இடையிலான அகலம் ஏறத்தாழ 865 கிலோமீட்டர் ஆகும். இதன் மேற்கு முனையாக கபோ டா றொக்காவும் (38°46′51″N 9°29′54″W) கிழக்கு முனையாக கப் டி கிரியசும் (42°19′09″N 3°19′19″E) விளங்குகின்றன. இது ஏறத்தாழ 1,155 கிலோமீட்டர் நீளம் ஆகும். இதன் சீரற்ற கிட்டத்தட்ட எண்கோணமான வடிவமானது புவியியலாளர் சிடிரபோவினால் எருதுத் தோலிற்கு ஒப்பிடப்பட்டது.

எசுப்பானியாவின் மத்திய பகுதியில் அமைந்த 610 மீட்டர் முதல் 760 மீட்டர் வரையான உயரம் கொண்ட மத்திய மெசெட்டா மேட்டுநிலம் இந்த எண்கோண வடிவின் முக்கால் பங்கை உள்ளடக்குகிறது. ஐபீரிய மூவலந்தீவின் மத்தியாக மட்ரிட்டிற்கு சிறிது தெற்கே உள்ள கெட்டபே எனும் இடமே கருதப்படுகிறது. இது மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் பல ஆறுகளின் தோற்றுவாயாக உள்ளன.

கடற்கரை

ஐபீரிய மூவலந்தீவின் மொத்தக் கடற்கரை 3,313 கிலோமீட்டர் (2,059 மைல்) நீளமானதாகும். இதில் 1660 கிலோமீட்டர் (1,030 மைல்) மத்தியதரைக்கடல் பக்கத்திலும் 1,653 கிலோமீட்டர் (1,027 மைல்) அத்திலாந்திக் பெருங்கடல் பக்கத்திலும் உள்ளது.

ஆறுகள்

எப்ரோ ஆறு, டோவுரோ ஆறு, தாகசு ஆறு, குவாடியானா ஆறு, குவாடல்குவிர் ஆறு ஆகிய பெரிய ஆறுகள் இந்த மூவலந்தீவில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன. இவற்றின் நீர் அளவு பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இவற்றுள் மிகப்பெரியதான தாகசு ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து போர்த்துக்கல் ஊடாகச் செல்கிறது. டோவுரோ ஆறும் மேற்கு நோக்கிப் பாய்கிறது. குவாடியான ஆறு தெற்கு நோக்கிப் பாய்ந்து அதன் இறுதியில் நீண்ட தூரத்திற்கு எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான எல்லையாக விளங்குகின்றது.

மலைகள்

ஐபீரிய மூவலந்தீவின் பெரும்பான்மை நில அமைப்பானது மலைகளால் ஆனது. இவற்றுள் பிரதான மலைத் தொடர்களாகப் பின்வருவன அமைகின்றன.

  • பிரனீசு மலைத்தொடரும் அதன் சிறு குன்றுகளான முன்-பிரனீசு மலைகளும். இதன் உச்சி 3,404 மீட்டர் உயரமான அனெற்றோ ஆகும்.
  • வடக்கு கரையில் அமைந்த கன்ரபிரியன் மலைத்தொடர்.
  • கலிசியா/டிராஸ்-ஒஸ்-மொன்ரெஸ் மலை வடமேற்கில் அமைந்துள்ளது.
  • ஐபீரிக்கோ முறைமை எனப்படும் மலைத்தொடரானது மூவலந்தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. 2,313 மீட்டர் உயரமான மொன்காயோ இதன் உச்சி ஆகும்.
  • மத்திய முறைமை எனும் மலைத்தொடர் ஐபீரிய மேட்டு நிலத்தை வடக்குத் தெற்காக இரண்டாகப் பிரிக்கிறது.
  • மொன்ரெசு டி ரொலிடோ கிழக்குக் கரையில் உள்ளது.
  • சியெர்ரா மொரெனா
  • பயேற்றிக் முறைமை

காலநிலை

ஐபீரிய மூவலந்தீவானது இரு பெரும் காலநிலை வகைகளைக் கொண்டுள்ளது. அவை அத்திலாந்திக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் நிலவும் கடல்சார் காலநிலை மற்றும் மத்தியதரைக்கடல் பக்கமாக நிலவும் மத்தியதரைக் காலநிலை ஆகும். கடல்சார் காலநிலையானது சீரான வெப்பநிலையைக் கொண்ட ஒப்பீட்டளவில் குளிரான கோடைகாலத்தை உடையதாக உள்ளது. எனினும் போர்த்துக்கல் மற்றும் எசுப்பானியாவின் பெரும்பாலான பகுதிகள் வேறுபட்ட பனிப்படிவைக் கொண்டனவாகவும் கடலிலிருந்தான தூரம் மற்றும் உயரத்தைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலைகளை உடையனவாகவும் உள்ளன.

நாடுகள்

எசுப்பானியா

போர்த்துக்கல்

பிரான்சு

அந்தோரா

ஜிப்ரால்ட்டர்

நகரங்கள்

மட்ரிட்

பார்சிலோனா

லிஸ்பன்

போர்ட்டோ

வாலேன்சியா

குறிப்புகள்

  1. "'First west Europe tooth' found". BBC News. 2007-06-30. http://news.bbc.co.uk/2/hi/science/nature/6256356.stm.
1582

ஆண்டு 1582 (MDLXXXII) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் திருத்தந்தையின் ஆணை ஓலை மூலம் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்காட்டியை எசுப்பானியா, போர்த்துகல், போலந்து-லித்துவேனியா, மற்றும் இன்றைய இத்தாலியின் பெரும் பகுதிகளும் நடைமுறைப்படுத்தின. இந்நாடுகளில் அக்டோபர் 4 வியாழக்கிழமை வரை பழைய யூலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாற்றப்பட்டு கிரெகொரியின் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 9 இற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை டிசம்பர் 20 ஆக மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் யூலியன் நாட்காட்டியையே பின்பற்றி சில ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற்றிக் கொண்டன. உலகம் முழுவதுமான முழுமையான மாற்றம் 1929 இலேயே இடம்பெற்றது.

அந்தாலூசியா

அந்தாலூசியா (Andalusia, எசுப்பானியம்: Andalucía) எசுப்பானியாவின் 17 தன்னாட்சி சமூகங்களில் மக்கள்தொகையில் முதலாமிடம் வகிக்கும் தன்னாட்சி பகுதியாகும்; பரப்பளவில் காஸ்தில் மற்றும் வியோனை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த தன்னாட்சிப் பகுதி எட்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அல்மீரியா, காதிசு, கோர்டோபா, கிரானடா, உயெல்வா, ஹேன், மலாகா, செவில் இதன் தலைநகரம் செவீயா (எசுப்பானியம்: Sevilla).

அந்தாலூசியா ஐபீரிய மூவலந்தீவின் தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் நடுநிலக்கடலுக்கும் மேற்கேயும் போர்த்துகல்லுக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு கிழக்கிலும் நடுநிலக் கடல் மற்றும் ஜிப்ரால்ட்டர் நீரிணைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான ஜிப்ரால்ட்டர் அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

உமையா கலீபகம்

உமையா கலீபகம் (Umayyad Caliphate அரபி:بنو أمية) இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் இரண்டாவது கலீபகம் ஆகும். சிரியாவின் திமிஷ்கு நகரம் இதன் தலைநகரம் ஆகும். ராசிதீன் கலீபாக்களில் கடைசி கலீபாவான அலீ அவர்கள் இறந்த பின்பு அப்போதைய, சிரியாவின் ஆளுநரான முதலாம் முஆவியா என்பவரால் உமையா கலீபகம் உருவாக்கப்பட்டது. இவர் பனூ உமய்யா குலத்தில் இருந்து வந்தவர் என்பதால் இது உமையா கலீபகம் என அழைக்கப்பட்டது. இது தனது உச்சத்தில் ஐந்து மில்லியன் சதுர மைல் பரப்பளவில், அரபுத் தீபகற்பம், பாரசீகம், சிந்து சமவெளி, வட ஆபிரிக்கா மற்றும் ஐபீரிய மூவலந்தீவு (ஐபீரிய தீபகற்பம்) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது அந்த காலகட்டம் வரை, ஒரு பேரரசினால் ஆளப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பு ஆகும். மேலும் இற்றை வரை ஆளப்பட்ட நிலப் பரப்புக்களில் ஐந்தாவது மிகப்பரந்த நிலப்பரப்பு ஆகும்.

அப்பாசியர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, பொகா 750 இல் இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. இருப்பினும் இதனை தொடர்ந்து கலீபகத் தலைமை, அப்பாசியர்கள், குர்துபா உமையாக்கள், பாத்திம கலீபாக்கள் மற்றும் உதுமானியக் கலீபாக்கள் என 1924 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள்

மேலத்தேய செபராது யூதர்கள் (Western Sephardim) அல்லது எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள் (Spanish and Portuguese Jews) எனப்படுவோர் ஐபீரிய யூத துணைக் குழுவாகும். ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் பெரியவில் வசித்த இவர்கள் 1492 இல் எசுப்பானியாவில் இருந்தும் 1497 இல் போத்துக்கலில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

எசுப்பானிய அமெரிக்கா

எசுப்பானிய அமெரிக்கா (Spanish America) அல்லது இசுப்பானிக் அமெரிக்கா (Hispanic America) (எசுப்பானியம்: Hispanoamérica, América española அல்லது América hispana) அமெரிக்காக்களில் உள்ள எசுப்பானியம் பேசுகின்ற நாடுகள் அடங்கிய பகுதியாகும்.இந்த நாடுகளுக்கும் எசுப்பானியாவிற்கும் அல்லது அதன் முன்னாள் ஐரோப்பிய பெருநகரத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த அனைத்து நாடுகளிலிலுமே எசுப்பானியம் முதன்மை மொழியாக உள்ளது; சிலவற்றில் ஒன்று அல்லது மேற்பட்ட முதற்குடிகளின் மொழிகளுடன் (குவாரனி, கெச்வா, ஐமர, மாயன் போன்றவை), அல்லது ஆங்கிலத்துடன் (புவர்ட்டோ ரிகோவில்) எசுப்பானியம் அலுவல்மொழியாக இணைத்தகுதி பெற்று விளங்குகின்றது. கத்தோலிக்க கிறித்தவமே பெரும்பான்மையினரின் சமயமாக விளங்குகின்றது.ஐபீரோ-அமெரிக்கா என்ற வகைப்பாட்டில் எசுப்பானிய அமெரிக்க நாடுகளுடன் பிரேசிலும் (முந்தைய "போர்த்துக்கேய அமெரிக்கா") சேர்க்கப்படுகின்றது; சிலநேரங்களில் ஐபீரிய மூவலந்தீவு நாடுகளான போர்த்துகல், எசுப்பானியா, அந்தோராவும் சேர்க்கப்படுகின்றன. எசுப்பானிய அமெரிக்காவும் இலத்தீன் அமெரிக்காவும் வேறானவை; இலத்தீன் அமெரிக்காவில் எசுப்பானிய அமெரிக்கா தவிர பிரேசில், மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடு அல்லது கனடா தவிர்த்த முன்னாள் பிரான்சியக் குடியேற்றங்களும் சேர்க்கப்படுகின்றன.

குர்துபா கலீபகம்

குர்துபா உமய்யா கலீபகம் (Caliphate of Córdoba, அரபு:خلافة قرطبة Khilāfat Qurṭuba), இரண்டாவது இசுலாமிய கலீபகமான உமய்யா கலீபகத்தின் தொடர்ச்சி ஆகும். உமய்யா கலீபகத்தின் கடைசி கலீபாவான இரண்டாம் மர்வான், அப்பாசியர்களால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதில் இருந்து தப்பித்து வந்த உமய்யா இளவரசரான முதலாம் அப்துல் ரகுமான் என்பவரால் ஐபீரிய மூவலந்தீவு (அல்-அந்தலுசு) பகுதியில் நிருவப்பட்டதே குர்துபா உமய்யா அமீரகம் ஆகும். இசுலாமிய கலீபா பதவியை அப்பாசியர்கள் கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, இவர்கள் குர்துபா அமீர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்களின் வழிவந்த எட்டாவது அமீரான மூன்றாம் அப்துல் ரகுமான் தன்னைத் தானே கலீபாவாக அறிவித்துக்கொண்டார். எனவே இவரின் பிறகான ஆட்சி குர்துபா உமய்யா கலீபகம் என்று அழைக்கப்பட்டது. கிபி 756 முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஐபீரிய பகுதியை ஆட்சி செய்து வந்த இந்த பேரரசு கிபி 1031ல் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களை அடுத்து முடிவுக்கு வந்தது.

குர்துபா உமய்யா கலீபகம் வனிகம் மற்றும் கலாச்சாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது. மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இசுலாமியப் பண்பாட்டின் நுழைவாயிலாக விளங்கிய குர்துபா உமய்யா கலீபகம், கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது. குர்துபா பெரிய பள்ளிவாசல் இதன் கட்டிடக்கலைக்கு ஒரு உதாரனம் ஆகும்.

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் (ஆங்கிலம்:The Mosque-cathedral of Córdoba, எசுப்பானியா: Mezquita–catedral de Córdoba) என்பது ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் போது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும்.இது அப்துர்ரஹ்மான் அத் தாகித் என்ற உமயாத் கிலாபத்தில் இருந்ததார்.இவர் இந்த நிலத்தை 80000 திர்ஹம்கள் கொடுத்து வாங்கி இந்த 800 தூண்களை கொன்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும். இது பின்னர் கிரஸ்தவர்களால் தேவாலயமாக மாற்றப்பட்டது. இது ஆந்தலூசியாவில் அமைந்துள்ள கோர்தோபா நகரத்தில் அமைந்துள்ளது. எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய காலங்களில் இது பள்ளி வாசலாக மாற்றம் பெற்றுள்ளது.

சாசானியப் பேரரசு

சாசானியப் பேரரசு அல்லது சாசானிய மரபு (Sassanid Empire or Sassanian Dynasty) கி.பி. 224 முதல் 651 முடிய தெற்காசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளை நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட பாரசீக நாட்டவர்கள் ஆவர். சாசானியப் பேரரசின் தலைநகரங்களாக இஸ்தகர், டெஸ்சிபான் நகரங்கள் விளங்கின.

பார்த்தியப் பேரரசின் இறுதி மன்னர் நான்காம் அர்தபனாஸை வென்ற சாசானிய மன்னர் முதலாம் அர்தசிர் கி பி 224 இல் சாசானியப் பேரரசை நிறுவியவர் ஆவார்.

சாசானியப் பேரரசை விரிவு படுத்தும் நோக்கில் சாசானியர்கள் ரோமப் பேரரசுடனும், அதற்கு பிந்திய பைசாந்திப் பேரரசுடனும் தொடர்ந்து போரிட்டனர்.

சாசானியப் பேரரசர் மூன்றாம் யஸ்தஜிர்து (632–651), அரபு நாட்டின் முதல் ராசிதீன் கலீபாக்களுடன் நடத்திய 14 ஆண்டு கால நீண்ட போருக்குப் பின்னர் சாசானியப் பேரரசு கி பி 651-இல் முடிவுற்றது.

செபதேயுவின் மகன் யாக்கோபு

செபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார்.

செபராது யூதர்கள்

செபராது யூதர்கள் அல்லது எசுப்பானிய யூதர்கள் (Sephardi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் இரண்டாம் ஆயிரமாண்டு ஆரம்பத்தில் ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் சமூகமாக ஒன்றாகினர். இவர்களின் சமூகம் எசுப்பானியா, போர்த்துகல் பகுதிகளில் உருவாகியது.

துலிப்

துலிப் (tulip) என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட துலிபா வகைத் தாவரமாகும். இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு (சிரியா, இசுரேல், லெபனான், யோர்தான்), ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்டது.

முதலாம் ஜஸ்டினியன்

முதலாம் ஜஸ்டினியன் (இலத்தீன்: Flavius Petrus Sabbatius Justinianus Augustus, கிரேக்கம்: Φλάβιος Πέτρος Σαββάτιος Ἰουστινιανός Flábios Pétros Sabbátios Ioustinianos, பி. 482, இ. நவம்பர் 14, 565) 527 முதல் 565 வரை பைசாந்தியப் பேரரசின் பேரரசராக இருந்தார். இலத்தீன் தாய்மொழியாக வைத்துக்கொண்டிருந்த கடைசி ரோமப் பேரரசர் இவர். ஜஸ்டினியன் ஆட்சி காலத்தில், முன்னாள் ரோமப் பேரரசின் மேற்கு பகுதிகளை மறுபடி கைப்பற்ற முயற்சி செய்து, வடக்கு ஆப்பிரிக்கா, இத்தாலி, ஐபீரிய மூவலந்தீவு, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளார்.

ஜஸ்டினியன் ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசின் சட்டம், கட்டிடக்கலை, பொருளாதாரம் முன்னேறி வந்தது. ஹேகியா சோபியா உள்ளிட்ட பல புகழ்பெற்ற கட்டிடங்களின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டார். ஜஸ்டினியனால் வெளியிடப்பட்ட கோர்ப்பஸ் ஜூரிஸ் சிவிலிஸ் என்கிற சட்ட நூல், பல நாடுகளில் இன்று வரை பயனில் உள்ள குடிமையியல் சட்ட முறையின் அடிப்படையாக அங்கீகரிக்கப்படுகிறது.

கிழக்கு மரபுவழி திருச்சபையில் ஜஸ்டினியன் புனிதராக வணங்கப்படுகிறார்.

மூவலந்தீவு

நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும். சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.

யூதர்களின் வரலாறு

யூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மத இலக்கியங்களில் கிமு 1500 இலிருந்து இஸ்ரேலியர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. யூதர்கள் புலம்பெயர் தொடங்கியது அசீரிய நாடு கடத்தலில் இருந்து ஆரம்பிக்கிறது. பாபிலோனியர்களின் நாடு கடத்தலின்போது யூதர்கள் அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினர். மத்திய மற்றும் கீழை நடுநிலைக் கடல் பகுதிகளை பைசாட்டின் அரசு ஆண்டு வந்தபோது யூதர்கள் உரோமாபுரி முழுவதும் பரவி இருந்தனர். பைசாட்டின் அரசு தனது ஆதிக்கத்தை கிபி 638 வாக்கில் இழக்கத் தொடங்கியது. அப்போது எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, மெசப்படோமியா ஆகிய பகுதிகளை இஸ்லாமியப் பேரரசின் அரசரான உமறு இப்னு அல்-கத்தாப் ஆட்சி செய்ய தொடங்கினார். யூதர்களின் பொற்காலத்தின் போது ஐபீரிய மூவலந்தீவு நிலப் பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது யூத மதத்தை மற்ற சமூகப் பிரிவுகள் ஏற்றனர். யூதர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை மேம்பட தொடங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் யூதர்களின் மக்கள்தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் யூதர்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் யூதர்கள் ஐரோப்பியாவின் சட்ட திட்டங்களில் இருந்து யூதர்களுக்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 1870 முதல் 1880 காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மீண்டும் இஸ்ரேல் பகுதிகளுக்கு புலம் பெயர்வது பற்றி யோசிக்கத் தொடங்கினர். அங்கு புலம்பெயர்ந்து யூதர்களுக்கான புதிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற அனைத்து ஐரோப்பிய யூதர்களும் பேசத் தொடங்கினர். யூதர்கள் அதிகாரப்பூர்வமாக 1897 இல் புலம்பெயர் தொடங்கி இருந்தனர். அந்த நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழும் யூதர்கள் கலை, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். நோபல் பரிசு வெற்றியாளர்களில் பலர் யூதர்களாக இருந்தனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.