ஏப்ரல் 18

ஏப்ரல் 18 (April 18) கிரிகோரியன் ஆண்டின் 108 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 109 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 257 நாட்கள் உள்ளன.

<< ஏப்ரல் 2019 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
MMXIX

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

1906

1906 (MCMVI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

1930

1930 (MCMXXX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

1941

1941 (MCMXLI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.

1955

1955 (MCMLV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.

1976

1976 (MCMLXXVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக் கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரள மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பிற்கு வரும் ஐந்தாவது நபர் இவராவார்.

இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.

எசுவாத்தினி

எசுவாத்தினி (Eswatini, சுவாசி: eSwatini), அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம் (Kingdom of Eswatini), முன்னர்: சுவாசிலாந்து (Swaziland) தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடகிழக்கே மொசாம்பிக், வடக்கு, மேற்கு மற்றும் தெற்கே தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கே 200 கிமீ நீலமும், கிழக்கில் மேற்கே 130 கிமீ நீலமும் கொண்ட இந்நாடு ஆப்பிரிக்காவில் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். ஆனாலும், இதன் காலநிலை மற்றும் இட அமைப்பியல் ஆகியவை குளிர்ந்த மற்றும் சூடான, உலர்ந்த குறைந்த புல்வெளி வரை வெவ்வேறானவையாகும்.

இங்குள்ள பெரும்பாலானவர்கள் உள்ளூர் சுவாசி இனத்தவர்கள் ஆவர். இவரக்ளின் மொழி சுவாசி மொழி (சிசுவாத்தி) ஆகும் சுவாசிகள் தமது இராச்சியத்தை 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றாம் உங்குவானேயின் தலைமையில் அமைத்தனர். 19-ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த இரண்டாம் முசுவாத்தி மன்னரின் காலத்தில் இந்நாட்டின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இதன் இன்றைய எல்லைகள் 1881 இல் ஆபிரிக்காவுக்கான போட்டிக் காலத்தில் வரையறுக்கப்பட்டன. இரண்டாம் பூவர் போரை அடுத்து, இவ்விராச்சியம் சுவாசிலாந்து என்ற பெயரில் 1903 முதல் பிரித்தானியாவின் காப்புநாடாக ஆக்கப்பட்டது. 1968 செப்டம்பர் 6 இல் இது பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 2018 ஏப்ரல் 18 இல் சுவாசிலாந்து இராச்சியம் என்ற இதன் பெயர் அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம் என மாற்றப்பட்டது. இப்பெயரே சுவாசிகளினால் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 2005

ஏப்ரல் 22:

ஆசியாவில் 1930 மற்றும் 1940களில் ஜப்பான் செய்த இராணுவ கொடூரங்களுக்கு அந்த நாடு மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.(பிபிசி)

நேபாளத்தில் 61 அரசியல் கைதிகள் விடுவிப்பு. (பிபிசி)

ஏப்ரல் 21:

ஸ்பெயினில் ஓரே பாலினத்திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம். (ராய்ட்டர்ஸ்)

ஏப்ரல் 20:

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவு உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. (ராய்டர்ஸ்)

ஏப்ரல் 19:

புதிய போப்பாண்டவராக ஜெர்மனியைச் சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர் தேர்வு செய்யப்பட்டார். (பிபிசி)

ஏப்ரல் 18:

அண்டார்டிக்காவில் பனிக்கோளங்கள் மோதல் (இஎஸ்ஏ)

ஏப்ரல் 17:

பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்கள் கண்டுபிடிப்பு. (தி இண்டிபெண்டன்ட்)

ஏப்ரல் 16:

நஜிப் மிகடி லெபனானின் புதிய பிரதமராகிறார், (ராய்டர்ஸ்)

ஏப்ரல் 15:

உணவுக்கு எண்ணெய் திட்டம் ஒழுங்காக நடைபெறுவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லையயென, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது, ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் குற்றம் சாட்டினார். (பிபிசி)(கேன்பரா)

ஏப்ரல் 14:

அங்கோலாவில், மார்பர்க் வைரஸ் தொற்றியதில் 210 பேர் பலி.(ராய்டர்ஸ்) (சி.என்.என்)

ஏப்ரல் 13:

லெபனான் பிரதமர் ஒமர் கராமி ராஜினாமா(பிபிசி)

ஈராக்கில் 9 காவல் துறையினர் குண்டுவெடிப்பில் பலி (பிபிசி)

சீனா - ஜப்பான் பதற்ற நிலை அதிகரிப்பு (பிபிசி)

வங்காளதேசம் தொழிற்சாலை இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலி (தி ஹிண்டு)

ஏப்ரல் 12:

ஆன்ட்ரஸ் அன்சிப் எஸ்டோனியாவின் அடுத்த பிரதமர் (பிபிசி)

ஏப்ரல் 11:

மக்கள் சீனக்குடியரசில் ஜப்பான் எதிர்ப்பு நடவடிக்கைகள். (விக்கிநியூஸ்)

ஏப்ரல் 10:

மக்கள் சீனக்குடியரசின் தலைவர் வென் ஜியாபோ,உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்திழைப்பை வலியுறுத்தினார். (ஏபிசி செய்திகள்)

ஏப்ரல் 9:

இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்ல்ஸ், கமீலா பார்க்கர் பௌல்சை மணந்தார். (பிபிசி) (பிபிசி)

ஏப்ரல் 8:

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறுதிச்சடங்கு நடைபெற்றது. (பிபிசி)

ஏப்ரல் 2010

ஏப்ரல் 2010, ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 புதன்கிழமை தொடங்கி, மே 14 வெள்ளிக்கிழமை முடிவடையும்.

குடவாழை (நெல்)

குடவாழை (Kudavazhai) பாரம்பரிய நெல் வகைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த நெல் இரகம், இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரவும், உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்யவும் ஏற்ற இரகமாகும். தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. அந்த வகைகளில், இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது.

சிம்பாப்வே

சிம்பாப்வே முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே குடியரசானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். சிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும் உள்ளன. சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் "ட்சிம்பா ட்சிமாப்வே" என்ற சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். மேலும், "பெரும் சிம்பாப்வே" என்றழைக்கப்டும் நாட்டின் முன்னைய இராச்சியம் ஒன்றின் இடிப்பாடுகளின் பெயர் இப்பெயர் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது அவ்விடிபாடுகளுக்கு காட்டும் மரியாதையாக கருதப்படுகிறது.

சிறீகாந்து தேவா

சிறீகாந்து தேவா (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார். இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆபு மகாலட்சுமி, பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.சிறீகாந்து தேவா தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் சிறீ தூடியோசு என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.இவர் பின்னணிப் பாடகரான பெபியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ்

ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings ஏப்ரல் 18, 1905 – பெபெரவரி 27,1998) என்பவர் ஒரு அமெரிக்க மருத்துவர். கீமோதெரபி ஆராய்ச்சிக்காக சர் ஜேம்ஸ் பிளாக், கெர்ட்ரூட் எலியான் ஆகியோருடன் நோபல் பரிசை 1988இல் பகிர்ந்து கொண்டவர்.

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019

இந்தியாவின் 17 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடந்தது.

தோண்டோ கேசவ் கார்வே

மகரிசி முனைவர். தோண்டு கேசவ் கார்வே (Maharshi Dr. Dhondu Keshav Karve, மராத்தி: महर्षी डॉ. धोंडो केशव कर्वे) (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 9, 1962) இந்தியாவில் மகளிர் நலனுக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி. இவரது நினைவாக மும்பையின் குயின்ஸ் சாலை மகரிசி கார்வே சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கும் விதவைகள் மறுமணம் புரியும் உரிமைக்கான போராட்டத்திலும் முன்னோடியாக விளங்கினார். இவரது சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருதை இவரது நூறாவது அகவையில் 1958ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

வௌவால்

வௌவால் (Bat) பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான வகையியலாளர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள். இவ்வௌவால்கள் பெரும்பாலும் (சுமார் 70%) எலி போன்ற சிறு முகம் (குறுமுகம்) உடையனவாகவும் பூச்சிகளையுண்பனவாகவும் உள்ளன. வௌவால்கள் பகல் பொழுது முழுவதும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இவை உலவ ஆரம்பிக்கும்.இரவு நேரங்களிலேயே இவை உணவு உண்ணும்.

வௌவால்கள் நரியின் முகத்தோடும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்,அதன் இறக்கைகள் வழு வழுவென காட்சி அளிக்கும்.

இட மெய்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வெளவாலின் முப்பரிமாண காட்சிகளை காணச்செய்கிறது என ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது. ஆங்கில அறிவியல் இதழான சயன்சு இல், ஏப்ரல் 18 அன்று ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு அகிப்தியக்கசு (Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்திய பழங்கள் உண்ணும் வெளவால் தன் இட மெய்மிகளாலேயே தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்துவருகிறது என கூறப்பட்டுள்ளது.

ஆண்டின் மாதங்களும் நாட்களும்
சனவரி
பெப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
சூன்
சூலை
ஆகத்து
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
திசெம்பர்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.