எண்ணிக்கை (நூல்)

எண்ணிக்கை (எண்ணாகமம்) (Numbers) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) நான்காவது நூலாக இடம்பெறுவதாகும்.

Murillo, Bartolomé Esteban Perez (style) - Moses striking the rock - 19th c
மோசே பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தல் (எண் 20:1-13). ஓவியர்: பர்த்தலமே முரில்லோ (1618-1682). இசுபானியா.

நூல் பெயர்

"எண்ணிக்கை" என்னும் இத்திருநூல் இஸ்ரயேலரின் வரலற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Bəmidbar" அதாவது "பாலைநிலத்தில்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "arithmoi" (Αριθμοί = எண்கள்) என்பதாகும்.

நூலின் மையப்பொருள்

இசுரயேல் மக்கள் கணக்கெடுப்பு நிகழ்ந்தது தவிர, அவர்களுக்கு காதேசு-பர்னேயாவில் நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கடவுள், மக்கள்மேல் அக்கறைகொண்டு அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.

அதுபோன்று, கடவுளுக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

எண்ணிக்கை நூல் உட்கிடக்கை

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இசுரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல்

அ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு
ஆ) சட்டங்களும் விதிமுறைகளும்
இ) இரண்டாம் பாஸ்கா

1:1 - 9:23

1:1 - 4:49
5:1 - 8:26
9:1-23

197 - 215

197 - 205
205 - 214
214 - 215

2. சீனாய் மலை முதல் மோவாபு வரை 10:1 - 21:35 215 -237
3. மோவாபில் நிகழ்ந்தவை 22:1 - 32:42 237 - 257
4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம் 33:1-49 257 - 258
5. யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள் 33:50 - 36:13 258 - 263
உடன்படிக்கைப் பெட்டி

உடன்படிக்கைப் பெட்டி அல்லது உடன்படிக்கைப் பேழை என்பது விடுதலைப் பயணம் விபரிக்கும் ஓர் பெட்டியாகும். சாட்சிப் பெட்டி எனவும் அழைக்கப்படும் இது பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டது. விடுதலைப் பயணம் (நூல்), எண்ணிக்கை (நூல்), எபிரேயருக்கு எழுதிய நிருபம், ஆகியவற்றின் கருத்துக்களின்படி, அதனுள் ஆரோனின் கோலும், குவளையில் மன்னா மற்றும் மோசே எழுதிய முதல் தோரா சுருள் என்பன இருந்ததாக கருதப்படுகிறது. ஆயினும் 1 அரசர்களின் படி சாலமோனின் காலத்தில் உடன்படிக்கைப் பெட்டியினுள் கட்டளைகளின் இரு கற்பலகைகள் மாத்திரம் இருந்தது எனக் கூறுகின்றது. விடுதலைப் பயணத்தின்படி, மோசேக்கு சீனாய் மலையில் வைத்து கடவுளால் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்பவே உடன்படிக்கைப் பெட்டி உருவாக்கப்பட்டது. உடன்படிக்கைப் பெட்டியை மூடியுள்ள தேவதூதர்களின் மத்தியிலிருந்து தன்னுடன் பேசுமாறு மேசேக்கு கடவுள் கூறியிருந்தார்.

செபுலோன்

செபுலோன் (Zebulun, Zebulon, Zabulon அல்லது Zaboules எபிரேயம்: זְבֻלוּן, זְבוּלֻן, זְבוּלוּן, எபிரேயம் Zevulun/Zvulun) என்பவர் தொடக்க நூல், எண்ணிக்கை நூல் என்பன குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஆறாவது மகனும் லேயாவின் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய செபுலோன் கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர்.

யூத தலைமைச் சங்கம்

தலைமைச் சங்கம் (எபிரேயம்: סַנְהֶדְרִין sanhedrîn, கிரேக்கம்: Συνέδριον, synedrion) என்பது இசுரேல் நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் இருபது முதல் இருபத்திமூன்று உறுப்பினர்களைக்கொண்ட ஒரு சங்கமாகும். இதனோடு பெரிய தலைமைச் சங்கம் எருசலேமில் 71 உறுப்பினர்களைக்கொண்டு இயங்கியது. இச்சங்கம் சமய வழக்குகளையும் வழக்கங்களையும் மட்டுமே விசாரித்தது. இரண்டாம் கோவில் காலத்தில் இச்சங்கம் எருசலேம் கோவிலில் ஓய்வு நாள் மற்றும் யூத விழா நாட்களைத்தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் கூடியது.மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது என மரபுப்படி நம்பப்படுகின்றது.. கி.பி. முதல் நூற்றாண்டளவில் இத்தலைமைச் சங்கம் மூன்று வகையில் இயங்கியது. முதல் வகையினர் முக்கிய குடும்பங்களிலிருந்தும் இனக்குழுக்களிலிருந்தும் வந்த மூப்பர்களைக் கொண்டது. இரண்டாம் வகையில் பெரிய குருக்களும் குருக்கள் குடும்ப பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். மூன்றாம் வகையினர் மறைநூல் அறிஞர் இருந்தனர். யூத பெரிய தலைமைச் சங்கத்தின் மொத்த உறுப்பினர் 71 பேர் ஆவர். அதன் தலைவர் யூத தலைமைக் குரு ஆவார். உரோமையரின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தலைமைச் சங்கம் வலிமைமிக்கதாக விளங்கியது. யூத மக்களின் சமூக-சமய-அரசியல் வாழ்வில் இச்சங்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. கைதுசெய்யும் அதிகாரமும் நீதி வழங்கும் அதிகாரமும் யூதத் தலைமைச் சங்கத்திற்கு இருந்தது. மரண தண்டனை தவிர, பிற தண்டனை விதிக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு.

வரலாற்றுப்படி இவ்வகை சங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளில் இறுதியானது சுமார் கி.பி 358இல் எபிரேய நாட்காட்டியினை யூத சமயத்தின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தது ஆகும். உரோமைப் பேரரசின் யூத அடக்குமுறை சட்டங்களினாலும், கிறுத்துவ சமயத்தின் பரவலாலும், இவ்வகை சங்கங்கள் இல்லாமல் போயின. அயினும் பிரான்சின் முதலாம் நெப்போலியன் Grand Sanhedrin என்னும் பெயரில் இச்சங்கத்தை மீன்டும் ஏற்படுத்த முயன்றாலும் அது வெற்றி பெறவில்லை. இதேபோல தற்கால இசுரேலிலும் இவ்வகைச்சங்கங்களை ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

நற்செய்திகளில் இயேசு இவ்வகை தலைமைச் சங்கத்தினர் முன் விசாரிக்கப்பட்டதாக உறிப்புகள் உள்ளன. மேலும் திருத்தூதர் பணிகள் நூலில் பலமுறை இச்சங்கத்தினர் திருத்தூதர்களைக் கைது செய்து விசாரித்ததாகவும், பெரிய சங்கக் கூட்டம் ஒன்றில் கமாலியேல் கலந்து கொண்டதாகவும், இச்சங்க கூட்டம் ஒன்றில் இவர்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் கல்லெறிந்து கொன்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.