உயிர்ப்பு ஞாயிறு

உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.

இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

உயிர்ப்பு ஞாயிறு
ND Rosaire mosaïque 01
இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பதிப்புக்கல் ஓவியம்
இடம்- ஜெபமாலை பேராலயம், லூர்து நகர், பிரான்சு
கடைபிடிப்போர்கிறித்தவர்
வகைChristian
முக்கியத்துவம்இயேசுவின் உயிர்த்தெழுதல்
கொண்டாட்டங்கள்திருப்பலி, குடும்ப உணவு, ஈஸ்டர் முட்டை தேடல், பரிசுப்பரிமாற்றம்
அனுசரிப்புகள்செபம், பாஸ்கா திருவிழிப்பு, திருப்பலி
2018 இல் நாள்ஏப்ரல் 1 (மேற்கில்)
ஏப்ரல் 8 (கிழக்கில்)
2019 இல் நாள்ஏப்ரல் 21 (மேற்கில்)
ஏப்ரல் 28 (கிழக்கில்)
2020 இல் நாள்ஏப்ரல் 12 (மேற்கில்)
ஏப்ரல் 19 (கிழக்கில்)
தொடர்புடையனதிருநீற்றுப் புதன், தவக் காலம், குருத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி,

பெயர்க்காரணம்

பாஸ்கா என்ற அரமேய மொழிச் சொல்லுக்கு கடந்து போதல் என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்" (1 கொரி 5 : 7 ) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பாஸ்கா பெருவிழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர்.

கணக்கீடு

உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் எபிரேய நாட்காட்டியின் படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாதம் வரும் சம இரவு நாளான 21ம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையே உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது.[2] அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "ஈஸ்டர்/பாஸ்கா நாளைக் கண்டறிவதற்கான அட்டவணை (ஆங்கிலத்தில்)".
  2. "ஈஸ்டர் தேதியை தீர்மானித்தல் (ஆங்கிலத்தில்)".
1722

1722 (MDCCXXII) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.

2016 இலாகூர் தற்கொலைத் தாக்குதல்

மார்ச் 27, 2016 அன்று பாக்கித்தானின் இலாகூரின் பெரிய பூங்காக்களில் ஒன்றான குல்சன்-இ-இக்பால் பூங்காவின் வாயிலுக்கருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 69 நபர்கள் உயிரிழந்தனர்; 300க்கும் கூடுதலானோர் காயமுற்றனர். உயிர்ப்பு ஞாயிறு நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறித்தவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடந்ததாக அறியப்படுகின்றது; இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறுவர்களுமாவர். பாக்கித்தானிய தாலிபானின் ஜமாத்-உல்-அராரா என்ற தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது. 2019 மார்ச் 15 இல் நியூசிலாந்தில் இடம்பெற்ற கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்குப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைப் பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனா தெரிவித்தார். இரு தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்தது.2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது. தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் அபூ பக்கர் அல்-பக்தாதி என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது.

2019 இல் இலங்கை

2019 இல் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

அதுரலிய ரத்தன தேரர்

அதுரலிய ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero) இலங்கை அரசியல்வாதியும் பௌத்த துறவியும் ஆவார். இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜாதிக எல உறுமய என்ற கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரது சொந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரசை தேர்தல் தொகுதியில் உள்ள அதுரலிய என்ற ஊராகும். இவர் தனது கட்சியினருடன் 2014 நவம்பரில் ஆளும் ஐமசுமு கூட்டணியில் இருந்து விலகினார்.அதுரலிய ரத்தன தேரர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 2015-இல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அரசில் பதவி வகிக்கும் முஸ்லீம் அமைச்சர்களையும், மாகாண ஆளுநர்களையும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டார்.

ஏப்ரல் 10

ஏப்ரல் 10 (April 10) கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.

ஏப்ரல் 2014

ஏப்ரல் 2014 (April 2014) , 2014 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடைகிறது.இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435ம் ஆண்டின் ஜமா அத்துல் ஆகிர்மாதம் ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை தொடங்கி ஏப்ரல் 30 புதன் (கிழமை) முடிவடைகிறது.

ஏப்ரல் 21

ஏப்ரல் 21 (April 21) கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன.

ஏப்ரல் 5

ஏப்ரல் 5 (April 5) கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

சனவரி 1

சனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு

சீயோன் தேவாலயம் (Zion Church) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஒரு நற்செய்திப் பறைசாற்றுக் கிறித்தவக் கோவில் ஆகும். இக்கோவில் 1974 ஆம் ஆண்டில் இன்பம் மோசேசு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூத்த போதகர் வண. ரோசன் மகேசன் ஆவார்.சீயோன் தேவாலயம் கண்டியில் உள்ள கலங்கரைவிளக்கத் தேவாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை சுயாதீனத் தேவாலய அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.

சூடான் பொது விடுமுறை நாட்கள்

சூடானின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் பின்வருமாறு:ஒவ்வோர் ஆண்டும் சூடான் நாட்டில் பின்வரும் நாட்கள் பொது விடுமுறை நாட்களாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

சனவரி 1 - விடுதலை நாள்

சனவரி 7 - கோப்துக்களின் கிறித்துமசு

சூன் 3 - புரட்சி நாள்

திசம்பர் 25 - கிறிஸ்துமசுஇவற்றை விட இசுலாமிய நாட்காட்டியின்படி நிர்ணயிக்கப்படும் இசுலாமிய சிறப்பு நாட்களும் இங்கு விடுமுறை நாட்களாகும். இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சியின் மூலம் தோன்றும்

பிறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிரெகொரியின் நாட்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் நாட்கள் கிரகோரியன் நாட்காட்டியின் நாட்களை விட 10 அல்லது 11 நாட்கள் முந்தி இருக்கும். மேலும் இசுலாமிய விடுமுறைகள் நிலவின் வளர்ச்சி நிலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல்

இடப்படுகின்றன.

அல்-மவ்லிது அல் நபவி (இறைதூதர் பிறந்த நாள்)

ஈத்-உல்-பித்ர் (இரம்சான் மாத முடிவு)

இசுலாமியப் புத்தாண்டு (ஹிஜ்ரி புதுவருடம்)

ஈத்-அல்-அதா (தியாகத் திருநாள் விருந்து)

கோப்துக்களின் உயிர்ப்பு ஞாயிறு

திரித்துவ ஞாயிறு

திரித்துவ ஞாயிறு அல்லது மூவொரு கடவுள் பெருவிழா (Trinity Sunday) எனப்படுவது மேற்கத்தையக் கிறித்தவ திருவழிபாட்டு நாட்காட்டியில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும் விழாவாகும். கிழக்கத்திய கிறித்துவத்தில் இது பெந்தக்கோஸ்து ஞாயிற்றுக்கிழமையோடு இணைத்து சிறப்பிக்கப்படுகிறது. திரித்துவ ஞாயிறு நாளன்று கிறித்தவக் கோட்பாடான மூவொரு கடவுள் கடவுளின் பற்றிய இறைநம்பிக்கை சிறப்பாக நினைவுகூரப்பட்டு வழிபாட்டு முறையில் கொண்டாடப்படுகிறது.

உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து ஆண்டுநடத்தி, உய்விக்கின்ற கடவுள், அனைத்தையும் கடந்த பரம்பொருள் ஒருவரே. ஆனால் அவர் வரலாற்றில் தம்மை மூன்று “ஆள்களாக” (persons) வெளிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று “ஆள்கள்” தந்தை, மகன், தூய ஆவி என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையான சமய நம்பிக்கையே கிறித்தவ மரபில் “மூவொரு கடவுள் கொள்கை” என்பது.

இந்த மறையுண்மை “திரித்துவ ஞாயிறு” பெருவிழாவின் போது சிறப்பிக்கப்படுகிறது.

தேசிய தவ்கீத் ஜமாத்

தேசிய தவ்கீத் ஜமாத் (National Thowheeth Jama'ath NTJ; அரபு மொழி: جماعة التوحيد الوطنية, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய ஜிகாதியக் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வமைப்பு இசுலாமிய அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது. இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வியக்கத்தை 2019 ஏப்ரல் 27 இல் தடை செய்து, அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார்.

பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)

பாபநாசம் (Papanasam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் மற்றும் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை பேரூராட்சியும் ஆகும். பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் பாவங்களை ஒழிக்குமிடம் என்பதாகும்.

புனித சனி

புனித சனி (Holy Saturday) என்பது கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் பெரிய வெள்ளிக் கிழமைக்கு அடுத்த நாள் ஆகும். இது புனித வாரத்தின் கடைசி நாளாகவும், தவக் காலத்தின் கடைசி நாளாகவும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குத் தயாரிப்பு நாளாகவும் கருதப்படுகிறது.

பெந்தக்கோஸ்து

பெந்தக்கோஸ்து (பண்டைக் கிரேக்கம்: Πεντηκοστή [ἡμέρα], Pentēkostē [hēmera]) என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத்தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்) தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது. விண்ணேற்ற விழாவுக்குப் பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

பெந்தக்கோஸ்து சபை இப்புதிய ஏற்பாட்டு நிகழ்விலிருந்தே தனது பெயரைப் பெறுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில், தூய ஆவியின் வருகை நிகழ்வு செபமாலையின் மகிமை மறைபொருள்களின் மூன்றாம் மறைபொருள் ஆகும்.

மார்ச் 27

மார்ச் 27 (March 27) கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன.

விண்ணக அரசியே!

விண்ணக அரசியே! (இலத்தீன்: Regina Cæli) என்பது கிறித்தவ திருச்சபைகளில் பாடப்பெறும் மிகவும் பழைய மரியாவின் பாடலாகும். கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவுக்கு திருப்புகழ்மாலையில் பாடப்படும் திருவழிபாட்டு கால பாடல்கள் நான்கினுள் இதுவும் ஒன்றாகும். புனித சனியின் இரவு துவங்கி பெந்தக்கோஸ்து விழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறு முடிய உள்ள பாஸ்குகாலத்தில் மூவேளை செபத்திற்கு பதிலாக இது சொல்லப்படுவது வழக்கம்.

உயிர்ப்பு ஞாயிறு
1999 - 2039
கிரிகோரியன் நாட்காட்டியின் படி[1]
ஆண்டு மேற்கு கிழக்கு
1999 ஏப்ரல் 4ஏப்ரல் 11
2000 ஏப்ரல் 23ஏப்ரல் 30
2001 ஏப்ரல் 15
2002 மார்ச் 31மே 5
2003 ஏப்ரல் 20ஏப்ரல் 27
2004 ஏப்ரல் 11
2005 மார்ச் 27மே 1
2006 ஏப்ரல் 16ஏப்ரல் 23
2007 ஏப்ரல் 8
2008 மார்ச் 23ஏப்ரல் 27
2009 ஏப்ரல் 12ஏப்ரல் 19
2010 ஏப்ரல் 4
2011 ஏப்ரல் 24
2012 ஏப்ரல் 8ஏப்ரல் 15
2013 மார்ச் 31மே 5
2014 ஏப்ரல் 20
2015 ஏப்ரல் 5ஏப்ரல் 12
2016 மார்ச் 27மே 1
2017 ஏப்ரல் 16
2018 ஏப்ரல் 1ஏப்ரல் 8
2019 ஏப்ரல் 21ஏப்ரல் 28
2020 ஏப்ரல் 12ஏப்ரல் 19
2021 ஏப்ரல் 4மே 2
2022 ஏப்ரல் 17ஏப்ரல் 24
2023 ஏப்ரல் 9ஏப்ரல் 16
2024 மார்ச் 31மே 5
2025 ஏப்ரல் 20
2026 ஏப்ரல் 5ஏப்ரல் 12
2027 மார்ச் 28மே 2
2028 ஏப்ரல் 16
2029 ஏப்ரல் 1ஏப்ரல் 8
2030 ஏப்ரல் 21ஏப்ரல் 28
2031 ஏப்ரல் 13
2032 மார்ச் 28மே 2
2033 ஏப்ரல் 17ஏப்ரல் 24
2034 ஏப்ரல் 9
2035 மார்ச் 25ஏப்ரல் 29
2036 ஏப்ரல் 13ஏப்ரல் 20
2037 ஏப்ரல் 5
2038 ஏப்ரல் 25
2039 ஏப்ரல் 10ஏப்ரல் 17

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.