இரதம்

இரதம் ( ஒலிப்பு) (ஆங்கிலம்:Chariot) என்பது இழுத்துச் செல்லப்படும் ஒருவகை வண்டியாகும். பெரும்பாலும் குதிரைகளைக் கொண்டே இழுத்துச் செல்லப்படுகிறது. அக்கால இராணுவத்தில் வில்வித்தை, வேட்டை போன்றவற்றிற்கு வாகனமாகவும், போக்குவரத்திற்கும் பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

ஆங்கிலத்தில் சாரட் (chariot) என்பது இலத்தீன் சொல்லான காரஸ் என்ற சொல்லிருந்து உருவானது. இராணுவ அணிவகுப்பில் இரத அணிவகுப்பும் ஒன்றாகும். பண்டைய ரோம் மற்றும் இதர பண்டைய நாடுகளில் இரு குதிரை பூட்டிய ரதம், முக்குதிரை பூட்டிய ரதம், நான்கு குதிரை பூட்டிய ரதம் என்றெல்லாம் இருந்துள்ளது.

குதிரை இரதம் என்பது வேகமான, எடைகுறைவான, திறந்த, இருசக்கரம் கொண்ட கலனை இரண்டு அல்லது மூன்று குதிரை கொண்டு இழுத்துச் செல்லும் அமைப்புடையது. பண்டைய வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலத்தில் போர்க்களத்தில் பயன்பட்டுவந்தது, பின்னர் படிப்படியாகப் பயணவாகனமாகவும், அணிவகுப்பு வாகனமாகவும், தேர்ப் பந்தயத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டு கான்ஸ்டண்டினோபில் காலத்தில் இராணுவ முக்கியத்துவத்தையும் தாண்டி தேர்ப் பந்தயம் ஆறாம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்தது.

Biga. Festa do esquecemento. Xinzo de Limia, Ourense, Galicia
இரு குதிரைகள் இரத்தை இழுக்கின்றன
Chariot spread
ஆரைச் சக்கர ரதம் பரவல் பற்றிய வரைபடம், 1670–500 BC

ஐரோப்பா

நாகரிக வளர்ச்சியை நோக்கிய முக்கிய நகர்வில் வீட்டு விலங்காகக் குதிரை மாறியதும் ஒன்று. 4000-3500 கிமு கால வாக்கில் உக்ரைன் பகுதியைச் சேர்ந்த யுரேசியப் புல்வெளிகளில் குதிரைகள் வீட்டு விலங்காக மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.[1][2][3] சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியது அக்கால மெசொப்பொத்தேமியா (தற்கால யுக்ரேன்) பகுதிகளில் இருக்கக் கூடும். மத்திய ஐரோப்பா, வடக்கு மேகோப் நாகரிகப் பகுதிகளில் மத்திய கிமு 4ஆம் ஆயிரமாண்டைச் சேர்ந்த சக்கரம் கொண்ட வாகனங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. முதலில் மாடுகளைக் கொண்டு வண்டி இழுக்கப்பட்டிருக்கலாம்.[4]

ரஷ்யாவின் குபன் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரத இடுகாட்டில் (இறந்தவர்களை அவர்கள் இரதத்துடன் புதைப்படும் இடம்) இரு மரச் சக்கரங்களுடன் குதிரையுடன் இருக்கும் இரதத்தின் ஆதாரம் கிடைத்துள்ளது. இது கிமு 4ஆம் ஆயிரமாண்டின் இரண்டாவது பாதியைச் சேர்ந்ததாகும். இதுபோன்ற பல இடுகாட்டில் இரதங்கள் கண்டெடுக்கப்பட்டன.[5][6]

கிமு 3150 ஆண்டைச் சேர்ந்த சக்கர ஆரை கொண்ட வண்டியே கிழக்கு ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையானதாகும்[7]

The Abduction of Persephone by Pluto, Amphipolis
4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஸ்டா கல்லறையில் புளூட்டோவால் அகற்றப்படும் பெரிஸ்போனை காட்சிப்படுத்தும் சித்திரம்

பண்டைய கிரேக்கத்தில் கிமு முதலாம் ஆயிரமாண்டில் குதிரைப்படை இருந்திருந்தாலும் கரடுமுரடான கிரேக்க நாட்டில் இரதங்கள் ஓட்டுவது கடினமாகும். வரலாற்றுப்படி கிரேக்கப் போர்க்களத்தில் இரதங்கள் பயன்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இருந்த போதும் கிரேக்க இதிகாசங்களில் இரதங்களை உயர்வாகவே பேசப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும், தேவ விளையாட்டுகளிலும், இதர விழாக்களிலும், பொது நிகழ்ச்சியிலும் இரதங்கள் பயன்பட்டுள்ளன. திருமண அழைப்பில் மாப்பிள்ளைத் தோழன் அல்லது மாப்பிள்ளைத் தோழி இரதங்களில் சென்று அழைத்து வந்துள்ளனர். எரோடோட்டசு குறிப்புகளின் படி கருங்கடல்காசுப்பியன் கடல் புல்வெளிகளில் சிக்னீயே மக்கள் இரதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆசியா

12 நூற்றாண்டைச் சேர்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் மண்டபத்திலுள்ள குதிரைகள் இழுக்கும் சக்கர இரதம் 12 நூற்றாண்டைச் சேர்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் மண்டபத்திலுள்ள குதிரைகள் இழுக்கும் சக்கர இரதம்
12 நூற்றாண்டைச் சேர்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் மண்டபத்திலுள்ள குதிரைகள் இழுக்கும் சக்கர இரதம்
Coach driver Indus 01
சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்ட ரத ஓட்டி

ரிக் வேதத்தில் இரதம் பற்றிய குறிப்புகள் பல உள்ளன, கிமு இரண்டாம் ஆயிரம் ஆண்டைச் சேர்ந்த ஆதாரங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. அக்னி தேவன் முதலாக பல்வேறு தேவர்கள் இரதங்களில் சென்றதாக இதிகாசங்களில் வழங்கப்படுகிறது. விந்திய மலைத்தொடர் மணல்கற்களில் சில இரத ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. மிர்சாபூர் மாவட்டத்தில் மோர்ஹான பகர் என்ற இடத்தில் இரு ஓவியங்கள் உள்ளன. அதில் ஆறு ஆரைச் சக்கரமுடன் நான்கு குதிரை பூட்டிய ரதமும், இரு குதிரை பூட்டிய ரதமும் உள்ளது. தமிழகத்தில் கழுகுமலை வெட்டுவான் கோயிலில் பாண்டிய காலத்து ஒற்றைக்கல் இரதம் குடைவரைச் சிற்பமாக உள்ளது.[8]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Matossian Shaping World History p. 43
  2. "What We Theorize – When and Where Did Domestication Occur". International Museum of the Horse. மூல முகவரியிலிருந்து 2010-12-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-12-12.
  3. "Horsey-aeology, Binary Black Holes, Tracking Red Tides, Fish Re-evolution, Walk Like a Man, Fact or Fiction". Quirks and Quarks Podcast with Bob Macdonald (CBC Radio). 2009-03-07. http://www.cbc.ca/quirks/episode/2009/03/07/horsey-aeology-binary-black-holes-tracking-red-tides-fish-re-evolution-walk-like-a-man-fact-or-ficti/. பார்த்த நாள்: 2010-09-18.
  4. David W. Anthony, The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World. Princeton University Press, 2010 ISBN 1400831105 p416
  5. Christoph Baumer, The History of Central Asia: The Age of the Steppe Warriors. I.B. Tauris, 2012 ISBN 1780760604 p90
  6. Chris Fowler, Jan Harding, Daniela Hofmann, eds, The Oxford Handbook of Neolithic Europe. OUP Oxford, 2015 ISBN 0191666882 p113
  7. Gasser, Aleksander (March 2003). "World's Oldest Wheel Found in Slovenia". Government Communication Office of the Republic of Slovenia.
  8. முனைவர் லோ. மணிவண்ணன். "D0512 சிற்பக்கலை, ஓவியக்கலை". த.இ.க.. பார்த்த நாள் 2018-05-30.
அருச்சுன இரதம்

அருச்சுன இரதம் மாமல்லபுரத்திலுள்ள புகழ்பெற்ற ஒற்றைக்கல் தளிகளுள் ஒன்றாகும். அருச்சுன இரதம் எனப் பொதுவாக அழைக்கப்பட்டாலும், இது ஒரு கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதே ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் இது எந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. முருகன், சிவன், இந்திரன் என்பவர்களுள் ஒருவருக்கு உரியதாகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களிடையே நிலவும் கருத்து.

இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்

சுருக்கமாக ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

இந்தியா

இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

ஒற்றைக் கற்றளி

ஒற்றைக் கற்றளி (அ) ஒற்றைக்கல் தளிகள் (monolithic architecture) என்பது நிலத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் பெரிய/சிறிய பாறைகளை அல்லது குன்று ஒன்றை வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் குடைந்து அமைக்கப்படும் கோயில் ஆகும். தளி என்பது கோயில் என்ற பொருள் தரும். எனவே கற்றளி (கல் + தளி) என்பது கற் கோயில் ஆகும். ஆரம்ப காலத்தில் கற்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்களாகவே இருந்தன. இவை பாறைகளை உட்புறமாகக் குகைபோல் குடைந்து செய்யப்பட்டனவாகும். இதனைத் தொடர்ந்தே ஒற்றைக் கற்றளித் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தது. இவை இந்திய இந்துக் கோயில் கட்டடக்கலை மரபில் ஓர் அம்சமாகும். குறிப்பாக திராவிட கலைப் பாணியில் அமைந்த பல்லவர் கோயில்களில் இம் மரபைக் காணலாம்.

இவற்றை தனிக்கற் தளிகள், தனிக்கற் கோயில்கள், இரதக் கோயில்கள், மலைத்தளி, செதுக்குத் தளிகள் என்றும் பல்வேறு பெயர்களால் குறிப்பிடலாம்.

தமிழ் நாட்டில் ஒற்றைக் கற்றளிகளை முதலில் அமைத்தவர்கள் பல்லவர்கள் ஆவர். மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இரதக் கோயில்கள் ஒற்றைக் கற்றளிகளுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். ஒற்றைக் கற்றளிகள் செதுக்குவதற்குச் சிரமமானவை. இதனால் அமைப்பதற்கு இலகுவான கட்டுமானக் கோயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஒற்றைக் கற்றளிகள் வழக்கிழந்து போயின. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னர் இத்தகைய கோயில்கள் எதுவும் கட்டப்படவில்லை.

பல்லவர் காலத்தில் ஒன்பது ஒற்றைக்கல் தளிகள் அமைக்கப்பட்டன என்பர். அவை,

தர்மராஜ இரதம்

அருச்சுன இரதம்

வீம இரதம்

நகுல சகாதேவ இரதம்

திரௌபதை இரதம்

கணேச இரதம்

வலையான் குட்டை இரதம்

வடக்குப் பிடாரி இரதம்

தெற்குப் பிடாரி இரதம்முதலானவையாகும். இவை பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் கோயில் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும் அனைத்திலும் கருவறை எனும் அமைப்பு காணப்படுவதில்லை. திரெளபதை இரதம், தருமராஜ இரதம் என்பவற்றிலே தான் கருவறை அமைந்திருக்கும்.

கணேச இரதம்

கணேச இரதம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாபலிபுரத்திலுள்ள கோயில். இது பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுச்சின்னங்களில் இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள பத்து இரதங்களில் ஒன்றாகும். இந்த மரபுச்சின்னங்களை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம் என 1984இல் அறிவித்தது. இந்த இரதம் ஒற்றைக் கற்றளி இந்திய கல்வெட்டுக் கட்டிடக்கலைக்கு காட்டாக விளங்குகின்றது. ஏழாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரது மகன் முதலாம் நரசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். இந்த இரதக்கோயில் துவக்கத்தில் இலிங்கம் இருந்தது; இலிங்கம் நீக்கப்பட்ட பிறகு இங்கு பிள்ளையார் வைக்கப்பட்டுள்ளார்.

கலியன் கேட்ட வரங்கள்

அய்யாவழி புராண வரலாற்றின் அடிப்படையில் கலியன் எனப்படுபவன் குறோணியின் ஆறாவது துண்டின் பூலோகப் பிறப்பு ஆவான்.

இவன் பூவுலகில் பிறந்தவுடன் அழைக்கப்பட்டு சிவபெருமான் முன்னிலையில் நிறுத்தப்படுகிறான். அவர் மேல் நம்பிக்கை இல்லாதவனாய் அவரை அவன் இழிவுபடுத்த, அவரிடம் தேவைப்படும் வரங்களை கேட்க சொல்கிறார்கள், தேவர்கள். உடனே ஒரு பெண்ணை படைத்துக் கொடுக்குமாறு கேட்க, சிவன் ஒரு பெண்ணை படைத்து கொடுக்கிறார். இதன் பின்னால் தான் அவர் மேல் கலியனுக்கு நம்பிக்கை வருகிறது. அதன் பின்னால் உலகை ஆளும் பொருட்டு பல விதமான வரங்களைக் கேட்கிறான்.

குருச்சேத்திரம்

குருச்சேத்திரம் pronunciation (இந்தி: कुरुक्षेत्र) இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.

பாண்டவர் – கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது.

சனன கருவி மாலை

வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரையில் மேற்கோள் பாடல் குறிப்புடன் தெரியவரும் நூல் இந்த சனன கருவி மாலை (ஜனன கருவி மாலை). இது கரு உருவாதல் பற்றிய அக்கால அறிவியல் கண்ணோட்டம்.

"மற்று விளக்கவுரையில் கூறியன எல்லாம் சனன கருவி மாலையுள் கண்டுகொள்க, ஈண்டு எழுதின் பெருகும் எனக் காட்டிற்றிலம்" - என வெள்ளியம்பலத் தம்பிரான் குறிப்பிடுவதால் இந்த நூலைப்பற்றி அறிய முடிகிறது.

சிங்க வாகனம்

சிங்க வாகனம் அல்லது சிம்ம வாகனம் என்பது இறைவன் சிலை திருவுலா வரும்போது சிங்க உருவம் கொண்ட சிலையில் உலா வரும் வழக்கம் உண்டு. அந்த சிங்க உருவச் சிலையைச் சிங்க வாகனம் என்ப்படுகிறது. இதன் வரலாற்றை மு. அருணாசலம் விளக்கியுள்ளார். மரக்கட்டையில் சிங்கத்தின் பாகங்களைச் செதுக்கி இணைத்தும், வெள்ளியை வார்த்தெடுத்தும் செய்யப்பட்ட சிங்க வாகனங்கள் இன்று கோயில்களில் உள்ளன. இந்து சமயப் புராணங்களின்படி சிங்கம் துர்க்கையின் வாகனமாகும். இந்துக்கோயில்களில் திருவிழாக்களின் பொழுது அந்தந்த கோயில் உற்சவமூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாக மயில்வாகனமும் உள்ளது. தமிழ்நாட்டின். கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மாசி மாதம் நடக்கும் தேர் திருவாழாவின்போது தேர்த் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் உற்சவங்களில் சிங்கவாகன உற்சவமும் ஒன்று.

ஜனனகருவி மாலை

ஜனனகருவி மாலை என்னும் நூல் இப்போது இல்லை. எனினும் இதன் பாடல்கள் இரண்டு உரையூல் ஒன்றில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. நம் உடலை இந்த நூல் 'ஜனனகருவி' எனக் குறிப்பிடுகிறது. உடலுக்கு ஐம்பூத விகாரத்தால் வரும் அவத்தைகள் இதில் கூறப்பட்டுள்ளன.

தர்மராஜ இரதம், மாமல்லபுரம்

தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் கோயிலானது, மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற பஞ்சபாண்டவர் இரதங்கள் எனப் பரவலாக அறியப்படுகின்ற ஒற்றைக் கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளமொன்றில் காணப்படுகின்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இதன் பெயர் ஸ்ரீ அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம் என அறியப்படுகின்றது. இதன் மூலம் இது அந்யந்தகாமன் என்னும் விருதுப்பெயர் கொண்ட பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டது என்பது தெளிவு. எனினும் இவ் விருதுப்பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட பல்லவ மன்னர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இராஜசிம்மன் எனப்படுகின்ற இரண்டாம் நரசிம்மனே இங்குள்ள கற்றளிகளைக் கட்டுவித்தவன் எனச் சிலரும், இவை முதலாம் நரசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது என வேறு சிலரும் நிறுவ முயன்றுள்ளனர்.

தாய் சேய் பாதுகாப்பு திட்டம்

இந்திய அளவில் கர்ப்பிணி தய்மார்களுக்காக பலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.அத்தகையதிட்டங்களில் ஒன்றுதான் தாய் சேய் பாதுகாப்பு திட்டம்(JANANI SHISHU SURAKSHA KARYAKRAM)ஆகும்.இது ஒரு தேசிய முனைப்பு முயற்சி எனப்படுகிறது.இந்த முனைப்பின் கீழ் அரசு மருத்துவமனையில் பல மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

திரௌபதை இரதம், மாமல்லபுரம்

திரௌபதை இரதம் என்பது மாமல்லபுரத் தனிக்கற் தளிகளில் ஒன்று. உண்மையில் இது கொற்றவை அல்லது துர்க்கைக்கு உரிய தளியாகும். கருவறையின் உட்புறச் சுவரில் உள்ள பெண் தெய்வத்தின் சிற்பம் கொற்றவையைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு முன்னால் சிங்கத்தின் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. சிங்கம் துர்க்கையின் வாகனமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேவதூதர்

தேவதூதர்கள் ஹீப்ரு விவிலியம் (מלאך என மொழிபெயர்க்கப்படுகிறது) புதிய ஏற்பாடு மற்றும் குரான் ஆகியவற்றில் கடவுளின் தூதுவர்களாக இருக்கின்றனர்.

மதங்கள் பலவற்றில் "ஆன்மீகம் சார்ந்த வடிவங்களை" பல்வேறு விதமாகக் குறிப்பிடுவதற்கு "தேவதூதர்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களைப் பாதுகாத்தலும் வழிநடத்திச் செல்லுதலும் தேவதூதர்களின் மற்ற பணிகள் ஆகும்.

தேவதூதர்கள் சார்ந்த சமயயியல் ஆய்வு தேவதூதவியல் என அறியப்படுகிறது. ஓவியத்தில் தேவதூதர்கள் பொதுவாக இறக்கைகளுடன் இருப்பது போல் சித்தரிக்கப்படுகின்றனர். முடிவாக இது எசகீல்லின் மெர்கபா தோற்றத்தில் சாயோட் அல்லது இசைய்யாவின் செராபிம் போன்று ஹீப்ரு விவிலியத்தில் விவரித்திருப்பதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்

நகுல சகாதேவ இரதம் மாமல்லபுர ரதக் கோயில்களுள் ஒன்றாகும். இது மருத நிலத்துக்கு உரிய கடவுளான இந்திரனுக்காகக் கட்டப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கோயிலில் இதைக் குறிக்கக்கூடிய சிற்பங்களோ வேறு சான்றுகளோ காணப்படாவிட்டாலும், அருகில் காணப்படும் பெரிய யானைச் சிற்பம் இந்திரனுடைய ஐராவதம் எனக் கொண்டே இக்கோயில் இந்திரனுக்கு உரியது என அடையாளம் காண்கின்றனர்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் (ஆங்கிலம்:Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

மாமல்லபுரம் இரதக் கோயில்கள்

பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன.

இவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப் படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல.

வீம இரதம், மாமல்லபுரம்

வீம இரதம் என அழைக்கப்படும் தளியானது மாமல்லபுரத்தில் உள்ள நரசி்ம்மவர்மன் பாணியில் அமைந்த புகழ்பெற்ற கற்றளிகளுள் ஒன்றாகும். இது அருச்சுன இரதம் எனும் தளிக்கு தெற்கில் அமையப் பெற்றுள்ளது. நீண்ட சதுரமுடைய பெரிய பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலாகும். இது ஒரு திருமால் கோயில். கிடந்த நிலையில் உள்ள திருமாலின் வடிவமான பள்ளிகொண்ட பெருமாளுக்காகவே இந்தக் கோயில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.