இந்தியாவில் வெண்கலக் காலம்

இந்தியாவில் வெண்கலக் காலம், இந்தியத் துணைக் கண்டத்தில் வெண்கலக் காலம் கிமு 3,000ல் துவங்கியது. இவ்வெண்கலக் காலம் முதிர்ச்சி அடைந்திருந்த காலத்தில், கிமு 2,600 - கிமு 1,900-க்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியாவில் சிந்துவெளி நாகரீகம் சிறப்புடன் விளங்கியது. வெண்கலக் காலத்தின் தொடர்ச்சியாக கிமு 1500-ல் வேதகாலம் துவங்கியது. வேதகாலத்தின் தொடர்ச்சியாக கிமு 1,000-ல் இந்தியாவில் இரும்புக் காலம் துவங்கியது.

அதே நேரத்தில் தென்னிந்தியாவில் கிமு 2500 வரை கற்காலம் தொடர்ந்தது. கிமு இரண்டாயிரம் முதல் தென்னிந்தியாவிற்கும், வட இந்தியாவிற்கும் இடையே இடையில் பண்பாட்டு உறவு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தென்னிந்தியாவின் வெண்கலக் காலம் அறியப்படவிலை. ஆனால் செப்புக் காலத்தை கடந்து நேரடியாக இரும்புக் காலம் நோக்கிச் சென்றது.

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், செம்பியன் கண்டியூர் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர், 3500 ஆண்டுகள் பழைமையான எழுத்துக்கள் கொண்ட கற்கோடாரியைக் கண்டெடுத்தார்.[1] [2]

கல்வெட்டியல் அறிஞரான ஐராவதம் மகாதேவன், இக்கற்கோடரியில் உள்ள எழுத்துகள் சிந்துவெளி நாகரிக கால வரிவடிவ எழுத்துக்களால் எழுதப்பட்டிருருப்பதாக கூறுகிறார்.[3]

காலம் அமைவிடம் சகாப்தம்
கிமு 3300-2600 துவக்க அரப்பா காலம் (துவக்க வெண்கலக் காலம்) பிராந்தியமயமாக்கல் சகாப்தம்
கிமு 4000-2500/2300 (Shaffer)[4]
கிமு 5000-3200 (Coningham & Young)[5]
கிமு 3300-2800 அரப்பா 1 (ராவி ஆறு|ராவி சமவெளி]])
கிமு 2800-2600 அரப்பா 2 - (கோட் திஜி, நவ்சரோ மற்றும் மெஹெர்கர்)
கிமு 2600-1900 முதிர்ச்சியடைந்த அரப்பா - (சிந்துவெளி நாகரிகம்) ஒருங்கிணைப்பு சகாப்தம்
கிமு 2600-2450 அரப்பா 3A - (நவ்சரோ II)
கிமு 2450-2200 அரப்பா 3B
கிமு 2200-1900 அரப்பா 3C
கிமு 1900-1300 பிந்தைய அரப்பா காலம் - (கல்லறை எச்); காவி நிற மட்பாண்டப் பண்பாடு உள்ளூராக்கல் சகாப்தம்
கிமு 1900-1700 அரப்பன் 4
கிமு 1700-1300 அரப்பன் 5
CiviltàValleIndoMappa-ta
இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் அமைவிடங்களைக் காட்டும் படம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Discovery of a century" in Tamil Nadu
  2. "செம்பியன் கண்டியூர்". அறிமுகம். தமிழ் இணையக் கல்விக் கழகம். பார்த்த நாள் 24 ஆகத்து 2018.
  3. Significance of Mayiladuthurai find
  4. Manuel 2010, பக். 149.
  5. Coningham & Young 2015, பக். 145.

வெளி இணைப்புகள்

வரலாறும் பண்பாடும்
கட்டிடக்கலை
மொழியும் எழுத்தும்
பாகித்தானில் சிந்துவெளிக் களங்கள்
இந்தியாவிலுள்ள சிந்துவெளிக் களங்கள்
ஆப்கானித்தானில் சிந்துவெளிக் களங்கள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.