இடையுயிர்

இடையுயிர் என்பது, சில பேச்சு மொழிகளில் பயன்படுகின்ற ஒரு வகை உயிரொலி. இதை ஒலிக்கும்போது நாக்கு வாயின் மேல் பகுதிக்கு மிக அண்மையிலோ அல்லது கீழே அதிகம் தொலைவிலோ இல்லாது இடை நிலையில் இருக்கும். அதாவது, மேலுயிர்களை ஒலிக்கும் போதும், கீழுயிர்களை ஒலிக்கும் போதும் இருக்கும் நிலைகளுக்கு இடையில் அமையும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீட்டைக் கொண்டுள்ள ஒரே இடையுயிர், இடை நடுவுயிர் [ə] ஆகும். இக்குறியீடு schwa என்னும் உயிரொலியைக் குறிக்கவும் பயன்படுகிறது.

அ.ஒ.அ. உயிரொலிக்கு உரிய வெளியை மூன்றாகப் பிரிக்கிறது. இவை, [e] அல்லது [o] போன்ற மேல் நடுவுயிர், [ɛ] அல்லது [ɔ] போன்ற கீழ் நடுவுயிர் என்பன, கீழுயிர் [a] இற்கும், மேலுயிர்கள் [i] அல்லது [u] இற்கும் இடையேயுள்ள ஒலியலைச் செறிவு வெளியில் சம அளவு தூரங்களில் உள்ளன.

உண்மையான முன் அல்லது பின் உயிர்களில் நான்கு வேறுபட்ட உயர நிலைகளுக்கு மேல் பிரித்தறிவது கடினம் என்பதால், மிகவும் குறைவான மொழிகளிலேயே இடையுயிரின் மூன்று நிலைகளிடையேயும் வேறுபாடு காட்டுவனவாக உள்ளன. ஆனால், ஆசுத்திரிய-பவேரிய செருமன் கிளை மொழியான ஆம்சுட்டெட்டனில் கீழ் நடு உயிரொலியுடன், முன் இதழ்விரி உயிர், முன் இதழ்குவி உயிர், முன் இதழ்குவி உயிர், என்பன உட்பட்ட நான்கு உயர்நிலை வேறுபாடுகள் உள்ளன. இவற்றை ஏற்கெனவேயுள்ள அ.ஒ.அ. குறியீடுகளான /a/, /i e ɛ æ/, /y ø œ ɶ/, /u o ɔ ɑ/ என்பவற்றைப் பயன்படுத்திக் குறிக்கின்றனர்.

ஆம்சுட்டெட்டன் பவேரியம்
(ஒலிபெயர்ப்பு)
மேல் i y u
மேல்-இடை e ø o
கீழ்-இடை ɛ œ ɔ
மேல்-கீழ் æ ɶ̝ ɑ̝
கீழ் a

எனினும், உயிரொலிகள் /æ ɶ ɑ/ என்பன, கீழ் /a/, மேல் /i y u/ என்பவற்றுக்கு இடையே, மூன்றிலொரு பங்கு தூரத்தில் உள்ளன. இது சரியாக உயிரொலிகள் [ɛ œ ɔ] என்பவற்றுக்கு அ.ஒ.அ. தரும் வரைவிலக்கணத்துக்கு ஒப்ப அமைகின்றது. இதனால், ஆம்சுட்டெட்டன் பவேரியம், இடையுயிர் ஒலிகளை, கீழ்-இடை, மே-இடை ஆகிய இரண்டு வகை உயிரொலிகளில் இருந்தும் வேறுபடுத்தும் மொழிகளுக்கான எடுத்துக்காட்டாக அமைகின்றது.

ஆம்சுட்டெட்டன் பவேரியம்
(ஒலியலைச் செறிவு வெளி)
மேல் i y u
மேல்-இடை e ø o
இடை ø̞
கீழ்-இடை ɛ œ ɔ
கீழ் a
அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • Loudspeaker.svg ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
Blank vowel trapezoid.svg
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

தமிழில்

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
இடை-நடு உயிர்

இடை-நடு உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதற்கான குறியீடு ə. இது அரைவட்ட அளவுக்குச் சுழற்றப்பட்ட "e" எழுத்தின் வடிவம் கொண்டது. இதே குறியீட்டையே இடை-நடு உயிரின், இதழ்குவி வகைக்கும், இதழ்விரி வகைக்கும் பயன்படுத்துகின்றனர்.

இடை முன் இதழ்குவி உயிர்

இடை முன் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. மேல்-இடையுயிருக்கும் [ø], கீழ்-இடையுயிருக்கும் [œ], இடையில் சரியாக இந்த இடை முன் இதழ்குவி உயிர் ஒலியைக் குறிப்பதற்கு அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீடு கிடையாது. எந்த ஒரு மொழியிலும் மேற் குறிப்பிட்ட மூன்று ஒலிகளையும் வேறுபடுத்துவது இல்லை என்பதே இதற்கான காரணம். பொதுவாக, மேல் இடையுயிரைக் குறிக்கும் ‹ø› என்னும் குறியீடே இந்த ஒலியைக் குறிக்கவும் பயன்படுகிறது. துல்லியம் தேவைப்படும் இடங்களில், [ø̞], [œ̝] என்பன போல், ஏற்கனவே உள்ள குறிகளுக்குத் துணைக் குறிகளை இட்டு எழுதுவது உண்டு.

இடை முன் இதழ்விரி உயிர்

இடை முன் இதழ்விரி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. மேல்-இடையுயிருக்கும் [e], கீழ்-இடையுயிருக்கும் [ɛ], இடையில் சரியாக இந்த இடை முன் இதழ்விரி உயிர் ஒலியைக் குறிப்பதற்கு அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீடு கிடையாது. எந்த ஒரு மொழியிலும் மேற் குறிப்பிட்ட மூன்று ஒலிகளையும் வேறுபடுத்துவது இல்லை என்பதே இதற்கான காரணம். சில மொழியியலாளர்கள், குறிப்பாக சீனவியலாளர், ஒலிகளை அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடுகளில் எழுதும்போது, இவ்வொலிக்கு [E] என்னும் குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர். இல்லாவிட்டால், [e̞] அல்லது [ɛ̝] போல ஏற்கனவே உள்ள குறியீடுகளுடன் கூடுதலான குறிகளைச் சேர்த்து எழுதுகின்றனர்.

எசுப்பானியம், சப்பானியம், கொரிய மொழி, கிரேக்கம், துருக்கியம் போன்ற பல மொழிகளில் மேலிடை, கீழிடை உயிர்களிலிருந்தும் ஒலிப்பியல் அடிப்படையில் வேறுபட்ட இடை-முன் இதழ்விரி உயிர்கள் உள்ளன. ஆங்கிலத்தின் கிளைமொழிகள் பலவற்றிலும் இந்த உயிரொலி காணப்படுகின்றது.

உயிரெழுத்து

ஒலிப்பியலில், உயிரொலி (Vowel) என்பது, தொண்டைக்குழியின் ஊடாக வெளியேறும் மூச்சுக்காற்று, பேச்சுக் குழலில் எவ்விதமான தங்கு தடைகளும் இன்றி வெளியேறும்போது உருவாகும் ஒலிகளுள் ஒன்றைக் குறிக்கும். அதாவது, உயிரொலிகளை ஒலிக்கும்போது தொண்டைக் குழிக்கு மேல் எவ்வித காற்று அழுத்தமும் ஏற்படுவதில்லை. இது மெய்யொலிகளின் ஒலிப்பில் இருந்து வேறுபட்டது. மெய்யொலிகளை ஒலிக்கும்போது பேச்சுக்குழலின் ஏதாவது ஒரு பகுதியில் முழுத்தடையோ அல்லது ஓரளவு தடையோ ஏற்படுகின்றது. உயிரொலி, அசையொலியும் ஆகும். உயிரொலியைப் போன்று திறந்த, ஆனால் அசையில் ஒலி அரையுயிரொலி எனப்படுகிறது.

கீழ்-இடையுயிர்

கீழ்-இடையுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிர் வகையை இடை-திறப்புயிர், அரைத் திறப்புயிர் போன்ற சொற்களாலும் குறிப்பிடுவது உண்டு. இதை ஒலிக்கும்போது நாக்கு, கீழுயிருக்கு உரிய நிலையில் இருந்து இடையுயிருக்கு உரிய திசையில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி பின்வரும் கீழ்-இடையுயிர்களைக் கொண்டுள்ளது.

கீழ்-இடை முன் இதழ்விரி உயிர் [ɛ]

கீழ்-இடை முன் இதழ்குவி உயிர் [œ]

கீழ்-இடை நடு இதழ்விரி உயிர் [ɜ]

கீழ்-இடை நடு இதழ்குவி உயிர் [ɞ]

கீழ்-இடை பின் இதழ்விரி உயிர் [ʌ]

கீழ்-இடை பின் இதழ்குவி உயிர் [ɔ]

மேல்-இடையுயிர்

மேல்-இடையுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. இவ்வுயிர் வகையை இடை-மூடுயிர், அரை மூடுயிர் போன்ற சொற்களாலும் குறிப்பிடுவது உண்டு. இதை ஒலிக்கும்போது நாக்கு, மேலுயிருக்கு உரிய நிலையில் இருந்து இடையுயிருக்கு உரிய திசையில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பின்வரும் மேல்-இடையுயிர்கள் தரப்பட்டுள்ளன.

மேல்-இடை முன் இதழ்விரி உயிர் [e]

மேல்-இடை முன் இதழ்குவி உயிர் [ø]

மேல்-இடை நடு இதழ்விரி உயிர் [ɘ]

மேல்-இடை நடு இதழ்குவி உயிர் [ɵ]

மேல்-இடை பின் இதழ்விரி உயிர் [ɤ]

மேல்-இடை பின் இதழ்குவி உயிர் [o]

அ.ஒ.அ. தலைப்புகள்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.