இடைக் கற்காலம்

இடைக் கற்காலம் (Mesolithic) என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமான கட்டத்தைக் குறிக்கிறது.

இக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.

இடைக் கற்காலம்
[[File:
Hunter gatherer's camp at Irish National Heritage Park - geograph.org.uk - 1252699
|264px|alt=]]
நீரோடைகளின் அருகே வேட்டைக்காரர்கள் தற்காலிக தங்கும் குடில், அயர்லாந்து
Geographical rangeஐரோப்பா
காலப்பகுதிகற்காலத்தின் முடிவு
காலம்இடைக் கற்காலம் (பண்டைய அண்மை கிழக்கு)
கிமு 15,000 – கிமு 5,000 (ஐரோப்பா)
முந்தியதுபழைய கற்காலம்
பிந்தியதுபுதிய கற்காலம்
நடு கற்காலம் (பண்டைய அண்மை கிழக்கு)
உத்தரப் பிரதேசத்தின் வரலாறு

உத்தரப் பிரதேசத்தின் வரலாறு என்பது வட இந்திய மாநிலமான இந்த மாநிலம் 1937 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது, ஆனால் இப்பகுதியானது 85,000 மற்றும் 73,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் வாழ்ந்ததுள்ளது.

கற்காலம்

கற்காலம் ( ஒலிப்பு) என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப் பிந்திய கற்காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவுகளைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.

இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது.

கற்காலம் என்னும் சொல், இப் பரவலான காலப் பகுதியைக் குறிப்பதற்காக தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அழியக்கூடிய பிற மென்மையான பொருட்களால் செய்யப்பட்டவற்றைக் காட்டிலும், கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழியாமல் இருக்கின்றன. தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலமாகும்.

கற்காலத்தை முந்திய பகுதியாகவும், பிந்திய பகுதியாகவும் பிரிக்கவேண்டும் என 1851 ஆம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவராவார். இன்றும் பயன்பாட்டில் உள்ள, கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865 ஆம் ஆண்டில், அவர் எழுதிய வரலாற்றுக்கு முந்திய காலங்கள் (Pre-historic Times) என்னும் அவரது நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.

கிமு 10ஆம் ஆயிரமாண்டு

கிமு 10-ஆம் ஆயிரமாண்டு (10th millennium BC) என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு (Epipaleolithic) காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மேற்கு ஆசியாவில் நெல் மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை வேளாண்மை தொடங்கிய காலகட்டம். இக்காலகட்டத்தில் வளமான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை.

உலக மக்கள் தொகை ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது, இதில் பெரும்பாலானவர்கள் அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது.

தமிழகத்தில் புதிய கற்காலம்

sembiyan

தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.

தெற்காசிய கற்காலம்

தெற்காசிய கற்காலம் (The South Asian Stone Age ) என்பது தெற்கு ஆசியாவில் மனிதர்கள் வாழ்ந்த பழங்கற்காலம் இடைக் கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகிய மூன்று காலகட்டத்தையும் உள்ளடக்கியது ஆகும். உடலமைப்பு ரீதியான நவீன நிறைநிலை மனிதர்கள் தெற்காசியாவில் வாழ்ந்து இருப்பதற்கான பழமையான சான்றுகள் இலங்கையின் படாடோடாலென மற்றும் பெலிலென [ குகைத் தளங்களில் காணப்பட்டுள்ளன. இன்று மேற்கு பாக்கித்தான் என்றழைக்கப்படும் பழங்கால மெகெர்கர் பகுதியில் புதிய கற்காலம் 7000 ஆண்டுகள் தொடங்கி 3300 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் இங்குதான் செப்புக்கால மனிதர்கள் தோன்றினர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கி.மு 3000 ஆண்டுவரை இடைக்கற்காலமும் கிமு 1400 ஆண்டு வரை புதிய கற்காலமும் தென்னிந்தியாவில் நீடித்து இருந்துள்ளன. இதைத் தொடர்ந்து செப்புக் காலம் முடிவுக்கு வந்து பெருங்கற்கால நிலைமாறும் காலம் நீடித்துள்ளது. கி.மு 1200 முதல் கி.மு 1000 வரையான ஆண்டுகளில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஒரே காலகட்டத்தில் இரும்புக் கால மனிதர்களின் தொடக்கம் நிகழ்ந்துள்ளது. ( வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்ட கலாச்சாரம், அல்லூர் )

தொல்பழங்காலம்

தொல்பழங்காலம் என்பது கற்காலம் தொடங்கிய காலத்துக்கும், மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. இது ~3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கல் கருவிகள் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ~5300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும் முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான காலம் என்று வரையறுக்கப்படுகிறது.

மெசபடோமியாவில் உள்ள சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், பண்டைய எகிப்து நாகரிகம் ஆகியவை முதன்மை நாகரிகங்கள் ஆகும். இவை தங்களுக்கு சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன. வரலாற்று பதிவுகளை உருவாக்கின. இது வெண்கலக் காலத்திலேயே தொடங்கி விட்டது. அண்டை நாகரிகங்கள் இவற்றைப் பின்பற்றின. மற்ற பெரும்பாலான நாகரிகங்கள் இரும்புக் காலத்தின் போது தொல்பழங்காலத்தின் இறுதியை அடைந்துவிட்டன. தொல்பழங்காலத்தில் மூன்று கால அமைப்புகள் உள்ளன. அவை கற்காலம் வெண்கலக் காலம், மற்றும் இரும்புக் காலம் ஆகியவை. ஐரோவாசியா மற்றும் வட ஆப்ரிக்கா ஆகியவற்றில் உலோகப் பயன்பாடு மிகுந்து இருந்தது

அமெரிக்கா, ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், இங்கு புதிய கலாச்சாரங்களுடன் அதிக அளவு கடின உலோகப் பயன்பாடு கொண்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அமெரிக்காவில் முன் கொலம்பிய நாகரிகங்கள் ஏற்படும் முன்னும், ஐரோவாசியகள் கலாச்சாரத்திற்கு முன்னும், சிக்கலான எழுத்து முறைமைகள் அறியப்படவில்லை. மிகச் சமீப காலங்களில் இவை முன் வரலாற்றுக் காலத்தை எட்டின.

யூரேசியாவுக்கு வெளியே உள்ள பல கலாச்சாரங்களில் எழுது பொருட்கள் வெவ்வேறு காலங்களில் அறிமுகமாகின. எழுது பொருட்களின் புழக்க காலமே உள்ளூர் வரலாற்றுக் காலமாகும். அதன்பின் எழுத்துமுறை என்பது வெற்றிக் கலாச்சாரமாக அறியப்பட்டது. முன் கலாச்சாரங்கள் எழுதப்பட்டன. தொல்பழங்காலத்தைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லை. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களின் வயதைக் கணிப்பது கடினமாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு வரை காலத்தை கணிப்பதற்கான தெளிவான நுட்பங்கள் அறியப்படவில்லை.

நுண்கற்காலம்

நுண்கற்காலம் என்பது நுண்கற்கருவிகளை மக்கள் பயன்படுத்திய காலம் ஆகும். நுண்கற்கருவிகள் என்பன கற்பட்டடைக் கழிவுகள், தற்செயலாக உருவான கற்பொருட்கள் என்பவற்றிலிருந்து வேறுபடுத்தக்கூடிய வகையில் போதிய அளவு வேலைப்பாடுகளுடன் கூடிய மிகவும் சிறிய கற்கருவிகளைக் குறிக்கும். தீக்கல், சிறு உருளைக் கற்கள் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் இக் கருவிகள் பெரும்பாலும் ஒரு சதம மீட்டர் நீளம் கொண்டவையும் அரை சதம மீட்டர் அளவு அகலம் கொண்டவையும் ஆகும்.

நுண்கற்கருவிகளின் பயன்பாடு பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியிலும், இடைக் கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலப்பகுதிகளிலும் இருந்து வந்தது. வேளாண்மையின் அறிமுகத்தோடு நுண்கற்கருவிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. எனினும், வேட்டைத் தொழிலில் ஈடுபட்டிருந்த சமூகங்களில் இவ்வகைக் கற்கருவிகளின் பயன்பாடு தொடர்ந்தும் இருந்து வந்தது.

பாமியான் மாகாணம்

பாமியான் மாகாணம் (Bamyan Province; பாரசீகம் بامیان‎) என்பது முப்பத்து நான்கு ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் மத்தியில் உயரமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உயர்ந்த மலைகளும் நடுத்தர அளவுமலைகளையும் கொண்டதாக உள்ளது. இந்த மாகாணம் ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக பாமியான் நகரம் உள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை 425,500 ஆகும். இதுவே ஆப்கானிஸ்தானின் ஹஜாராஜத் வட்டாரத்தில் பெரிய மாகாணமாகும். மேலும் இது கசாரா மக்களின் கலாச்சார தலைநகராகவும் விளங்குகிறது.

இதன் பெயர் "ஒளி வீசும் இடம்" என மொழிபெயர்க்கப்படுகிறது. பண்டைக் காலத்தில், நடு ஆப்கானிஸ்தான் பகுதி பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. உரோமப் பேரரசு, சீனா, நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையிலான பாதைகள் சந்திக்கும் இடமாக இருந்தது. பாமியான் பல நாட்டுப் பயணிகள் தங்கிச் செல்லக்கூடிய பகுதியாக இருந்தது. இங்கு கிரேக்கம் மற்றும் புத்த கலை அம்சங்கள் ஒரு தனிப்பட்ட பாரம்பரிய பாணியில், ஒருங்கிணைந்து அக்கலை கிரேக்க-புத்த கலை என்று அறியப்பட்டது.

இந்த மாகாணத்தில் பல புகழ்மிக்க வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக உள்ளவை; புகழ்வாய்ந்த பாமியன் புத்தர் சிலைகள் அதைச் சுற்றி உள்ள 3,000 குகைகள், பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா, தாரா-இ-அஜ்ஹடார், கோல்கோடா மற்றும் ஜாகாக் ஆகிய பண்டைய நகரங்கள், பெரோஸ் பஹார், அஸ்டோபா, கிளிகான், கஹோர்கின், காஃரின் மற்றும் சில்டுகட்டரன் போன்ற இடங்கள் ஆகும்.

புதிய கற்காலம்

புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.

புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல் வளமான பிறை பிரதேசத்தில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லெவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆபிரிக்கா, வட மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.

புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் பயிர் செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது.

மட்பாண்ட புதிய கற்காலம்

மட்பாண்ட புதிய கற்காலம் (Pottery Neolithic (சுருக்கமான: PN) மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)-வுக்குப் பின்னர் மேற்காசியாவின் வளமான பிறை பிரதேசத்தில், குறிப்பாக புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாயும் வடமேற்கு மற்றும் வடமத்திய மெசொப்பொத்தேமியாவில் கிமு 6,400 முதல் கிமு 3,500 வரை நீடித்தது.இக்காலத்தில் ஹலாப் பண்பாடு (தற்கால தென் துருக்கி, வடக்கு சிரியா, வடமேற்கு ஈராக்கிலும்]] மற்றும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் உபைது பண்பாடும் செழித்து விளங்கியது.

தொல்லியல் அறிஞர்கள்

மட்பாண்ட புதிய கற்காலத் தொல்லியல் களங்களை இரண்டாகப் பிரிப்பர். அவைகள்: மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (Pottery Neolithic A -PNA) மற்றும் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (Pottery Neolithic B - PNB) ஆகும். இதன் பின்னர் செப்புக் காலம் கிமு 4500-இல் துவங்குகிறது. அதன் பின்னர் கிமு 3,500-இல் துவங்கிய வெண்கலக் காலத்தில் எழுத்து முறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (Pre-Pottery Neolithic (PPN) மேற்கு ஆசியாவின் பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த வளமான பிறை பிரதேசத்தில் உள்ள லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 10,000 - கிமு 6,500 வரை நிலவியது.இதன் பின்னர் இப்பகுதியில் இடைக்கற்காலத்தில் மலர்ந்த நாத்தூபியன் பண்பாட்டு காலத்தில் மக்கள் கால்நடை வளர்த்தல் மற்றும் பயிரிடுதல் முறை அறிந்திருந்தினர். மட்பாண்டாத்திற்கு முந்தைய புதியகற்காலப் பகுதி கிமு 6200 வரை விளங்கியது. பின்னர் மட்பாண்ட புதிய கற்காலம் துவங்கியது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் Pre-Pottery Neolithic A (PPNA), மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் முதல் நிலைக்காலத்தை குறிப்பதாகும். இக்கற்காலம் பண்டைய அண்மை கிழக்கின் அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளில் கிமு 10,000 முதல் கிமு 8,800 முடிய விளங்கியது. வளமான பிறை தேசத்தில் அனதோலியா, லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் (அ) கால கட்டத்தில் தொல்லியல் மேடுகள் அகழ்வாய்வுவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மெல்லிய உருண்டை வடிவலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட குடியிருப்புகள், பயிர்த் தொழில், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், இறந்தவர்களை சடலங்களை குடியிருப்புகளின் தரையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்தல் இக்காலத்தின் சிறப்பம்சமாகும்.இப்புதிய கற்காலத்திற்கு எதுக்காட்டாக எரிக்கோ மற்றும் பெருவயிறு மலை தொல்லியல் களங்கள் விளங்குகிறது. இக்கற்காலத்தில் சுட்ட களிமண் மட்பாண்டத்தின் பயன்பாடு மக்கள் அறிந்திருக்கவில்லை. இக் கற்காலத்திற்கு பின்னர் இடைக் கற்காலத்தில் லெவண்ட் பகுதிகளில்

நாத்தூபியன் பண்பாடு நிலவியது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (Pre-Pottery Neolithic B (PPNB) இது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் ஒரு பகுதியாகும். இக்காலத்திய பண்பாடு வளமான பிறை பிரதேசத்தின் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 8,800 முதல் கிமு 6,500 வரை விளங்கியது. துருக்கியின் பெருவயிறு மலை மற்றும் எரிக்கோ நகரத்தின் தொல்லியல் களங்களிலிருந்து இக்கற்காலத்திய பண்பாடு அறிய முடிகிறது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) போன்று, மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), இடைக் கற்காலத்திய நூத்துபியன் பண்பாட்டிலிருந்து வளர்ச்சியுற்றது. இக்கற்காலம் அனதோலியாவின் வடகிழக்கில் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

மனித வரலாறு

13.7 பில்லியன் ஆமு - உலகின் தோற்றம்

3.2 மில்லியன் ஆமு - லூசி - en:Lucy (Australopithecus)

1.9 மில்லியன் ஆமு - en:KNM ER 1813

பழைய கற்காலம் - (2.5 மில்லியன் - 10,000 ஆமு)en:Hunter-gathererஇடைக் கற்காலம் - (11,500 - 10,000 ஆமு)கருவிகளை செய்து பயன்படுத்தல்: வில், படகுபுதிய கற்காலம் - (10,000 கிமு - )வேளாண்மைசெப்புக் காலம் - (3,300 கிமு - )பண்டை நாகரிகங்கள்கிமு 3500 - மெசொப்பொத்தேமியா

கிமு 3150 - பண்டைய எகிப்து

கிமு 2600 - சிந்துவெளி நாகரிகம்

கிமு 2100 - en:Xia Dynasty

கிமு 1000 - பண்டைக் கிரேக்கம்

கிமு 27 - கிபி 476 : ரோமப் பேரரசுகிபி 150 - கிபி 900 : மாயா நாகரிகம்634 - 1453 : முஸ்லீம் படையெடுப்புகள் - en:Muslim conquests1206 – 1368 - மொங்கோலியப் பேரரசு1450 - அச்சிடல்1543 - அறிவியல் புரட்சி

1583 - 1950 : பிரித்தானியப் பேரரசு1750+ - தொழிற்புரட்சி

1750+ - இந்திய விடுதலை இயக்கம் - en:Indian independence movement

1775 - 1783 - அமெரிக்க புரட்சி

1789 - 1899 - பிரெஞ்சுப் புரட்சி1880 - 1914 : en:Scramble for Africa

1858 - படிவளர்ச்சிக் கொள்கை

1870 - en:Germ theory of disease

1879 - மின் விளக்கு

1879 - தானுந்து

1898 - அமெரிக்கப் பேரரசு1914 - 1918 : முதல் உலகப் போர்

1917 - ரஷ்யப் புரட்சி

1929 - 1939 : பெரும் பொருளியல் வீழ்ச்சி

1940+ - தகவல்புரட்சி

1939 - 1945 : இரண்டாம் உலகப் போர்

1945 - சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி

1945 - ஐக்கிய நாடுகள்

1945 - அரபு நாடுகள் கூட்டமைப்பு

1951 - ஐரோப்பிய ஒன்றியம்

1953 - டி.என்.எ அமைப்பு

1960+ - பசுமைப் புரட்சி

1966 - en:Moon landing

1990 - உலகளாவிய வலை2000 - மனித மரபகராதித் திட்டம்

2001 - செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்

2002 - ஆபிரிக்க ஒன்றியம்

2004 - தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்

மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு

மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு (Timeline of human prehistory) என்பது ஓமோ சப்பியன்சு ஆப்பிரிக்காவில் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காலம் தொடக்கம் 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவை மனிதன் உருவாக்கிய காலம் வரையான காலப்பகுதியாகும். இது நடு பழைய கற்காலம் தொடக்கம் வெண்கலக் காலத்தின் மிக ஆரம்ப காலத்தினை குறிக்கும். இக்காலப்பகுதியை பிரித்துக் கூறும் காலக்கேடு ஐரோப்பிய கற்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில் கற்காலத்தின் வளர்ச்சி வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தது.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கால எல்லைகள் மானிடவியல், தொல்லியல், மரபியல், நிலவியல் மற்றும் மொழியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளின் மூலம் அண்ணளவாக குறிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்துறைகளில் செய்யப்படும் புதிய ஆய்வுகள் இக்கால எல்லைகளை மாற்றியமைக்ககூடும்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.