ஆப்சுபர்கு அரசமரபு

ஆப்சுபர்கு அரச மரபு அல்லது சுருக்கமாக ஆப்சுபர்கு (Habsburg) கோமகன்கள், அரசர்கள், மற்றும் மன்னர்களின் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தினர் ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையான பங்காற்றி உள்ளனர். இவர்கள் ஆசுதிரியா, பின்னர் ஆசுத்திரியா-அங்கேரியை 600 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுள்ளனர். சில காலம் எசுப்பானியா, நெதர்லாந்து, மற்றும் புனித உரோமைப் பேரரசும் இவர்களது ஆட்சியில் இருந்தன.

1515இல் வியன்னாவில் ஆப்சுபர்கு குடும்பத்தைச் சேர்ந்த ஆசுதிரியா அரசருக்கும் யக்கியெல்லோன் அரசமரபைச் சேர்ந்த போலந்து, லித்துவேனியா மன்னர்களுக்கும் இடையே பொகிமியா மற்றும் அங்கேரியின் மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் ஆசுதிரிய மன்னர் அப்பகுதியின் ஆட்சியைக் கைக்கொள்வார் என்று உடன்பாடு ஏற்பட்டது. சார்தீனியா இராச்சியமும் இவர்களது கைவசம் இருந்தது.

இந்த அரச மரபின் கடைசி பேரரசியாக பூர்பொன்-பார்மாவின் சீடா இருந்தார். இவர் 1989இல் சுவிட்சர்லாந்தில் இறந்தார். 1916 முதல் 1918 வரை தமது கணவர் சார்லசுடன் ஆட்சி புரிந்துள்ளார்.

Familienwappen Habsburg-Stroehl
ஆப்சுபர்கு கோமகன்களின் அரசச்சின்னம்

முதன்மை பதவிகள்

இந்தக் குடும்பத்தினர் ஏற்ற பல்வேறு முதன்மை பதவிகள்:

  • உரோம அரசர்கள்
  • புனித உரோமைப் பேரரசர்கள்
  • செருமனியின் அரசர்
  • ஆசுதிரியாவின் ஆட்சியாளர்கள் (1453 முதல்)
  • பொகிமியா அரசர்கள் (1306–1307, 1437–1439, 1453–1457, 1526–1918),
  • அங்கேரி அரசர்கள் மற்றும் குரோசியா அரசர்கள் (1526–1918),
  • எசுப்பானிய அரசர்கள் (1516–1700),
  • போர்த்துக்கேய அரசர்கள் (1581–1640),
  • கலீசியா மற்றும் லோடொமெரியா அரசர் (1772–1918),
  • டிரான்சில்வேனியா பேரிளவரசர் (1690–1867).

இவை தவிர பல பட்டங்கள் இக்குடும்ப அரசர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

Wikisource-logo.svg
1660

1660 (MDCLX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.

ஆத்திரியா-அங்கேரி

ஆத்திரியா-அங்கேரி (Austria-Hungary) பெரும்பாலும் ஆத்திரிய-அங்கேரியப் பேரரசு (Austro-Hungarian Empire) அல்லது இரட்டை முடியாட்சி எனக் குறிப்பிடப்பட்ட இப்பேரரசு ஆத்திரியப் பேரரசும் அங்கேரி இராச்சியமும் அரசியல்சட்டப்படி ஒன்றிணைந்த பேரரசு ஆகும். 1867 முதல் 1918 வரை நீடித்திருந்த இப்பேரரசு முதலாம் உலகப் போருக்குப் பின்கண்ட தோல்வியால் உடைபட்டது. 1867இல் ஏற்பட்ட சமரச உடன்பாட்டின்படி இரு நாடுகளும் இணைந்து அவ்வாண்டு மார்ச்சு 30ஆம் நாளன்று இரட்டை முடியாட்சியை நிறுவின. இதில் இரு முடியாட்சிகளும் (ஆத்திரியா, அங்கேரி), ஒரு தன்னாட்சிப் பகுதியும் (அங்கேரிய மன்னரின் கீழ் குரோசிய-இசுலோவேனிய இராச்சியம்) அடங்கியிருந்தன. 1868இல் இந்தத் தன்னாட்சிப்பகுதி குரோசிய-அங்கேரிய தீர்விற்காக உரையாடி வந்தது.

இதனை ஆப்சுபர்கு அரசமரபு ஆண்டு வந்தது. 1867ஆம் ஆண்டு சீர்திருத்தங்களின்படி ஆத்திரியாவும் அங்கேரியும் இணையானவை. வெளிநாட்டு விவகாரங்களும் படைத்துறையும் இணைமேற்பார்வையிலும் மற்ற அரசுத்துறைகள் தனித்தனியாகவும் இருந்தன.

ஆத்திரியா-அங்கேரி பல்தேசிய நாடாகவும் புவியின் வலிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியது. அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் உருசியாவை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நிலப்பரப்புடைய நாடாகவும் விளங்கியது; இதன் நிலப்பரப்பு 621,538 ச.கிமீ (239,977 ச மைல்). மக்கள்தொகை அடிப்படையில் (உருசியாவையும் செருமனியையும் அடுத்து) மூன்றாவது பெரிய நாடாக இருந்தது. உலகளவில் அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி, ஐக்கிய இராச்சியம் அடுத்து நான்காவது எந்திரத் தயாரிப்புத் தொழிலைக் கொண்டிருந்தது. ஆத்திரியா-அங்கேரி மின்னாக்கப் பொறிகள், தொழிற்சாலை மின்சாதனங்கள், வீட்டு மின்சாதனப் பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகின் மூன்றாவதாக, அமெரிக்காவிற்கும் செருமனிக்கும் அடுத்து விளங்கியது.1878க்குப் பிறகு போசுனியாவும் எர்செகோனியாவும் ஆத்திரிய-அங்கேரி படைத்துறை மற்றும் குடிசார் ஆட்சியில் இருந்தது. 1908இல் போசினியக் குழப்பம் ஏற்பட்டு இவை இணைக்கப்பட்டன. முஸ்லிம் மக்கள்தொகை மிக்க போசுனியா இணைக்கப்பட்டதால் இசுலாம் ஓர் அலுவல்முறை நாட்டுச் சமயமாக ஏற்கப்பட்டது.முதலாம் உலகப் போரில் ஆத்திரிய-அங்கேரி மைய சக்திகளில் ஒன்றாக விளங்கிற்று. 1918இல் நவம்பர் 3ஆம் நாள் வில்லா ஜியுஸ்தி உடன்பாடு காணுகையில் பல்வேறு நாடுகளாக ஏற்கெனவே பிரிந்துவிட்டது. இந்தப் பேரரசின் தொடர்ச்சியாக அங்கேரி இராச்சியமும் (1920-46) முதல் ஆத்திரியக் குடியரசும் ஏற்கப்பட்டன. மேற்கு , கிழக்கு இசுலாவ்கள் ஒன்றிணைந்து முதல் செக்கோசுலோவியக் குடியரசு, இரண்டாம் போலந்து குடியரசு, யுகோசுலோவியக் குடியரசுகள் பிறந்தன. உரோமோனிய இராச்சியத்தின் நில உரிமைகளும் 1920இல் வெற்றி பெற்ற மற்ற நாடுகளால் ஏற்கப்பட்டன.

எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு

சார்லசு II (Charles II,எசுப்பானியம்: Carlos II) (6 நவம்பர் 1661 – 1 நவம்பர் 1700) ஆப்சுபர்கு அரசமரபைச் சேர்ந்த கடைசி எசுப்பானிய அரசராவார். எசுப்பானிய நெதர்லாந்தும் (தெற்கு நெதர்லாந்து) அமெரிக்காக்களிலிருந்து எசுப்பானியக் கிழக்கிந்தியா வரை பரவியிருந்த எசுப்பானியாவின் கடல்கடந்த பேரரசும் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது. "மயக்குபவர்" (எசுப்பானியம்: el Hechizado), என்றழைக்கப்பட்ட சார்லசு அவரது உடல்,அறிவு, உளக் குறைபாடுகளுக்காக அறியப்பட்டார். பல தலைமுறைகளாக ஆப்சுபர்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் புரிந்து வந்தமையால் இக்குறைபாடுகள் இவருக்கு வந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே இவரது ஆட்சி பலவீனமாக இருந்தது.

1700இல் குழந்தைகளின்றி வாரிசின்றி இறந்தார். அரியணை ஏறுவதற்கு உரிமையிருந்த அனைத்து ஆப்சுபர்கு வாரிசுகளும் இவருக்கு முன்னரே மரித்து விட்டனர். தனது உயிலில் தனக்குப் பின்னால் 16 வயதேயான ஆன்ஷூவின் பிரபு பிலிப்பை முடிசூட நியமித்தார்; இவர் பதினான்காம் லூயியின் முதல் மனைவியும் சார்லசின் ஒன்றுவிட்ட சகோதரியுமான மாரியா தெரசாவின் பேரனாவார். (எனவே பிரான்சை ஆண்ட பிரான்சிய அரசர் லூயி XIVயின் பேரனுமாவார்). ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் இதனால் வலுப்பெறும் பிரான்சிய-எசுப்பானிய உறவு அதிகாரச் சமநிலையை பாதிக்கும் எனக் கருதின. எனவே இவரது மறைவிற்குப் பிறகு எசுப்பானிய மரபுரிமைப் போர் ஏற்பட்டது.

எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு

இரண்டாம் பிலிப்பு (Philip II, எசுப்பானியம்: Felipe II «el Prudente»; 21 மே 1527 – 13 செப்டம்பர் 1598) எசுப்பானியாவின் அரசராக 1556 முதல் ஆட்சி புரிந்தவர். தவிரவும் 1581 முதல் போர்த்துக்கல் அரசராகவும் ( பிலிப்பு I ஆக) 1554 முதல் நாபொலி, சிசிலி அரசராகவும் மிலன் பிரபுவாகவும் விளங்கினார். அரசி முதலாம் மேரியுடன் திருமணமான காலத்தில் (1554–58), இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசராகவும் இருந்தார். 1555இலிருந்து நெதர்லாந்தின் 17 மாநிலங்களுக்கு பிரபுவாக இருந்தார். எசுப்பானியத்தில் "விவேகமுள்ள பிலிப்பு" (பெலிப்பு எல் புருடென்ட்) என்று அழைக்கப்பட்டார். இவரது காலத்தில் பேரரசு அப்போது ஐரோப்பியர்கள் அறிந்திருந்த அனைத்துக் கண்டங்களிலும் பரவியிருந்தது. இவரது நினைவாக பெயரிடப்பட்ட பிலிப்பீன்சு தீவுகளும் பேரரசில் அடங்கியிருந்தது. இவரது ஆட்சிக்காலத்திலேயே எசுப்பானியா அதிகாரத்திலும் தாக்கத்திலும் தனது உச்சநிலையை எட்டியது. இது சிலநேரங்களில் பொற்காலம் எனப்படுகின்றது. "சூரியன் மறையாத பேரரசு" என்ற சொலவடை இவரது ஆட்சிக்காலத்தில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் தனித்தனியே 1557, 1560, 1569, 1575, மற்றும் 1596 ஆண்டுகளில் அரசு திவாலானது. 1581 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு விடுதலை வழங்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கத்தோலிக்கரான பிலிப்பு சீர்திருத்தத் திருச்சபை சேர்ந்த இங்கிலாந்து மீது 1588 இல் பல கடற்படையெடுப்புக்களை எடுத்து தோல்வியுற்றார்; இத்தோல்விகள் பெரும்பாலும் புயல்களாலும் கட்டமைப்புச் சீர்கேடுகளாலும் ஏற்பட்டன.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.