அரசு

அரசு (ஒலிப்பு ) என்பது அரசாங்கத்தில் உயிர் வாழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அரசியற் சமூகமாகும்.[1] அரசுகள் அரசுரிமை உள்ளவையாக இருக்கலாம். பல அரசுகள் மாநிலங்களாக அல்லது கூட்டரசுகளாக இருக்கலாம். அவற்றில் சில கூட்டு ஒன்றியத்தினூடாக கூட்டரசில் பங்குபெறுகின்றன.[1] சில அரசுகள் வெளி அரசுரிமை அல்லது அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, இன்னொரு அரசின் மீது அதன் உச்ச அதிகாரம் செயல்படக்கூடியவாறு காணப்படும்.[2] அரசு என்னும் பதம் ஒர் அரசினுடைய அரசாங்கத்தின் நிலைத்த பகுதிகளுக்குள்ளும் பாவிக்கப்படும். இது சமயமாகவோ அல்லது குடிமக்கள் நிறுவனமாகவோ காணப்படும்.மனித குலத்தின் மிகப் பழைய மற்றும் முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.

நவீன அரசின் உறுப்புகள்

பொதுவாக ஒரு நவீன அரசில் நேரடி மற்றும் மறைமுக உறுப்புகளாக பின்வருவன அமைகின்றன.

நேரடி உறுப்புகள்

 1. சட்டம் இயற்றுகிற நிறுவனம்(எ.கா பாராளுமன்றம்)
 2. சட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனம் (எ.கா. அமைச்சகங்கள்)
 3. சட்ட நடைமுறையாக்கத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் (எ.கா நீதிமன்றம்)

மறைமுக உறுப்புகள்

 1. பண்பாட்டு நிறுவனங்கள் (எ.கா சாதி, மதம்)
 2. அறிவுத்துறை நிறுவனங்கள் (எ.கா கல்வி)
 3. பொருளியல் நிறுவனங்கள் ( எ.கா. பணம்)

அரசு என்பது அரசறிவியல் சார்ந்த ஒரு சொல் ஆகும். அதன்படி அரசு என்பது ஐந்து உறுப்புகள் இணைந்து உருவாகிறது. அவை,

 • ஆல்புல எல்லை - ஒரு அரசு தனக்கே உரிய ஒரு நில எல்லை, வான் எல்லை, கடல் எல்லை என்பனவறைக் கொண்டிருக்கும்.
 • மக்கள் தொகை - குறித்த நிலப்பரப்பில் வாழும் மக்களைக் கொண்டிருக்கும்.
 • இறைமை - அதிகாரம்
 • அரசாங்கம் - அரசை இயக்கும் கருவி
 • பன்னாட்டு அங்கீகாரம் - இது சர்வதேச நாடுகளினால் இது ஒரு அரசு என அங்கீகரிக்கப்படுவது ஆகும்.

அரசின் ஆரம்பம்

அரசின் ஆரம்பமானது கிரேக்க நகர அரசுகள் தொடக்கம் கி.மு 7ம் நூற்றாண்டு முதல் நிலவுகிறது என்பதே அரசறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

அரசின் பரவல்

கிரேக்க நகர அரச முறையில் ஆரம்பித்த அரசு முறை தொடர்ச்சியாக,

 • கிரேக்க நகர அரசு
 • மானிய முறை அரசு
 • தேசிய அரசு முறை

என வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

அரசு பற்றிய கோட்பாடுகள்

வகைகள்

பல வகை அரசுகள் புழக்கத்தில் உள்ளன

 1. முடியரசு
 2. அரை முடியரசு
 3. பாராளுமன்றக் குடியரசு
 4. சோசலிசக் குடியரசு

ஒர் அரசு உருவாக முக்கியமான 5 அம்சங்கள் - 1) நிலம் அல்லது ஆள்புல எல்லை 2) மக்கள் 3) இறைமை 4 அரசாங்கம் 5) சர்வதேச அங்கீகாரம்

கீழைநாட்டுப் பேரரசுகள்

தொடக்கக் கால நோமட்டிக் பழங்குடியினர் கங்கை, நைல், யூப்ரட்டீஸ் ரைகிரிஸ், மஞ்சள் ஆறு, யங்சூ போன்ற பள்ளத்தாக்குப் பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இப்பள்ளத் தாக்குகளில் மனித நாகரீகம் தோன்றி வளர்ச்சிப் பெற்றதுடன், அரசுகளும், பேரரசுகளும் தோற்றம் பெற்றன. இவ் அரசுகள் தொன்மரபுவழி மன்னர்களினால் ஆளப்பட்டது. இவர்கள் சமயம், அரசியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ச்சியுறச் செய்தனர். சமயங்கள் பல சட்டங்களுக்குரிய தகவமைகளை அரசனின் ஒப்புதலுடன் பெற்றுக்கொண்டன. மக்கள் தமக்குரிய அடிப்படை உரிமைகள், சுதந்திரம் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. அரசகட்டளைகளுக்குக் கீழ்படிதலைத் தலையாய கடமையாகக் கொண்டனர்.இது குறித்து, கெட்டல் என்பார், கீழைத்தேச அரசு குறித்து, ஆட்சியாளர்கள் தமது மக்களை அடிமையாக்குபவர்களாகவும், வரி அளவிடத்தக்க உறுப்பினர்களாகவும் மட்டுமே வைத்திருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.[3]

கிரேக்க நகர அரசு

கி.மு 1000 நூற்றாண்டில் கிரேக்கத்தில் நகர அரசுகள் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்தன. உண்மையில் அரசியல் அறிவியல் பற்றி அறிய முற்படும்போது, அரசின் தோற்ற வளர்ச்சியினைக் கிரேக்க நகர அரசின் உருவாக்கத்துடன் தொடர்புபடுத்திக் கோட்பாட்டாளர்கள் எடுத்துரைக்கின்றனர். கிரேக்க நகர அரசுகள் அரசியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இவை உணர்வுப் பூர்வமாக வளர்ச்சியுற்ற முதல் சமூகங்களாகக் கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பாவில் கிரேக்கர்கள் தம்மை அரசியல் ரீதியாக நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். இருப்பினும், தொல்குடிச் சமூக ஒழுங்கமைப்பின் அடிப்படையில் அவர்கள் பிரிந்து வேறுபட்டுக் காணப்பட்டனர். ஒருதரப்பினர் பொது மரபுக்குடியின் அடிப்படையிலும்,மற்றொரு தரப்பினர் பழங்குடி மக்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் மலைகள்,கடல் ஆகியவற்றால் பிளவுபட்டிருந்த கிரேக்கத் தீவுகளில் குடியேற்றத்தை உருவாக்கியிருந்தனர். ஏதன்ஸ் நகர அரசின் வளர்ச்சி மூலமாக கிரேக்க உள்ளூர் சமுதாயம் பரிணாம வளர்ச்சி அடைந்து நகர அரசாக மாற்றம் பெற்றதை அறியவியலும்.

ஒவ்வொரு நகர அரசுகளும் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டுக் காணப்படும். இந் நகர அரசுகள் சுதந்திரமானவையாகும். மேலும், மாகாண அளவில் மட்டுப்பட்டும் மக்கள்தொகை அடிப்படையில் மிகக் குறைந்தும் உள்ளன. கிரேக்க அரசியல் தத்துவமானது, ஒவ்வொரு நகர அரசும் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வாழ்க்கை என்பது சிறியதாக இருக்கும் வரையிலேயே சாத்தியமாகும் என எடுத்துரைக்கிறது.

கிரேக்க நகர அரசுகள் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளன. மக்கள் அனைவரும் போர் வீரர்களாகவும்,ஆட்சிமன்ற உறுப்பினர்களாகவும் காணப்பட்டனர். அக் கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையிலிருந்தது. இதன் உறுப்பினர்கள் சட்ட ஆக்கச் செயற்பாட்டிற்காக நேரில் ஒன்று கூடினர். அதாவது, கிரேக்க நகர அரசில் மக்கள் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.[3]

உரோமை நகர அரசு மற்றும் பேரரசுகள்

இத்தாலியில் இருந்த சிறிய நகர அரசுகளில் ஒன்றுதான் உரோமை நகர அரசு என்றழைக்கப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளைப் போலவே, இத்தாலிய உரோமை நகர அரசுகளும் புவியியல் ரீதியாகப் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக் காணப்பட்டன. உரோமை நகர அரசானது கொடுங்கோல் ஆட்சியாக இருந்தது. பின்னர், மக்கள் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தும் அவர்களைத் தோற்கடித்தும் குடியரசு ஆட்சியினை நிறுவினர். உரோமையில் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சி முறையில் இரட்டை நிர்வாக முறை நிலவியது. தொன்மரபின் வழி வந்த ஆட்சியாளர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனற்சபை உறுப்பினர்களும் இணைந்து ஆட்சி புரிந்து வந்தனர். இதனால், உரோமைக் குடியரசு உயர்குடி சிறுகுழுவாட்சி முறையாக மாற்றம் பெற்றது.

ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததன் காரணமாக உரோமை அரசு உரோமைப் பேரரசாக மாறியது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஜெர்மனி, வட ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள் உரோமையின் ஆட்சிப் பகுதிகளாக ஆயின. உரோமைப் பேரரசும் கொடுங்கோல் தன்மையுடன் ஆட்சி மேற்கொண்டது. உரோமைப் பேரரசர் அனைத்து வகைப்பட்ட அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் உரோமையின் சட்டங்களாக காணப்பட்டன. கிறித்தவம் அரச சமயமாக்கப்பட்டது. ஆன்மீக உரிமைக் கோட்பாடு விவரணைச் செய்வது போன்று அரசர் இறைவனின் தூதராகக் கருதப்பட்டார். அவரைக் கீழ்ப்படிவது என்பது இறைவனைக் கீழ்ப்படிவதற்கு ஈடாகப் பார்க்கப்பட்டது.[3]

உரோமைப் பேரரசு அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்தது. அரசிற்குள் குடும்ப மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கினை வலியுறுத்திச் செயற்படுத்தியது. இருப்பினும், உரோமைக் குடிமக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் வரையறைப்படுத்தி விரிவுப்படுத்தியது. நாடுகளின் சட்டம் என்பது உரோமைப் பேரரசின் அடிப்படைக் கொள்கையாக விளங்கியது. இதுவே, உரோமர்களின் சட்டமுறைமையின் வடிவமாக அமையப் பெற்றிருந்தது.

நிலவுடமையாளர் அரசு

உரோமைப் பேரரசில் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடிமைச் சேவைகளில் காணப்பட்ட துணிவின்மைப் போக்குகள், அச்சவுணர்வு தன்மைகள் ஆகியவற்றால் மக்களிடையே அவநம்பிக்கைகள் உருவாயின. இவற்றிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது என்பது கடினப் பணியாக இருந்தது. உரோமைப் பேரரசு இதன்காரணமாகப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் நிலவுடமையாளர்கள் எழுச்சிப் பெற்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால், நிலவுடமையாளர்கள் தம்மிடம் பணியாற்றும் எளியவர்கள் மீது செலுத்தப்பட்டு வந்த அதிகாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.[3]

இவ் அரசில் ஒவ்வொரு மாவட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு நிலவுடமையாளரின் கீழ் இருந்தது. இவர்கள் தம்மை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு ஆட்சிசெய்து வரத் தொடங்கினர். உரோமை அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புடையதாக இருந்தது. இச்சூழ்நிலையில் வலிமை பெற்ற நிலவுடமையாளர்கள் வலிமை குன்றிய நிலவுடமையாளர் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர். இதன்விளைவாக, மீளவும் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. போர் நிகழ்வுகள் மற்றும் திருமண உறவுகள் மூலமாக சிற்றரசுகள் பேரரசுகளாக மாற்றம் பெற்றன. நிலவுடமைக் கோட்பாட்டின்படி அரசன் இறைவனின் ஊழியனாகச் செயல்பட்டு அரசினை வழிநடத்த கடமைப்பட்டவனாவான். அதுபோல, அரசர்கள் தமது இறைமையினை நிலவுடமையாளர்களுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக்கொள்ளும் வழக்கிருந்தது. இதனால், அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானது. திருச்சபைக் காலத்தில் சமயரீதியாக உரோமை அரசுகளுக்கிடையில் இணக்கப் போக்குகள் நிலவின. இது அனைத்துலக பேரரசு என்பதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு உலக அரசுகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது.[3]

நவீன தேசிய அரசுகள்

நவீன தேசிய அரசுகளின் வளர்ச்சியில்,பிரெஞ்சுப் புரட்சி தலையாயதாகும். கி. பி. 1789 இல் பிரெஞ்சு மக்கள் கொடுங்கோன்மை முடியாட்சிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் மூலம் மக்களாட்சி அரசியலை முன்வைத்தனர். விடுதலையும், இறையாண்மையும் கொண்ட குடியரசாகப் பிரான்சை அறிவித்துக் கொண்டனர். அனைத்து மனிதர்களும் சில உரிமைகளுடன் பிறக்கின்றனர்; சமத்துவமாக உருவாக்கப்படுகின்றனர் என்கிற கருத்துக்களைத் தேசிய அரசுகள் வலியுறுத்தின.[3]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் அதிகரிப்புகள், பொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்திகளின் அமைப்புமுறை என்பன தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வித்திட்டன. அனைத்துலக வர்த்தகம் துரிதமடைந்ததுடன், தேசிய வர்த்தகமும், வங்கித் தொழிலும் அதிகரித்தன. மேலும், போக்குவரத்திலும், தகவல் தொடர்பிலும், சமூகப்பொருளாதார வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இம்மாற்றங்கள் நவீன தேசிய அரசுகளின் எழுச்சிக்கு உறுதுணையாக அமைந்திருந்தன.[3]

மேற்கோள்கள்

 1. 1.0 1.1 "state". Concise Oxford English Dictionary (Oxford University Press). 1995. "3 (also State) a an organized political community under one government; a commonwealth; a nation. b such a community forming part of a federal republic, esp the United States of America".
 2. For example the Vichy France officially referred to itself as l'État français.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "அரசு: தோற்றமும் வளர்ச்சியும்". பார்த்த நாள் 2 சூலை 2017.
அரசியல்வாதி

அரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.

அரசு மக்களின் வாழ்தரத்தை நிர்மாணிக்கும் ஒரு முக்கிய கூறு. அதனால் அரசியல்வாதிகளின், குறிப்பாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவை. இட்லர் போன்ற அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல் பேரழிவுகளுக்கும் இட்டுச் செல்லும்.

சேவை நோக்கில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் என்பர். வேலை நோக்கில் ஈடுபட்டவர்களை Career politician என்பர்.

அரசூர் ஊராட்சி

அரசூர் ஊராட்சி (Arasur Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

இந்திய அரசு

இந்திய அரசு (Government of India, இந்தி: भारत सरकार, பாரத் சர்க்கார்), இந்திய நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 29 மாநிலங்களையும் மற்றும் 7 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக இந்தியத் தலைநகர் புது தில்லி விளங்குகின்றது.

இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்களான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன.

இதன் சட்ட முறைகளான கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சிக் கொள்கையை செயற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தை பொது மொழியாகக் கொண்டு செயற்படுகின்றது.

பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தில் இந்தியா இணக்கம் கொண்டுள்ளதால் இந்தியா சில பல ஒதுக்கீடுகளையும் பெற்றுள்ளது. அதன் அதிகாரப் பரவலாக்கல், இந்தியாவின் ஊராட்சி மன்றம் என்ற உள்ளாட்சி அமைப்பின் மூலம் கடைக்கோடியில் உள்ள கிராமங்கள் வரை சென்றடைகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.

இந்து சமய அறநிலையத் துறை

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.இத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோயில்கள், 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன.

இந்த இந்து சமய நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்து 4,78,347.94 ஏக்கர் நிலம், இத்துறையின் கீழுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டு வருவாய் உத்தேசமாக 58.68 கோடி மட்டுமே என்று இந்து சமய அறநிலையத் துறை குறிப்பிடுகின்றது. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

ஊராட்சி ஒன்றியம்

பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவில், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர்கள், கணக்காளர்கள், உதவியாளர்கள் போன்ற அரசு அலுவலர், ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.

ஊராட்சி ஒன்றியங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.

குசராத்து

குஜராத் (குஜராத்தி: ગુજરાત, சிந்தி: گوجارات, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் மகாராட்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாகிஸ்தானும் வடக்கில் ராஜஸ்தானும் , மேற்கில் மத்திய பிரதேசம் மற்றும் தெற்கில் மகாராஷ்டிர எல்லைகளாக அமைந்துள்ளன.காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லப்பாய் படேல், கே. எம். முன்ஷி, மொரார்ஜி தேசாய், யு. என். தேபர் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.

கொளத்தூர் ஊராட்சி

கொளத்தூர் என்ற பெயரில் உள்ள மற்ற ஊர்களைக் காண, கொளத்தூர் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.கொளத்தூர் ஊராட்சி (Kolathur Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1858 ஆகும். இவர்களில் பெண்கள் 915 பேரும் ஆண்கள் 943 பேரும் உள்ளனர்.

தமிழக ஆளுநர்களின் பட்டியல்

தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.இம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு பன்வாரிலால் புரோகித் பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.

தமிழக ஊராட்சி மன்றங்கள்

தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட வார்டு உறுப்பினர் என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகள் அளிக்கின்றனர். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஒரு வாக்கு அளிக்கின்றனர்.

தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினாறாவது மக்களவை

பதினாறாவது மக்களவை 2014-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2019-ஆம் ஆண்டு வரை செயல்படும். தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

தமிழ்நாடு அரசு

தமிழ் நாடு அரசு1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.

தற்பொழுதைய ஆட்சியாளர்

தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோகித், தற்பொழுதைய முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி, தற்போதைய தலைமைச் செயலாளர் க.சண்முகநாதன் தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி .

தொகுதிகள்

தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக, 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

மின் ஆளுமை

தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

2016 ஆம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது 2011 முதல் தொடர்ந்து ஆட்சி நடத்துகின்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12,524 கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்), 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் இத்துறை முறைமையின் கீழ் உள்ளன.

தமிழ்நாடு சட்டப் பேரவை

தமிழ்நாடு சட்டப் பேரவை என்பது இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சட்டம் இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.

இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து பேரவைத் தலைவராக ப. தனபால் தேர்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகிறார். இது 15 வது சட்டப் பேரவை ஆகும்.

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.

இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிர்வாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.

இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் (Theni district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.

தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் சனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்

பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (ஐயுபிஏசி அல்லது ஒலிப்பு: "ஐயூபேக்", IUPAC, ஒலிப்பு: /aɪjuːpæk/)(International Union of Pure and Applied Chemistry, IUPAC) என்பது வேதியியல் அறிவு வளர்ச்சிக்காகவும் வேதியியல் சீர்தரங்கள் நிறுவி வரையறுக்கவும் 1919 இல் நிறுவப்பட்ட அரசு சாராத ஓர் அமைப்பு. இந் நிறுவனம் இதற்கு முன் இருந்த

அனைத்துலக பயன்பாட்டு வேதியியல் பேராயம் (International Congress of Applied Chemistry ) என்னும் நிறுவனத்தின் வழித்தோன்றலாக உருவானது. வேதிப்பொருள்களுக்கு பொருத்தமான பெயர்கள் சூட்டவும், பெயர்களைச் சீர்தரப் படுத்தவும் உரிமையும் அதிகாரமும் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் கலைச்சொல் பயன்பாட்டுக் கிளை (IUPAC nomenclature) இப்பணியைச் செய்கின்றது. ஐயுபிஏசி நிறுவனம் அனைத்துலக அறிவியல் குழுமத்தின்(International Council for Science, ICSU) ஓர் உறுப்பு நிறுவனம்.

ஐயுபிஏசி-யின் வெளியீடுகள் இணையத்தின் வழி கிடைக்கின்றது. எடுத்துக்காட்டாக பச்சைப் புத்தகம் (கிரீன் புக், "Green Book") எனப்படும் இயற்பியல் வேதியியலின் அளவுகள், அலகுகள், குறியீடுகள் என்னும் வெளியீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தங்கப் புத்தகம் எனப்பொருள் படும் "கோல்டு புக்" என்னும் வேதியியல் கலைச்சொல்லியல் தொகுப்பு (Compendium of Chemical Terminology) வெளியீட்டில் உள்ள தகவல்களைத் இணையவழி தேடும் வசதி கொண்டது.

மக்களவை (இந்தியா)

மக்களவை (Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

வட்டம் (தாலுகா)

வட்டம் அல்லது தாலுகா இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில மண்டல துணை வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும், எழுத்தர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் எனப்படுகிறது.

வருவாய் கிராமம்

வருவாய் கிராமம் மாநில அரசின் வருவாய் துறையின் கீழ் நிலை அங்கமாகும். இது சில ஊர்களையும், ஊராட்சிகளையும் உள்ளடக்கிய வருவாய்த் துறையின் நிர்வாகப் பகுதி ஆகும். இதன் அரச நிர்வாகப் பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருப்பார்கள்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.