அசூர், பண்டைய நகரம்

அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: வார்ப்புரு:Script/ஆப்பெழுத்து Aθur, பாரசீகம்: آشور: Āšūr; எபிரேயம்: אַשּׁוּר:Aššûr, அரபு மொழி: اشور: Āšūr, குர்திஷ் மொழி: Asûr), தற்கால ஈராக்கில் இந்நகரை (அரபு மொழியில்) குலாத் செர்கத் (Qal'at Sherqat) என அழைக்கப்படுகிறது.

அசூர் நகரம், மெசொப்பொத்தேமியாவின் பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.

அசூர் நகரத்தின் இடிபாடுகள், தற்கால ஈராக் நாட்டின் சலாடின் ஆளுநரகத்தில், சிர்காத் மாவட்டத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கில் உள்ளது.

அசூர் நகரத்தில், கிமு 2600ம் ஆண்டிலிருந்து,[1][2]கிபி 14ம் நூற்றாண்டின் மத்தி வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். கிபி 14ம் நூற்றாண்டில் அசூர் நகரத்தின் மீது படையெடுத்து வந்த தைமூர் படைகள், இங்கு வாழ்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் அசிரியக் கிறித்துவர்களைக் கொன்று, அசூர் நகரத்தை இடித்து தள்ளினான்.

2003ல் 27வது 27வது உலக பாரம்பரியக் குழு அமர்வு, இடிபாடுகளுடன் கூடிய அசூர் நகரத்தை, உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

அசூர்
Aššur
ܐܫܘܪ
آشور
Flickr - The U.S. Army - www.Army.mil (218)
2008ல் அசூரின் இடுபாடுகளை காக்கும் அமெரிக்கப் படைவீரர்கள்
அசூர், பண்டைய நகரம் is located in Iraq
அசூர், பண்டைய நகரம்
Shown within Iraq
இருப்பிடம்சலாடின் ஆளுநகரம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்35°27′24″N 43°15′45″E / 35.45667°N 43.26250°Eஆள்கூற்று: 35°27′24″N 43°15′45″E / 35.45667°N 43.26250°E
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 2500
பயனற்றுப்போனதுகிபி 14ம் நூற்றாண்டு
காலம்முந்தைய வெண்கலக் காலம் முதல் ?
Invalid designation
Official name: அசூர் (Qal'at Sherqat)
Typeபண்பாடு
Criteriaiii, iv
Designated2003 (27வது 27வது உலக பாரம்பரியக் குழு அமர்வு
Reference No.1130
Regionமெசொப்பொத்தேமியா இராச்சியங்கள்
அழியும் நிலையில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்2003–தற்போது வரை

பெயர்க் காரணம்

அசிரிய மக்களின் காவல் தெய்வமான அசூர் எனும் தெய்வத்தின் பெயரால் இந்நகரத்திற்கு அசூர் என்றும், அசிரியர்கள் ஆண்ட தற்கால ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி பகுதிகளுக்கு அசிரியா என்றும் பெயராயிற்று. அசூர் நகர மக்கள் இந்திய-ஐரோப்பிய மொழியின் கிளையான செமிடிக் மொழியான அசிரிய மொழி பேசுபவர்கள்.

முந்தைய வெண்கலக் காலம்

அசூர் நகர தொல்லியல் ஆராய்ச்சியின் படி, இந்நகரம் வெண்கலக் காலத்திற்கு முன்னர் கிமு 3000 ஆண்டின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என கருதுகின்றனர்.

அசூர் நகரத்தின் இஷ்தர் கோயில் மற்றும் பழைய அரண்மனையின் அஸ்திவாரங்களை அகழ்வாராய்ச்சியில் தோண்டிய போது தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

அசிரியர்களுக்கு முன்னர் இந்நகரம், அக்காடியப் பேரரசின் அசிரிய ஆளுநர் கீழ் இருந்தது. [3]

அசிரியப் பேரரசுகளில்

AthurMdinta
அசூர் நகர விரிவாக்க வரைபடம்

கிமு 21ம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட மன்னர் உஷ்பியா, தங்கள் காவல் தெய்வமான அசூரை சிறப்பிக்க அசூர் நகரத்தில் முதல் கோயிலை கட்டி அசூர் தெய்வத்திற்கு காணிக்கையாக்கினான்.

Statue of the god Kidudu, guardian spirit of the wall of the city of Ashur. Circa 835 BCE. From Ashur, Iraq. The British Mueum, London
அசூர் நகரக் கோட்டை காவல் தெய்வம் கிடுடுவின் சிலை, கிமு 835, பிரித்தானிய அருங்காட்சியகம்
Map of Assyria
அசிரியாவின் வரைபடம்
Ashurnasipal with official
அதிகாரிகளுடன் பேரரசர் அசூர்னசிபால்

பழைய அசிரியப் பேரரசு, மத்திய அசிரியப் பேரரசின் தலைநகராக இருந்த அசூர் நகரம், புது அசிரியப் பேரரசு (கிமு 912–605) ஆட்சியில், அரச குடும்பத்தினர்களின் அரண்மனைகள், அசூர் நகரத்திலிருந்து பிற நினிவே மற்றும் நிம்ருத் போன்ற பிற அசிரிய நகரங்களுக்கு மாற்றினர்.[4]

புது அசிரியப் பேரரசர் இரண்டாம் சர்கோன் ஆட்சியில் (கிமு 722–705), ஆசூரிலிருந்து, அசூர்நசிர்பால் நகரத்திற்கு தங்களின் தலைநகரை மாற்றினர்.[5]இவனுக்கு பின் அரியணை ஏறிய சென்னாசெரிப் (கிமு 705–682), நினிவேவிற்கு தனது தலைநகரை மாற்றினார். இருப்பினும் அசூர் நகரம் பேரரசின் சமயச் சடங்களின் மையமாக விளங்கியது.

கிமு 614ல் மீடியாப் பேரரசுக்கும், அசிரியர்களுக்கும் நடைபெற்றப் அசூர் போரில், அசூர் நகரம் மீடியர்களால் கைப்பற்றப்பட்டது.[6][7]

அகாமனிசியப் பேரரசில்

மீடியப் பேரரசை வென்ற பாரசீக அகாமனிசியர்கள் (கிமு 549 - 330) அசூர் நகரத்தையும் கைப்பற்றினர்.

பார்த்தியப் பேரரசு

பார்த்தியப் பேரரசில் கிமு 150 - கிபி 270 காலகட்டததில், அசூர் நகரம் நிர்வாக மையமாக விளங்கியது.

கிபி 114ல் அசூர் நகரம் உரோமைப் பேரரசின் கீழ் சென்றது.

அசூர் நகரத்திற்கு அச்சுறுத்தல்கள்

2003ல் அசூர் நகரம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. [8]

2015ல் அசூர் நகரத்தின் இடிபாடுகளை, ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் தங்கள் மறைவிடமாகப் பயன்படுத்திக் கொண்டதுடன், சிதைந்த இந்நகரத்தின் இடிபாடுகளை முற்றிலுமாகச் சிதைத்தனர். [9]

அசூர் நகர தொல்பொருட்கள்

Ashur (Qal'at Sherqat)-115190

பண்டைய சிதைந்த அசூர் நகரம்

Assur

அசூர் தொல்லியல் களம்

Ashur (Qal'at Sherqat)-115184

அசூர் தொல்லியல் களம்

Berlín arte asirio. 01

அசூரின் யானை தந்த சிற்பங்கள், பெர்லின் அருங்காட்சியகம்

Berlín arte asirio. 03

மத்திய அசிரியப் பேரரசு (கிமு 14-13 நூற்றாண்டு) காலத்திய கழுத்தணி, பெர்லின் அருங்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

 1. International Dictionary of Historic Places: Middle East and Africa, Volume 4
 2. Encyclopædia Britannica: "Ashur (ancient city, Iraq)"
 3. Joshua J. Mark. "Ashur".
 4. Joshua J. Mark. "Kalhu".
 5. Joshua J. Mark. "Dur-Sharrukin".
 6. A Companion to the Archaeology of the Ancient Near East "In 614 BC Assur was conquered by the Medes under king Cyaxares (625-585 BC)"
 7. The Fall and Rise of Jerusalem: Judah Under Babylonian Rule "the Medes left Arrapha, attacked Kalhu (Nimrud) and Ninuwa (Nineveh), and continued rapidly northward to capture the nearby city of Tarbisu. Afterward, they went back down the Tigris and laid siege to the city of Assur. The Babylonian army came to the aid of the Medes only after the Medes had begun the decisive offensive against the city, capturing it, killing many of its residents, and taking many others captive."
 8. UNESCO World Heritage in Danger 2003
 9. Mezzofiore, Gianluca; Limam, Arij (28 May 2015). "Iraq: Isis 'blows up Unesco world heritage Assyrian site of Ashur' near Tikrit". International Business Times. http://www.ibtimes.co.uk/isis-blows-unesco-world-heritage-assyrian-site-ashur-near-tikrit-1503367. பார்த்த நாள்: 24 August 2015.

மேற்கோள்கள்

 • Klaus Beyer: Die aramäischen Inschriften aus Assur, Hatra und dem übrigen Ostmesopotamien, Germany 1998.
 • Walter Andrae: Babylon. Die versunkene Weltstadt und ihr Ausgräber Robert Koldewey. de Gruyter, Berlin 1952.
 • Stefan Heidemann: Al-'Aqr, das islamische Assur. Ein Beitrag zur historischen Topographie Nordmesopotamiens. In: Karin Bartl and Stefan hauser et al. (eds.): Berliner Beiträge zum Vorderen Orient. Seminar fur Altorientalische Philologie und Seminar für Vorderasiatische Altertumskunde der Freien Universität Berlin, Fachbereich Altertumswissenschaften. Dietrich Reimer Verlag, Berlin 1996, pp. 259–285
 • Eva Cancik-Kirschbaum: Die Assyrer. Geschichte, Gesellschaft, Kultur. C.H.Beck Wissen, München 2003. ISBN 3-406-50828-6
 • Olaf Matthes: Zur Vorgeschichte der Ausgrabungen in Assur 1898-1903/05. MDOG Berlin 129, 1997, 9-27. ISSN 0342-118X
 • Peter A. Miglus: Das Wohngebiet von Assur, Stratigraphie und Architektur. Berlin 1996. ISBN 3-7861-1731-4
 • Susan L. Marchand: Down from Olympus. Archaeology and Philhellenism in Germany 1750-1970. Princeton University Press, Princeton 1996. ISBN 0-691-04393-0
 • Conrad Preusser: Die Paläste in Assur. Gebr. Mann, Berlin 1955, 1996. ISBN 3-7861-2004-8
 • Friedhelm Pedde, The Assur-Project. An old excavation newly analyzed, in: J.M. Córdoba et al. (Ed.), Proceedings of the 5th International Congress on the Archaeology of the Ancient Near East, Madrid, April 3–8, 2006. Universidad Autónoma de Madrid Ediciones, Madrid 2008, Vol. II, 743-752.https://www.jstor.org/stable/41147573
 • Steven Lundström, From six to seven Royal Tombs. The documentation of the Deutsche Orient-Gesellschaft excavation at Assur (1903-1914) – Possibilities and limits of its reexamination, in: J.M. Córdoba et al. (Ed.), Proceedings of the 5th International Congress on the Archaeology of the Ancient Near East, Madrid, April 3–8, 2006. Universidad Autónoma de Madrid Ediciones, Madrid 2008, Vol. II, 445-463.
 • Friedhelm Pedde, The Assur-Project: A new Analysis of the Middle- and Neo-Assyrian Graves and Tombs, in: P. Matthiae – F. Pinnock – L. Nigro – N. Marchetti (Ed.), Proceedings of the 6th International Congress on the Archaeology of the Ancient Near East, May, 5th-10th 2008, “Sapienza” – Università di Roma. Harrassowitz, Wiesbaden 2010, Vol. 1, 913–923.
 • Barbara Feller, Seal Images and Social Status: Sealings on Middle Assyrian Tablets from Ashur, in: P. Matthiae – F. Pinnock – L. Nigro – N. Marchetti (Ed.), Proceedings of the 6th International Congress on the Archaeology of the Ancient Near East, May, 5th-10th 2008, “Sapienza” – Università di Roma. Harrassowitz, Wiesbaden 2010, Vol. 1, 721-729.
 • Friedhelm Pedde, The Assur Project: The Middle and Neo-Assyrian Graves and Tombs, in: R. Matthews – J. Curtis (Ed.), Proceedings of the 7th International Congress on the Archaeology of the Ancient Near East, London 2010. Harrassowitz, Wiesbaden 2012, Vol. 1, 93-108.
 • Friedhelm Pedde, The Assyrian heartland, in: D.T. Potts (Ed.), A Companion to the Archaeology of the Ancient Near East. Wiley-Blackwell, Chichester 2012, Vol. II, 851-866.

வெளி இணைப்புகள்

அசூர்பனிபால்

அசூர்பனிபால் (Ashurbanipal) பண்டைய அண்மை கிழக்கின், மெசொப்பொத்தேமியாவில் புது அசிரியப் பேரரசை கிமு 668 முதல் கிமு 627 முடிய 41 ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசர் ஆவார். இவரே அசூர் நகரத்தை நிறுவியவர் ஆவார்.புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால், பேரரசின் தலைநகரான நினிவே நகர அரண்மனையில், அசிரிய அரசர்களின் தகவல்களை ஆப்பெழுத்து களிமண் பலகைகள் மற்றும் சிற்பத்தூண்களில் செதுக்கி வைத்தார். அசூர்பனிபால் காலத்திய தொல்பொருட்களில் புகழ் பெற்றது, அசூர்பனிபாலின் நூலகம், சிங்கத்தை வேட்டையாடும் அசூர்பனிபால் சிற்பம், அசூர்பனிபாலின் சிதைந்த அரண்மனைகள் ஆகும். இவர் பபிலோனியாவில் தன் பெயரால் அசூர் நகரத்தை நிறுவினார்.

பேரரசர் அசூர்பனிபாலை யூதர்களின் வேத நூல் அசெனப்பர் (Asenappar) எனக் கூறுகிறது. (எபிரேயம்: אָסְנַפַּר, தற்கால 'Asnapar திபேரியம் 'Āsenapar - வார்ப்புரு:Bible verse).

புது அசிரியப் பேரரசு

புது அசிரியப் பேரரசு (Neo-Assyrian Empire) இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த,

பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும். இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார்.

பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது. அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை. கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், ஆசியா மைனர், காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர். பழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.

கிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர்.

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.

புவியியல்
வரலாறு
அரசர்கள்
மொழிகள்
மக்கள் / பண்பாடு / கலை / இலக்கியம்
தொல்லியல்
புவியியல்
வரலாறு
அரசர்கள்
மொழிகள்
மக்கள் / பண்பாடு / கலை / இலக்கியம்
தொல்லியல்

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.