அகணிய உயிரி

அகணிய உயிரி அல்லது உட்பிரதேசத்திற்குரிய உயிரி (endemism) என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும். இத்தகைய உயிரிகள் சூழ்நிலை சீர்கேடால் மிகவும் பாதிப்படையக்கூடியதாகும் ஆதலால் உலகெங்கிலும் உள்ள உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளை காப்பதற்கு பல்வேறு அரசுகளும் நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அகணிய விலங்குகள்

Nasikabatrachus sahyadrensis
கேழல்மூக்கன் - மேற்குத் தொடர்ச்சி மலையின் அகணிய விலங்கு
Nasikabatrachus map
கேழல்மூக்கன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இடங்கள்

கேழல்மூக்கன் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. [1]2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. http://www.hindu.com/2008/12/25/stories/2008122557272400.htm
அடன்சோனியா கிரான்டிடியரி

அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia grandidieri) (கிரான்டிடியரின் பாஓபாப்), மடகாஸ்கரின் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற ஆறு பாஓபாப்களுள் ஒன்றாகும். இது தீவாய்ப்புள்ள இனமாகும். இது அடன்சோனியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இது மடகாஸ்கரின் அகணிய உயிரி ஆகும். எ. கிரான்ட்டியரி (A. grandidieri) எனும் பெயர் ஃப்ரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிரான்டிடியரின் (1836-1921) பெயரிலிருந்து வைக்கப்பட்டது.

அம்பு பறக்கும் அணில்

அம்பு பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை இந்தோனேசியாக்கூரிய அகணிய உயிரி ஆகும்.

அரச லாட வௌவால்

அரச லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா நாட்டிற்குறிய அகணிய உயிரி ஆகும்.

ஆப்கானிய பறக்கும் அணில்

ஆப்கானிய பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கூறிய அகணிய உயிரி ஆகும்.

இலங்கை வரியன்

இலங்கை வரியன் (Ceylon tiger, Parantica taprobana) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இலங்கையின் அகணிய உயிரி உயிரியாகும்.இதனை இலங்கை மத்திய மாகாணத்தின் பட்டாம்பூச்சி என சூற்றடல், புத்தாக்க சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காடிப்பல் பறக்கும் அணில்

காடிப்பல் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை சீனாவிற்கே ஊரிய அகணிய உயிரி ஆகும். இவை மித வெப்ப காடுகளில் வசிக்கின்றன.

கின்னிக்கோழி

Animalia கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: Guineafowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையில் உள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் அகணிய உயிரி ஆகும். இது கல்லினாசியஸ் பறவைகளிலேயே மிகவும் பழமையானது ஆகும். நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குட்டை இறக்கையன்

குட்டை இறக்கையன் (white-bellied blue robin (Myiomela albiventris)) என்பது Muscicapidae என்னும் குடும்பத்தைச் சார்ந்த அகணிய உயிரி (ஓரிடவாழி) பறவையாகும். இப்பறவைகள் தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளின் சோலைக்காடு களில் காணப்படுகின்றன.

குற்றாலம் வென்ட்லான்டியா

குற்றாலம் வென்ட்லான்டியா என்பது ரூபியேசியே குடும்பத்தைச் சார்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம். இதன் அறிவியல் பெயர் வென்ட்லான்டியா அங்கஸ்டிஃபோலியா (Wendlandia angustifolia) என்பதாகும்.

இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதிக்கே உரிய அகணிய உயிரி ஆகும். இது வாழிடம் இழப்பினால் தற்போது முற்றும் அழிந்து பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோய்பன் அகெளடி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Dasyprocta|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} கோய்பன் அகெளடி (Coiban agouti) என்பது டேசிப்ரோக்டிடே குடும்பத்தைச்சாா்ந்த ஒரு கொறிணி விலங்கின வகையாகும். இது கேய்பா தீவில் (பனாமா) காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது காண்பதற்கு பரவலாகக் காணப்படும் மத்திய அமொிக்க அகெளடி போன்றே இருக்கும். இது இருப்பிட இழப்பினால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி ஆபத்தான நிலையில் உள்ளது.

சிவப்புப் பருந்து

Nephrozoa சிவப்புப் பருந்து (ஆங்கிலப் பெயர்: red kite, உயிரியல் பெயர்: Milvus milvus) என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கழுகுகள், பசார்டுகள் மற்றும் பூனைப்பருந்துகளைப் போன்றே இதுவும் ஒரு பகலாடிப் பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு ஈரானுக்கு வெளியிலும் காணப்பட்டது. வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே துருக்கி வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே பின்லாந்திலும், தெற்கே இசுரேல், லிபியா மற்றும் காம்பியாவிலும் பார்க்கப்பட்டுள்ளன.

சீன பெரும் பறக்கும் அணில்

சீன பெரும் பறக்கும் அணில் அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி விலங்காகும். இவை சீனா மற்றும் லாவோஸ் நாடுகளின் அகணிய உயிரி ஆகும்.

சோமாலிய ஒல்லிக்கீரி

சோமாலிய ஒல்லிக்கீரி கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சோமாலியா நாட்டின் அகணிய உயிரி ஆகும்.

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை அல்லது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் என்பது இலங்கையின் இயற்கை மரபுரிமை பற்றிய விடயங்களைக கொண்டுள்ள நூதனசாலை ஆகும். இது கொழும்பு தேசிய நூதனசாலைக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இந்நூதனசாலை செப்டம்பர் 23, 1986 அன்று உருவாக்கப்பட்டது. இது ஒன்றே இயற்கை வரலாறு, இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஒரே நூதனசாலை ஆகவுள்ளது.தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலை அரிதான, ஆபத்துக்குட்பட்ட இலங்கைக்குரிய இயற்கை மரபுரிமை தாவரங்கள், விலங்கின அகணிய உயிரி போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. 5,000 இற்கு மேற்பட்ட பாலூட்டிகளின் மாதிரிகள், சுராசிக் கால உள்ளூர் படிமங்கள், பல வகையான புவியியற் பாறைகள் என்பனவும் உள்ளன.

நீலகிரி நீல இராபின்

Nephrozoa நீலகிரி நீல இராபின் (ஆங்கிலப் பெயர்: Nilgiri blue robin, உயிரியல் பெயர்: Sholicola major) என்பது ஒரு பேசரின் பறவை ஆகும். இது முசிகபிடே குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கே சோலைக்காட்டில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும்.

நீலகிரி நெட்டைக்காலி

நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri pipit (Anthus nilghiriensis)) என்பது ஒரு தனித்துவமான பறவை இனமாகும். இப்பறவை தென்னிந்தியாவின் உயர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி பறவையாகும். இந்தப் பகுதியில் உள்ள மற்ற நெட்டைக்காலிகளைவிட இதன் நிறம் மிகுதியான பழுப்பு நிறத்தில் உள்ளது. நீலகிரி நெட்டைக்காலி 12.6-14 சென்டிமீட்டர் (5.0-5.5 இன்ச்) நீளமுடையது.

பயணிப் புறா

Eumetazoa பயணிப் புறா (ஆங்கிலப் பெயர்: Passenger pigeon, உயிரியல் பெயர்: Ectopistes migratorius) என்பது ஒரு அற்றுவிட்ட புறா இனம் ஆகும். இது வட அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு அகணிய உயிரி ஆகும். இதன் ஆங்கிலப் பெயர் பிரெஞ்சு வார்த்தையான பேசஜரில் இருந்து தோன்றியது. இதற்குக் "கடந்து செல்லும்" என்று பொருள். இதன் உயிரியல் பெயர் இதன் இடம்பெயரும் பண்பையும் குறிக்கிறது. இதன் வடிவம் ஆமைப் புறாவை ஒத்திருக்கும். ஆமைப்புறா இதன் நெருங்கிய உறவினர் என்று கருதப்பட்டது. சில சமயங்களில் இரண்டும் குழப்பிக்கொள்ளப்படும். ஆனால் மரபியல் ஆய்வானது படஜியோனஸ் என்கிற பேரினமே பயணிப்புறாவுடன் நெருங்கிய தொடர்புடையது, ஆமைப்புறாவின் பேரினமான ஜெனைடா அல்ல என்கிறது.

பயணிப்புறாவானது அளவு மற்றும் நிறத்தில் பால் ஈருருமை கொண்டது. ஆண் 390-410 மி.மீ. நீளம் இருக்கும். மேல்பகுதிகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். கீழ் பகுதிகள் வெளிர் நிறத்தில் இருக்கும். கழுத்துப்பகுதி இறகுகள் பட்டுப்போன்று ஒளிரும். இறக்கைகளில் கருப்புப் புள்ளிகள் இருக்கும். பெண் 380-400 மி.மீ. நீளம் இருக்கும். பொதுவாக ஆணைவிட மங்கிய மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். குஞ்சானது பெண் புறாவைப்போலவே இருக்கும், ஆனால் இறகுகளில் பட்டுப்போன்ற ஒளிரும் தன்மை இருக்காது. இது பொதுவாகக் கிழக்கு வட அமெரிக்காவின் இலையுதிர் காடுகளில் வாழ்ந்தது. பிற பகுதிகளிலும் இவை பதிசெய்யப்பட்டுள்ளன. எனினும் அமெரிக்கப் பேரேரிகளைச் சுற்றியே இவை வளர்ந்தன. இவை இடம்பெயரும்போது பெரிய கூட்டமாக இடம்பெயரும், தொடர்ந்து உணவு மற்றும் இருப்பிடத்தைத் தேடும். ஒருகாலத்தில் வட அமெரிக்கவில் அதிகம் காணப்பட்ட பறவையாக இது இருந்தது. இதன் உச்ச நிலையில் இதன் எண்ணிக்கை 300-500 கோடியாக இருந்தது. இது எப்போதுமே தொடர்ந்து அதிகப்படியாக இல்லை. இதன் எண்ணிக்கைக் காலப்போக்கில் குறைந்தது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது. இது கொட்டைகள், பழங்கள் மற்றும் முதுகெலும்பிலிகளை உணவாக உட்கொண்டது. இது கூட்டமாகத் தங்கும், குஞ்சுகளைப் பெற்றோர் மட்டுமின்றி மற்ற புறாக்களும் பேணும். இதன் அதிகப்படியான சமூக விலங்குத் தன்மை உணவு தேடுவதுடனும், கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிப்பதுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

பயணிப் புறாக்கள் தொல்குடி அமெரிக்கர்களால் வேட்டையாடப்பட்டன. ஆனால் ஐரோப்பியர்களின் வருகைக்குப்பிறகே வேட்டை தீவிரமாக நடைபெற்றது, முக்கியமாக 19ம் நூற்றாண்டில். இதன் இறைச்சி, விலை குறைந்ததாக இருந்ததால் வணிகமயமாக்கப்பட்டது. இதனால் பல ஆண்டுகளுக்கு இவை பெரும் அளவில் வேட்டையாடப்பட்டன. இவற்றின் எண்ணிக்கைக் குறைவு மற்றும் அழிவிற்கு வேறு பல காரணங்களும் உண்டு. காடுகள் அழிப்பு இதன் வாழ்விடத்தை அழித்தது. 1800-1870ல் இவை மெதுவாக அழியத் தொடங்கின, 1870-1890ல் வேகமாக அழியத் தொடங்கின. கடைசிக் காட்டுப் பறவையானது 1901ல் சுடப்பட்டது. கடைசிக் கூண்டுப் பறவைகள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் சில பறவைகள் உயிருடன் இருக்கும்போது புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. மார்த்தா, என்ற புறாவே கடைசிப் பயணிப்புறாவாகக் கருதப்படுகிறது. இது சின்சினாட்டி மிருகக் காட்சிச் சாலையில் செப்டம்பர் 1, 1914ல் இறந்தது. மனித நடவடிக்கைகளால் உயிரினங்கள் அழிவதற்கு இதுவே ஒரு குறிப்பிடத்தகுந்த எடுத்துக்காட்டாகும்.

பலவன் பறக்கும் அணில்

பலவன் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை பிலிப்பைன்ஸ் நாட்டின் அகணிய உயிரி ஆகும். இவை பெப்ப மண்டல காடுகளில் காணப்படுகின்றன.

பழுப்புநிறச் சேற்று மீன்

பழுப்பு நிறச் சேற்று மீன் (ஆங்கிலம்: Brown mudfish; Neochanna apoda) என்பது கேலக்சிட் குடும்பத்தைச் சேர்ந்த நியூசிலாந்தைச் சேர்ந்த அகணிய உயிரி ஆகும். இது வடக்குத் தீவின் தென்மேற்கிலுள்ள ஈரநிலங்களில் காணப்படுகிறது. மேலும் தெற்குத் தீவின் மேற்குக் கரையின் மேற்பகுதியிய்லும் காண்னப்படுகிறது. இது பொதுவாக 100-130 மிமீ வரையில் வளரக்கூடியது மேலும் குறைந்தது இது 7 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.

நீயூசிலாந்து இயற்கைப் பாதுகாப்புத் துறை இம்மீன் இனத்தைக் "குறைந்துவருபவை" என்று பகுத்துள்ளதுஇது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் "அச்சுறுத்தப்பட்ட இனமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.